Monday, August 16, 2010

Gen - Z ம் நானும்

Definition
------------
Gen -Z : 16 லிருந்து 25 வயதிற்குள் இருக்கும் இளைய சமுதாயத்தினர் generation Z என்று அழைக்கப்படுகிறார்கள்.


துணிக்கடையில்
-----------------------

"ஏண்டா/ஏண்டி எப்போ பார்த்தாலும் கசமுசா என்று படங்கள் போட்ட/ ஜிகினா வைத்த டிரஸ் எடுக்கிறீங்க கொஞ்சமாவது டிரஸ் டீசன்ட் ஆ இருக்க வேண்டாமா? இது என்ன டிசைன் சகிக்கல?" இது நான்.

"இதெல்லாம் இப்போ இருக்கிற youth trend , உங்களுக்கெல்லாம் அது புரியாது " இது பதில்.


வீட்டில்
-------------

இருபத்தி நாலு மணி நேரமும் செல்போனும் கையுமாக ஒரு ரோபோ போல இருக்கும் gen Z ஐ பார்த்து.

”என்னாடா செய்யிற? கொஞ்சம் எங்கிட்ட பேசேன்” இது நான் .

”ஒரு நிமிஷம், ஒரு SMS அனுப்பிச்சிட்டு வந்துடரேன்” இது பதில்.

“ஒரு மாசம் எத்தனை SMS தாண்டா அனுப்புவ, பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே வேலையா இருக்கிற” இது நான்.

“போங்கக்கா, என் கிட்ட வெறும் 3000 SMS பிளான் தான் இருக்கு. அது ஒரு வாரம் கூட வர மாட்டேன்கிரது. அவனவன் 6000 SMS பிளான் வச்சிருக்கான், we need to get connected இல்ல” இது பதில்.

City center இல்
-----------------
ஒரு சாப்பாட்டு கடை முன்

நான் கடை காரரிடம்

”ஒரு பெப்சி எவ்வளவு”

ஒரு சின்ன can காட்டி அவர் “22 ருபாய்”

நான் gen Z யிடம் “என்னது 22 ருபாயா, வேண்டாம் பா”

gen Z "ஏன்கா இப்படி ஒரு பெப்சி வாங்குறதுக்கு கஞ்சதனம் பார்கிறீங்க, எனக்கு ஒரே கேவலமா இருக்கு ” என சொல்லி இரண்டு பெப்சி வாங்கி வந்தான்.

சிறிது நேரம் கழித்து பெப்சியில் இரண்டு மிடறு தான் குடித்து இருப்பான் அப்படியே வைத்து விட்டு கிளம்பினான்.

“என்னடா, 22 ருபாய் டா, கையில எடுத்துட்டு வாடா” இது நான்.

”வேற வேலை இல்ல, சரியான கஞ்சப்பிசினாறிக்கா நீங்க” இது பதில்.


டிஸ்கி: இவை, நான் பார்த்த சில generation Z பற்றிய என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, பொதுவானவை அல்ல.

11 comments:

Thekkikattan|தெகா said...

தெரியலயா, நாம வளர்ந்திட்டோம் - எப்படி செலவு செய்றதின்னு மூளைச் சலவை செய்யப்பட்டு :)

ஹுஸைனம்மா said...

நீங்க சொல்லிருக்கிறது எல்லாமே சரியானவைதான்!!

பக்கத்தில் இருக்கும் உறவினர்களைக் கண்டுகொள்ளாமல், முகமறியா நட்புகள்தான் பெரிதாக இருக்கிறது இந்நாளைய ஜென் - Zக்களுக்கு!!

Gen-Z பேர் அழகாருக்கே!! எப்படிப் பிடிச்சீங்க? ஜென் சாமியார்கள் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி!! :-))

Chitra said...

Gen. Z....... கன்னா பின்னானு கலக்குறாங்களே! ஆஹா.....

சந்தனமுல்லை said...

நல்ல snapshot. இன்னும் நிறைய இருக்கு! :-)

அமுதா கிருஷ்ணா said...

எங்க வீட்டில் இரண்டு gen-z இருக்கே..கண்ணைக் கட்டுதே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க ஆமாங்க.. மொபைல்ல இத்தனை எஸ் எம் எஸ் ப்ரீன்னு,மொக்கை போடறாங்கங்க.. கரெண்ட் போனா என்ன உனக்கு த்தான் மொபைல் இருக்கேன்னு சித்திப்பொண்ணை கிண்டல் செய்திட்டிருந்தேன்..

.. ஜிகினா , கல் வச்ச சேலை, பெயிண்ட் செய்த சுடிதார் .. பளபளப்பு தான் இப்ப ஃபேசனாம்.. :(

அமைதி அப்பா said...

எல்லாம், எங்க வீட்லயும் நடக்குது மேடம்.

முகுந்த்; Amma said...

@தெகா

//தெரியலயா, நாம வளர்ந்திட்டோம் - எப்படி செலவு செய்றதின்னு மூளைச் சலவை செய்யப்பட்டு :)//

கஷ்டபட்டு படிச்சு வெயில்ல நடையா நடந்து வேலைக்கு அழைஞ்சு குறைச்ச சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த, மூளைச் சலவை செய்யப்பட்ட நமக்கு எல்லாம் 22 ருபாய் பெரிய காசுதாங்க.

முகுந்த்; Amma said...

//ஹுஸைனம்மா


//பக்கத்தில் இருக்கும் உறவினர்களைக் கண்டுகொள்ளாமல், முகமறியா நட்புகள்தான் பெரிதாக இருக்கிறது இந்நாளைய ஜென் - Zக்களுக்கு!!//


Appointment கேட்க்க வேண்டி இருக்குங்க. சித்தி வீட்டில அத கண் கூடா பார்த்தேன். எல்லாம் கொடுமை.

//Gen-Z பேர் அழகாருக்கே!! எப்படிப் பிடிச்சீங்க? ஜென் சாமியார்கள் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி!! :-))//

1970-1985 வரை பிறந்தவர்கள் Gen-Y, அதுக்கு முன்னால பிறந்த்வங்க Gen-X. கூகுள் ல போட்டிருந்தாங்க, அப்படியெ நான் பிடிச்சுகிட்டேன் :-)).

முகுந்த்; Amma said...

@சித்ரா

//Gen. Z....... கன்னா பின்னானு கலக்குறாங்களே! ஆஹா.....//

பயங்கரமா கலக்குறாங்க, நம்ம எல்லாம் ஜுஜுபி .

Blogger@சந்தனமுல்லை

//நல்ல snapshot. இன்னும் நிறைய இருக்கு! :-)//

இன்னுமா, எனக்கு கன்ன கட்டுது :((


@அமுதா கிருஷ்ணா

//எங்க வீட்டில் இரண்டு gen-z இருக்கே..கண்ணைக் கட்டுதே..//

எனக்கு gen-z ய பார்த்துட்டு gen- alpha ஆனா என்பையன் என்ன பண்ண இருக்கனொன்னு நினச்சு கவலை வந்துடுச்சு.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி/muthuletchumi

// இத்தனை எஸ் எம் எஸ் ப்ரீன்னு,மொக்கை போடறாங்கங்க.. கரெண்ட் போனா என்ன உனக்கு த்தான் மொபைல் இருக்கேன்னு சித்திப்பொண்ணை கிண்டல் செய்திட்டிருந்தேன்.. //


குட்மோர்னிங் ன்னு ஆரம்பிக்கிற இது தடுக்கி விழுந்தா அதுக்கும் ஒன்னு, தாங்க முடியலடா சாமி.


//.. ஜிகினா , கல் வச்ச சேலை, பெயிண்ட் செய்த சுடிதார் .. பளபளப்பு தான் இப்ப ஃபேசனாம்.. :(//


கண்ணு கூசுதுங்க, எல்லாரும் அந்த மாதிரி தான் போட்டுகுதுங்க.


@அமைதி அப்பா

உங்க வீடுலயுமா, சரியா போச்சு, இது universal ஆ எல்லா வீட்டுலயும் இப்போ நடக்குது போல.