Wednesday, September 9, 2015

வெளிநாட்டுக்கு குடிபெயர்தல்: கனவுகளும் உண்மைகளும்..

உங்கள் குழந்தைகள் படிப்பு மற்றும் நல்ல வாழ்க்கை உங்களுக்கு வேண்டும் என்றால் கனடா போன்ற  வெளிநாட்டுக்கு குடிபெயருங்கள், என்று பல விளம்பரங்கள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய மக்களை நோக்கி இந்த விளம்பரங்கள் வெளியிடபடுகின்றன.

சொல்ல போனால் கனடா நாட்டு கிரீன் கார்ட் எனப்படும் PR கார்டு கிடைப்பது என்பது US ஐ ஒப்பிடும் போது சுலபமே. உங்களின் படிப்பு தகுதிக்கு ஏற்ப குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் PR கார்டு வந்து விடலாம். அப்பாடா, வந்துடுச்சு என்று பலர் பெட்டியை கட்டி கொண்டு குடும்பத்துடன் இங்கு வந்து செட்டில் ஆக ஆரம்பிக்கிறார்கள். டொராண்டோ ஏர்போர்ட்ல் இறங்கும் போதே, "நீங்கள் கனடாவிற்கு புதியவரா?, உங்களுக்கு உதவ என்று எங்களின்  கிரெடிட் கார்டு" என்று CIBC பேங்க்ன் விளம்பரம் பார்க்க முடிந்தது. உடனே நான் கூட, பரவயில்லையே..எப்படி immigrant மக்களை உற்சாகபடுத்துகிறார்கள் பாருங்கள் என்று நினைத்து கொண்டேன்.

ஆனால் உண்மையில் இவர்கள் சொல்வது போல, குடிபெயர்தல் மிக சுலபமா?..நான் பார்த்த சில சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கை வைத்து அனுமானித்தது இங்கே.

உள்ளே நுழையும் வரை கலர்புல் ஆக இருக்கும் பலருக்கும், இங்கே வந்த சில நாட்களில் உண்மை முகத்தில் அறைய ஆரம்பிக்கும். முதலில் நீங்கள் immigrant என்றால் வீடு நிறைய இடங்களில் வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படியே, உங்களின் PR கார்டு காட்டி குடியிருக்க வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அது இப்படி குடிபெயற்பவர்களுக்கு என்றே சில குடியிருப்புகள் இருக்கின்றன, அவற்றில் மட்டுமே கிடைகிறது. அவை பெரும்பாலும் லோ இன்கம் ஏரியா எனப்படும் அதிக சேப்டி இல்லாத ஏரியாகளில் மட்டுமே கிடக்கிறது. அங்கு உங்களை போலவே பலர் வெளி நாடுகளில் இருந்து வந்து இருக்கிறார்கள்.


இரண்டாவது முக்கிய பிரச்னை அல்லது மிக மிக மிக முக்கிய பிரச்னை, உங்களுக்கு வேலை கிடப்பது.

நீங்கள் இந்தியாவில் பெரிய டிகிரி வாங்கி இருந்தாலும், இங்கு அந்த டிகிரி எல்லாம் ஒத்து கொள்ள படாது. நீங்கள் இங்கே படித்து ஏதேனும் டிகிரி வாங்கி இருந்தால் மட்டுமே அவை இந்த நாடுகளில் ஒத்து கொள்ள படும். நீங்கள் அங்கே டாக்டர் டிகிரி வாங்கி இருந்தாலும், இங்கே அவை ஒத்து கொள்ள பட மாட்டாது. அதனால் வேலையும் கிடைக்காது. அதனால், நிறைய பேர் சர்வைவல்காக அல்லது வாழ வேண்டும் என்று எந்த வேலையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவை, ஜானிடோர், truck டிரைவர் என்று என்ன கிடக்கிறதோ அவற்றை செய்ய ஆரம்பிகிறார்கள். வேலை பார்த்து கொண்டே படிக்கிறார்கள். அப்படி படித்தாலும் உங்களுக்கு வேலை கிடப்பது நிச்சயம் இல்லை. மாறாக, உங்களுக்கு அனுபவம் இல்லை என்று பல கம்பனிகள் உங்களை beginner அளவு அனுபவம் உள்ள வேலை அல்லது சம்பளம் மட்டுமே தருகிறார்கள். அப்படி ஒரு நிலை அடைய நீங்கள் கிட்டத்தட்ட 2-3 வருட படிப்பு கனடாவில் முடித்து இருக்க வேண்டும்.

வேலை கிடைக்க நெட்வொர்கிங் மிக மிக முக்கியம். வேலைக்கு அப்பளை செய்து உங்களுக்கு இண்டர்வியு வரும் வேலைக்கு செல்லலாம் என்று கனவு காண முடியாது. உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் மட்டுமே அவர்கள் ரெபர் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கிறது. மற்ற படி நீங்கள் தலை கீழ் நின்று குட்டிகரணம் அடித்தாலும் யாரும் வேலை சுலபமாக தர மாட்டார்கள். வேறு வேலை மட்டுமே பார்க்க வேண்டும்.

அடுத்தது கிளைமேட். இங்கே டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மூன்று மாதங்களும் கடுங்குளிர்...மைனஸ் 35 டிகிரி வரை செல்லும் குளிர் பலரை ஏன்டா இந்த ஊருக்கு வந்தோம் என்று வருந்த வைத்து விடுகிறது. அதுவும், புதிதாக குடிபெயர்ந்த பலரும், கார் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் பொது ட்ரான்ஸ்போர்ட் பஸ்களை நம்பி இருக்கும் வேளையில், பஸ் நிறுத்தத்தில் நிற்க கூட முடியாத அளவு கடுங்குளிர் இருக்கும் என்று என் நண்பர்கள் சொன்னபோது மிகவும் பயங்கரமாக இருந்தது.


நன்மைகள் என்று பார்த்தால், படிப்பு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இலவசம். உங்கள் குழந்தைகள் சீக்கிரம் இங்கே பழகி கொள்ளுவார்கள். நீங்கள் முதல் 5-6 வருடம் பொறுத்து கொண்டு தாக்கு பிடித்து கொண்டால் சமாளித்து விடலாம். பின்னர் பிரச்னை இல்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனாலும் முதல் 5 வருடம் வாழ்க்கை பெரிய போராட்டமாகவே இருக்கும். அதனை உணர்ந்து அதற்க்கு ஏற்ப தயார் படுத்தி கொண்டு இங்கு குடிபெயர்வது நல்லது.

டிஸ்கி

இது நான் சந்தித்த நண்பர்களை வைத்து அவர்களின் அனுபவங்களை வைத்து எழுதியது. வேறு கருத்துகள் இருப்பின் வரவேற்க படுகின்றன.

நன்றி.


4 comments:

Nagendra Bharathi said...

அருமை

வடுவூர் குமார் said...

புதியவர்களுக்கு தேவையான தகவல்.

வேகநரி said...

எனக்கு தெரிந்தவர்கள் சிறு வயதிலேயே பெற்றேர்களுடன் கனடாவில் குடிபோனவங்க. அவங்க மிக திருப்த்தியா அங்கே கனடியனாக வாழ்கின்றாக.நான் கனடா போனல் அவர்களுடன் தங்குவேன்.அவர்கள் எனது உறவினர்கள்.
இது தவிர அங்கே எனக்கு அறிமுகமான நான் கண்ட சந்தித்த சில ஸ்ரீலங்கன்ஸ் சில வருடத்துக்துக்கு முன்பே வந்தவங்க கூட கனடாவில் மிக திருப்தியாக இருக்காங்கங்க.

sakthi subbarayalu said...

நான் கனடாவில் 4 வருடங்களாக இருக்கிறேன். immigrantக்கு நல்ல இடத்துல வீடு கிடைக்கிறது கடினமே இல்லை. கனடா ஒரு immigrant நாடு. என் ஐடி துறையில் இந்திய அனுபவத்துக்கு மதிப்பு உண்டு. 3 மாத குளிர், கார் இல்லாம நிச்சயம் கடினம்தான். ஆனால் வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, படிப்பு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் உறுதி