Sunday, April 26, 2015

OK கண்மணி. என் பார்வையில்

என்னை பொருத்தவரை ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் எத்தனை தொழில்நுட்பம் இருக்கிறது எப்படி கையாள பட்டு இருக்கிறது, எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள், எத்தனை வெளிநாட்டு கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள், எந்த கேமரா உபயோகித்து இருக்கிறார்கள், எந்த வெளிநாட்டில் எடுத்து இருக்கிறார்கள், என்பதில் இல்லை. உங்கள் வாழ்க்கைக்கு எப்படி நெருக்கமாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதேனும்  ஒரு சில காட்சிகளிலாவது தங்களின் கடந்த காலத்தை படத்தில் வரும் காட்சிகளுடன் பொருத்தி பார்பாராயின் அதுவே அந்த படத்துடன் தன்னை இணைத்து கொள்ள ஒன்றி கொள்ள முடியும், அதுவே அந்த படத்தின் வெற்றி.

மணிரத்னத்தின் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் மௌன ராகம், இதயத்தை திருடாதே, ரோஜா மற்றும் அலைபாயுதே. அனைத்திலும் எதோ ஒரு ரியல் லைப் தொடர்பு இருப்பது போல எனக்கு தோன்றும். ரோஜா வில் கூட தேசபற்று தீவிரவாதம் என்பதை தாண்டி, படத்தின் முதல் பாதி ஒரு இளமை துள்ளல்  நிறைந்தது.

ஒரு படத்தில் இசை, இயக்கம், கதை எல்லாம் ஒன்றாக வந்து பார்க்கும் மனிதரை கட்டி போட்டால் அதுவே ஒரு படத்தின் வெற்றி. அப்படி ஒரு படம் ஓகே கண்மணி. நான், அதில் வரும் லிவ் இன் ரிலேஷன் ஷிப் சரியா தவறா என்பது பற்றியெல்லாம் விவாதிக்க வரவில்லை. என்னை பொருத்தவரை எப்படி மௌன ராகம் பார்க்கும் போது ஒரு உணர்வை தந்ததோ அதே உணர்வு ஓகே கண்மணி பார்க்கும் போது இருந்தது. அதற்காக இது மௌன ராகம் அளவு இருந்ததா..அதுவும் இதுவும் எப்படி ஒன்றாக முடியும் என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும்.

கதை என்று புதிதாக எதுவும் இல்லை, படம் முழுக்க உணர்வுகளின் சின்ன சின்ன வெளிப்பாடுகள் தான்.
 காதலர்கள்களின் ஒவ்வொரு அசைவுகள், உணர்வுகள், எண்ணங்கள், கோபங்கள், தாபங்கள் என்று இன்ச் பை இன்ச் மணிரத்னம் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்.  இதனை லிவ் இன் ரிலேஷன் ஷிப் தாண்டி நீங்கள் புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு கூட பொருத்தி பார்க்க முடியும்.

இரண்டு independent ஆணும் பெண்ணும், தன்னுடைய காரியர் அல்லது வாழ்க்கை இரண்டில் எது முக்கியம் என்று ஒரு நிலை வரும் போது, பெரும்பாலும் பெண்கள் தங்கள் காரியர்ஐ தியாகம் செய்வது நடக்கும். முதலில் ஆரம்பிக்கும் போது அவள் தெளிவாக சொல்லுகிறாள், நான் என்னுடைய காரியரை தியாகம் செய்ய தயாராக இல்லை, அதனாலே இந்த லிவ் இன் ரிலேஷன் ஷிப் என்று. 6 மாதம் பின்னர் அவள் நிலை அதே போல இல்லை, இது முக்கியமா இல்லையா என்ற உணர்வு, அதனால் ஏற்படும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என்று கடைசி 15 நிமிடங்கள்.  எல்லாரும் சொல்லுகிறார்கள், மறுபடியும் கல்யாணம் என்று தானே முடிகிறார்கள் என்று. என்னை பொருத்தவரை, அவன் கடைசியில் சொல்லும் "நீ எங்க வேணா போ பாரிஸ் போ, லண்டன் போ ஆனா என்னை கல்யாணம் செய்துட்டு போ" என்கிறான். என்னை பொருத்தவரை அழகான புரிதல் இது, நல்ல maturity.

இப்படி பட்ட ஒரு உணர்வுகளின் சங்கமத்திற்கு ARR இசை மிக அழகு.  எப்படி என்னால் இன்னும் இதயத்தை திருடாதேயின் "ஓ பிரியா பிரியா" மறக்க முடியாததோ அதே போன்ற ஒன்றாக "Aye Sinamika" சொல்ல முடியும்.

முடிவாக, மணி சார், வெல்கம் பாக். இது உங்களின் ஒன் ஆப் தி பெஸ்ட்.டிஸ்கி

நேற்று மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  தியேட்டரில் பார்த்த ஒரு தமிழ் படம் இது. படத்தின் எண்ணங்கள் பாடல்கள் இன்னும் என் நினைவில், அதனால் நேரம் ஏற்படுத்தி கொண்டு என் எண்ணங்களை பதிய வந்த பதிவு இது. இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. மாற்று கருத்துகள் கட்டாயம் இருக்கலாம்.

நன்றி2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னை பொருத்தவரை ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் எத்தனை தொழில்நுட்பம் இருக்கிறது எப்படி கையாள பட்டு இருக்கிறது, எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள், எத்தனை வெளிநாட்டு கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள், எந்த கேமரா உபயோகித்து இருக்கிறார்கள், எந்த வெளிநாட்டில் எடுத்து இருக்கிறார்கள், என்பதில் இல்லை.//

இதை ஏன் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர் புரிந்து கொள்ளவில்லை.

வருண் said...

சுஹாசினி அதுபோல் ஒர் ஸ்டேட்மெண்ட் விடவில்லை என்றால், நிச்சயம் தியேட்டரில் போய் பார்த்து இருப்பேன் னு நினைக்கிறேன். திறந்த மனதுடன் பார்த்தால் படம் நன்றாக வந்துள்ளதுபோல்தான் தெரிகிறது.

Watched MR in Vijay tv during the promotion. He seems some extremely shy guy. Looked like some sort of "gifted" guy. His Tamil and his pronunciation seemed so "unconventional" and I was surprized.

I must say I liked his principle of "not seeing his own movies/creations once it is released" (he said that to dd) because he can only see the "negative points" which is too late to fix/correct now, bother him a lot and of course his future creations.

Will watch it in DVD and I dont know when though. :)