Sunday, November 8, 2015

"புலி" முதல் "Spectre" வரை ஓவர் பில்ட் அப்...

வழக்கமா ஒன்னு சொல்லுவாங்க அதாவது "ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது" என்பது. தினம் ஒரு செய்திகள் என  ஒரு படத்துக்கு பயங்கர பில்ட் அப் மற்றும் எதிர்பார்பு எகிற வைத்து, ட்ரைலர் வேறு நன்றாகவே வந்து இன்னும் எதிர்பார்ப்பபை ஏற்றி விட்டு இருந்த ஒரு படம், வெளி வந்த பிறகு எதிர்பார்ப்பை நிறைவேதராமல் இருந்தால் என்னாகும்? பயங்கர ஹைப் உருவாக்கி விட்டு விட்டு படம் பார்க்கும் போது புஸ் என்று ஆகி விட்டால் எப்படி இருக்கும் என்பது நிறைய மக்கள் அனுபவித்து இருப்பார்கள். அப்படி நான் பார்த்த இரண்டு படங்கள் குறித்த என்னுடைய கண்ணோட்டங்கள் இங்கே.

முதலில் "புலி"

thanks to google images


பாண்டஸி படங்கள் மீது எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. அதுவும் "The Lord of The Rings" படித்ததில்/ பார்த்ததில் இருந்து..இப்படி ஒரு பாண்டஸி உலகம், மக்கள், பழக்க வழக்கங்கள் என்றெல்லாம் கதை, காட்ச்சியமைக்க பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பது உண்டு. தமிழில் பாண்டேசி திரைப் படம் என்று எனக்கு தெரிந்து  பார்த்ததில்லை. பாகுபலி தமிழ் படம் என்று பறை சாற்றப்பட்டாலும், நிறைய தெலுகு வாடை நடிகர்கள் என்று எனக்கு ஒரு விதத்தில் அன்னியப்பட்டு இருந்து இருந்தது.

நான் நிறைய படம் பார்ப்பதில்லை, அப்படியே பார்த்தாலும் நிறைய மக்கள் நல்ல ரெவ்யு கொடுத்தால் மட்டுமே சரி முயற்சி செய்யலாம் என்று செய்வது உண்டு. முக்கியமாக பெரிய நடிக நடிகையர் நடித்த என்றால் பார்க்கவே மாட்டேன். சொல்லபோனால் "கத்தி" படம் கூட சில மாதங்களுக்கு முன்பு பார்த்தது. அப்படி ஒரு நாளில் நிறைய மக்கள் இணையத்தில்  கழுவி கழுவி ஊத்திய ஒரு படம் "புலி" யை அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தேன்.

சொல்ல போனால் துவக்க காட்சிகள் எல்லாமே குள்ள மனிதர்கள், வேதாளம், பேசும் ஆமை , என்று கொஞ்சம் பாண்டஸி கொஞ்சம் நகைச்சுவை, படமாக்கப்பட்ட விதம், ஸ்ரீதேவி நடிப்பு குட், என்று நன்றாகவே சென்றது என்றாலும் .நேரம் செல்ல செல்ல வழக்கமான மசாலா, நாடகத்தனமான, பார்த்து பார்த்து புளித்து போன கிளைமாக்ஸ் என்றுகுறைகள் இருந்தாலும் ,. நடிகர் விஜயின் மகா மொக்கை படங்களான "சுறா" வுடன் எல்லாம் மக்கள் இதனை ஒப்பிட்டது கொஞ்சம் அதிகமே என்று தோன்றியது.

படத்தை பார்த்த பிறகு, நடிகர் விஜய்" பற்றி  எனக்கு தோன்றியது இது. ஒரு வேளை விஜய் நடிக்காமல் வேறு யாராவது ஒருவர் நடித்து இருந்தால் இந்த படம் இந்த அளவு விமர்சிக்க பட்டு இருக்காதோ..ஏனெனில், அவரின் கத்தி, துப்பாக்கி அளவு மக்கள் எதிர் பார்த்து..ஆனால் அவரோ "பாண்டசி கதாநாயகனாக" நடிக்க.. மக்களோ, வடிவேலுவின் காமெடி போல , "அதுக்கு எல்லாம் நீ லாயக்கில்லை"..என்று மக்கள் நடிகர் விஜயை முத்திரை குத்தி  விட்டார்கள் போல. "மாஸ் படங்கள் மட்டுமே உனக்கு லாயக்கு" என்று அவரை ஒரு பிரேம் க்குள் போட்டு விட்டார்கள்.

விஜயின் ரசிகர்களுக்கே சாதாரண மனிதராக ஒரு பாண்டஸி கதாபத்திரத்தில் பிடிக்கவில்லை போல அதனை விட்டு வெளி வர இது வரை விஜய் அவர்களே முயன்றதில்லை. ஆனால், அப்படியே அவர் இதில் முயன்றாலும் ஓவர் பில்டப் கொடுத்து படத்தை கவுத்து விட்டார்கள் என்று நினைக்கிறன்.


அடுத்தது, "Spectre"

thanks to google images

முந்தய ஜேம்ஸ் பாண்டு படம் "Skyfall" க்கு பிறகு பயங்கர எதிர்பார்ப்பு மற்றும் ட்ரைலர் உருவாக்கிய ஹைப் எல்லாம் சேர்ந்து எப்போடா படம் வரும் என்று எதிர் பார்ப்பை கொடுத்தது டேனியல் கிரேக் அவர்களின் லேட்டஸ்ட் 007 படமான "Spectre". எப்பொழுதும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், முந்தய ஜேம்ஸ் பாண்ட் ஆன "சியன் கன்னேரி" மற்றும் "ரோஜெர் மூர்" அளவு இல்லாவிட்டாலும் முசுடு மூஞ்சி வைத்து கொண்டு ஓரளவு 007 ஆக பொருந்தியவர் என்றால் அது "டேனியல் கிரேக்" தான் என்பது என் எண்ணம்.  இது தான் அவரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்று வேறு யாரோ கிளப்பி வேறு விட்டு இருந்தனர்.  அதனாலேயே, சரி பார்த்து விடுவோம் என்று படம் வெளிவந்த இரண்டாம் நாள் அடித்து பிடித்து சென்றாயிற்று. முதல் ரோ ரிக்ளைநிங் சீட் வேறு. படுத்து கொண்டே படம், அதுவும் அட்டகாசமாக "மெக்ஸிகோ சிட்டி யில்"  "Day of Dead" இல் ஆரம்பிக்கிறது.
ஆனால் தொடக்கம் மட்டும் தான் நன்றாக இருந்தது.

"Skyfall"இன் தொடர்ச்சியாக அல்லது முந்தய சில படங்களின் கலவை அல்லது கண்டின்யுடி ஆக என்று சில காட்சிகள் என்று நிறைய போர் அடிக்கும் காட்சிகள். கொடுமை படுத்துகிறேன் பேர்வழி என்று வில்லன் செய்யும் காட்சிகள் எல்லாம் யோவ் நாங்கெல்லாம் இதனை எல்லாம் எப்பயோ பார்த்தாச்சு, என்று சொல்ல தூண்டியது.

இழுவை திரைகதை, வில்லன் யாருங்க இப்படி சோப்லங்கி போல இருக்குறாரு,என்ன தான் யா சொல்ல வர்றீங்க, என்று கேட்க வைத்து விடுகிறார்கள். ரிக்ளைநிங் சோபாவில் படுத்து சில நேரங்களில் எப்படி கண் அசந்தேன் என்று கூட தெரியாத அளவு தூக்கம் எல்லாம் வந்து பொறுமையை சோதித்து விடுகிறார்கள்.

இத்தனைக்கும், எல்லா 007 படங்களில் வருவது போல அட்டகாசமான Aston Martin கார், வாட்ச் வெடிகுண்டு, நிறைய பெண்கள் என்று அனைத்தும் இருந்தும் எதோ இல்லாதது போன்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.


படம் முடிந்ததும் எனக்கு தோன்றியது இது.  ஒரு நடிகருக்கு அல்லது கேரக்டருக்கு என்று ஒரு ஆரோ அல்லது மாய பிம்பம் மக்கள் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அதில் பொருந்த முடியாத அளவு அவர்கள் இருப்பின் அல்லது அந்த படம் இருப்பின், அது எவ்வளவு பெரிய நடிகர் நடித்து இருப்பினும் அல்லது எவ்வளவு செலவு செய்து மார்க்கெட்டிங் செய்து இருப்பினும் வெற்றி பெறாது.

இன்னொரு விசயமும் உண்டு, அது, இது போன்ற நடிகர்களுக்கு அல்லது கேரக்டருக்கு அவர்களின் முந்தய படங்கள் தான் எதிரி அல்லது இலக்கு. எப்படி "கத்தி","துப்பாக்கி" அளவு 
"புலி" யும் அதே அளவு இருக்கும் என்று ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்து படம் அது போல இல்லை என்றவுடன் மக்கள் கடுப்பானார்களோ. அதே போல, "Quantum of Solace", "Casino Rayale", "Skyfall" அளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் "Spectre" அளவை எகிற வைத்து கடைசியில் சவச்சவ படம் கொடுத்தது மன்னிக்க முடியாதது என்று நினைக்கிறன். Forbes பத்திரிக்கை, இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்டு படங்களில் இது தான் மரண மொக்கை என்று சொல்லி இருக்கிறது. எப்படியோ..
போட்ட காசையாவது எடுப்பாங்களான்னு பார்க்கலாம்


நன்றி

டிஸ்கி
இது இரண்டு படங்கள் குறித்த என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. பொதுப்படையானது அல்ல.
2 comments:

krishnamoorthy srinivasan said...

Pierce brosnanஐ தங்களுக்கு பிடிக்காதா மேடம்?😊

முகுந்த் அம்மா said...

@Srinivasan Krishnamoorthy

I like Pierce Brosnan, but IMHO, he is not a James Bond material :)