உலக அளவு கருத்தரங்கு ஒன்று இருக்கு அதற்க்கு உங்களின் பேப்பர் அனுப்புங்க என்று என்னுடன் வேலை பார்த்த ஒருவர் தெரிவித்தார். சரி என்ன கருத்தரங்கு, எங்கே என்று பார்த்தால், ஆச்சரியமாக இருந்தது. அது உலக அளவில் நடத்தபடும் தொற்று நோய்கள் குறித்த கருத்தரங்கு, ஹைதராபாதில் 2016 மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. அதில் வந்து பேச இருப்பவர்கள் எல்லாரும் உலக அளவில் infectious disease துறையில் பெரிய ஆட்கள். தொற்றுநோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறைய வெளி நாட்டு மக்கள் கலந்து கொள்ளுகிறார்கள், பேசுகிறார்கள். கேட்கவே சந்தோசமாக பெருமையாக இருந்தது.
சொல்ல போனால் நிறைய உலக அளவிலான கருத்தரங்குகள் இந்தியாவில் நடை பெற்று கொண்டு இருக்கிறது. ஆனால், என்ன இடிக்கிறது என்றால், இவர்கள் கருத்தரங்குக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நோய்கள் கண்டுபிடிப்பதில் அல்லது மருந்து கண்டு பிடிப்பதில் அல்லது பயோடெக் துறையை ஊக்குவிப்பதில் காட்டினால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வரை விரல் விட்டு எண்ண கூடிய அளவிலேயே பயோடெக் மற்றும் ஹெல்த் கேர் கம்பனிகள் உண்டு. இதற்கு என்ன காரணம்?
இதே நிலை குறித்து நான் யோசித்த போது இந்தியர்களின் ரிஸ்க் எடுக்காத மனநிலை குறித்து எண்ண தோன்றியது. அதனை குறித்து மேலும் படிக்கும் போது இது பெரும்பாலான இந்திய மக்களின் மனநிலை என்று அறிய முடிகிறது. வெள்ளைகாரர்கள் நம்மை ஒரு கிளெர்க்குகள் தேசமாக மாற்ற முயன்றதில் ஏற்பட்ட ஒரு பை ப்ரொடக்ட் இது என்று அறிய முடிகிறது.
ஏனெலில் , பொதுவாக இந்தியர்கள் தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து ஏதாவது ஒரு வேலை வாங்க வேண்டும், காலம் எல்லாம் மாத சம்பளம் வாங்கி செட்டில் ஆனால் போதும் என்று தான் நினைகிறார்களே தவிர, ஒரு தொழில் தொடங்க வைக்கலாம் அல்லது தொழில் முனைவோர் ஆக ஊக்குவிக்கலாம் என்று நினைக்கும் பெற்றோர் மிக மிக மிக குறைவு. ஏனெலில், அவர்களை பொருத்தவரை, எங்கே தொழில் தொடங்குகிறேர் என்று இருப்பதையும் விட்டு விடுவானோ எதுக்கு ரிஸ்க் என்று சொல்லி பேசாமல் இருந்து விடுகிறார்கள்.
அப்படியே, ஒருவன் தொழில் தொடங்கி ஒரு முறை கீழே விழுந்து அல்லது வெற்றி பெறாமல் போனாலும், இவர்கள் அவனை "அதான் முதல்லையே சொன்னேன்ல.பேசாம இருக்கிற வேலையை பாக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த ரிஸ்க்.என்று சொல்ல ரெடி ஆக இருக்கிறார்கள்". எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுக்கும் மனநிலை மிக முக்கியம். இதனை குறித்த ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. அது உங்களுக்காக இங்கே.
எப்பொழுது ஒருவன் ரிஸ்க் எடுக்க துணிந்து, கீழே விழுந்தாலும் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அடங்காத ஆர்வத்துடன், மேலும் மேலும் பங்கு பெறுகிறானோ அவனே வெற்றி பெறுவான்.
இதனை சார்ந்தே ஒரு செய்தி கேள்விபட நேர்ந்தது அது நடிகர் விவேக் அவர்களின் பையன் டெங்கு காய்ச்சலில் இறந்த செய்தி. இதோடு சேர்த்து நிறைய டெங்கு மரணங்கள் கேள்வி படுகிறேன்.
டெங்கு ஒன்றும் diagnose செய்ய முடியாத அளவு காய்ச்சல் இல்லை. நிறைய டெஸ்ட் கள் உண்டு. ஆனாலும் எப்படி கண்டு பிடிக்க முடியாமல் போனது என்று தான் தெரியவில்லை.
நான் படித்த வாசித்த வரை, இந்தியாவில் கடும் டெங்கு காய்ச்சல் பரவி பிரச்னை கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்தியா முழுக்க டெங்கு அல்லது மர்ம காய்ச்சல் என்று பரப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் அக்டோபர் நேரம் மட்டும் கிட்டத்தட்ட 25,000 மக்கள் இதனால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்று நான் வாசித்த செய்திகள் தெரிவிகின்றன. இது அறிந்த கணக்கு மட்டுமே.. அறியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போன வருடங்களை விட 100 சதவீதம் அதிகம்.
முதலில் நிறைய நாடுகளில் அறியப்படாமல் இருந்த டெங்கு, தற்போது 120 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
photos adapted from WHO site.
டெங்கு குறித்த சில உண்மைகள்.
டெங்கு, கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் வியாதி. DENV என்ற வைரஸ் இதனை உண்டாக்குகிறது. அதிலும் Aedes aegypti என்ற வகை கொசுக்கள் மட்டுமே இதனை பரப்புகின்றன. நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் அடையும் இவை என்பதால், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுவது முக்கியம். இது உயிர்கொல்லி நோய் ஆக பெரும்பாலும் இருப்பதில்லை. 100 கேஸ்களில் ஒன்று மட்டுமே சீரியஸ் கண்டிஷன் கொண்டு சென்று விடும்.
பொதுவாக டெங்கு வந்தவுடன் வரும் சில அறிகுறிகள்
1. காய்ச்சல், 2. பசியின்மை, 3. தலைவலி, 4. மூட்டு வலி மற்றும் வாந்தி
மிக சீரியஸ் அறிகுறிகள்
ரத்த கலரில் தடிப்பு அல்லது அலர்ஜி தோலுக்கு அடியில் நிறைய இடங்களில் தென்பட்டால், உடல் முழுக்க ராஷ் போல தடிப்புகள் மற்றும் ஷாக் போல உடல் தூக்கி தூக்கி அடித்தல் போன்றவை.
அறிகுறிகளை நன்கு அறிந்து கொண்ட பிறகு எந்த காய்ச்சல் என்றாலும் முதலில் செய்ய வேண்டியது நன்கு தண்ணீர் சத்து உடம்புக்கு கொடுப்பது. 6 மாதத்துக்கு சிறிய குழந்தை எனில் 100.4 காய்ச்சலுக்கு மேல் என்றால் டாக்டரிடம் அழைத்து செல்வது. சிறு குழந்தைகள் என்றால் காய்ச்சல் மருந்து கொடுத்து காய்ச்சல் குறைந்தால் டாக்டரிடம் அழைத்து செல்வது முக்கியம். பெரிய குழந்தைகள் எனில் நல்ல ரெஸ்ட் எடுக்க வைப்பது. காய்ச்சல் மருந்து கொடுப்பது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் எனில் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
டிஸ்கி
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைய நோய்கள், வியாதிகள் வந்து கொண்டு இருக்கையில் பயோடெக் துறையை ஊக்குவிப்பது, மருத்துவ துறையை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது கண்கூடு. மக்களும் தங்களுக்கு இருக்கும் ரிஸ்க் வேண்டாம் என்ற மனநிலையை மாற்றி தொழில் தொடங்க ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டுவது முக்கியம் என்று நினைக்கிறன். இது என்னுடைய கருத்துகள் மட்டுமே பொதுவானது அல்ல.
நன்றி
References
http://www.denguevirusnet.com/dengue-virus.html
http://www.bbc.com/news/world-asia-india-34398444
6 comments:
டெங்கு குறித்த விரிவான தகவல்களுக்கு நன்றி.
சிக்குன்குனியா- என்பதும் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் வியாதி யா ??
@ஆரூர் பாஸ்கர்
சிக்குன்குனியா- என்பதும் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் வியாதி யா ??
Yes, Chikungunya Virus is transmitted to people by mosquitoes. The most common symptoms of chikungunya virus infection are fever and joint pain. Other symptoms may include headache, muscle pain, joint swelling, or rash.
Chikungunya virus is most often spread to people by Aedes aegypti and Aedes albopictus mosquitoes. These are the same mosquitoes that transmit dengue virus. They bite mostly during the daytime.
Aedes aegypti on the left and Aedes albopictus on the right
Aedes mosquitoes transmit chikungunya virus to people. These types of mosquitoes are found throughout much of the world.
Thanks முகுந்த் அம்மா.
நல்ல விழிப்புணர்வுப் பதிவு.
இதே நடிகர் விவேக்தான் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்குண்டான தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தவர், என்பது சோகமான நகை முரண்.
டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை பரிந்துரைக்கிறது, இது அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கிடைக்கிறது. அங்கு செல்ல சிரமமிருப்பவர்கள் இதை வீட்டிலேயும் எளிமையாக தயாரித்து கொள்ளலாம்.
http://goo.gl/kAJ5c1
http://www.dinamani.com/health/article1390264.ece
Post a Comment