Thursday, April 2, 2015

அமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்

சமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் வாழ்க்கை மற்றும் அமெரிக்க இந்தியர்கள் வாழ்கை இங்கே.

இங்கு வந்தபிறகு  என்னுடன்  வேலை  பார்க்கும் அமெரிக்கர்களிடம், "நாங்கள் துபாய் சென்றிருந்தோம்" என்று சொன்னவுடன், கிட்ட தட்ட எல்லாரும் என்னிடம் கேட்ட கேள்வி,"நீ அங்கு சென்று புர்கா போட்டாயா? , பெண்களுக்கு ரொம்ப கட்டுப்பாடு இருக்கா?, கார் ஓட்டலாமா?" என்று பல பல. நான் அவர்களிடம் சொன்னது ஒன்றே ஒன்று தான் "Ladies and Gentleman, if you are at Dubai mall, you will feel like you are at Newyork time square" என்று. எனக்கு தெரிந்து துபாய் மாலில் நான் பார்த்த மக்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் அங்கிருந்த கடைகள் , கலாசாரம் எல்லாம் நியூயார்க் நகர டைம் ஸ்கொயர்லில் பார்க்காலாம். துபாய் சிட்டியை அல்ட்ரா மாடர்ன் சிட்டி ஆக மாற்ற எல்லா முயற்சிகளும் நடக்கிறது. துபாய் மாலில் எல்லா அமெரிக்க மற்றும் ஐரோப்பா ஹய் எண்டு கடைகள் காண முடிந்தது. மிக மிக காஸ்ட்லி கடைகள் அவை, டிசைநேர் ப்ராண்ட் கடைகளும் இருந்தன. ஆனால் துபாய் வாழ்க்கை மட்டும் அரபு நாட்டு  வாழ்க்கை அல்ல என்பது  அபுதாபி சென்ற போது நான் கண்டது. எப்படி நியூயார்க் வாழ்கையை வைத்து இப்படி தான் அமெரிக்கா இருக்கும் என்று கணிக்க முடியாதோ அதே போல, glittering துபாயை வைத்து அரபு நாட்டு வாழ்கையும் இப்படி தான் இருக்கும் என்று கணிக்க இயலாது.

திரும்ப எனது அமெரிக்க colleaques, சொன்ன விசயத்திற்கு வருவோம். "புர்கா கட்டாயமா?" இல்லை, எல்லா நாடுகளில் இருப்பது போல புர்க்கா இல்லாமல் பெண்கள்செல்லலாம் . கார் ஓட்டலாம், வேலை பார்க்கலாம். வெளியில் செல்ல எல்லாம் கட்டுப்பாடு இருப்பதில்லை. ஆனால் துபாய் சிட்டி தவிர எங்கும் நான் பெண்கள் மினி டிரஸ் அல்லது குட்டை பாவாடை அணிந்து பார்த்ததில்லை.  நிறைய இந்திய மற்றும் தெற்காசிய கலாசார தாக்கம் இருக்கிறது. இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்தால் நன்கு காலத்தை ஓட்ட முடியும். வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால், வியாழன் இரவே இவர்களுக்கு வீக் எண்டு ஆரம்பித்து விடுகிறது. நாங்கள் அங்கு சென்ற நாள் வியாழன் இரவு என்பதால் நிறைய நிறைய உணவகங்கள் கால நேரம் இல்லமல் திறந்து இருக்கின்றன. அதுவும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது எல்லா காஸ் ஸ்டேசன் லும் இந்திய, அமெரிக்க, சைணீஸ் உணவகங்கள் இருப்பது அதிலும்  ராத்திரி 1-2 மணி வரை கூட்டம் அலை மோதுவது என்பது.

ஒரு சின்ன நெருடல் எனக்கு இருந்தது என்ன வென்றால் பெண்களுக்கான கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது. அதற்கென்று அசுத்தம் என்று சொல்லமாட்டேன்.ஆனால் சுத்தம் இல்லை. நிறைய லேடீஸ் ப்ரயெர் ஹாலுக்கு அருகில் இருக்கும் கழிப்பறைகள் உபயோகிக்க முடியாத அளவு இருந்தது. நிறைய 
ஒரு வேலை நிறைய மாடர்ன் ஆக இருக்கிறதே என்று நான் ரொம்ப எதிர் பார்த்து விட்டேனோ என்னவோ தெரியவில்லை.

அடுத்து எனக்கு ரொம்ப ஆச்சரியாமாக இருந்தது, லோகல்ஸ் எனப்படும் அரபு நாட்டவர் வரும் போது நம் மக்கள் ஒதுங்கி நின்று வழி விட்டது. அதுவும் அந்த மனிதர் பெரிய ஆள் போல எல்லாம் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் சென்ற பிறகு உதாரணதிற்கு எல்லாரும் லிப்ட் உபயோகிரார்கள். 
அமெரிக்காவில் நான் பார்த்ததிற்கு இது  எதிர் பதமாக இருந்தது. உதாரணமாக, என் கணவர் எப்போதும் டென்னிஸ் விளையாடுவது இங்கிருக்கும் மேயர் உடன். எந்த வித்தியாசமும் எனக்கு தெரிய இருப்பதில்லை. உள்ளுக்குள்ளே நிறைய இருந்தாலும் வெளி காட்டி கொள்ள மாட்டார்கள்.

பின்னர் அரபு நாட்டு பெண்கள் செய்த ஷாப்பிங். சரி காமெடியாக இருந்தது. ஒரு அம்மா ஷாப்பிங் மால் உள்ளே நுழைகிறார் என்றால் உடனே அங்கு வேலை பார்க்கும் பெண்கள் கார்ட் தள்ளி கொண்டு வருகிறார்கள், அந்த அம்மா சொல்ல சொல்ல உடனே பொருள்களை எடுத்து போடுகிறார்கள் பின்னர் அவர்களாகவே எடுத்து பில் போட்டு காரில் கொண்டு சேர்கிறார்கள். எனக்கு பார்க்கும் பொது ஆச்சரியாமாக இருந்தது. இங்கெல்லாம், எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் ஷாப்பிங் எல்லாம் செல்லும் பொது இப்படி கார்ட் தள்ள என்று யாரையும் வைத்து கொள்வதில்லை. 

கார் என்று எடுத்து கொண்டால், நிறைய பேர் லேன்ட் கிருசர் வைத்து இருக்கிறார்கள், இங்கு எப்படி ஹோண்டா, டொயோடா எங்கும் பார்க்க முடியுமோ அதே போல அங்கு லேன்ட் கிருசெர் பார்க்க முடிந்தது.நிறைய  கார் இருக்கிறது ஆனால் பார்கிங் இல்லை. குடியிருப்புகளுக்கு அருகில் எல்லாம் முறையான பார்க்கிங் இல்லாமல். இந்தியாவில் இருப்பது போல ரோடு ஓரங்களில் பார்க்கிங் செய்கிறார்கள். குடியிருப்புகள் கட்டினால் முறையான பார்கிங்கும் செய்து தர வேண்டும் என்று இங்கிருப்பது போல எந்த சட்டமும் இல்லை போல் இருக்கிறது. இல்லை ஒரு வேலை நான் பார்க்க வில்லையோ தெரியவில்லை.

அதே போல எங்கு பார்த்தாலும் மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களை விற்கும் கடைகள் பார்க்க முடிந்தது. எல்லா கடைகளிளும் நிறைய சைனீஸ் மேக் பொருள்கள். இங்கெல்லாம் அப்படி எல்லா இடங்களிலும் கடைகளை பார்க்க முடியாது. மால்களில் வேண்டுமானால் இப்படி கடைகள் பார்க்கலாம். 

அதே போல சீசன் மாற்றங்கள் எதையும் அங்கு காண முடியவில்லை. இந்தியா போல பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, இந்தியா போன்ற நிறைய கிளைமேட் பார்க்க முடிந்தது. இங்கிருப்பது போல, வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், மற்றும் குளிர் காலம் எல்லாம் இல்லை. 

அதற்க்கு பிறகு நான் கண்டது, படிப்பு பற்றியது. நிறைய பள்ளிகள் இருக்கின்றன, அமெரிக்கன், பிரிட்டிஷ் பள்ளிகள் மற்றும் இந்திய பள்ளிகள். ஆனால் அவை எல்லாமே பிரைவேட் பள்ளிகள். இந்தியா போல. நான் பப்ளிக் பள்ளிகளை பார்க்கவில்லை.( யாரவது தெரிவியுங்கள் எனக்கு, பப்ளிக் பள்ளிகள் உண்டா என்று?) ஒருவர் சம்பாதிக்கும் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பின், பள்ளிகளுக்கு என்றே குறைந்தது 5-10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருடத்திற்கு செலவழிக்க வேண்டி இருக்கிறது. இந்த பணம் இந்தியன் பள்ளிகளில் சேர்பதற்கு மட்டும், அதே, அமெரிக்க பிரிட்டிஷ் பள்ளிகள் என்றால் 20 ஆயிரம் டாலர் வரை செலவாகிறது.  இந்திய பள்ளிகளும் CBSC சிலபஸ் பாலோ செய்கிறார்கள். படிப்பு தரம் அவ்வளவாக இருப்பதில்லை என்பது அங்கு கேட்டு விசாரித்தது. உண்மையா என்று தெரியவில்லை.  நான் கேள்வி பட்ட வரை, வீட்டு வாடகைக்கும், பள்ளி பீசுக்கும் அங்கிருக்கும் இந்தியர்கள் நிறைய செலவளிகிறார்கள்.

சம்பளங்கள் இங்கிருக்கும் சம்பளத்துடன் ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. இன்னொன்று நான் கண்டது, நீங்கள் எந்த நாட்டு குடிமகன் என்பதை பொறுத்து சம்பளம் மாறுவது. ஒரே வேலை செய்யும் அமெரிக்க குடிமகன் வாங்கும் சம்பளமும் இந்திய குடிமகன் வாங்கும் சம்பளமும் வேறு வேறாக இருப்பது ஆச்சரியாமாக இருப்பது. என்ன காரணம் என்றெல்லாம் கேட்க கூட முடியாது என்று நினைக்கிறன்.


ஆனால் டாக்ஸ் இல்லை, அதனால் நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் கையில். இங்கே இருப்பது போல பாதி பணத்தை Uncle Sam இடம் அழுக வேண்டியதில்லை. இந்தியாவுக்கு நினைத்தால் சென்று விடலாம், 4 மணி நேர பயணம், டிக்கெட் விலையும் 10-15 ஆயிரம் ருபாய் மட்டுமே. இப்படி பல நன்மைகள் இருப்பினும், வீடு வாங்குவது செட்டில் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னது போல, "ஒரு செங்கல் கூட வாங்க முடியாது", குடிமகனாவதோ, அல்லது நிரந்தரமாக தங்குவதோ, நினைத்து கூட பார்க்க முடியாது. "நிறைய சம்பாதி, ஊர் பக்கம் ஓடி விடு" என்பதே அங்கு செல்லும். 

இவை எல்லாம் நான் கண்ட கவனித்த விசயங்களை வைத்து எழுதியது. தவறாக இருப்பின் தெரிவிக்கவும்.

நன்றி 


13 comments:

ஆரூர் பாஸ்கர் said...

முகுந்த் அம்மா

In my opinion,

அரபு நாடுகளில் அரபிகளையும், மேற்கத்‌தியவர்களை தவிர அனைவரும் இரண்டாம்தர குடிகளே!
-பாஸ்கர்

http://aarurbass.blogspot.com/

? said...

துபாயில் வாழ்க்கை எப்படி என்பது தெரியாது. ஆனால் எனது விமான பயணமே போதுமான க்ளுவை கொடுத்தது. ஏர் எமிரேடில் துபாய் வழியாக இந்தியா சென்ற போது, அமெரிக்க-துபாய் விமானம் நல்ல வசதி & சேவைகளுடன் இருந்தது. ஆனால் துபாய்-இந்திய விமானத்துக்கும் நம்மூர் டவுன் பஸ்ஸூக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. நாத்தம் புடிச்ச டாய்லட், அலட்சியம் காட்டும் சிப்பந்திகள் என வெறுப்பேற்றினார்கள் - அவர்கள் இந்தியர்க்கு கொடுக்கும் மரியாதை அம்புட்டுதான்.

ஐரோப்பிய விமானங்களிலும் இதே பிரச்சனைதான். விமானம் எமிரேட் மாதிரி கேவலமாக இருக்காது, ஆனால் ஐரோப்பா- இந்திய பிரயாணத்தில் சிப்பந்திகள் ரொம்ப அலட்சியமாக இருப்பார்கள்!!! ஹூம்!

வருண் said...
This comment has been removed by the author.
முகுந்த்; Amma said...

@Varun
Few clarifications I would like to make here. The observations I made and mentioned here are not based on the worker class indians who go there and do their daily wages. But those of engineers, managers or whoever are equal or more than those indian who come and settle down in USA.

YEs, probably the indians settle down here dont understand the real poor people. But there is no such thing like "If any white man comes, people need to make wave to that person". if there is any rule like that...then it is against the constitution of USA.

முகுந்த்; Amma said...

I meant ""If any white man comes, people need to make way to that person".

Not wave.

ஆரூர் பாஸ்கர் said...

முகுந்த் அம்மா , The point is irrespective of your social status. You will be treated differently in middle east. PERIOD.

வருண் said...

முகுந்த் அம்மா: நீங்க மிடில் ஈஸ்ட் பற்றி சொல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. The Arabs are like English "Royal family". The Indians (even educated) go there are some sort of "contract workers". The rights they have are different unlike in US, they are still treated as "poor foreigners" no matter what is their educational status. They dont have good schools, medical facility is not good either. However the "distance" is a big plus for them. If they get sick, they would fly to India I think.

The problem in discussing this topic is that it will look like we are putting them down sitting comfortably in US. There is no way they can defend themselves. Thats what bothering me a lot.

The way they look at this life is , go, make some money and settle in India. Most of them go there leaving their family back home. They know pretty well what they getting into. Still they go there for money. Their family back home could afford to lots of things which is not possible otherwise. I know a case, he went there for 2 years. Now it is about 6-7 years he still lives there. His children are in college. He needed more money to put them in "professional colleges". He can afford that only by living away from family in middle east. Not sure he will ever come back. He visits once or twice a year. His wife wants his children to get good education and so she is getting used to this life. Those days only muslim families and friends used to live this kind of life. Today, not just muslims, everyone likes this life and wants to live this life.

It is all about money and comfort. That's all I can say. They know what they are missing and what they are getting. They are willing to go for it. What can I say to, my friend who wants to live this "slavery life"?? I can say nothing because it is his life. Or not?

வருண் said...

***Baskaran Siva said...

முகுந்த் அம்மா , The point is irrespective of your social status. You will be treated differently in middle east. PERIOD.**

They pretty much know what they are getting into. They still go for it for money and comfort for the family. There is no surprises for them. We are only finding it "odd" and we might say, "I dont want to live a life like this". But we can not say, how they should live their life. Right?

ஆரூர் பாஸ்கர் said...

**வருண் said...***
//But we can not say, how they should live their life. Right?//

Very true.

Completely agree with you. :) [at least on this].

Avargal Unmaigal said...

என் பயண அனுபவத்தில் துபாய் என்பது நமது மும்பை நகரம் கொஞ்சம் சுத்தமாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது. வேறு ஒன்றும் மாற்றம் இல்லை

முகுந்த்; Amma said...

@Varun, @ Baskaran Siva

There is another aspect we all are forgetting. Before the IT boom in early to late 90s, going to foreign means going to middle east countries. Apart from computer science engineers, other engineers like, electrical, mechanical engineers find jobs only there. Thanks to oil industries. Even if they want to come to US and settle down here, there are very few options for them like In Texas or in Canada Calgary side. (Correct me if i am wrong)

And considering the unemployment rate in india and the number of engineering colleges, these were the only options they have or use it.

So, according to me, they don't want to go there by wish, but by necessity and opportunity or family pressure. and as my friends and family suggested, "You have to have different mind set to live there"



Baskar said...

முகுந்த் அம்மா , Yes

I remember reading somewhere that Reliance Ambani (Dhirubhai) was asked to work in Yemen in 1960 by his family.

வருண் said...

***"You have to have different mind set to live there"***

ஒரு சிலர் அமெரிக்காவில் வாழமுடியாமல் தாயகம் திரும்பிப் போய்விட்டு இதையேதான் சொல்கிறார்கள். அதாவது அமெரிக்காவில் வாழ வேறு மாதிரியான "மைண்ட் செட்" வேணுமென்று.

மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்னு நினைக்கிறேன். :)