"என்ன ரேசிபே செய்ய ஆரம்பிக்கலாம்?" யோசித்த போது பிரெஞ்சு ரேசிபே செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். (Why French?, அது எப்படின்னே தெரியல, பிரெஞ்சு பொண்ணுங்க மட்டும் என்ன சாப்பிட்டாலும், எப்படி தான் ரவுண்டு கட்டி சாப்பிட்டாலுமே ஒல்லியாவே இருக்குதுங்க? அதான் ஹி, ஹி, ஹி)
முதல் வேலையா, ஒரு பிரெஞ்சு சமையல் புத்தகம் வாங்கினேன், அது Mastering the Art of French Cooking, by Julia Child
அடுத்து ஒரு வலைபூ ஆரம்பித்தேன், அதில் இன்று என்ன ரேசிபே செய்ய போகிறேன் என்று எழுதினேன்.
சும்மா, one recipe one day னா போர் அடிக்குமே , ஏதாவது சுவாரஸ்யம் கொண்டு வரணுமே? என்ன செய்யலாம்?
ஓகே,
- ஒரு வருசத்துக்குள்ள அந்த சமையல் புத்தகத்தில இருக்கிற எல்லா ரேசிபேயும் சமைச்சு முடிச்சுடனும்
- ஒவ்வொன்னையும் சமைச்சு முடிச்சப்புறம் வலைபூவில சொல்லணும்,
- கவுன்ட் டவுன் வச்சுக்கணும்,
இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம்னு நினைக்கிறவங்க,
Julie & Julia படத்த பாருங்க
5 comments:
It is a good movie... :-)
எங்க அந்த ப்ளாக் முகுந்தம்மா.. நீங்க ஒருநாள் சமைக்கலன்னா நாங்க வந்து நல்லா கேள்வி கேப்பமில்ல.. :)
புரியலை, நீங்க இந்தப் புத்தகத்தைப் பின்பற்றி சமைக்கறீங்களா இப்போ? இல்லை, பட/புத்தக விமர்சனமா இது?
@முத்துலெட்சுமி/muthuletchumi & ஹுஸைனம்மா
சும்மா, Fun க்கு எழுதுனதுங்க, அந்த படம் பார்த்தவுடனே அட அப்படின்னு தோனுச்சு, இது பட விமர்சனம் மட்டுமே.
524 ரெசிபே சமைக்க எல்லாம் நேரம் இல்லேங்க. அதுவும் அந்த புக்ல இருக்கிற முக்கால் வாசி ரெசிபே nonveg, so not for us.
பதிவு உருவான விதம்...நல்லாருக்குது :)
Post a Comment