Sunday, April 19, 2015

இரண்டு பயணங்களும் Queen ம்

கடந்த வருடம் வந்த நான்  பார்த்த Queen படம் எனக்கு12 வருடங்களுக்கு முன் இருந்த என்னை நினைவு படுத்தியது.


என்னுடைய இரண்டு வித்தியாசமான பயணங்கள் இங்கே. ஒன்று பெங்களூரில் இருந்து மதுரைக்கு பகலில் பஸ்ஸில் சென்றது, இரண்டாவது லண்டனில் இருந்து Ghent, Belgium  பயணம்.

பெங்களூர்- மதுரை பயணம்.

பெங்களூரில் intern ஆக ஆராய்ச்சிக்கு சேர்ந்த நேரம், தீபாவளி நேரம் வீட்டுக்கு செல்ல வேண்டும். ட்ரைன், தனியார் பஸ் என்று அனைத்தும் புக் ஆகி விட்டது. நிறைய நேரம் மெஜெஸ்டிக் இல் நின்று வந்த பெங்களூர்-மதுரை அரசு பேருந்தில் ஏறியாகிவிட்டது. காலை 10 மணி அளவில் கிளம்பிய பேருந்து, இரவு 8-9 மணிக்கு மதுரை செல்ல வேண்டும். அது தான் schedule. தனியாக பஸ் பயணம். பஸ்ஸில் ஏறி  உக்கர்ந்தவுடன் நான் கவனித்தது அதிக பேர் பஸ்ஸில் இல்லை என்பது. இருந்தாலும், பட்ட பகல் நேரம் எதுவும் நடக்காது என்று தைரியம் இருந்தாலும், மனதுக்குள் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. சேலம் வரும் வரை ஒரு தொல்லையும் இல்லாத எனக்கு சேலத்தில் ஏறிய ஒரு கிழவர் என் சீட்டுக்கு பின்னால் அமர்ந்து கை விட்டு நோண்ட ஆரம்பித்தார். பின்னர் நான் நடத்துனரிடம் சொல்லி வேறு சீட் மாறி அமர்ந்து வந்தேன். ஒரு முறை கூட கண் அசர வில்லை. சீட்டில் சாய்ந்தும் அமர வில்லை. இதனை எல்லாம் எதிர் பார்க்காததால், ஒரு சேப்டி பின் மட்டுமே கையில் வைத்திருந்தேன். ஒரு வழியாக மதுரை வந்து, அம்மா, அண்ணனை பார்க்கும் வரை  உயிர் என் கையில் இல்லை.

அடுத்தது லண்டன் - Ghent பயணம் .

ப்ராஜெக்ட் க்காக விசிடிங் ஸ்டுடென்ட் ஆக , Ghent university இல் ஒரு வாரம் தங்க வேண்டி பயணம்.
லண்டனில் இருந்து சனிக்கிழமை  விடி  காலை கிளம்பும் முன் Ghent இல் இருந்த ஒரு Bed  அண்ட் breakfast க்கு போன் செய்த போது அவர்கள் சொன்னதது இது தான். 12 மணிக்குள் வந்து விடுங்கள் இல்லையேல் நாங்கள் மூடி விடுவோம் என்று.

லண்டனில் இருந்து ப்ருச்செல்ஸ் விமான பயணம் தாமதமாக, ப்ருசீல்ஸ் டு Ghent  ட்ரைன் பயணமும் தாமதமாகி விட்டது. பெட் அண்ட் breakfast செல்லும் போது மணி 12 கடந்து விட்டது. பெட் அண்ட் breakfast மூடி விட்டார்கள். மொழி தெரியாது யாரையும் தெரியாது, கையில் கொஞ்ச யூரோக்கள் மட்டுமே. என்ன செய்வதென்று தெரியாமல் நான் வந்த டாக்ஸி டிரைவரிடம் "டேக் மீ டு எனி யூத் ஹாஸ்டல்" என்று சொன்னேன்.  அவரும் என்னை ஒரு யூத் ஹாஸ்டல் அழைத்து சென்றார். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தங்க வேண்டும். கையில் இருந்த பணத்தை கொடுத்து தங்க இடம் வாங்கியாயிற்று. இரண்டு நாட்கள் தள்ள வேண்டும். university திங்க கிழமை மட்டுமே திறக்கும். அதன் பின்னாரே நான் சென்று சந்திக்க வேண்டியவரை சந்திக்க முடியும். யூத் ஹாஸ்டலில், அந்த படத்தில் வருவது போல பங்க் பெட் என்னுடையது மேல் பெட். எனக்கு கீழே ஒரு ஜப்பான் பெண், எனக்கு எதிரில் இருந்த பெட்டில் மேலே ஒரு ரஷ்சியன் ஆள், கீழே ஒரு போலந்து பெண். இரண்டு நாட்களும். காலையில் தரும் பிரேக் பாஸ்ட்ஐ, மதியமும் வைத்து சாப்பிடுவேன். இருந்த இரண்டு நாட்களும்,  அந்த ஊரை நடந்து சுற்றினேன். இப்படி ஊர், பேர், மொழி தெரியாத ஊரில் ஒரு பெண் தனியாக சுற்ற முடியும் என்றால் அது ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியம்.  கிட்ட தட்ட ஐரோப்பா முழுக்க தனியாக சுற்றி இருக்கிறேன். queen படத்தில் காட்டபடுவது போல நிறைய என் அனுபவங்கள்.

யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். நான்கு வருடங்கள், என் முனைவர் படிப்பு முடியும் வரை தனியாக இருந்து இருக்கிறேன். முதல் இரண்டு மாதங்கள், டோர்மேடோரி எனப்படும் ஹாஸ்டலில் இருந்து இருக்கிறேன். ஆண் ஹாஸ்டல், பெண் ஹாஸ்டல் என்றெல்லாம் இல்லை. உங்கள் அறைக்கு பக்கத்து அறை ஒரு ஆண் தங்கி இருக்கலாம். காமன் கிட்சென். ரூமில் கழிப்பறைகள் என்று ஒரு சின்ன அறை அது. இரவில் தனியாக லேபில் இருந்து நடந்து அல்லது சைக்கிளில்  வந்து இருக்கிறேன். என்னை பொறுத்த வரை, பெண்களுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் என்றால் அது ஐரோப்பா  தான்.

சொந்த நாட்டில், மொழி தெரிந்த இடத்தில், பட்ட பகலில் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு வருவதற்குள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்த பயணம் எங்கே,  எதோ ஒரு நாட்டில், மொழி தெரியாத ஊரில் இரவில் தனியே தங்கியது எங்கே. நினைத்து பார்த்தாலே, நம் சொந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு புரியும்.

டிஸ்கி

இங்கே எழுதியது அனைத்தும், என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் கண்டது மட்டுமே. பொதுப்படையான அனுபவம் அல்ல. மாற்று கருத்துக்கள் இருப்பின் வரவேற்க்கபடுகின்றன.

நன்றி.

8 comments:

ப.கந்தசாமி said...

உண்மை சுடுகிறது.

SathyaPriyan said...

உங்கள் சொந்த அனுபவம் என்று குறிப்பிட்டு விட்டீர்கள். அதனால் அதனை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அனாலும் நீங்கள் ஓவராக ஜெனரலைஸ் செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நான் ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறேன் என்றாலும் அங்கே வாழ்ந்ததில்லை. ஆனால் சுமார் 15 நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் பல ஆண்டுகள் வசித்திருக்கிறேன்.

என்னை பொருத்தவரை பெண்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எப்படியோ அப்படித்தான் அமெரிக்காவும். இங்கேயும் பெண்கள் பாதுகாப்பாக இரவில் நடமாடும் பல பகுதிகள் இருக்கின்றன. அதே போல இரவில் பெண்கள் தனியாக செல்ல முடியாத பல இடங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் பென்டகனிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் ஒரு பகுதிக்கு இரவில் பெண்கள் செல்லவே முடியாது. அதுதான் நிலை.

இங்கே குறிப்பிடுவது தனி மனிதர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை தான்.

அதே நேரத்தில் சட்டம் தரும் பாதுகாப்பு அமெரிக்காவில் இந்தியாவை விட பல மடங்கு அதிகம் என்று தான் கருதுகிறேன்.

முகுந்த்; Amma said...

@Blogger SathyaPriyan said...
//உங்கள் சொந்த அனுபவம் என்று குறிப்பிட்டு விட்டீர்கள். அதனால் அதனை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அனாலும் நீங்கள் ஓவராக ஜெனரலைஸ் செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நான் ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறேன் என்றாலும் அங்கே வாழ்ந்ததில்லை. ஆனால் சுமார் 15 நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் பல ஆண்டுகள் வசித்திருக்கிறேன்.

என்னை பொருத்தவரை பெண்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எப்படியோ அப்படித்தான் அமெரிக்காவும். இங்கேயும் பெண்கள் பாதுகாப்பாக இரவில் நடமாடும் பல பகுதிகள் இருக்கின்றன. அதே போல இரவில் பெண்கள் தனியாக செல்ல முடியாத பல இடங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் பென்டகனிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் ஒரு பகுதிக்கு இரவில் பெண்கள் செல்லவே முடியாது. அதுதான் நிலை.

இங்கே குறிப்பிடுவது தனி மனிதர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை தான்.

அதே நேரத்தில் சட்டம் தரும் பாதுகாப்பு அமெரிக்காவில் இந்தியாவை விட பல மடங்கு அதிகம் என்று தான் கருதுகிறேன்.//

There are some clarifications I would like to make. Even in Europe in every big city, surrounding the train stations you will find red light district. In Amsterdam, red light district is very famous, because the ladies will stand inside a glass window and negotiate with the customers. With all of our friends we have visited that place as well. The main point is, even in red light district women can visit and no one will disturb you. Budapest, is so famous for prostitution, but as a student we can travel alone and still visit the place and stay in youth hostels or hotels alone. The safety is amazing same as police and security.

I never mentioned that US is more safe than Europe or same like Europe. Actually to tell you frankly, I would never visit any mid towns or shady areas at night in US.

SathyaPriyan said...

I mentioned about the US in my comments because it is unfair to comment anything on Europe without actually living there.

Also, I wasn’t referring to strip clubs or hookers’ district when I mentioned about unsafe places. I was referring to gang inflicted neighborhoods within the US. Apparently you agree that there are a few places within the US that are unsafe for both men and women at wrong times.

What I was trying to say is that when you are alone that night in Europe, you had all the probabilities of facing an individual who could assault you as much as you had during your bus ride in India. You luck tossed one side of the coin during your European experience and other side during your Indian experience.

I would like to remind you that recently one Indian woman was brutally murdered on her way back home in Australia. As long as perverts are alive no country, I REPEAT NO COUNTRY, is safe for women. We have to do our due diligence and be safe. There are safe places in India and there could be unsafe places in Europe.

முகுந்த்; Amma said...

During my 4 years stay and traveling through differnt places in Europe, I have never seen anywhere people misbehaving to ladies in a street. The security is awesome same ss police. I repeat. Not only me all my female friends never involved in any incidents. I had lots of European friends all of them go to pubs and always return late in the night. I had a habit of going almost every week Saturday morning to Franktfurt to buy indian vegetables from a Sri lankan shop next to Frankfurt train station, which is next to red light district. I have never faced any problems. None if my friends also heard that.. So to make a long story short, the chances of a gang insulting a girl without noticed by people is so rare.

Avargal Unmaigal said...

அமெரிக்காவில் பல இடங்கள் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இப்படி சில்மிஷம் நடக்க வாய்ப்புக்கள் மிக குறைவுதான்.

அமெரிக்காவில் நீயூஜெர்ஸியில் உள்ள சில பகுதிகளில் ஆண்கள் கூட பகல் நேரத்தில் தனியாக போவது பாதுக்காப்பானது அல்ல. அந்த பகுதிகளில் நம்மை போல உள்ளவர்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனது நண்பர் அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்யும் போது காலையில் மிக சிக்கிரமாக வேலைக்கு சென்று பில்டிங் வாசலுக்கு அருகாமையில் உள்ள பார்க்கிங்கில் காரை பார்க் செய்துவிட்டு அதன் பின் மாலையில் சீக்கரமாக அங்கிருந்து கிளம்பி விடுவார்.

ஆரூர் பாஸ்கர் said...

Good discussion guys. I have been to East Asia, Europe and USA. In my opinion, there are 2 things we need to remember

1. Law enforcement

We have all the loop holes to escape and there is always a way out. People take it granted.

2. Culture of the Society

In India historically people are brought up in a male chauvinist environment. It came from stories/mythology etc.,


வேகநரி said...

//அமெரிக்காவில் நீயூஜெர்ஸியில் உள்ள சில பகுதிகளில் ஆண்கள் கூட பகல் நேரத்தில் தனியாக போவது பாதுக்காப்பானது அல்ல.//

ஐயோ மதுரை தமிழா அங்கேயும் அதே பிரச்சனையா! யாரிடம் இந்த கொடுமையை செல்லி அழுவது!