Tuesday, May 11, 2010

ஆணென்றால் உசத்தியா?

மிகுந்த மன வருத்ததுடன் நான் எழுதும் இடுகை இது.

எந்த ஊராக இருந்தாலும் சரி எந்த நாடா இருந்தாலும் சரி எங்கும் நடப்பது ஒரு விஷயம் தான். அது ஆணென்றால் ஒரு மாதிரி பெண் என்றால் ஒரு மாதிரி என்பதே.

நேற்று நான் மிகவும் மன வருத்தம் அடைய நேரிட்டது. காரணம் நான் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் நான் வகித்த அதே பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் என்று கேள்வி பட்டேன். அவர் முன் அனுபவம் இல்லாதவர் ஆனாலும் ஆண். அங்கே வேலை பார்த்த மற்ற நண்பர்களிடம் பேசிகொண்டிருக்கும் போது நான் அறிந்தது இது தான்.

புதிதாக சேர்ந்திருக்கும் அந்த நபருக்கு நான் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் சம்பளம் சுமார் 20K ($20,000) அதிகம் என்பது. இத்தனைக்கும் அவர் முன் அனுபவம் இல்லாதவர், எனக்கோ மூன்று வருட முன் அனுபவம் உண்டு.

என்ன பாகுபாடு பாருங்கள்?. இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, வேலை செய்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்?. மனது வலிக்கிறது.

இதனை பற்றி மனம் நொந்து என் கணவரிடம் புலம்பி கொண்டிருந்த போது அவர் சமீபத்தில் வால்மார்டில் வேலை பார்க்கும் பெண்கள் இதே போன்று பாகுபடுத்த படுவதாக வழக்கு தொடர்ந்து இருக்கும் செய்தியை காண்பித்தார்.


பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், பேய் இறங்க வேண்டாம் எங்களுக்கு உரிய பே (Pay) மட்டும் கொடுங்கள் போதும்.

19 comments:

பத்மா said...

universal problem .sorry mukunth amma .!

settaikkaran said...

//பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், பேய் இறங்க வேண்டாம் எங்களுக்கு உரிய பே (Pay) மட்டும் கொடுங்கள் போதும்.//

பேயும் இறங்கும் என்பதை Pay-யும் இறங்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களோ?

Radhakrishnan said...

:( வருத்தம் தரக் கூடிய செய்திதான்.

சாந்தி மாரியப்பன் said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்தான் முகுந்த் அம்மா. இந்த பாகுபாடு கருவிலேயே ஆரம்பித்து விடுகிறதே :(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நானும் இதை அனுபவிச்சு இருக்கேன் சிஸ்டர். முன்னிக்கு இப்ப பரவாஇல்ல, ஆனாலும் இன்னும் மாறனும். இங்க (கனடா) எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனில மேனேஜர் போஸ்ட்க்கு ஆண்கள் மட்டும் தான் எடுப்போம்னு சொன்னாங்க. கேஸ் போடலாமான்னு கூட தோணுச்சு. பிரயோஜனம் இல்லை. நானும் அந்த வால்மார்ட் விசயம் கேள்வி பட்டேன்

கோமதி அரசு said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்
முகுந்த் அம்மா.

தமிழ் உதயம் said...

என்ன செய்வது. போராட தான் வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:((

சந்தனமுல்லை said...

இங்கும் அப்படித்தான் இருக்கிறது. கோபப்பட வேண்டிய கண்டிக்க வேண்டிய செயல்!

Chitra said...

//பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், பேய் இறங்க வேண்டாம் எங்களுக்கு உரிய பே (Pay) மட்டும் கொடுங்கள் போதும்.//

பேயும் இறங்கும் என்பதை Pay-யும் இறங்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களோ?



......... ditto!!!

GEETHA ACHAL said...

சில இடத்தில் இப்படி தான் நடக்குது...என்னத செய்ய....

அரசூரான் said...

இந்த குறை தற்போது பல இடங்களிலும் சரி செய்யப்பட்டு வருகின்றது என் நினைக்கிறேன். நீங்கள் $-ல் குறிப்பிட்டுள்ளதால் இதை குறிப்பிட விரும்புகிறேன், இங்கு (அமெரிக்காவில்) உங்கள் / நமது ஊதியமும் டிமாண்ட் & சப்ளை-யை பொருத்தும் அமையும். கவலைய விடுங்க... பதிவுல கொஞ்சம் புத்துணர்ச்சிய கொட்டுங்க முகுந்த் அம்மா.

அமுதா கிருஷ்ணா said...

என்று தான் இந்த நிலைமை மாறுமோ....

முகுந்த்; Amma said...

@பத்மா
//universal problem .sorry mukunth amma .!//
வருத்தம் தரும் விஷயம்

@சேட்டைக்காரன்
//பேயும் இறங்கும் என்பதை Pay-யும் இறங்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களோ//
அப்படித்தான் நினைக்கிறன்

முகுந்த்; Amma said...

@V.ராதாகிருஷ்ணன்

கருத்துக்கு நன்றி

@அமைதிசாரல்

//இந்த பாகுபாடு கருவிலேயே ஆரம்பித்து விடுகிறதே ://

நிதர்சனமான உண்மை:((, கருத்துக்கு நன்றி

முகுந்த்; Amma said...

@அப்பாவி தங்கமணி
//நானும் இதை அனுபவிச்சு இருக்கேன் சிஸ்டர். முன்னிக்கு இப்ப பரவாஇல்ல, ஆனாலும் இன்னும் மாறனும். இங்க (கனடா) எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனில மேனேஜர் போஸ்ட்க்கு ஆண்கள் மட்டும் தான் எடுப்போம்னு சொன்னாங்க. கேஸ் போடலாமான்னு கூட தோணுச்சு. பிரயோஜனம் இல்லை. நானும் அந்த வால்மார்ட் விசயம் கேள்வி பட்டேன்//

பத்மா சொன்ன மாதிரி இது universal problem போல. வருத்தம் தான் பட முடியும் வேற என்ன செய்ய?

thanks

முகுந்த்; Amma said...

@கோமதியம்மா, @தமிழ் உதயம்

வருகைக்கும், கருத்துக்கு நன்றி

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி

நன்றிங்க

@சந்தனமுல்லை

//இங்கும் அப்படித்தான் இருக்கிறது. கோபப்பட வேண்டிய கண்டிக்க வேண்டிய செயல்//

உண்மை சந்தன முல்லை.

கருத்துக்கு நன்றி

@நன்றி சித்ரா

முகுந்த்; Amma said...

@ Geetha Achal said...

//சில இடத்தில் இப்படி தான் நடக்குது...என்னத செய்ய....//



என்ன செய்ய, வருத்தம் தரும் செய்தி.


@அரசூரான் said...
//இந்த குறை தற்போது பல இடங்களிலும் சரி செய்யப்பட்டு வருகின்றது என் நினைக்கிறேன். நீங்கள் $-ல் குறிப்பிட்டுள்ளதால் இதை குறிப்பிட விரும்புகிறேன், இங்கு (அமெரிக்காவில்) உங்கள் / நமது ஊதியமும் டிமாண்ட் & சப்ளை-யை பொருத்தும் அமையும்.//

உண்மை தான் என்றாலும், என் விசயத்தில் எனக்கும் அங்கு வேலைக்கு சேர்ந்த நபருக்கும் இந்த நிலை பொருந்தாது.

//கவலைய விடுங்க... பதிவுல கொஞ்சம் புத்துணர்ச்சிய கொட்டுங்க முகுந்த் அம்மா.//

செய்துடுவோம்.

@அமுதா கிருஷ்ணா
//என்று தான் இந்த நிலைமை மாறுமோ...//

அதுவே என் ஏக்கமும் :((