Tuesday, April 7, 2015

Technology addiction என்னும் ஒரு குட்டிச்சாத்தான்.

சமீபத்தில் டெலி கிராப் இதழில் ஒரு  கட்டுரை படிக்க நேர்ந்தது, அதன் சாராம்சம் இது தான். "மொபைல் போன்கள் குடும்ப உறவுகளை சிதைகிறது" என்பதே. அதே போல இன்னொரு bbc கட்டுரை, எப்படி எல்லாரும் எப்போதும் போன்களை பார்த்துகொண்டு இருக்கிறார்கள், அருகில் இருக்கும் ஆட்கள் கூட தெரியாமல் என்று சொல்கிறது.



All images subject to copyright - Babycakes Romero.

கடந்த பத்து பதினைந்து  வருடங்களில் நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் நிறைய மாற்றங்கள் நமக்கு தெரியாமல் நடந்து இருக்கும். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை நிறைய பேர் கையில் செல் போன் இருந்ததில்லை. ஸ்மார்ட்போன்இல் எப்போதும்  ipad, ipod, skype, facebook, வாட்ஸ் அப், வைபர், ட்விட்டர்,  ப்ளாக் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததில்லை.  அதே நினைவாக எப்போதும் இருக்கும் பலரை பார்த்து இருக்கிறேன். கை நடுங்கும் அளவு கூட சிலருக்கு இருக்கும். இது ஒரு வகை அடிக்சன்.

எப்பொழுதும் போன்களை பார்ப்பது, எதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று செக் செய்வது, அல்லது வாட்ஸ் அப்பில் யார் எதனை ஷேர் செய்திருகிறார்கள் என்று பார்ப்பது, எத்தனை பேர் நம்முடைய முகநூல் பக்கத்தை லைக் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பது. அல்லது எத்தனை பேர் நம்மமுடைய பிளாக் ஐ வாசித்திருக்கிறார்கள் என்று பார்ப்பது......இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னுடைய இந்திய பயணத்தில் நானே இதனை கண் கூடாக உணர்ந்தேன். செல் போனை அணைத்து வைக்க வேண்டி இருந்த போது  எதோ கை ஒடிந்தது போலஇருந்தது எப்படி நான் ஒரு Technology அடிக்ட் ஆகி இருக்கிறேன் என்று காட்டியது. எதோ இழந்தது போல ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்ல வேலையாக தற்போது  அந்த அடிக்சனில் இருந்து வெளி வந்து விட்டேன்.

இதே போன்ற ஒரு அடிக்சன் , நான் சீரியல் பார்க்கும் பெண்களிடமும் தற்போது ஆண்களிடமும் கூட காண்கிறேன்.  அதுவும் இந்தியாவில் இது கிட்ட தட்ட ஒரு பைத்தியம் போல ஆகி விட்டது. 7 மணி முதல் 11 மணி வரை, தொடர்ந்து சீரியல்கள், அதுவும் பெரும்பாலான சீரியல்கள் ஒரே கதை கொண்டவை, எப்படி பெயர்களையும், கரெக்டேர்களையும் நினைவில் வைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருந்த பொது அருகில் அடிபட்ட நிலையில், கால்கட்டு போட்டு இருந்த ஒரு அம்மா, அருகில் இருக்கும் இன்னொரு அம்மாவிடம் "ரெண்டு நாள் ஆச்சு நாதஸ்வரம் பார்த்து, என்ன ஆச்சு அதில ?" என்று ரொம்ப அக்கறையா விசாரித்து கொண்டிருந்தார்கள்.  என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

இப்படி technological addiction என்பது கோகனே போன்ற போதை பொருள் அடிக்சன் போன்றது என்று இங்கு சொல்கிறார்கள். முக்கியமாக முகநூல் அடிக்சன் பற்றி இவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள். இளைஞர்கள் மிக முக்கியமாக இதனை போன்ற ஒரு addictionக்கு ஆளாகி இருக்கிறார்கள். cold turkey எனப்படும் ஒரே நாளில் தூக்கிஎறிந்து  விட்டு, இனி எப்போதும் திரும்பி பார்ப்பதில்லை என்றுகைவிடும்  வரை இது ஒரு குட்டிச்சாத்தான் தான்.

நன்றி.


3 comments:

ப.கந்தசாமி said...

உண்மையை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

Nirmala said...

நல்ல பதிவு .... ! மொபைல் போன் நம்முடைய மூன்றாவது கை. டெக்னாலஜி நம்மை எல்லாவற்றிலிருந்தும் பிரித்துவிட்டது.... ஒரே ஒரு நாள் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நம்மால் இருக்க முடியுமா என்று சோதித்து பார்க்க வேண்டும். - chudachuda.com

வெங்கட் நாகராஜ் said...

இதுவும் ஒரு வித போதை தான்...

கடந்த மாதத்தில் 16 நாட்கள் வலையுலகம், முகப்புத்தகம் என எங்கும் வராமல் இருந்தேன் - அதில் இருக்கும் சுகம் இத்தனை காலம் புரியாமல் போய்விட்டதே என வருத்தமும் வந்தது.

ஆனாலும் தில்லி திரும்பிய பிறகு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பக்கம் உலவுவது தொடர்கிறது.....

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது கட்டாய ஓய்வு கொடுக்க நினைத்திருக்கிறேன்......