Monday, September 21, 2015

உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!

உலகத்தில் அனைத்துமே பரிந்துரை ஆகி விட்டது. அது நாம் உடுத்தும் உடையில் இருந்து, சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து வசிக்கும் வீட்டில் இருந்து அனைத்துமே பரிந்துரை படி தான் நடக்கிறது. அது தற்போது நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தால் தீர்மானிக்கபடுகிறது. 

இல்லை என்கிறீர்களா? இதற்க்கு பதில் சொல்லுங்கள். 

  1. உங்களில் எத்தனை பேர், பேஷன் அல்லது நண்பர்கள் அல்லது டிவி, சினிமா நட்சத்திரங்கள் உடுத்தும் உடைகளை மட்டுமே வாங்காமல் இருக்கிறீர்கள். முக்கியமாக பெண்கள் புடவை, நகை வாங்குவது எல்லாமே அப்போதைய பேஷன் அல்லது கடைகாரர் லேட்டஸ்ட் டிசைன் என்று சொல்லி விற்பதுவாகவே இருக்கும்.
  2. இந்த டையெட் உனக்கு நல்லது இதனை சாப்பிடு வெயிட் குறையும் , சக்கரை நோய் வராது, ரத்த கொதிப்பு வராது அல்லது முடி கொட்டது அல்லது பருக்கள் வராது ...இப்படி நிறைய. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கிடைக்கும் அல்லது பரிந்துரைக்க படும் எல்லாத்தையும் உணவாக சாப்பிடும் மக்கள்.
  3. இந்த இடத்தில் வீடு வாங்குங்கள், இந்த இடத்தில் இது இருக்கிறது, அது இருக்கிறது..பள்ளி இருக்கிறது ரோடு பக்கம், சுத்தமான நீர்...இப்படி நிறைய நாம் இங்கு தான் வீடு வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்க படுகிறது.
நான் மேலே குறிபிட்டது ஒரு சில் பரிந்துரைகள் மட்டுமே. இதனை தவிர நிறைய இருக்கிறது.

மேலே நான் குறிப்பிட்டவை எல்லாம், மக்களின் சாய்ஸ் மட்டுமே..அதாவது பெரும்பாலான மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதனை சார்ந்து உங்கள் மீது தொடுக்கப்படும் பரிந்துரைகள் போர். இப்படி நம் மீது மறை முகமாக தொடுக்கப்படும் விளம்பர பரிந்துரைகள் சில நேரங்களில் வேலை செய்யலாம், சில நேரங்களில் வேலை செய்யது. ஏனெனில், இவை பொதுமக்களின் வாங்கும் திறனை அல்லது வாங்கும் சாய்ஸ் பொறுத்து உங்களுக்கு அளிக்கபடுவது. ஒரு சில மக்களுக்கு இவை வேலை செய்யாது.


தற்போது ஒரு விதமான பரிந்துரைகள் கடை பிடிக்க படுகின்றன அவை உங்களுக்கே உங்களுக்கான பரிந்துரைகள் அதாவது Personalized recommendation. நீங்கள் இணையம் உபயோகிப்பவர் ஆயின், இதனை கவனியாமல் இருந்திருக்க முடியாது. அது நீங்கள் கேட்காமலே உங்களுக்கு பரிந்துரைக்க படும் பொருட்களை பற்றியது.  ஒரு உதாரணம், ஒரு முறை குழந்தைகள் புத்தகம் வேண்டும் என்று கூகுளில் "சில்றன் புக்ஸ்" என்று தேடினேன். அவ்வளவு தான், பின் நான் எப்பொழுது கூகுளில் என்ன தேடினாலும் அதில் உள்ள சைடு பாரில் அல்லது எந்த தளம் சென்றாலும் அங்கு "உங்களுக்கு பரிந்துரைக்க பட்ட புத்தகம்" என்று பல பல புத்தகங்கள், தினமும் அல்லது ஒவ்வொரு முறை நான் தளத்தை திறக்கும் போதும் வரும். 


thanks to google images

கடந்த வருட ஆரம்பத்தில்  காசு, பணம், துட்டு, மணி, மணி! என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது எப்படி முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் உங்களை பற்றிய செய்திகளை உங்களுக்கு தெரியாமல் திரட்டி உங்களுக்கு இவை தான் பிடிக்கும் என்று கணித்து அதற்க்கு தகுந்த விளம்பரங்களை முகநூல், ட்விட்டர் உபயோகிக்கும் போது தருகிறார்கள் என்பது பற்றியது. 

என்ன நடக்கிறது இங்கே, நீங்கள் ஒரு பொருளை பற்றி கூகுளில் தேடுகிறீர்கள், அதனை பற்றி ரிசர்ச் செய்கிறீர்கள் பின்னர் முகநூலில் கேக்குரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அது போதும் அவர்களுக்கு. தற்போது கூகுள், FB, ஆப்பிள் என்று அனைவரும் செய்வது செய்து கொண்டு இருப்பது உங்களை பற்றின முழு செய்திகளையும் சேகரிப்பது.உங்களை பற்றி சேகரித்த செய்தியை கொண்டு உங்களிடமே  பொருட்களை திணிப்பது. 

இப்படி பரிந்துரைகள்  நல்லது தானே என்று நினைப்பவர்களுக்கு, முதலில் வித்தியாசமாக உங்களுக்கு வேண்டியதை மட்டுமே உடுத்த, உண்ண உறங்க என்று கொஞ்சம் அவர்கள் பரிந்துரைப்பதை உபயோகிக்க விளையும் நீங்கள், நாட்கள்  செல்ல செல்ல அவர்கள் என்ன உங்களுக்கு பரிந்துரை செய்கிறார்களோ அதனை மட்டுமே உபயோகிக்க ஆரம்பிப்பீர்கள். பின்னர் மோனோபோலி ஆகி விட கூடும். இது எகோநோமிக்ஸ் பிரச்னை என்றாலும், உங்களை பற்றிய அனைத்தையும் வேறு யாரோ தீர்மானிப்பார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று டொய்லெட் பேப்பரில் இருந்து விமான டிக்கெட் வரை அனைத்தும் அவர்கள் சொல்லி நீங்கள் நடப்பீர்கள். அதாவது கிட்டத்தட்ட ஒரு ரோபோ போல ஆக விடுவீர்கள்.  நிறைய எதிக்ஸ், தனி மனித உரிமைகள் பற்றி பேச்சுக்கள் ஆரம்பிக்க பட்டாலும், நடந்தாலும், எவ்வளவு தூரம் அவை செயல் படுத்த படும் என்று தெரியவில்லை.

டிஸ்கி 
எப்படி பரிந்துரைகள் செய்வது மற்றும் செயற்கை நுண்ணறிவு உபயோகிப்பது (Artificial Intelligence and Machine learning) என்பது குறித்த ஒரு கருத்தரங்குக்கு செல்ல, பேச நேர்ந்தது. அங்கு முகநூலில் , கூகிள் போன்றவற்றில் இருந்து மக்கள் வந்து உரையாற்றினர். அதில் நான் கேட்ட செய்திகளை வைத்தே இதனை எழுதி இருக்கிறேன்.
 
நன்றி.


6 comments:

Avargal Unmaigal said...

மிக சரியாக தெளிவாக சொல்லி இருக்கிங்க...இதை பற்றி நான் எழுத வேண்டும் என நினைத்தேன் ஆனால் மிக எளிமையாக சொல்லி இருக்கீங்க....பாராட்டுக்கள். உங்கள் பதிவுகளில் நல்ல மாற்றம்......மாறுபட்ட விஷயங்கள் பலவற்றை பகிர்வது மிக சிறப்பு

? said...

இந்த டெக்னாலஜியை இணையம் பிரபலமாவதற்கு முன்பிருந்ததே பின்பற்றி வருவது தமிழ்நாடு என்கிற உண்மையை உலகம் முதலில் உணரவேண்டும்.

இதை தமிழ்நாட்டில் நிகழ்த்தி காட்டியவர் ஜெயலலிதா - எல்லா இடத்திலும் JJ TV, JJ பஸ்,JJ பிலிம்சிட்டி என்று எல்லா இடத்திலும் JJ எனும் தனது பெயரை வைத்து பரிந்துரை மூலம் மேனோபலியாகி தமிழ்நாட்டினையே பலி ஆக்கியவர். இளிச்சவாத்தனமாக முன்பெல்லாம் அண்ணா பெயரை வைத்து அவருக்கு கிரட் அனுப்பிக்கொண்டிருந்த கருணாநிதிகூட ஜெவை பார்த்து திருந்தி பிற்பாடு கலைஞர் காப்பீடு என்பது போல தன் பெயரில் திட்டம் வைத்து விளம்பரம் தேடினார். ஆக அமெரிக்க கணனி மற்றும் இணைய வித்துவான்களுக்கு முன்னோடியாக தமிழகம் இருந்திருக்கிறது என்பதே பெருமைதானே!

Unknown said...

அருமையான பதிவு சரியான தருணத்தில்

தனிமரம் said...

அருமையான அலசல் கட்டுரை .

Anonymous said...

தங்களுடைய பக்கமும் திரட்டிகளின் கைகளில் உள்ளது முகுந்த் அம்மா. விரும்பினால் தங்கள்பக்கம்/robots.txt பார்க்கவும். முடிந்தால் கட்டுப்படுத்தவும். நம்மூரில் ஒரு வாசகம் சொல்லப்படுவதுண்டு. கண்டவர் விண்டிலர்... என்று. ஆனால் கண்டவர் கண்டதை விண்டிடும் செயல்கள் இவை. கூகிளின் உபயத்தால் யார் வேண்டுமானாலும் எவருடைய (அனுமதி இலவசம்) தகவல்களையும் பெற/கூற முடியும். கூகுள்/யாகூ சேவைகளை விட்டு வெளியேறாமல்(Logout) இருப்பதாலும், Never Remember History-i enable செய்யாததாலும், Clear History-i பிரவுசரை விட்டு வெளியேறும் போது செய்யாமல் இருப்பதாலும் வரும் பின்விளைவுகள் இவை. தேடலின் போது நம்முடைய அடையாளத்தை எவ்வகையிலும் பதிவு செய்யாமல் இருந்தால், இவ்வகை தொல்லைகளில் இருந்து கொஞ்சம் விடுபடலாம். அடுத்ததாக Machine Learning என்ற சொல்லை வைத்துக் கொண்டு என்ன பாடுபடுத்த போகிறார்களோ?. சும்மாவே ஆடுவாய்ங்க... இதுல  ML என்கிற சலங்கை வேறயா? அரைவேக்காடுகளை (புளியமரம் ஆடுதோ இல்லையோ பிடிச்சு ஆட்டுற பசங்க) நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.

நல்ல பதிவு.

Anuprem said...

சிறப்பான தொகுப்பு ..........சிந்திக்க வேண்டிய பகிர்வு ...