Monday, September 28, 2015

உங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது?



Photo courtesy Google images

இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி மீடிங்கில் பேசி கொண்டு இருக்கும் போதே கண்கள் சொருகி மயங்கி விழுந்து விட்டாள். உடனே EMR அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அந்த பெண்ணிற்கு அதிக உதிரபோக்கு இருந்துள்ளதும் அதன் விளைவாக மயங்கியதும் தெரிய வந்தது. மெனோபாஸ் நெருங்கும் வயது என்பதால் ஒரு சிலருக்கு இது போன்று ஏற்படாலாம் என்றாலும் இது போன்ற அதிக உதிரப்போக்கு சில நேரங்களில் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.

பொதுவாக பெண்களின் மாதவிடாய் குறித்து அதிகம் விழிப்புணர்ச்சி கானபடுவதில்லை. எது சரியான அளவு, எத்தனை நாளுக்கு ஒருமுறை, எத்தனை நாட்கள் உதிரபோக்கு இருக்கலாம், அல்லது உதிரம் மட்டும் அல்லாமல் கட்டியாகவும் வரலாமா.. என்பதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். இந்த கேள்விகளுக்கு இவர்கள் அணுகுவது தன சொந்தகள், தோழிகள் அல்லது இணையம் உபயோகிக்க தெரிந்தவராயின் கூகிள்.

பெண்களுக்கு ஏற்படும் பொதுவன மாதவிடாய் பிரச்சனைகள் என்னவெனில், அதிக உதிரபோக்கு, உதிரம் கட்டியாகி வெளியேறுதல், உதிரம் வெளியேறாமல் வெள்ளையாக வெளியேறுதல் அல்லது மிக குறைந்த உதிரபோக்கு அல்லது உதிரப்போக்காக இல்லாமல் ஸ்பாட்டிங் மட்டுமே தட்டுபடுவது.


1. அதிக உதிரபோக்கு

இங்கு நான் அதிகம் என்பது ஒரு நாளில் 5 க்கு மேற்பட்ட நாப்கின் அல்லது டம்பூன் உபயோக்கிக்கும் அளவு உதிரபோக்கு இருப்பது. இதற்க்கு முக்கிய காரணமாக இண்டர்நெல் பெனிக்ன் ட்யுமெர் அல்லது fibroids இருக்கலாம். ஒரு சிலருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வரலாம்.
இப்படி அடிக்கடி நடந்தால் உடனே டாக்டரிடம் அணுகுவது நல்லது, ஏனெனில் இது பாலிப், endometriosis, பெரிய ட்யுமெர் என்று வந்து விட்டு விடும். நீங்கள் குழந்தை பெரும் வயதில் இருக்குறீர்கள் என்றால் உங்களின் குழந்தை பிறப்பை தடுத்து மலட்டு தன்மையை கூட உண்டாக்கலாம்.
அதிக உதிரபோக்கால், வயிற்று வலி, கால் கை வலி தவிர மன உளைச்சல், சாதாரண வேலையை கூட சரியாக செய்ய முடியாத தன்மை, எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம்.

2. மிக குறைந்த உதிரபோக்கு

நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் இது நடக்கலாம். அப்படி நீங்கள் எதுவும் எடுத்து கொள்ளவில்லை ஆனாலும் மிக குறைந்த அளவு உதிரபோக்கு இருக்கிறது எனில், உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். முக்கியமாக உங்களின் பிட்யுடரி சுரபியின் செயல்பாடு குறித்து அணுகுவது நல்லது. ஒரு சிலருக்கு PCOS போன்ற பாலி சிஸ்டிக் ஓவரீஸ் இருப்பினும் இது போன்ற மிக குறைந்த அல்லது மாதவிடாய் தவறுவது போன்றும் ஏற்படலாம்.  உங்களின் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் இதனை சரி செய்யலாம். ஒழுங்கான ப்ரோடீன், பழங்கள் காய்கள், நிறைந்த சாப்பாடு, நல்ல உடல் பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை கட்டுபடுத்தலாம்.

3. ஸ்பாடிங்

இது உங்களின் மாதாவிடாய் இறுதியின் போது ஏற்படும் ஸ்பாடிங் அல்ல, மாறாக எப்பொழுதும் ஒரு சிலருக்கு ஏற்படலாம். நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்பவாராயின் ஒரு சிலருக்கு இது நேரலாம். இல்லை என்றால் டாக்டரை அணுகுவது நல்லது. முக்கிய காரணம் கருப்பை வாய் அல்லது கருப்பையில் இருக்கும் பாளிப்கள் எதற்கு காரமணாக இருக்கலாம். அல்லது பைப்ரைட் அல்லது கான்செர் கூட காரணமாக இருக்கலாம். அதனால் இப்படி அடிக்கடி நடந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

4. மாதவிடாய் தள்ளி போவது

உடனே இது கர்ப்பம் என்று பலர் நினைக்கலாம்.ஆனால் உண்மையில் உங்களுக்கு ரெகுலர் ஆவுலேடிங் சைக்கிள் வரவில்லை என்று அர்த்தம்.PCOS, type  2 Diabetics போன்றவையும் உங்களின் உடலில் ஹார்மோன் இம்பாலன்ஸ் உருவாக்கி மாதவிடாய் தவறி அல்லது தள்ளி செல்லலாம். ஒரு சிலருக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு  இது உங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தும். அதனால் டாக்டரை அணுகுவதும் உங்களை வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதும், மாவுப்பொருள்கள் தவிர்ப்பதும் நல்லது. இது உங்களின் மாதவிடாயை சரி செய்ய உதவும்.

மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை வராமல் 30-32 நாட்களுக்கு ஒரு முறை வரலாம். அது சாதாரணமானது. ஆனால், ஒவ்வொருமுறையும் 40 நாட்கள் அல்லது அதற்க்கு மேல் வந்தால் அது நல்லதல்ல. அதே போல, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலும் டாக்டரை அணுகுவது நல்லது.


டிஸ்கி
இது மருத்துவ அறிவுரை அல்ல, நான் வாசித்ததை, அனுபவத்தில் கண்டதை வைத்து எழுதியது.

நன்றி.


1 comment:

Avargal Unmaigal said...

மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் அட்வில்(pain killer) எடுத்து கொண்டால் மாதவிடாய் தொடர்ந்து வரும் நாட்களில் வலி அதிகம் இருக்காது. இது எங்க ஊரின் லேடி டாக்டர் அட்வைஸ்