Saturday, April 11, 2015

சென்யோரிட்டா, லோலிட்டா, போனிட்டா, காசோலினா ..

என்ன இது எல்லாம் என்று கேட்பவர்களுக்கு, இவைகளெல்லாம் நம் தமிழ் படத்தில் வரும், தொடக்க  பாடல் வரிகள். இவற்றின் ஒரிஜினல் ஸ்பானிஷ், போர்துகீஸ் மற்றும் ரஷ்யன் மொழியில்.

நம்ம ஊரில் நான் இருந்த வரை இப்படி ஏதாவது புதுசா வார்த்தைகள் வந்துட்டே இருக்கும், அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம், என்னுடன் படித்த மற்றவர்கள் புதுசு புதுசாக நிறைய சொல்வார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது என்றாலும், கேட்க்க தைரியம் இருக்காது. எங்கே ஏதாவது கேட்க போய் அவங்க எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடுவார்களோ, என்று நினைத்து கேட்க மாட்டேன். நம்முடைய நாட்டில் பல மொழி, பல கலாச்சாரம் இருப்பதால் வெளி மாநில மக்கள் வர வர அவர்களுக்கு உரிய வார்த்தைகள் எல்லாம் நம்முடைய மொழியில் கலந்து மக்களிடம் கலந்து விடுகிறது. மக்களும் அதன் அர்த்தம் முழுமையாக தெரியாவிட்டாலும் பயன் படுத்த ஆரம்பிப்போம்.

உதாரணமாக, எனக்கு இப்போது கூட புது வார்த்தையாக இருந்தது "போங்கு" என்ற வார்த்தை. நிறைய பேர் உபயோகிறார்கள். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு முதலில் கேட்ட போது தெரியவில்லை. மதுரை பக்கம் எல்லாம் ரொம்ப "ஜூ" விடாத என்று சொல்வார்கள். அதற்கும் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை அப்போது..ஆனால் அர்த்தம் தெரியாமல் நிறைய நானே உபயோகித்து இருக்கிறேன். என்னுடைய கணவரிடம் , முதலில் நான் ஜூ என்ற வார்த்தையை அவரிடம் சொன்ன போது  அவர் அதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். எனக்கு உண்மையில் அர்த்தம் தெரியாததால் "ஷோ" காட்டுறது என்று சொல்லி வைத்தேன். ஏனெனில் நிறைய வார்த்தைகள் நாம் காண்டக்ஸ்ட் வைத்தே அர்த்தம் அறிகிறோம்.

இப்படி எல்லா வார்த்தையையும் அதன் அர்த்தம் என்ன என்று தெரியாமல் அடுத்தவர்கள் உபயோகிகிரார்களே, நாமும் உபயோகிப்போம் என்று உபயோகிக்கிறோம். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் இப்படி எல்லா நேரமும் உபயோகிப்போமா என்று தெரியாது.

அர்த்தம் தெரியவில்லை என்றால் கேள்வி கேள், "There is no such thing as dumb question" என்று என்னுடைய ஆராய்ச்சி கைடு சொல்லும் வரை எதனை பற்றியும் கேள்வி கேட்க எனக்கு தைரியம் வந்ததில்லை. இப்போது எல்லாம் அர்த்தம் தெரியாமல் எந்த வார்த்தையும் நான் உபயோகிப்பதும் இல்லை, எந்த கேள்வியும் கேட்க்க தயங்குவதும் இல்லை.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.சென்யோரிடா என்றால் கன்னிப்பெண் என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம். மிஸ் என்பதை சென்யோரிடா என்று அழைகிறார்கள் . பரவாயில்லையே, நம்ம ஊர் கவிஞர்கள் எல்லாம் அடுத்த நாட்டு மொழியையும் எடுத்து எப்படி உபயோகிகிறார்கள் என்று சந்தோஷ படாதீர்கள்.

ஏனெனில் "லோலிடா" என்ற தொடங்கும்  பாட்டு  ஒன்று கேட்க நேர்ந்தது. உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து தான் இதனை உபயோகித்தார்களா என்று தெரியாது. ஏனெனில் லோலிடா என்பது ரஷிய எழுத்தாளர் Vladimir Nabokov அவர்களின் நாவலில் வரும் ஒரு கதை மாந்தர் பெயர். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்றால் "a sexually precocious young girl" என்பது. யாரையும் லோலிடா என்று அழைத்து விடாதீர்கள், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்து, அப்படி அழைத்தீர்கள் என்றால் உங்களை சும்மா விட மாட்டார்கள். 

அதே போல, பொனிட்டா, கசொலினா என்று ஒரு பாட்டு கேட்டேன். பெனிட்டா என்றால் pretty, cute போன்ற அர்த்தம் வரும். ஆனால் காசொலினா என்றால் ஸ்பானிஷ் மொழியில் பல அர்த்தங்கள் அதுவும் காண்டக்ஸ்ட் பொறுத்து மாறும், முக்கியமாக கோகனே, போன்ற போதை பொருள்கள் ஒரு அர்த்தம் என்றால், அசிங்கமான சில பல அர்த்தங்களும் லோக்கல் உபயோகத்தில் உண்டு. இதெல்லாம் பாட்டு எழுதுபவர்களுக்கு தெரியுமா இல்லை சும்மா உபயோகிப்போமே என்று உபயோகிகிறார்களா என்று தெரியவில்லை.

ஊருக்கு சென்றிந்த போது பல சிறு குழந்தைகள் இந்த பாட்டை பாடுவதை கேட்டு இருக்கிறேன், அர்த்தம் தெரிந்தால் இப்படி பாடுவார்களா அல்லது பெற்றோர் பாட அனுமதிப்பார்களா, என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.
நம்முடைய குழந்தைகளை பிறர் செய்கிறார்கள் அதனால் இவர்களும் செய்யட்டும் என்று ஒரு ஆட்டு மந்தை கூட்டமாக மாற்றாதீர்கள். நிறைய கேள்வி கேட்க வையுங்கள், உங்களுக்கும் தெரியவில்லை என்றால் அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இருக்கவே இருக்கிறது கூகிள்.  


நன்றி.



6 comments:

Avargal Unmaigal said...

அர்த்தமுள்ள பதிவு

Avargal Unmaigal said...

அதிரடி பதிவாளராகிட்டீங்க..... அதுமட்டுல்ல எல்லாம் மாறுபட்ட பதிவுகளாக வருகின்றன. அருமை .....ஆமாம் ஒரு சந்தேகம் 2016 தமிழக தேர்தலில் நிக்கறதுக்கு ஐடியா ஏதும் வைச்சிருக்கீங்களா என்ன..?

Anna said...

Love this article Mukund amma!

சில வேளைகளில் சும்மா rhyming ஆக இருக்கென எழுதினார்களோ என நினைக்கத் தோன்றினாலும், இதன் அர்த்தங்களைப் பார்த்தால் அறிந்தே எழுதியிருப்பார்கள் எனத்தோன்றுகிறது. அநேகமான தமிழ்ப்ப்டங்களில் 'கதாநாயகிகள்' எதற்கிருக்கிறார்கள்? இந்தச் சொற்களின் அர்த்தங்களுக்கேற்ப 'நடிக்கத்' தானே!

சிவக்குமார் said...

பாடல்கள் எல்லாமே ஒரு வகை காமக் கிளர்ச்சியூட்டக்கூடியவையே. அச்சொல்லின் பொருள் தெரியாதவரை நல்லதுதான். பேபே என்றெல்லாம் பல பாடல்களில் எழுதுகிறார்கள். அதன் பொருள் வேறு மாதிரியாகச் சொல்கிறார்கள். இதாவது பரவாயில்லை

கேடி பில்லா கில்லாடி ரங்கா (அந்தக்காலக் குற்றவாளிகளாம் பில்லாவும், ரங்காவும்), போங்கடி நீங்களும் உங்க காதலும் என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.

முகுந்த்; Amma said...

@Blogger Avargal Unmaigal said...
"அதிரடி பதிவாளராகிட்டீங்க..... அதுமட்டுல்ல எல்லாம் மாறுபட்ட பதிவுகளாக வருகின்றன. அருமை .....

நன்றி. மனதில் இருப்பதை கொட்டுவதற்க்கு மட்டுமே நான் பதிவெளுதுவது. அதிரடி பதிவராவது, ஃபெமஸ் ஆவது எல்லாம் என்னுடைய நோக்கம் அல்ல. அதற்கென்று பதிவிடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

எனக்கு நேரம் கிடைக்கும் போது ட்ரஃப்டில் சேமித்து வைக்கும் பல பதிவுகளை வெளியிடுகிறேன்.

ட்ராஃப்டில் இருக்கும் பதிவுகள் தீர்ந்துவிட்டால் நான் மறுபடியும் dormant ஸ்டெஜுக்கு போய் விடுவேன்.


”ஆமாம் ஒரு சந்தேகம் 2016 தமிழக தேர்தலில் நிக்கறதுக்கு ஐடியா ஏதும் வைச்சிருக்கீங்களா என்ன..?"


நான் இந்தியால ஓட்டு கூட போட முடியாது, இதில எங்க தேர்தலில் நிக்கறது..:)

ஹுஸைனம்மா said...

/அர்த்தம் தெரிந்தால் இப்படி பாடுவார்களா அல்லது பெற்றோர் பாட அனுமதிப்பார்களா//

ஏன் இப்படியொரு சந்தேகம்? தமிழ்ப்படங்களின் குத்துப் பாட்டுகள் எல்லாம் புரியும்படியான தமிழில்தான் வருகின்றன. (உதாரணம்: டாடிமம்மி வீட்டில் இல்லை...) அவற்றிற்குத்தான் நம் ஊர் பெற்றோர்களும் -ஆசிரியர்களும் குழந்தைகளை பள்ளி ஆண்டு விழா முதல் ஜூனியர்-சீனியர் சிங்கர்-டான்ஸர் வரை பாடி ஆட வைக்கிறார்கள்!!