Saturday, April 18, 2015

உறிஞ்சப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு


மினிமம் சம்பளம் என்று ஒன்று இருக்கிறது இங்கெல்லாம், அதாவது ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $7.25 கொடுக்க வேண்டும். அதற்க்கு குறைவாக கொடுத்தால் சட்டப்படி குற்றம். தண்டனை அளிக்கபடும். நிறைய மெக்சிகன் மக்கள் இதனை விட குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுப்பார்கள் ஒரு சில நேரங்களில். ஆனாலும் வேலை எவ்வளவு இருக்குமோ அதற்கேற்றார்போல கூலி தந்து விடுவார்கள், என்ன மற்றவர்களுக்கு கொடுப்பதை விட குறைவாக கொடுப்பார்கள். ஆனாலும் ஒருவர் ஒரு நாள் முழுக்க வேலை செய்கிறார் என்றால் குறைந்தது 50 டாலர் சம்பாதித்து விடுவார்.

இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இந்தியாவில், புனிதமான தொழிலாக கருதப்படும் ஆசிரியர் வேலை செய்யும் பலரும் குறிப்பாக தனியார் நர்சரி மற்றும் பாலர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று நான் நேரில் கண்டது.

என்னுடைய சொந்த கார பெண் தனியார் நர்சரி பள்ளி ஒன்றில் ஹிந்தி ஆசிரியராக வேலை பார்கிறார். சம்பளம் மிக குறைவு. 3000 ரூபாயில் இருந்து 3500 வரை தான் தருகிறார்கள். அவர் படித்திருப்பது B .Com, ஹிந்தியில் ப்ராத்மிக் வரை படித்து இருப்பதால் ஹிந்தி ஆசிரியை என்று பள்ளியில் சேர்த்தார்கள். இவரும் இன்னொரு வருமானம் தானே என்று வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

முதலில் ஹிந்தி மட்டும் சொல்லிதர வேண்டும் என்றவர்கள் பின்னர், இங்கிலீஷ், கணக்கு என்று மற்ற வகுப்புகளும் எடுக்க சொல்லி விட்டார்கள்.  ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 வகுப்புகள் எடுக்க வேண்டும். காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பள்ளி. ஒரு சில நேரங்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று 6 மணி வரை இருக்க வைத்து விடுவார்கள்.
சனிகிழமை பள்ளி உண்டு. அதனால் சனிக்கிழமையும் லீவு கிடையாது.

கொடுக்கும் சம்பளம் 3000 ருபாய் அதுவும் முழுதாக கையில் கிடைக்காது. டீச்சர்  யூனிபார்ம் புடவை என்று 700 ருபாய் வாங்கி கொள்கிறார்கள். சம்பளம் எப்போதும் முதல் வாரம் வருவதில்லை, ஒரு சில நேரங்களில் கொடுப்பதும் இல்லை, அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்று சொல்லி ஒப்பேத்துகிறார்கள். பள்ளி சிறிது தூரம் என்று அவர்கள் கொடுக்கும் வேன் வசதியை உபயோகித்தால் அதற்க்கு வேன் சார்ஜ் வாங்கி கொள்ளுகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அதே பள்ளியில் படித்தாலும் பீஸில் எந்த தள்ளுபடியும் கிடையாது. பீஸ் மட்டும் பிள்ளைகள் இடம் இருந்து மறக்காமல் வாங்கி கொள்ளுகிறார்கள். குழந்தைகள் கலை நிகழ்சிகளில் பங்கெடுக்க என்று வற்புறுத்துகிறார்கள். அப்படி பங்கெடுத்தால், அதில் உபயோகிக்கும் உடை சூ அது இது என்று அனைத்தும் அவர்கள் கொடுக்கும் ஒன்றை தான் வாங்க வேண்டும். அதற்கென்று அவர்கள் சொல்லும் பணம் தலை சுற்றுகிறது.

எதையும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில், இதே போல வேலை செய்யும் பலரும் இளநிலை முடித்தவர்கள். டீச்சர் ட்ரைனிங் போல எதுவும் படிக்காதவர்கள். வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் இப்படி வேலைக்கு போகலாமே என்று செல்பவர்கள் சிலர் இருந்தாலும், பலர் வீட்டு கஷ்டத்துக்கு வேலைக்கு செல்கிறார்கள். அதனை இப்படி தனியார் பள்ளிகள் நன்கு உபயோகித்து கொள்கின்றன.

 உண்மையில் இங்கு இருக்கும் undocumented workers ஐ விட மிக மிக கீழ்த்தரமாகவே இவர்களின் சம்பளமும் இவர்களின் உழைப்பும் உறிஞ்சபடுகிறது. இப்படி இவர்கள் நடத்தபட்டால் எப்படி அவர்கள் விருப்பத்துடன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்கள்?.டீச்சர் களின் வேலை அதிகம் சம்பளம் குறைவு, பிள்ளைகளின் பீஸ் அதிகம் என்று பேராசை பிடித்து அலையும் தனியார் பள்ளிகள் அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது.

நன்றி

9 comments:

Avargal Unmaigal said...

உழைப்பை சுரண்டும் கூட்டம் எல்லா இடங்களிலும் வியாதிகள் போல பரவிகிடக்கின்றனர்.

ப.கந்தசாமி said...

சிக்கல்கள் பலவிதம்.

? said...

கீழ்க்காணும் விடயம் பள்ளிகளை நடத்தும் தனது நண்பர்களிடம் பெற்று தனது தளத்தில் பதிப்பாளர் பத்ரி வெளியிட்ட தகவல்-http://tinyurl.com/orodqcg உடனே முந்தய கலைஞர் அரசில் நேர்மை தலைவிரித்தாடியது என கருதவேண்டாம். எல்லாம் ஓரே குட்டை மட்டைகளே!

//ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி 2011-ல் ஆரம்பித்ததும், ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது. புதிய பள்ளிகூடங்களுக்கான அனுமதி, பழைய பள்ளிகளுக்கான அனுமதி நீட்டிப்பு ஆகியவற்றுக்கு மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். நீங்கள் புதிய பள்ளிக்கூடம் ஆரம்பித்து, இந்தப் பணத்தைத் தரவில்லை என்றால், எவ்வகையிலும் உங்கள் பள்ளிக்கு அனுமதி தரப்படாது. இந்தப் பணம் தவிர்த்து, உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும். அது தவிர, பஞ்சாயத்து அல்லது முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்குத் தனியாகக் கப்பம் தரவேண்டும்.//

இப்படி பணத்தை அளித்து பள்ளியை நடத்தும் தனியார் முதலாளிகள் லாபம் ஈட்ட ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் அளித்தும், மாணவரின் கட்டணத்தினை அதிகரித்தும் சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு மக்களின் பணம் சுரண்டப்பட்டு லஞ்சமாக அளிக்கப்பட்டு பின்னர் அரசியல்வாதிகளிடமிருந்து தேர்தல் நேரத்தில் மக்களை அடைகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு சனங்களின் ஊழல் பேராசை. அதாவது இது அவர்களாகவே தேர்ந்தெடுத்த வியாதி... அனுபவித்துதான் ஆகவேண்டும்!!!

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். ஒரு சித்தாள், கொத்தனாருக்கு கிடைக்கும் ஓய்வு கூட இந்த தனியார் தற்காலிக ஆசிரியைகளுக்கு கிடைப்பதில்லை.

When it is high time said...

If a man makes himself a worm, he must not complain when he is trodden on - IMMANUEL KANT.

Kant is a very famous German philosopher.

This is a harsh application to your friend and teacher - the subject of your blog post. As I said in my comments in another post of yours, our slavish minds are exploited by others. Rs.3500 per month is peanuts even in a village today. In Madurai, it won't even help you get a decent one room tenement for rent. Your friend shouldn't accept such a measly sum and the job. The justification of poverty and others things should be within limits. Generally, the schools covet your original certificates to ensure you don't quit the job and become their bonded labour for long. We have allowed others to exploit us; and how can we complain when they do as Immanuel Kant said?

I would like your friend to quit the job immeidately, and retireve her degree certificate. Sit at home and go up to Pragya and beyond; get a degree in Hindi, and a pg too, backed up with a BEd which has now become two years. All this will not take many years. As a Hindi teacher she has a bright future but she must be willing to move out of her hometown. Hindi is spreading fast in TN; and in Chennai, the number of schools teaching is huge. It is easy to get a job with Hindi degree than with B.Com degree.

-- Bala Sundara Vinayagam

முகுந்த்; Amma said...

@Bala Sundara Vinayagam

Thanks for taking time in commenting about the posts.

Although you make some valid points, there are several things need to be considered here. First, the economic status of many people who work like this. If they had money or time to continue the higher education they would have done it first before taking these kind of jobs. Most of them did their degree through correspondence course like the case of my friend. Secondly, all of them or most of them are married people. And continuing education after marriage and kids is next to impossible. So, family and economic status wise they cannot afford to continue the education. further most of their husbands work in the same city, so moving out of the city for future is impossible.

So, yes, in an ideal world, where everyone supports the ladies economically to continue the education by taking care of kids and family and encouraging
her is possible. But in a real world situation it is not possible.

thanks for the comments.

முகுந்த்; Amma said...

@Avargal Unmaigal said...

@பழனி. கந்தசாமி said...


Thanks for the comments.

முகுந்த்; Amma said...

@நந்தவனத்தான் said...

When education became business this is what happens. Thanks for the comment. I appreciate it.

முகுந்த்; Amma said...

/தி.தமிழ் இளங்கோ said...
நன்றாகவே சொன்னீர்கள். ஒரு சித்தாள், கொத்தனாருக்கு கிடைக்கும் ஓய்வு கூட இந்த தனியார் தற்காலிக ஆசிரியைகளுக்கு கிடைப்பதில்லை./


True. Thanks for the comment.