Friday, September 3, 2010

குழந்தைகளுக்கு டைம் அவுட் கொடுப்பது நல்லதா?குழந்தை அடம் பிடிக்கிறது அல்லது அடுத்தவர்களை அடித்தல்/உதைத்தல்/கடித்தல்/விழுந்து அழுதல் போன்றவற்றை செய்கிறது என்ன செய்யலாம் என்று குழந்தைகள் மருத்துவரிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் டெக்னிக்

"டைம் அவுட் கொடுத்து பாருங்கள்" என்று.

டைம் அவுட் என்பது அழும்/பிடிவாதம் செய்யும் குழந்தைகளை தனி இடத்தில் அல்லது ஒரு மூலையில் உக்கார செய்து அழுவதை நிறுத்தும் வரை யாரும் பேசாமல்/ கண்டு கொள்ளாமல் இருப்பது. இப்படி செய்யும் போது குழந்தை தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அமைதி அடைந்து, பெற்றோரிடம் தனக்கு என்ன வேண்டும்/தேவை என்பதை சொல்லும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். இது போல செய்வது குழந்தையின் தன்னம்பிக்கை வளர்க்கும் கட்டுப்பாட்டோடு வளர உதவும் என்றும் சொல்கிறார்கள்.

என்னுடைய இந்தியா பயணத்தில் அநேகமாக எல்லா வீடுகளிலும் இருக்கும் சிறு குழந்தைகள் பிடிவாதம் பிடித்து அழுத போதும் பிறரை அடிக்கும் போதும் நான் கேள்வி பட்ட இந்த டெக்னிக் ஐ சொன்னேன்.

அதற்க்கு அவர்கள் பதில் "அதெல்லாம் ஒத்து வராது இங்க, குழந்த பயந்து போயிடும்" என்று சொல்கிறார்கள். குழந்தை கேட்பதை கொடுத்து அந்த நேரம் சமாதனப்படுத்துகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தை திரும்ப திரும்ப அதே செய்து கவனத்தை ஈர்க்கிறது. சில பெற்றோர் குழந்தையை அடிக்கிறார்கள். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் அதனை மறந்து விடுகிறார்கள்.

இதனை தடுக்க என்ன வழி? எப்படி சமாதனப்படுத்துவது? டைம் அவுட் கொடுப்பது நல்லதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

9 comments:

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு.

அடம்பிடிக்கும் குழந்தைகளை கண்டுகொள்ளாமல் விடுவதே சரி.
எனது சிறுவயதில் கோபமாக ஏதாவது செய்துவிட்டு அழுது அடம்பிடிப்பேன். பிறகு கொஞ்சநேரம் கழித்து யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால், எனது மனதில் யாராவது நம்மிடம் வந்து சமாதானம் பேசமாட்டார்களா என்று ஏக்கம் வரும்.

Chitra said...

I vote for "time out" method. It is proved to correct the tantrums.

Thekkikattan|தெகா said...

இது கொஞ்சம் weird ஆகத்தான் பார்ப்பதற்குத் தெரியும், குழந்தைகளுக்கு இது போன்ற ஈவு இரக்கமற்ற அணுகு முறை தேவையா என. ஆனால், ’அமைதி அப்பா’ சொன்னது போல இந்த அணுகு முறை நீண்ட காலத்திற்கு உதவுவது போல தெரிகிறது.

நம்மூரில் உணவு ஊட்டுவதில் கூட தாய்மார்கள் குழந்தைகளை ரொம்பவே சார்ந்து இருக்கும் நிலைக்கு பல காலங்கள் நீட்டித்து வளர்த்து விட்டு விடுகிறார்கள். அதுவும் கவனிக்கக் கூடியதே!

என்னுடை குட்டி ஒன்று இப்பொழுதுதான் மூன்றாவது வாரமாக ப்ளே ஸ்கூல் செல்கிறாள். அவளுக்கு ‘டைம் அவுட்’ என்பது விளையாட்டுக்குச் செய்வதாய், பொம்பை எல்லாம் எடுத்து வைத்து you are on time out, sit down there... :) என்று விளையாண்டு கொண்டிருக்கிறாள்; பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கு கொடுப்பதினை வைத்து. காரணம் அவள் இது வரைக்கும் உண்மையான டைம் அவுட் வாங்குவது மாதிரியான சூழ்நிலை அமையவில்லை.

பழமைபேசி said...

@@Thekkikattan|தெகா

நீங்கள் நிறைய time-out வாங்கி இருப்பீர்களே பிரபா... அதிலிருந்து சொல்லுங்கள்... இவ்வழக்கம் நல்லதுதானே??

DrPKandaswamyPhD said...

நல்ல முறைதான். ஆனாலும் அம்மாக்கள் குழந்தையின் நலனில் திடமாக இருக்கவேண்டும். எனக்குத்தெரிந்து ஒரு அம்மா தன் கல்யாணமான பெண்ணிற்குக் கூட உணவை ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்.

Thekkikattan|தெகா said...

//நீங்கள் நிறைய time-out வாங்கி இருப்பீர்களே பிரபா... அதிலிருந்து சொல்லுங்கள்... இவ்வழக்கம் நல்லதுதானே?//

@ பழம :)))

எப்படிங்க மிகச் சரியா சொல்லுறீங்க. ரொம்ப அடம் பிடிப்பேனாம். ஒரு முறை அந்தக் காலத்தில VKSனு ஒரு பிஸ்கெட் இருக்கும் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம் ;) அது எல்லாருக்கும் பொத்தாம் பொதுவா அப்பா வாங்கிட்டு வந்திருக்கார், நான் அடம் பிடிச்சு இரண்டு முழு பாக்கெட்டுகளும் எனக்கே வேணுமின்னு செமய கத்தியிருக்கேன். அப்போ அப்பா என்ன செஞ்சிருக்கார், மூணு பேக்கா வாங்கி மவனே நீ இது அத்தனையும் சாப்பிட்டுடுதாண்டா உள்ளர வரணும்னு உட்கார வைச்சிருக்காரு தூரமா.

இதாண்டா போலீஸ் கணக்கா நானு எல்லாத்தையும் சாப்பிட்டுடு உள்ளர வந்திட்டேனாம், சமர்த்தா :)). இதான் எனக்கு ஞாபமிருக்கிற ’டைம அவுட்.’ ;)

சேட்டைக்காரன் said...

"கொஞ்ச நேரம் அழுதிட்டு சமாதானமாயிடுவான். கண்டுக்காதீங்க," என்று சர்வசாதாரணமாக சில கிராமப்புறக் குடும்பங்களில் சொல்வார்கள். ஏறக்குறைய அது தானே இது? :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப குழப்பம்ங்க.. பிள்ளைங்களுக்கும் குழப்பம் தானா இருக்கும் என்னைப்பத்தி.. ஒருநாள் கேட்டா தரமுடியாதுன்னு பெரிய லெக்சர் செய்வேன். இன்னோருநாள் அடி ய போட்டு விட்டு நகருவேன்..ஆனா அதுங்க மீண்டும் ஆறுதலுக்கும் என்கிட்டத்தான் வந்து அழும்..இன்னோரு நாள் கேட்டவுடனே சரிபோ வாங்கிக்கோன்னு குடுத்தாலும் குடுப்பேன்.. இப்ப இன்னிக்கு செய்த குட் அண்ட் பேட் திங்க் ந்னு ஒரு நோட் ல குறிக்கிறேன்.. பார்க்கலாம் இது எவ்ளோ ஒர்கவுட் ஆகுதுனு

மதுரை சரவணன் said...

i too vote for time out.