சில சமயம் சிறுகுழந்தைகளின் புத்தகங்கள் படிக்கும் போது நமக்கு சுருக்கென்று சில விஷயங்கள் உரைக்கும். அப்படி எனக்கு நேர்ந்த சில விசயங்கள் இங்கே. முகுந்துக்கு தினமும் புத்தகம் படிப்பதுண்டு, அப்படி நான் படித்த ஒரு புத்தகம், "The Berenstain Bears"சீரிஸ் புத்தகம் "The Blame Game".
கதை இது தான், குழந்தைகள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு விஷயத்தை செய்வார்கள், அது பிரச்சனையாக முடிந்தால் உடனே..அடுத்தவர்கள் தான் செய்தார்கள் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லுவது. பின்னர் அந்த பிரச்னை முடிந்தவுடன் அடுத்த விசயத்திற்கு செல்வது அதிலும் இப்படி ஏதாவது பிரச்சனை எனில் அடுத்தவர் மீது குற்றம் சொல்லுவது..என்று நீண்டு கொண்டே இருக்கும் இது.. கடைசியில் அந்த புக்கில் ஒன்று சொல்லுவார்கள். எப்பொழுதும் அடுத்தவர்கள் மேல் குறை மட்டுமே சொல்லி கொண்டு இருக்காமல் எப்படி அந்த தப்பை சரி செய்வது, திருத்துவது என்று செய்யுங்கள், அதுவே productive என்று.
இதனை படித்தவுடன் கடந்த வார சில நிகழ்வுகள் எனக்கு நினைவுக்கு வந்தன.
உதாரணமாக ஒன்று, கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை பற்றியது, அதனை பற்றி மக்கள் செய்த கம்ப்ளைன். வாட்ஸ் அப், ட்விட்டர் , FB என்று அனைத்திலும் மழை சார்ந்த படங்கள், எப்படி மோசமாக இருக்கிறது பாருங்கள் நம்முடைய உள்கட்டமைப்பு என்று அரசாங்கத்தின் மேல் குறை ப்ளேம் கேம். ஏரி தூர் வரவில்லை, கழிவு நீர் செல்ல வலி இல்லை, காசை வாங்கி கிட்டு இப்படி எல்லா எரியிலையும் வீடு கட்டி இப்படி எங்களை தண்ணியில மிதக்க விட்டுடாங்க என்று நிறைய நிறைய. பொது நோக்கில் சிலர் இதனை செய்கிறார்கள் என்றாலும் பலரும் இதனை ஒரு கிண்டலுக்கு என்றே செய்கிறார்கள் என்று தோன்றியது..எனக்கு இதனை படித்தவுடன் முதலில் தோன்றியது ஒன்று தான் "இவங்க எல்லாம், மழை பெய்தாலும் குறை சொல்லுவாங்க, பெய்யாவிட்டாலும் குறை சொல்லுவாங்க". அதே போல இவர்கள் இப்படி கதறுவது எல்லாம் தண்ணீர் வடியும் வரை தான், அடுத்து தண்ணீர் வடிந்து வெயில் அடித்தவுடன் மறுபடியும் எந்த ரியல் எஸ்டேட் காரனாவது ஏதாவது ஒரு ஏரியை வளைத்து போட்டு பிளாட் கட்டி குறைந்த விலைக்கு விற்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் உடனே அங்கு சென்று விழுவார்கள். கழிவு நீர் மேலாண்மை போன்ற அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாமல் அங்கு பிளாட் கட்டி குடியேறி விடுவார்கள். பின்னர், அரசாங்கம் சரியில்லை என்று பாயிண்ட் அவுட் செய்வது.
அடுத்து அரசாங்கம், இங்கு நான் அரசாங்கம் என்று குறிப்பது அரசியல் வாதிகள் மட்டும் அல்ல, அரசு ஊழியர்களும் தான், எங்கு பணம் கிடைத்தாலும் அங்கு சென்று விடுவார்கள். தங்கள் சுயநலம் மட்டுமே குறிக்கோள், யார் எப்படி போனால் என்ன போகவிட்டால் என்ன, அவர்களும் ப்ளேம் கேம் படிப்பார்கள், நாங்க மட்டுமா செய்யிறோம் எனக்கு மேல இருக்குறவங்க செய்ய சொல்லுறாங்க என்பார்கள், அவர்குக்கு மேலே இருப்பவர்களும் அவருக்கு மேலே என்று படிப்படியாக, முதல்வன் படத்தில் வருவது போல "everybody"...ப்ளேம் கேம் மட்டுமே இவர்கள் படிப்பது. அடுத்தவர்களை குறி காட்டிவிடுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது.
பொது மக்களும் சரி, அரசியல் வாதிகள் அல்லது அரசு ஊழியர்கள் வரை யாரையாவது இறங்கி வேலை செய்ய சொல்லுங்கள், பிரச்சனையை தீர்க்க சொல்லுங்கள், மாட்டார்கள். வெறும் பேச்சு, கிண்டல் என்று மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது. கேட்டால் ஒருத்தர் மேல் ஒருத்தர் கை காட்டுவது. எதற்கு இந்த ப்ளேம் கேம்?
அடுத்தது, உலகை உலுக்கிய பாரிஸ் குண்டு வெடிப்பு. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு பாரிஸ் தான் சொந்த ஊர், குடும்பம் அம்மா அப்பா அங்கு இருக்கிறார்கள் என்பதால் குண்டு வெடிப்பு பற்றி எப்படி ரியாக்ட் செய்தார் என்று பக்கத்தில் இருந்து பார்க்க நேர்ந்தது. பந்தம் பாசம் எல்லாம் எல்லாருக்கும் ஒன்று தானே, எந்த ஊரா இருந்தா என்ன?. அவரின் பெற்றோர் நலமாக இருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் அவர் சொன்ன ஒன்று என்னை உலுக்கி விட்டது. "நாங்கள் செய்தோம் அதற்க்கு அவர்கள் திருப்பி செய்கிறார்கள்", பலி ஏனோ அப்பாவி மக்கள் தான்..இது எப்போ முடியுமோ" என்று..
சொல்ல போனால் இதுவும் ஒரு வகை பழிக்கு பழி தான், நீ முதலில் செய்தே, நானும் செய்கிறேன் பாரு என்று அப்பாவி பொது மக்களை குறி வைப்பது. என்னவொரு முதுகெலும்பு இல்லாத செயல். எப்போ தான் இது முடியுமோ! என்ன செய்ய முடியும் நம்மால், உலகெங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்று பிராத்திப்பதை தவிர.
டிஸ்கி
இந்த பதிவு முழுக்க முழுக்க என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, எந்த அமைப்பையும் நாட்டையும் எண்ணங்களையும் இங்கே குறிப்பிட, பிரதிபலிக்க இங்கே பதியவில்லை.
நன்றி.

7 comments:
உங்கள் கருத்து மிகவும் சரி. இன்னும் சிறிது காலம்தான். இத்துன்பமெல்லாம் மறந்து போகும். மறுபடியும் ஏரியை வளைத்துப்போடுதல், வாங்கி, எந்த வசதியுமின்றி வீடு கட்டுவோர், மழை வந்தால், சமூகத்தையே தூற்றுவோர் என்று எல்லாம் வழக்கம் போல் ஆகி விடும். இந்த ப்ளேம் கேம் எவ்வளவு காலம் தொடரும் என்றுதான் தெரியவில்லை.
//"நாங்கள் செய்தோம் அதற்க்கு அவர்கள் திருப்பி செய்கிறார்கள்", //
நீங்க இம்புட்டு நல்லவங்களா ராசா?
பாரிஸ்காரர்களை isis-காரர்கள் வைச்சு செய்வதற்கு இப்படி அவர்கள் இந்தியர்களைப் போல சவசவ என்று யோசிப்பதுதான் காரணம் போலிருக்கிறது. உண்மையில் ஈராக் நாட்டின் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் படையெடுத்த போது அதை எதிர்த்த நாடுகளுள் பிரான்ஸ்சும் ஒன்று. ஆனால் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் விட்டுவிட்டு இளிச்சவாயத்தனமான பிரான்ஸோடுதான் தீவிரவாதிகள் விளையாடுகிறார்கள்.
பிரிட்டனும் அமெரிக்காவும் இப்படியா இருக்கிறார்கள்? ஜிகாத்தி ஜான் கேட்ட பணத்தை கொடுத்திருந்தால் அமெரிக்க-பிரிட்டீஷ் பணயகைதிகளை விட்டிருப்பான். அன்று உயிரையே எடுத்தாலும் பணமில்லை என்று வீராப்பு காட்டினார்கள். இப்போது அவன் கேட்டதை விட பலகோடி அதிகமாக செலவு செய்து அவனை தேடி பிடித்து உயிரோடு ஆவியாக்கி "எங்காளு மேல கைய வைச்சே செத்தே" என காட்டுகிறார்கள். எந்த அமரிக்கனிடம் isis பற்றி பேசினாலும் கொலை வெறியாகிறார்கள்.
பழிக்கு பழி என்று எல்லாம் கிடையாது. இஸ் ஸின் மதவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
கிறிஸ்தவ நாடுகளில் குடியெறிய இஸ்லாமியர்களின் அதிவேகமான மக்கள் தொகை பெருக்கத்தை வைத்து, மேற்குலமக்கள் எல்லாம் வேகமாக இஸ்லாமை தழுவுறாங்க என்று ஆசிய ஏழை நாடுகளில் இஸ்லாமியர்களிடம் இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகள் பிரசாரம் செய்வதை தாரளமா காணலாம்.
@Varun,
I understand your concern, I request you to use strong, but decent words when you want to address your concern. calling someone names is not accepted, at least in my blog.
Thanks for understanding
Post a Comment