Wednesday, November 18, 2015

வேலைக்கார தலைமை ம், முன்னேற்றமும்!

ஆபிசில் வழக்கமாக நடக்கும் ரெவ்யு டைம் இல் சில KPI எனக்கு உண்டு. அதாவது சில விஷயங்கள் நான் முடித்து இருக்க வேண்டும், அதில் ஒன்று பிசினஸ் அல்லது லீடர்ஷிப் மீட்டிங் ஏதேனும் ஒன்று அட்டெண்ட் செய்து இருக்க வேண்டும். அதற்காக என்று ஒரு லஞ்ச் அண்ட் லேர்ன் எனப்படும் லஞ்ச் டைமில் நடக்கும் மீட்டிங் ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது. அது "Servant Leadership" எனப்படும் தமிழில் அப்படியே மொழிபெயர்த்தால் "வேலைக்கார தலைமை" அல்லது உங்களில் ஒருவன் என்று கருதப்படும் தலைமை.

thanks to google images

இந்த மீட்டிங் ஆரம்பிக்கும் போதே அதனை நடத்திய பெண்மணி, உங்களுக்கு தெரிந்த ஒரு செர்வன்ட் லீடர் யாரேனும் கூறுங்கள் என்றார். நான் எதேச்சையாக நம்ம ஊரில தான் நிறைய "நான் உங்களில் ஒருவன் டைப்" தலைவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்து "காந்தி" என்றேன். அதற்க்கு அந்த அம்மா, சரியான விடை. அதே போல "மண்டேலா, மார்டின் லூதர் கிங்" அனைவரும் சில உதாரணங்கள் என்றார்.  இவையெல்லாம் அரசியல் தலைவர்கள், எப்படி மக்களை தங்களின் பேச்சுத்திறன், நடவடிக்கை மற்றும் செயம் மூலம் தனைகளை தொடர வைத்தார்களோ அதே போல ஒரு நிறுவனத்தில் தலை பொறுப்பில் இருப்பவர்கள் effective leader ஆக என்ன என்ன தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி இதனை அணுக வேண்டும் என்பது குறித்த நிறைய சிந்தனைகள் அங்கு வெளிப்பட்டன.

உதாரணமாக சில இங்கே


  1. ஒவ்வொரு மனிதனைனுக்கும் தனித்திறன் உண்டு அதனை கண்டுபிடித்து அவரால் சாதிக்க முடியும் என்று நம்பி அவரின் அறிவுக்கு மரியாதை கொடுப்பது.
  2. ஒவ்வொரு மனிதனின் தனித்திறனையும் தூண்டும் வண்ணம் அவர்களை உற்சாகப்படுத்துவது, சேலஞ்ச் செய்வது என்று தனித்திறனை வெளியே கொண்டு வர வைப்பது.
  3. நம் பொது நோக்கு என்ன? அதனை அடைய எப்படி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தெளிவுபடுத்துவது,  தாமே ஒரு முன்னுதாரணமாக இருந்து அதனை செயல்படுத்துவது.
  4. அடுத்தவர்கள் மீது அவர்கள் சொல்லும் சொற்களை நன்கு கவனிப்பது அவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பது, அவர்கள் பேசுவதில் ஏதேனும் தவறிருந்தால் அனைவர் முன்பும் சுட்டி காட்டாமல் இருப்பது, ஆனால் தனிமையில் அதனை எப்படி தவிர்க்கலாம் என்று சொல்லுவது. மொத்தத்தில், தன்னுடன் இருக்கும் மக்களின் நம்பிக்கையை பெறுவது. தன் தலைவன் அல்லது தலைவி தன் நலனில் அக்கறை கொண்டு இருக்கிறார். நம்மை கைவிட மாட்டார் என்று தொண்டனை/கூட வேலை பார்பவர்களை/ மக்களை நம்ப வைப்பது மிக முக்கியம்.
  5. சுயநலமில்லாத மக்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவது.
  6. பெருமையுடன் சரியான நேரத்திற்காக காத்திருப்பது. ஒரு பிரச்னை வந்து விட்டது, அதனை தடுக்க அல்லது எதிர்நோக்க என்று சில மீட்டிங் கள் அல்லது தீர்வுகள் செயல்படுத்த படுகிறது ஆனாலும் அது எதிர்மறை விளைவை மட்டுமே தருகிறது என்றாலும், பொறுமையாக விடா முயற்சியுடன் திரும்ப திரும்ப பல தீர்வுகள் காண்பது ,முயற்சி செய்வது. 
  7. உங்களில் ஒருவன் லீடர் , அனைவரும் எதோ ஒரு குறை கொண்டவர்கள் தன்னையும் சேர்த்து என்று நன்கு அறிந்து இருப்பார்கள். அதனால் அனைவரையும் அரவணைத்து, டீமின்/நிறுவனத்தின்/நாட்டின்/மாநிலத்தின் முன்னேற்றம் என்பதே ஒரே நோக்காய் கொண்டு, அனைவரையும் தங்களால் முடிந்த அதிகபட்ச உழைப்பை வெளிக்கொண்டுவர செய்து, கிடைக்கும் பலனில் அனைவரின் பங்கையும் நன்கு உலகுக்கு வெளிகாட்டி இது மொத்த டீமின் செயல் பாடு தனி ஒருவரின் பங்களிப்பு அல்ல என்று அறிய வைப்பது.

இதனை குறித்த James C  Hunter மற்றும் John C Maxwell போன்றோரின் புத்தகங்களை குறிப்பிட்ட அவர், ஒரு நிறுவனத்தில் "உங்களில் ஒருவன்" என்னும் தலைமையில் இருப்பவர்கள் கீழே வேலை பார்க்கும் மக்களும் சரி நிறுவனமும் சரி அதிக பட்ச வெளியீடு கொடுக்கும், லாபம் கொடுக்கும் ஒன்றாக இருக்கும். எப்பொழுது தன்னம்பிக்கை இல்லா தலைமை கீழ் வேலை பார்க்கும் மக்கள் கான்ஸ்டன்ட் டெரொர் அல்லது எப்பொழுது வேலை போகுமோ, எப்பொழுது யார் நம் வேலையை திருடுவார்களோ என்று நினைத்து கொண்டு பயந்து கொண்டு தலைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ அந்த நிறுவனம் வளராது, லாபம் தராது என்றார்.

இது நிறுவன வளர்ச்சிக்கு என்று இல்லை, நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பொருந்தும் என்பது உண்மை.

நன்றி.


No comments: