Friday, September 25, 2015

நாம் அதிகம் மெனக்கெடும் சில முட்டாள் தனமான செய்கைகள்!

ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு அல்லது முட்டாள் தனமான விசயத்திற்கு அதிகம் மெனக்கெடும் ஒரு சிலரை நாம் அனைவரும் சந்தித்து இருப்போம். அப்படி நான் சந்தித்த ஒரு சில விசயங்கள் இங்கே.


  • உங்கள் வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் உங்களின் குழந்தைகளும் சேர்ந்து வீட்டை ரெண்டு செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது திடீரென்று எதோ உடையும் சத்தம் நீங்கள் என்னவென்று பார்க்க செல்லுகிறீர்கள், அங்கே வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி பந்து அடித்து உங்கள் ஷோ கேசில் இருந்த ஒரு பொருள் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. இப்போது என்ன செய்வோம். "Blame Game" ஆரம்பிக்கப்படும். உங்கள் குழந்தை செய்தது..இல்லை உன் குழந்தை செய்தது..என்று ஒருத்தரை ஒருத்தர் blame செய்து கொள்ளுவோம். முடிவு, குழந்தைகள் நன்கு அடி வாங்கும், அல்லது சில நேரங்களில் எக்ஸ்ட்ரீம் ஆக நட்பு துண்டிக்க பட்ட காரியமும் நடக்கலாம். பின்பு பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஏன் வருடங்கள் கூட இந்த நிகழ்வு மனதில் இருந்து தொந்தரவு கொடுக்கும். இது தேவையா..இங்கு ஒரு சின்ன பொருள் உடைந்து விட்டது என்பதற்கு கொடுக்கும், மெனக்கெடும் நீங்கள், அதனால் நமக்கு மனதளவில் அல்லது நட்பளவில் என்னென்ன பின்விளைவுகள்வந்திருக்கின்றன என்று ஒரு நிமிடம் யோசித்தால் எப்படி இருக்கும் .

  • அடுத்த விஷயம், அடுத்தவர்களை இம்ப்ரெஸ் செய்ய என்று நாம் போடும் வேஷங்கள். நீங்கள் வீட்டில் சரி சோம்பேறியாக இருப்பீர்கள். ஆனால் யாராவது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் உடனே..அன்று வீடு ரெண்டு படும். தான் ரொம்ப பெர்பெக்ட் என்று அவர்கள் முன் சீன் போடுவது. நான் இப்படி தான் என் பிள்ளைகளை வளர்ப்பேன், இப்படி தான் நடப்பேன்..சமைப்பேன், சுத்தம் செய்வேன். இப்படி தான் என் அழகை பராமரிப்பேன்..அதாவது நான் தான் பெர்பெக்ட் என்று சீன் போடுவது. சில நேரங்களில் நாம் சீன் போடுகிறோம் என்று தெரியாத நம் குழந்தைகளே எல்லார் முன்னிலையிலும் வந்து நம் குட்டை உடைக்கும்..அப்பொழுது ஒரு அவமானம் பிடுங்கி தின்னும்..இது தேவையா. அடுத்தர்வர்களை இம்ப்ரெஸ் செய்து என்ன சாதிக்க போகிறீர்கள். உங்களை உங்களாகவே ஏற்று கொள்ளாதவர்கள் உங்களுக்கு நல்ல துணையாக, நட்பாக இருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.

  • அடுத்த விஷயம் கொஞ்சம் மேலே இருக்கும் விசயத்துடன் சம்பந்தப்பட்டது தான் என்றாலும், இது ஒரு பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் , என்னை பற்றி யாரும் தரக்குறைவாக பேசிடகூடாது , என்று நினைப்பது அதற்காக எல்லாவற்றிரையும் செய்வது. எல்லாவற்றிற்ற்கும் மரியாதை எதிர்பார்ப்பது. அப்படி யாரும் மரியாதை தரவில்லை என்றால் தன்னை தரக்குறைவாக பேசிட்டான் என்று சீன் போட்டு பெரிய பிரச்சனை ஆக்குவது. இது முக்கியமாக கொஞ்சம் வயதான பெரியவர்களுக்கு இருக்கும் குணாதிசயம் என்றாலும் இன்னும் பல மக்கள் இந்த மெனக்கெடல் கொண்டு அலைகிறார்கள். அதாவது இவர்கள் எப்பொழுதும் பெர்பெக்ட் என்று எல்லாரும் இவர்களை மதித்து கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் மகாத்மா, எந்த தவறும் செய்யாதவர் என்று மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. என்னை பொருத்தவரை, இதற்காக மெனக்கெடுபவர்களை பார்க்கும் போது சிரிப்பாக வரும்.

  • கடைசியாக எகோநோமிக் சம்பந்தப்பட்ட மெனகெடும் விஷயம். "தனக்கு தேவையே இல்லாவிட்டாலும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி சேகரித்து வைப்பது, அதனை யார் வீட்டுக்கு வந்தாலும் எடுத்து காட்டுவது, டம்பம் அடிப்பது". என் சிறு வயதில் நான் சந்தித்த ஒரு அம்மா இதற்க்கு சாட்சி. நிறைய பணம் கொழிக்கும் வீடு. ஒவ்வொரு மாதமும் ஒரு நகை அல்லது வீட்டு உபயோகப்பொருள் வாங்கும் அந்த அம்மா. கணவரிடம் எதனையும் கேட்காது அல்லது செய்தி மட்டுமே சொல்லும் . வாங்கி விட்டு அது போடும் சீன்..ஐயோ சாமி., எப்பொழுது யார் வீட்டுக்கு வந்தாலும் உடனே ஒரு கடை விரிக்கும்..இதனை இங்கு வாங்கினேன், இதனை அங்கு வாங்கினேன், விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனா என்ன பண்ணுறது வாங்கிட்டேன்  என்று டம்பம் அடிக்கும் ..யார் கேட்டா? நீங்க எங்க வாங்கினேன் என்று, என்று நான் பலமுறை நினைப்பதுண்டு. ஆனாலும் அந்த அம்மா விடாமல் செய்து கொண்டு இருந்தது. சொல்ல போனால் நிறைய நடுத்தர மக்கள் இந்த "தேவை இல்லாமல் வாங்கும் செயலில் விழுந்து இருக்கிறார்கள்" என்று சொல்லலாம். என்னுடைய இந்திய பயண அனுபவத்தில் நான் கண்டது இது.

  • அடுத்தது, இளசுகளுக்கு பொருந்தும்.  ஒரு லேட்டஸ்ட் டெக் பொருள் வாங்க 36 மணி நேரம் குயிவில் நின்று அல்லது இரவு முழுதும் நின்று வாங்கி காட்டுவது. தங்களின் அபிமான நடிகரின் படங்களுக்கு டிக்கெட் வாங்க இரவு முழுதும் நிற்கும் சினிமா வெறியர்களுக்கும் இது பொருந்தும். முதல் ஷோ பார்த்து என்ன சாதிக்க போகிறீர்கள். அல்லது முதல் ப்ரொடக்ட் வாங்கி என்ன சாதிக்க போகிறீர்கள். அதற்காக ஏனிந்த மெனக்கெடல்.

டிஸ்கி 

இதெல்லாம் நான் சந்தித்த சில மனிதர்கள் அவர்களின் குணாதிசயங்கள் கொண்டு எழுதியது. பொதுப்படையானது அல்ல.


நன்றி.No comments: