Sunday, April 12, 2015

கட்டாயம் வேணும் டிவிக்கு ஒரு தணிக்கை.


நீங்கள் தொடர்ந்து டிவி பார்பவர்கள் என்றால் ரொம்ப கவனித்து இருக்க வாய்ப்பில்லை.டிவியே பார்க்காமல் அல்லது தமிழ் டிவி பார்க்காமல் பின்னர் ஒரு மாதம் முழுதும் அதை பார்க்கும் படி வைத்தால் என்னவாகும். புது புது விஷயங்கள் கண்டு பிடிப்பீர்கள், வித்தியாசமாக சில விஷயங்கள் தோன்றும் அல்லது ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று கடுப்பாக  தோன்றும். அப்படி நான் கவனித்த சில விஷயங்கள் இங்கே.

முதலில் நான் கவனித்தது குழந்தைகள் சேனல்ஸ் பற்றியது. இங்கே, நான் முகுந்துக்கு 30 நிமிடம் மட்டுமே டிவி பின்னர் Ipad போன்ற ஸ்க்ரீன் டைம் வைத்து இருக்கிறேன். இதனை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகம் படிப்பது, Legos, விளையாடுவது, என்று schedule உண்டு எங்கள் வீட்டில்.

அதே போல டிவி என்றால் PBS தவிர வேறு எந்த சானலும் பார்க்க அனுமதிப்பதில்லை. ஏனெனில் PBS என்பது பப்ளிக் சானெல் விளம்பரங்கள் இருப்பதில்லை, நல்ல தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்குகிறார்கள். அதே போல எந்த வித சண்டை, ரத்தம், பாம், குத்து, என்று எதுவும் இருப்பதில்லை.  ஒவ்வொரு ப்ரோக்ராமும் K  என்ற தணிக்கை கொடுக்கப்பட்டது, அதாவது கொடுக்கப்படும் நிகழ்சிகள் அனைத்தும் educational அல்லது குழந்தைகள் பார்க்கலாம் என்று அர்த்தம். திரைப்படங்களும் கே அல்லது PG 13 போன்ற படங்கள் மட்டுமே நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கிறார்கள்.

 இப்படி பழகிய முகுந்த்,  இந்திய பயணத்தில் ஓகே, வேறு வழியில்லாமல் பார்க்க  என்று  இருந்த  ஒரே ப்ரோக்ராம் சோட்டா  பீம் மட்டுமே. அதிலும் குத்து, சண்டை என்று உண்டு என்றாலும் மற்ற சிறுவர் சேனல் போல ரொம்ப வயொலேன்ட் இல்லை. கிட்ட தட்ட எல்லா குழந்தைகள் செனெலிலும் எதோ ஒரு குத்து, சண்டை செய்யும் கதை மாந்தர் இருக்கிறார். அவர் சூப்பர் ஹீரோ போல காண்பிக்க படுகிறார். லீவு நேரங்களில் கிட்ட தட்ட எல்லா குழந்தைகளும் டிவி பெட்டியே கதி என்று இருகிறார்கள். ஒரு ப்ரோக்ராம் முடிந்து மற்றொன்று. சில நேரங்களில் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் யார் ரிமோட் வைத்து கொள்ளுவது என்று சண்டை எல்லாம் நடக்கிறது. educational என்று துளியும் இல்லை, அல்லது நான் பார்த்த சானலில் இல்லை. போகோ, சுட்டி, நிக் என்று அனைத்து சேனல்களும் கிட்ட தட்ட ஒரே போல கதை ஒன்று வைத்து இருக்கிறார்கள்.

டிவிக்கு தணிக்கை என்று எதுவும் இருப்பதில்லை என்பதால் டிவிக்கள் மூலம் அரங்கேற்றபடும் எல்லா கேட்ட விசயங்களும் நம் குழந்தைகளுக்கு காண கிடைகின்றன. நான் பார்த்தவரை, நிறைய பெற்றோர் பெரியவர்கள் நிகழ்சிகளை குழந்தைகள் காண அனுமதிகிறார்கள். நிறைய, கத்தி, ரத்தம், குத்தாட்டம் என்று சர்வமும் இருக்கிறது.

பின்னர் நான் ரொம்ப கடுப்பானது, பெண் தமிழ் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பற்றியது. ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் ?
கெக்கே பிக்கே என்று ஏதாவது ஒன்று உளறி கொண்டு டிப்ஸ் தருகிறேன் பேர்வழி என்று பினாத்தி கொண்டு. ஐயோ சாமி. "Have some  dignity girls!" என்று சொல்ல தோன்றியது. அதே போல தற்போது எல்லா சானல்களும் டிவி தொகுப்பாளர்கள் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதில் பங்கு பெரும் பெண் தொகுப்பாளர்கள் எப்போதும் படு "dumb " ஆக இருப்பது ஏன்  என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் இப்படி தானா அல்லது ப்ரோக்ராமுக்காக இப்படி நடிகிறார்களா என்று தெரியவில்லை. Connexion என்று ஒரு நிகழ்ச்சி, அதில் எப்போது ஒரு பெண் தொகுப்பாளர்கள் அல்லது சீரியல் நடிகைகள் வந்தாலும் சின்ன சின்ன விசயங்கள் கூட தெரியாமல் விழிக்கிறார்கள். "ஏம்மா இது கூட தெரியலையா" என்று நிகழ்ச்சி நடத்துபவரே பல தடவை கேட்கிறார். இப்படி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா, அல்லது இப்படி நடிங்கள் என்று சொல்லி தருகிறார்களா என்று தெரியவில்லை.


 ஒரு மாத பெரியவர்கள் தமிழ் டிவி அனுபவத்தில் நான் பார்த்தது, தமிழ் தொலைகாட்சிகளில் அதிகம் செல்லுபடியாவது 1. சினிமா 2. சீரியல் மற்றும் 3. sensational நியூஸ். கிட்டத்தட்ட இவை அனைத்திலும்ஆபாசம் நிறைந்துஇருக்கிறது.  சிறுவர்கள் டிவியில் நிகழ்ச்சிகளில் அறிவை, அல்லது பழக்கவழக்கத்தை கற்றுகொடுப்பது போல எதுவும் இல்லை, அல்லது நான் பார்த்தவரை இல்லை.

கட்டாயம் வேணும் டிவிக்கு ஒரு தணிக்கை.

நன்றி.


2 comments:

krish said...

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை,எங்களுக்கு வேறு வழியில்லை.

Baskaran Siva said...

let us not try to boil the ocean in a day.

Very broad subject. சமூகத்தில் ஒரு அடிப்படை புரிதல் ஏற்பட வேண்டும்.

-ஆரூர் பாஸ்கர்