Friday, December 4, 2015

சென்னை வெள்ளம் குறித்து பரவும் செய்திகள், எது உண்மை? எது புரளி?

இது தற்போது வெளிநாட்டில் வசிக்கும், ஆனால் இந்தியாவில் சென்னையில் சொந்தங்கள் இருக்கும் ஒருவரின் மன நிலையில் இருந்து எழுதியது.

ஏன் இப்படி மக்களே? இப்படி தான் எனக்கு கேட்க தோன்றுகிறது.

 "சென்னை வெள்ள காடானது, எங்கும் எதிலும் வெள்ளம்". என்ற செய்தி FB, Whatsapp போன்றவற்றில் பரவ ஆரம்பித்ததும் , தன் குடும்பத்தை அல்லது தாய் தந்தையரை சென்னையில் விட்டு  விட்டு வெளிநாட்டில் எங்கோ இருக்கும் எங்களை போன்ற பலர் பட்ட பாடு பரிதாபமானது.
எப்படி இருக்கிறார்களோ நம் சொந்தங்கள், எங்காவது ஒதுங்கினார்களா? சாப்பாடு குடிநீர் கிடைத்ததா?, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?, எதுவும் ஆபத்தா? என்று கேள்வி மேல் கேள்வி தொக்கி நிற்க, போன் போகாவிட்டாலும் தொடர்ந்து போன் அடித்தும், இணையம், FB, Whatsapp போன்றவற்றை நொடிகொரு தரம் செக் செய்து கொண்டு இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. கடைசியில் சொந்தங்கள்  "ஸேப்" ஆக இருக்கிறார்கள் என்ற அவர்களின் குரல் கேட்கும் வரை இருந்த பதை பதைப்பு வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்  மற்றும் FB இல் அல்லது இணையத்தில் "சென்னை வெள்ளம்" என்ற தலைப்பில் பல பல fake படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள். நிறைய போட்டோ ஷாப் வேலைகள் நடந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்.

உதாரணமாக, சென்னை ஏர்போர்ட் வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று ஒரு போட்டோ வைரல் ஆக பரவி கொண்டு இருக்கிறது.

அது கடந்த வருடம் சிகாகோ ஏர்போர்ட்இல் நடந்த வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. ஏனெனில் United, இந்தியாவிற்கு டைரக்ட் ஆக பறப்பதில்லை.




அதே போல ஒரு லாரி திருப்பதி அருகே குடை சாய்வது போல ஒரு வீடியோ , அது தான்சானியா நாட்டில் பிப் 2014 இல் எடுக்கப்பட்டது.


மற்றும் ஒரு வீட்டில் வெள்ளம் புகுந்து அனைவரும் மீக்கபடும் வீடியோ என்று வித விதமாக போட்டோ...பல போட்டோ மற்றும் வீடியோக்கள் அனைத்தும்  புரளி .


ஏற்கனவே உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் மக்கள் பயந்து கொண்டு இருக்க? ஏன் இப்படி புரளி கிளப்புகிறார்கள். இதில் என்ன கிடைக்க போகிறது. இதில் செய்தி ஊடகங்கள் வேறு, முக்கியமாக எதிர் கட்சி சேனல்ஸ், உண்மையை திரித்து பேசுவது, செய்தி வாசிப்பது, என்று இன்னும் பயத்தை அதிகரித்து கொண்டு இருந்தனர்.ஏற்கனவே பயத்தில் இருக்கும் மக்கள் இப்படிப்பட்ட புரளி வீடியோ, செய்திகள் என்று பார்க்கும் போது இன்னும் பயந்து சாக மாட்டார்களா? ஏன் இப்படி மக்களே?

என்னவோ போங்கப்பா!

டிஸ்கி 

முதலிலேயே சொன்னது போல, இது வெளிநாட்டில் வசிக்கும் சென்னையில் குடும்பம் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் மன நிலையில் இருந்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை சொல்லவில்லை.

2 comments:

? said...

இணையத்தில் ஹிட்டுகளுக்காக போலி செய்தி போடும் நாதாரிகளைக் கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் பொறுப்பான ஒரு செய்தி சேனல் பரபரப்பு செய்தி போடுவதாக நினைத்துக் கொண்டு தவறான தகவல் கொடுத்து மக்களிடம் பீதி கிளப்பியதாம்..

https://www.facebook.com/photo.php?fbid=10206992562246181&set=a.1219884870927.33503.1643095028&type=3

நேற்றுமுன் தினம், கலிபோர்னியவில் பாகிஸ்தானியரின் துப்பாக்கி தாக்குதல் குறித்த செய்தியின் போது, சிஎன்என் எம்மிடம் இறந்தவரின் லிஸ்ட் இருக்கிறது. ஆனால் அரசு அவர்களின் பெயர்களை மீண்டும் சரிபார்ப்பதால் சரி பார்த்தபிறகு அடுத்தநாள் வெளியிடுவோம் என்றது. இந்த பொறுப்பு நம்மூர் ஆட்களுக்கும் வரணும்.

வேகநரி said...

இவர்கள் எல்லாம் இன்னும் ஏதாவது பெரிய அழிவு நடக்க வேண்டும் என்று ஆசைபடும்,அழிவை ரசிக்கும் தீய மன யோயாளிகள்.