Monday, September 20, 2010

சிலம்பாட்டம்

சிறு வயதில் நான் பார்த்த எல்லா எம்ஜியார் படங்களிலும் ஒரு சிலம்பாட்டம் வரும். லாவகமாக கையில் சிலம்பை எடுத்து சுத்தற மாதிரி தெரியும். அட எப்படி வேகமாக சுத்துறாங்க பாரு என்று வியந்திருக்கிறேன் (ஆனால் நெறய டுப்பு நடிகர்கள் தான் உண்மையில் சிலம்பம் சுற்றினார்கள் என்பது எனக்கு லேட் ஆகவே புரிந்தது).

திரையில் பார்க்கிற விஷயத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. அப்படி ஒரு அருமையான சிலம்பம் சுற்றலை நேற்று இங்கு நடந்த சார்லோட் தமிழ் சங்க விழாவில் பார்க்க முடிந்தது. தெற்கு கரோலினாவை சேர்ந்த பனைநிலம் தமிழ்ச் சங்க சிலம்பம் குழுவினர் இதனை செய்தனர்.

தாரை, தப்பட்டை முழங்க சிலம்பம் சுற்றலை காணும் போது, நாம் இருப்பது அமெரிக்காவில் அல்ல, இந்தியாவில் தான், என்னும் உணர்வு அனைவருக்கும் வந்திருக்கும்.

என்னுடைய கைத்தொலைபேசியில் இருந்து எடுத்த சில சிலம்பஆட்டம் காட்சிகள் இங்கே.








மேலும் காட்சிகள் மற்றும் செய்திகளுக்கு பழைமை பேசி அய்யா அவர்களுடைய இந்த இடுகையை பார்க்கவும்.

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டூப்பும் போடுவார்கள்.. ஆனா பல நடிகர்கள் சிலம்பாட்டம் எல்லாம் கற்றுக்கிட்டவ்ங்கன்னு படிச்சிருக்கேன்.இன்று
நடனம் கத்துக்கிட்டு வருவது போல
அன்னிக்கு குதிரையேற்றம் ,சிலம்பாட்டம், கத்தி பயிற்சி எடுப்பாங்களாம்..
தில்லியில் எங்க வீட்டுக்கு பின்ன ஒரு குழு முன்பெல்லாம் பயிற்சி எடுக்கும் பாத்திருக்கிறேன்..இப்பல்லாம்
அவங்க வரதில்ல..
நல்லா எஞ்சாய் செய்தீங்களா நேரில் பார்த்து ..குட்.

settaikkaran said...

//சிறு வயதில் நான் பார்த்த எல்லா எம்ஜியார் படங்களிலும் ஒரு சிலம்பாட்டம் வரும். லாவகமாக கையில் சிலம்பை எடுத்து சுத்தற மாதிரி தெரியும். அட எப்படி வேகமாக சுத்துறாங்க பாரு என்று வியந்திருக்கிறேன் (ஆனால் நெறய டுப்பு நடிகர்கள் தான் உண்மையில் சிலம்பம் சுற்றினார்கள் என்பது எனக்கு லேட் ஆகவே புரிந்தது).//

என்னாங்க? ரிக்ஷாக்காரன், மாட்டுக்கார வேலன், படகோட்டி, உழைக்கும் கரங்கள் படங்களை திரும்ப ஒருவாட்டி பாருங்க. வாத்தியாரை மாதிரி சிலம்பம் சுத்த இன்னும் யாரும் பொறக்கலே! நிற்க....! (பரவாயில்லை, உட்கார்ந்தே படிக்கலாம்)

ஹிஹி! எனக்குக் கூட சிலம்பம் சுத்த வருமுங்க! சீக்கிரம் அது குறித்து ஒரு இடுகை போட்டாலும் போடுவேன். பகிர்வுக்கு நன்றி!

Chitra said...

அப்படி ஒரு அருமையான சிலம்பம் சுற்றலை நேற்று இங்கு நடந்த சார்லோட் தமிழ் சங்க விழாவில் பார்க்க முடிந்தது. தெற்கு கரோலினாவை சேர்ந்த பனைநிலம் தமிழ்ச் சங்க சிலம்பம் குழுவினர் இதனை செய்தனர்.


..... Super..... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வாசிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...

//டூப்பும் போடுவார்கள்.. ஆனா பல நடிகர்கள் சிலம்பாட்டம் எல்லாம் கற்றுக்கிட்டவ்ங்கன்னு படிச்சிருக்கேன்.இன்று நடனம் கத்துக்கிட்டு வருவது போல
அன்னிக்கு குதிரையேற்றம் ,சிலம்பாட்டம், கத்தி பயிற்சி எடுப்பாங்களாம்..//

சிலம்பம், கத்தி பயிற்சிக்கு ஸ்பெல்லிங் கேட்ப்பாங்க போல இப்பொ இருக்குற generation

//நல்லா எஞ்சாய் செய்தீங்களா நேரில் பார்த்து ..குட். //

ஆமாங்க சூப்பர் ஆ இருந்தது.

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன்
//என்னாங்க? ரிக்ஷாக்காரன், மாட்டுக்கார வேலன், படகோட்டி, உழைக்கும் கரங்கள் படங்களை திரும்ப ஒருவாட்டி பாருங்க. வாத்தியாரை மாதிரி சிலம்பம் சுத்த இன்னும் யாரும் பொறக்கலே! நிற்க....! (பரவாயில்லை, உட்கார்ந்தே படிக்கலாம்)//

உண்மைதாங்க, இப்பொ இருக்குற நடிகர்கள் பார்க்கும் போது, வாத்தியார் மாதிரி சிலம்பம் சுத்துறவங்க யாரும் இல்லயின்னு தான் தோனுது.

//ஹிஹி! எனக்குக் கூட சிலம்பம் சுத்த வருமுங்க! சீக்கிரம் அது குறித்து ஒரு இடுகை போட்டாலும் போடுவேன். //

பரவாயில்லயே, நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க.குட். சீக்கிரம் ஒரு இடுகை போடுங்க.

முகுந்த்; Amma said...

@Chitra
//..... Super..... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வாசிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

thanks Chitra.

குடுகுடுப்பை said...

பழமைபேசி அய்யாவை பாத்து சூதானம இருக்க சொல்லுங்க சிலம்பத்தை அய்யா மேல வீசிற போறாங்க.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பழமைபேசி அய்யாவை பாத்து சூதானம இருக்க சொல்லுங்க சிலம்பத்தை அய்யா மேல வீசிற போறாங்க.
//

ஏன்? ஏன்?? ஏன்யா இந்தக் கொலைவெறி???