Friday, November 20, 2015

குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைக்கடைகளின் ஏமாற்று வேலை!


சிறு வயது முதல் நகை தொழில் செய்பவர்கள் அருகில் இருந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் சிலரும் இந்த நகை செய்யும் வேலையில் இருந்து இருக்கிறார்கள் என்பதால் நகை எப்படி தங்கத்தில் இருந்து செய்யபடுகிறது என்பது குறித்த சில அடிப்படை விஷயங்கள் எனக்கு தெரியும். எப்பொழுதெல்லாம் பெரிய பெரிய நகை கடை காரர்கள் குறைந்த சேதாரம், 0% சேதாரம் என்று கூவி கூவி விற்கும் போது எல்லாம் அடபாவிங்களா எப்படி எல்லாம் ஏமாத்துறீங்க என்று நினைப்பது உண்டு. முகநூலில் குடும்ப நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்த தங்க நகை தொழில் குறித்த சில விசயங்களும், எப்படி சேதாரம் இல்லை என்று கூவும் நகை கடை காரர்களின் பம்மாத்து வேலைகளும் இங்கே. இது தங்க நகை செய்யும் நண்பர் ஒருவர் எழுதியது, அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.
தேங்க்ஸ் டு கூகிள் இமேஜ்
இனியும் ஏமாறவேண்டாமே நண்பர்களே.....
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே நகைதொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும், எங்கள் கடையில் நகை வாங்கினால் ஆஹா மற்ற கடையில் வாங்கினால் ஸ்வாகா, எங்கள் கடையில் மட்டும்தான் நிறைய தங்கம் கொஞ்சம் செம்பு மற்ற கடையில் நிறைய செம்பு கொஞ்சம்தான் தங்கம், என்று பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து விளம்பரம் செய்து மக்களை தன்னுடைய மாய வலைக்குள் சிக்க வைக்கின்றனர்,
இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்த்து அந்த பெரிய கடையில் போய் நகைகள் வாங்கி, தன் தோழியருடன் ஏய் நேற்று நான் அந்த கடையில் இந்த நகைவாங்கினேன்டி, ஏய் இந்த கடையில் அந்த நகை வாங்கினேன்டி, சேதாரம் ரொம்ப கம்மியா தர்றாங்க, என்று பெருமையாக ஏமாந்து வரும் மக்கள் அதை பெருமையாக சொல்வதை கேட்கும் போது குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளின் தரத்தை பற்றி சிந்திப்பதில்லை, எனவே சில உண்மைகளை உடைத்து காட்டவேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது,
தங்க நகை எப்படி செய்யபடுகிறது?
முதலில் தங்கத்தை உருக்கி, அதன் பிறகு அதை கம்பியாக்க, டை என சொல்ல படும் டிசைன் வடிவம் அமைக்க, அதன் பிறகு அந்த மாடலுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, பிறகு பாலிஷ் போட, கட்டிங் செய்ய, கல் வைக்க, என எல்லா வேலைகளையும் முடித்து, ஹால் மார்க் முத்திரை பதித்து என ஒரு நகை செய்து முடிக்க கிட்டத்தட்ட பத்து தொழிலாளர்களின் பட்டறை சென்று வர வேண்டியது இருக்கின்றது, இந்த அனைத்து வேலைகள் செய்யும் தொழிலாளிக்கும் சேதாரம் மற்றும் கூலி பகிர்ந்து கொடுக்க வேண்டும்,
உங்களிடம் வாங்கும் சேதாரத்தில் இவ்வளவு வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றால், விளம்பரத்தில் சொல்லப்படும் 3சதவிகித அல்லது 4சதவிகித அல்லது 5சதவிகித சேதாரத்தில் செய்து விட நிச்சயமாக முடியாது, ஏன் என்றால் எந்த நகைதொழிலாளியும் கூலி சேதாரம் இல்லாமல் வேலை செய்து கொடுப்பதில்லை.
ஹால் மார்க் 916 நகைகள் என்றால் என்ன? 
ஒரு நகையின் தயாரித்து முடித்த பிறகு அந்த நகையிலிருந்து சிறு பகுதியில் வெட்டி அதனை உருக்கி சோதனை செய்து அந்த தங்கத்தின் தரம் 91.60 எனப்படும் ஹால் மார்க் தரத்தில் இருக்கிறதா என அறிந்து, அதன் பின்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கோண மற்றும் 916 என்ற முத்திரையை லேசர் ஒளிக்கதிர் கொண்ட கருவியால் பதிக்கச்செய்த நகைகள் மட்டுமே உண்மையான ஹால் மார்க் நகை, மேலும் ஹால் மார்க் தரத்தில் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் ( 10 கிராம்) சொக்கத்தங்கத்தில் ( 800 மில்லி கிராம்) செம்பு மட்டுமே கலவையாக சேர்க்கவேண்டும், மேலும் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் அதை ஒரு நகைதொழிலாளி மட்டுமே செய்து விட முடியாது,
இப்போது சிந்தித்து பாருங்கள் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகள் உண்மையான நகையாக இருக்க முடியுமா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை,
இதையும் மீறி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம் சரியாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பெரிய கடையில் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கிய நகையை மீண்டும் திரும்ப கொண்டுசென்று கொடுத்து இந்த நகையை விற்க வேண்டும் பணம் தாருங்கள் என்று கேட்டு பாருங்கள் நிச்சயமாக பணம் தர மாட்டார்கள் இந்த நகையை தந்து வேறு நகை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் வாங்க முடியும் பணம் தர மாட்டோம் என்பதுதான் பதிலாக வரும், இதுதான் அவர்கள் தொழில் தந்திரம், பெருமையாக ஏமாந்து கடையை விட்டு வெளியே வருவோம்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கும், குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்கிறேன் கேளுங்கள்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளில் உள்ள கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படும், நீங்கள் வாங்கும் ஹால் மார்க் நகைகள் ஏதாவது பணதேவைகளுக்காக விற்க போகும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கு பணமாக தரப்படும். கல் நகைகளில் கல்லிற்கான பணத்தை வாங்கி கொண்டு, கல் எடையை முற்றிலும் கழித்து தரப்படும், 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுகிறது,
இனி குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளை பார்ப்போம்,
கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படுவதில்லை கல் பாசி எடை உங்களிடம் தங்கத்திற்கான பணமாக வசூல் செய்து ஏமாற்ற படுகிறீர்கள், நீங்கள் வாங்கும் நகையை திரும்ப கொடுத்து நகையாக மட்டுமே வாங்க முடியும் பணமாக வாங்க முடியாது, 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை, ஒரு வேளை நீங்கள் வெளியில் எங்காவது சோதனை செய்து கண்டுபிடித்து அந்த கடையில் போய் உங்களிடம் வாங்கிய நகையின் தரம் குறைகிறது என்று கேட்டால் கூட அங்கே மழுப்பலான பதிலும் இதை வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டும் என்ற கேள்விதான் பதிலாக வரும்,
இப்போது உங்களுக்கு அந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வந்தா நஷ்டத்தை தருவார்கள்?
எனவே குறைந்த சேதாரம் என்று போய் ஏமாற வேண்டாம், ஞாயமான சேதாரம் கொடுத்து நகைகள் வாங்கி தரமான தங்கத்தை வாங்கி செல்லுங்கள்.

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

எல்லோருக்கும் பயன்படும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

Now a days ornaments fabrication its like garment factory method, they are doing mass production and they are using new tech to absorb even milligram gold by using vacuum absorption and for fine cutting and minute design they using laser tech. so here the wastage very less compared to our conventional method. If you go big branded shop for unique and customary design they charge more, not for usual designs. making charge is still extra payment.

Gopikumar
Bangalore India