Tuesday, November 24, 2015

பார்த்தது, படித்தது, கேட்டது!

பார்த்தது

வெற்றியை நிர்ணயிப்பது எது? என்ற TED டாக் ஒன்று பார்க்க நேர்ந்தது. அஞ்செலா லீ என்னும் ஒரு அம்மா தன்னுடைய அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சியை பற்றி அதில் விளக்கி இருந்தார்கள். பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய சுற்றுசூழலில் வளரும் அல்லது இருக்கும் பள்ளிகூடங்களில் படிக்கும் குழந்தைகள் படிப்பில் மற்றும் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு வேண்டிய ஒரே ஒரு குணம் "Grit" தமிழில் சொல்ல வேண்டும் என்றால் "மனஉறுதி". நம்மால் முடியும் செய்யமுடியும், வெற்றிபெற முடியும் என்ற மனஉறுதி மற்றும் அதனை செயல்படுத்த அவர்கள் எடுக்கும் விடா முயற்சி. எத்தனை தடைகள் வந்தாலும், யார் என்ன என்ன சொன்னாலும், கீழே தள்ளினாலும், கேவலப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் மீண்டு வர செய்யும் "மனஉறுதி"

இதனை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இது தான், நம்மூரில் 10ஆம் வகுப்பு அல்லது +2 ரிசல்ட் வந்தவுடன் ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படித்து நிறைய மார்க் வாங்கிய  மாணவ மாணவியர் பற்றிய குறிப்பு செய்தி பேட்டி கட்டாயம் இருக்கும். அவர்களுடைய பேட்டியில் முக்கியமாக நிறைய மாணவர்கள் குறிப்பிடுவது, "கட்டாயம் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று மனஉறுதியுடன் விடாமல் படித்தேன்" என்று கிட்டத்தட்ட அனைவரும் சொல்லுவார்கள். இது மேலோட்டமாக ஒரு செய்தியாக பார்க்காமல், அவர்கள் இந்த மார்க் எடுக்க என்று எத்தனை பேர் வீட்டு வேலை, வயல் வேலை, குழந்தைகள் பார்ப்பது, அடுத்தவர்கள் பேச்சை, கிண்டலை  தாங்கி கொண்டு, மீண்டும் மீண்டும் வெற்றி ஒன்றே இலக்கு என்று முயற்சி செய்ததால் மட்டுமே இந்த நிலை வந்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களின் மனஉறுதி தெரியும்.

இது பள்ளிப்படிப்பில் இருந்து கல்லூரி மற்றும் மேல்படிப்பு என்று அனைத்திற்கும் பொருந்தும் என்றாலும், நல்ல வேலை எடுப்பது , வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தவிடு பொடியாக்க கூடிய தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான தாரக மந்திரம்.

அந்த TED வீடியோ இங்கே


படித்தது
கயாஸ் தியரியில் பட்டர்பிளை எபக்ட் என்று தியரி உண்டு, அதன் படி, உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எப்படியோ அடுத்த நிகழ்வுடன் தொடர்பு கொண்டவை.  அப்படி பார்த்தால்
சிரியாவிற்கும், கலிபோர்னியாவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றஅறிவியல் கட்டுரை  ஒன்று படிக்க நேர்ந்தது. இரண்டிலும் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இது El Nino எனப்படும் பூமி சூடாவதன் எதிரொலி உலகெங்கும் மழை, வெள்ளம், என்று  ஒரு பக்கம், மழையின்மை மற்றும் பஞ்சம்  இன்னொரு பக்கம்.  ஏன் இந்தியாவில் ஏற்படும் பெருமழை மற்றும் வெள்ளம் கூட இந்திய பெருங்கடல் சூடாவதன் விளைவு என்றும் நம்பபடுகிறது.

சிரியாவில் நடந்த உள்நாட்டு கலவரதிற்கு அங்கு ஏற்பட்ட பஞ்சமும் ஒரு காரணம்  பின்னர் மக்கள் அகதிகளாக கூட்டம் கூட்டமாக வெளியேறுவதும் அதன் தொடர்பாக ஐரோப்பா முழுதிலும் நடக்கும் பொருளாதார மாற்றம்  மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் என்று உலகில் நடக்கும் அனைத்தும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவை என்று அறியும் போது ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை.


கேட்டது

எப்போதும் இசையில் ஆர்வம் உண்டு. இந்திய இசை மட்டுமே நிறைய கேட்டு இருக்கிறேன். தமிழ் மட்டும் அல்லாமால் ஹிந்தியும் நிறைய கேட்பதுண்டு. வெறும் இந்திய இசை மட்டுமே கேட்டு கொண்டு இருந்த நான் மெதுவாக இந்த வருடம் முழுதும் நிறைய வெளிநாட்டு இசை மற்றும் பாடல்கள் கேட்டு வருகிறேன். ஒரு சில பாடல்கள் கேட்கும் போது அடபாவிகளா இது தமிழ் பாட்டுல கேட்டு இருக்கோமோ, எப்படி காபி பாருங்க என்று தோன்றும். உதாரணமாக 1980 இல் வெளிவந்த  Bob Marley அவர்களின் "Get up Stand up" அப்படியே, "அவள் வருவாளா, அவள் வருவாளா" என்ற பாட்டில் காப்பி அடிக்க பட்டு இருக்கும்.

ஆயினும் எனக்கு ஒரு சில தமிழ் பாடல்கள் மனதை விட்டு நீங்காதவை. முன்பே கேட்டு இருக்கிறேன் என்றாலும் தற்போது கேட்பது என்றால் ஷ்ரியா கோஷல் குரலில் "மன்னிப்பாயா" என்ற VTV  பாட்டு. நல்ல குரல் வளம்.ஷகிரா அவர்களின் "Waka Waka" பாடலும் அற்புதமாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா உலககோப்பை கால்பந்து விளையாட்டுக்காக என்று அவர் பாடியது. கேட்டவுடன் டான்ஸ் ஆடவேண்டும் போல இருக்கும் பாட்டு இது.


அதே போல, இன்னொருவரும் என்னுடைய பாவோரிட், Adele அவர்களின் குரலுக்கு நான் அடிமை. தற்போது அவரின் "Hello" என்ற பாடல் மட்டுமே என்னுடைய பாவோரிட் லிஸ்ட் இல் இருக்கிறது.ஒன்று மட்டும் உண்மை, இசைக்கு எந்த மொழியும் வித்தியாசமும் இல்லை. ரசிப்புத்தன்மை இருக்கிறவரை எல்லா இசையிலும் நனையலாம்.


நன்றிReferences

http://www.pnas.org/content/112/11/3241
1 comment:

வேகநரி said...

//ஒரு சில பாடல்கள் கேட்கும் போது அடபாவிகளா இது தமிழ் பாட்டுல கேட்டு இருக்கோமோ, எப்படி காபி பாருங்க என்று தோன்றும்//
:)
கத்தி படத்தில் வரும் ஆத்தியென நீ பார்த்த உடனே.. பாடலை நல்லாயிருக்கே என்று கேட்டு கொண்டு திரிந்தேன். பின்பு தான் தெரியவந்தது ஒரு பழைய ஆங்கில பாடலின் அப்பட்டமான காப்பி என்பது.