Thursday, September 24, 2015

ஏன் இந்திய பத்திரிக்கைகள் நெகடிவ் செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்?

இன்றைய இணைய உலகில் மிகவும் ஹாட் டாபிக் என்றால் அது லெக்கின்ஸ் பற்றியது.

பல எதிர்ப்புகள் பதிவு செய்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் வழக்கம் போல ஒரு சில அமைப்புக்கள் இப்படி ஆபாசமாக அலையலாமா? அதற்க்கு தான் நாங்கள் நாகரிகமாக உடை உடுத்துங்கள் என்று சொல்லுகிறோம். நாகரிகமாக உடலை முழுதும் மூடி உடை உடுத்தினால் இப்படி எல்லாம் நடக்குமா?..உங்களை யாராவது கிண்டல் செய்வார்களா? என்று ஒரு புறம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள். அதாவது, இவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னா, குர்தா கூட லேக்கின்ஸ் போட்டுட்டு அப்போ பார்த்து காத்து அடிச்சா ஆபாசமா இருக்குமாம், அதன்னால தான் நாங்க நாகரிகமாக உடை உடுத்துங்க என்று சொல்லுகிறோம்..இது எப்படி இருக்கு?  உஷ் அப்பா முடியல. யார் யாருக்கு எது சவுகரியமோ அதை போட்டுகிறாங்க, இதில உங்களுக்கு என்னப்பா பிரச்சனை.

நான் முன்பே ஒரு பதிவில் சொன்ன மாதிரி, இந்தியா ஒரு முரண்பாடுகளின் மூட்டை. அங்கு பாசிடிவ் விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க படுவதே இல்லை. எப்பொழுதும் நெகடிவ் பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும். அதுவும், இப்படி பொண்ணுங்கள பத்தி ஏதாவது குறை சொல்லி மட்டும் ஒரு அர்டிகல் அல்லது படம் அல்லது பாட்டு வரட்டும் பொண்ணுங்க அதை பார்த்துட்டு பொங்கி எழுவாங்க பின்ன பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும். உதாரணமா, நாங்க எல்லாம் எங்கயோ இருக்கோம். எங்களுக்கு உண்மையிலேயே, குமுதம் ரிபோர்ட்டர் ல என்ன செய்தி வந்ததுன்னு தெரியவே தெரியாது..ஆனா இப்போ பாருங்க..யாரெல்லாம் இணையம் அதுவும் தமிழ் இணையம் உபயோகிக்கிறாங்களோ அவங்களுக்கு எல்லாம் இந்த லேக்கின்ஸ் செய்தி தெரியும். எவ்வளவு சீப் பப்ளிசிட்டி பாருங்க.

எப்படி லேக்கிங்க்ஸ் பாப்புலர் ஆகிடுச்சி என்ற உண்மைய சொல்லனும்னா, ரொம்ப சவுகரியாமான ஒரு பாண்ட் என்றால் அது லேக்கிங்க்ஸ் தான். பனியன் துணியில் உருவாக்கியது உடலை உறுத்துவதில்லை. விலையும் ரொம்ப கம்மி. எந்த டாப் உடனும் மாற்றி போட்டு கொள்ளலாம். உதாரணமாக ஒரு 5 செட் டாப்ஸ் 5 செட் லேக்கின்ஸ் வைத்து கொண்டு 25 விதத்தில் வித்தியாசமாக போட்டு கொள்ளலாம். காலேஜ் போகும் பெண்களுக்கு இதனை விட என்ன வேண்டும். அதனாலேயே காலேஜ் பொண்ணுங்க மத்தியில் மற்றும் சுடிதார் உடுத்தும் பெண்கள் மத்தியில் இது பிரபலம்.

நெகடிவ் விஷயம் இந்த லேக்கின்ஸ்இல் என்னவென்றால், எல்லா உடையிலும் இருப்பதை போல லேக்கின்ஸ் ம் சில நேரங்களில் அசிங்கமான தோற்றத்தை தரலாம். அதாவது, லோ ஹிப் புடவை போல, லோ நெக் ப்ளௌஸ் போல, ஒரு சில நேரங்களில் லேக்கிங்க்ஸ் கூட அசிங்கமான தோற்றத்தை தரலாம். உதாரணமாக, நீங்கள் கொஞ்சம் குண்டானவர் என்றால், உங்களின் டாப்ஸ் தேர்ந்தெடுக்கும் போது சைடு ஸ்லிட் இல்லாமல் அல்லது நீளமான டாப்ஸ் தேர்ந்தெடுக்கலாம்.  அவ்வளவு தான் லேக்கின்ஸ் இல் இருக்கும் பிரச்சனை, இதை போய் போட்டோ எடுத்து போட்டு சீப் பப்ளிசிட்டி தேடி, ஊரெல்லாம் அதை பத்தியே பேசி பேசியே ஏன்பா டைம் வேஸ்ட் பண்ணுறீங்க.

இங்கு எல்லாம் ஒரு விஷயம் சொல்லுவதுண்டு.. உங்க ஹிப் சைஸ் 12இன்ச் க்கு மேல என்றால் லேக்கின்ஸ் வாங்கதீங்க உடுத்தாதீங்க என்று. சொல்லபோனால் எனக்கு தெரிந்து சாதாரண துணிக்கடைகளில 12-14 சைஸ்க்கு மேல் லேக்கின்ஸ் கிடைக்காது. வேறு கடைகள் தான் சென்று தேட வேண்டும். ஆனாலும் இன்னும் பல மக்கள் லேக்கின்ஸ் போட்டுகொண்டு குட்டையான ஷர்ட் போட்டுகொண்டு வருவதுண்டு. இங்கு இந்தியாவில் செய்தது போல போட்டோ எடுத்து மட்டுமே பப்ளிஷ் பண்ணி இருக்கட்டும், இந்நேரம் அப்படி பப்ளிஷ் செய்தவரும் சரி பத்திர்க்கையும் சரி இந்நேரம்சட்ட பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும். இவை எல்லாம் தனி மனித உரிமைகளில் தலையிடுவது.

இப்படி செய்யலாமே என்று சஜ்ஜெஸ்சன் மட்டுமே சொல்லத்தான் நமக்கு உரிமை இருக்கிறதே தவிர, இப்படி செய்ய கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதனால்எந்தஒரு  விசயத்திலும் என்ன  நெகடிவ் விசயங்களைஇருக்கிறது என்று மட்டுமே கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு பப்ளிஷ் செய்து நெகடிவ் பப்ளிசிட்டிக்கு முனைவதை விட, நல்ல விசயங்களையும் செய்திகளையும் பகிரலாமே ஊடகங்கள்..

நன்றி.

3 comments:

வேகநரி said...

பெண்களை முழுவதுமா மூடி வைத்திருக்க வேண்டும் என்கின்ற இந்திய தலிபான்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களிடம் வியாபாரம் பார்ப்பதிற்காக பத்திரிக்கைகள் அப்படி செய்திகளை வெளியிடுகிறார்கள்.

? said...

ரிப்போர்டர் அட்டையை ஆதரிக்கும் ஆண்களின் வாதம் - நீங்க லொக்கின்ஸ் போடுவது சரி, ஆனால் படமெடுத்து போடுவது தவறா என்பது. புடவை சுடிதார் பெண்களையும் ஆபாச கோணத்தில் படமெடுக்க முடியாதா என்ன? புடைவை கட்டிய இவர்கள் குடும்பத்து பெண்ணை எவனாவது சைடு ஏங்கிளில் படமெடுத்து பத்திரிக்கையில் போட்டால் அதன் வலியை உணருவார்கள், இந்த முட்டாள்கள். இடஒதுக்கிட்டிலிருந்து தப்பிக்க பிராமணர்கள் அமெரிக்கா ஓட முயலுவார்கள். எனக்கென்னவோ கூடவே தலித்களும் பெண்களும் மேலைநாடுகளுக்கு ஓடிவிடுவதுதான் நல்லது என்று தோன்றுகிறது.

இன்னொரு விடயம், அமெரிக்காவிலும் பொது இடத்தில் (பொதுகழிப்பிடம் தவிர) யாரையும் புகைப்படம்/வீடியோ எடுக்கலாமாம். அதை வியாபார நோக்கில் பயன்படுத்தாமல், டிவிட்டர் போன்றவற்றில் பிரசுரம் செய்தால் குற்றமல்ல. பொதுவிடங்களில் பிரைவசி சட்டமெல்லாம் எடுபடாது. ஆகவே எங்கு பொது இடத்துக்கு போனாலும், புகைப்படம் எடுக்கபட்டாலும் பரவாயில்லை என்ற நிலைமையில் கவனமாக செல்லுவதே உத்தமம்.

வருண் said...

இதுல காமெடி என்னனா ஆம்பளைங்க சட்டை போடாமல் அரை நிர்வானமாகத் திரிவார்கள், அதெல்லாம் ஆபாசம் இல்லையா? போதாக்குறைக்குசைந்த அய்யப்பன் பக்தர்கள் தொப்பையும் தொந்தியும் (என்ன ஒரு ஃபிட்னெஸ்! சட்டையை இவனுக கழட்டவே கூடாது, வீட்டில்கூட!) காட்டிக்கிட்டு பார்க்கவே சகிக்க முடியாத ஒரு "ஃபிட்னெஸ்" சுடன் திரிவார்கள் அதையெல்லாம் கேக்க எவனுக்கும் வக்கில்லை. லேடீஸ் கொஞ்சம் உடம்பை மறைத்து கொஞ்சம் டைட்டா பேண்ட்ஸ் போட்டா ஆபாசமாம்? எனக்கென்னவோ நம்ம அரைகிறை அய்ய்ப்ப பக்தர்கள்தான் ஆபாசமாத் தெரிகிறாங்க!

அந்தக்காலத்துப் படம் "பட்டிக்காடா பட்டணமா?" வில் ஜெயா (நம்ம முதல்விதான் :) ) சொல்ற வசனம் ஒண்ணு இருக்கு..

"அழகும் ஆபாசமும் ட்ரெஸில் இல்லை அங்கிள்! பார்க்கிறவங்க கண்களில்தான் இருக்கு" :)))