Monday, December 21, 2015

டெக்னாலஜி அடிக்ட் ஆகும் நாமும் நம் குழந்தைகளும் !

பனிகாலம் முகுந்துக்கு இரண்டு வாரம் பள்ளி விடுமுறை.  விடுமுறைக்கு ப்ளோரிடா பயணம் மேற்கொள்ளலாம், குளிரில் இருந்து ஒரு வாரம் தப்பித்தது போல இருக்கும், புது வேலை என்பதால் புது வருடம் ஆரம்பித்தவுடன் மூச்சு விட நேரம் இருக்காது, எனக்கும் ஒரு பிரேக் என்று முடிவு செய்து கிளம்பியாயிற்று.

ஒர்லாண்டோ, மியாமி என்று லிஸ்ட் நீள, பயண தேவைகள் குறித்த அத்தியாவசிய விஷயங்கள் நான் எடுத்து வைக்க முகுந்தோ  முதலில் எடுத்தது ஐ பெட் , டப்லெட் ... இப்படி கிளம்பும் போது என்ன என்ன தேவை என்ற அத்தியாவசிய விசயங்களில் முக்கியமாக இடம் பிடித்து இருப்பது டெக்னாலஜி கட்ஜெட்ஸ்..

கிளம்பிய நாட்களில் இருந்து காரில் ஏறிய நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக டிவி, டேபிலேட் , போன், ஐபேட் என்று  என்ன என்ன இருக்கிறதோ தொடர்ச்சியாக பார்கிறார்கள். அதிக நேரம் பார்த்தால் தலை வலிக்கும் கண் வலிக்கும் என்று என்ன சொன்னாலும் கேட்பதில்லை. தொடர்ந்து "வாட் கேன் ஐ டூ " பீலிங் போர்ட்" என்று தொடர்த்ந்து அங்கலாய்ப்புகள். நாங்களும் எவ்வளவோ வேறு வேறு விளையாட்டுகள், போர்டு கேம்ஸ், கலரிங், வார்த்தை விளையாட்டுகள், ஹூ ஆம் ஐ? என்று எத்தனை விதமாக விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்கு இட்றேஸ்ட் ஏற்படுவதில்லை. சொல்ல போனால் நாம் எங்கே அழைத்தது சென்றாலும் சிறிது நேரம் நம்முடன் வரும் பல குழந்தைகளும் உடனே போனில் வீடியோ கேம் விளையாட கேட்கிறார்கள்.

நான் இந்த விசயத்த்தில் கொஞ்சம் கண்டிப்புடன் ஒரு மணி நேரம் மட்டுமே ஸ்க்ரீன் டைம் என்று வைத்து இருக்கிறேன். மற்ற நாட்களில் என்னதான் நாம் கண்டிப்புடன் இருந்தாலும் இப்படி சுற்றுலா போகும் போதெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடிவதில்லை. நமக்கும் வேறெதுவும் மாற்று முறை இல்லை என்பதால் நிறைய நேரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி கொடுக்கப்படும் குழந்தைகளிடம் இருந்து நீங்கள் டிவியையோ அல்லது போனையோ வாங்கி பாருங்கள்.. ஒரு சந்திரமுகி படத்தில் வருவது போல பிட் பிடிவாதம்  அடிப்பார்கள்..

சொல்ல போனால் நாமே போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை இருப்பது பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் மேப் வைத்து கொண்டு இடத்ததை தேடி செல்ல வேண்டி இருந்தது பின்னர்  டாம் டாம் என்ற ஒன்று வைத்து மேப் பார்த்த காலம் வந்தது.. இப்பொழுதெல்லாம் எல்லாமே போன் தான்.. போனில் அட்ரஸ் போட்டுவிட்டு அது சொல்லுகிற படி தான் எல்லாமே செய்கிறோம். ஆனால் போன் வேலை செய்ய இல்லை என்றால் கதை கந்தல் தான்.  உதாரணமாக வெளியூருக்கு என்று வந்தாகிவிட்டது. முழுதும் நம்பி இருந்தது கூகுளாரை. ஆனால் வரும் வழியில் சார்ஜ் தீர்ந்து விட.. In the middle of nowhere, எங்கே செல்வதென்று தெரியாமல் நல்ல வேலையாக  எப்பொழுதோ வாங்கிய பழைய மேப் ஒன்று பார்த்து வழியை கண்டிபிடித்து வந்து சேர்ந்தோம்.

எல்லாவற்றுக்கும் டெக்னாலஜியை நம்பி இருந்தால் என்னவாகும் என்று நாங்கள் அனுபவித்து உணர்ந்தது. ஆனாலும் எப்படி இதனை தவிற்பது என்று தெரியவில்லை.. சொல்ல போனால் இது அதிகரிக்குமே தவிர குறையாது என்று தோன்றுகிறது..

5 comments:

Anuprem said...

உண்மை..

ராஜ நடராஜன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படிதான்.கணினி நோய் என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.பக்கத்து வீட்டில் ஒரு பெண் குழந்தை அம்மா கூப்பிடுவது கூட கவனிக்காமல் ஐபேடில் விளையாடுகிறது ஏதோ நோய் முத்தி போச்சு போல புரளியை கிளப்பி விட அதை நம்பிய ஆம்படையான் மருத்துவரிடம் கொண்டு போக அந்த மருத்துவரோ மாத்திரையா முழுங்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய அதை அறிந்த நான் உங்கள் இருவருக்கும் கிறுக்கு பிடிச்சிருக்கா என்ற குழந்தைக்கு சிபாரிசு செய்ய புள்ளைய வளர்க்கும் எங்களுக்குத்தானே அருமை தெரியும் என்று சண்டைக்கு வர எப்படியோ தொடர் மாத்திரைகள் பெண் குழந்தையை பாதிக்கும் என விளக்க மாத்திரை தவிர்க்கப் பட்டது.குழந்தை என்னமோ என் கண்களுக்கு இப்பவும் இயல்பாகவே தெரிகிறது.

ஆரூர் பாஸ்கர் said...

ஒ...அப்படியா..நீங்க FLORIDA வரது தெரியாதே..

பழமைபேசி said...

நாங்கள் உநோ விளையாடுகிறோம். மோனோபோலி விளையாடுகிறோம். கவிதைப் போட்டி நடத்துகிறோம். உரைவிளையாட்டு விளையாடுகிறோம்... மூன்று குழந்தைகளுக்கு நுட்பக்கருவிகள் வாங்கிக் கொடுத்து கட்டுவழி ஆவாதுங்கோ!!

நிஷா said...

நிஜமான ஆதங்கம் தான்.எங்க வீட்டிலும் இதே நிலை தான். கையில் போனில்ருந்தால் தான் மூச்சே வருது.