Thursday, April 9, 2015

இந்தியா ஒரு முரண்பாடுகளின் மூட்டை!

கருத்து கருத்துன்னு எல்லாரும் கருத்து சொல்லிட்டே இருக்காங்க. ஒரு கருத்து சொல்லவேண்டியது,  பின்னாடி அதை எதிர்த்து நூறு பேரு கருத்து சொல்ல வேண்டியது,  ஒரு வாரம் பத்து நாலு முழுக்க டிவி, ரேடியோ, முகநூல், ட்விட்டர் , பதிவுலகம் எல்லாத்திலையும் அதையே பேசி பேசி கொல்ல வேண்டியது..இது ஒரு ட்ரெண்டு மாதிரி ஆகிடுச்சு.
 அதனாலதானோ என்னவோ இந்தியாவை கருத்தரங்கங்களை நேசிக்கும் நாடுன்னு சொல்றாங்க.

அதுவும் கருத்து சொல்ல ஆரம்பிகிறது யாருன்னா பார்த்த, நூறு கோடி இந்திய ஜனத்தொகையில ஒரு பெர்சென்ட் கூட இல்லாத ரொம்ப ரொம்ப பணக்காரங்க , நடிகைகள் அல்லது அரசியல்வாதிகள். போன்ற நிறைய கருத்து கந்த சாமிகள் அல்லது கந்த மாமிகள் இருக்காங்க இதை போல கருத்து சொல்ல.இவங்க மெயின் ஆ எடுக்கிற தலைப்பு என்னான, கந்த சாமிங்களா இருந்தா, ஜாதி, மதம், இல்லாட்டி எதை சாப்பிடனும், எப்படி வாழனும் இல்ல எத்தனை புள்ளைங்க பெத்த்துகனும், பொண்ணுங்க எப்படி இருக்கணும், சமுதாயம் எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு பொது லிஸ்ட் இருக்கும் ......கந்த மாமிங்கன்ன, இருக்கவே இருக்கு கற்பு, பெண்ணுரிமை...இதை வச்சே நாங்க ஒட்டிடிடுவோம்ல. அட போங்கப்பா!.

இதில என்ன ஜோக்குன்னா, இந்த மாதிரி கருத்து சொல்ல வர்றவங்க எல்லாரும் இன்ஸ்டன்ட் க்ராடிபிகேசன் மாதிரி 15 நிமிட புகழுக்கு, நாமலும் நியூஸ்ல வந்தோம்ல அப்படின்னு காட்டிகிறதுக்கு நிறைய செய்யிறாங்க.ஒரு வாரம், பத்து நாலு பின்னால வேற வேலைய பார்க்க போயிருவாங்க நம்ம மக்கள். நம்ம மக்களுக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி. இவங்க சொல்ல வர்ற கருத்து எத்தனை நாளுக்கு நினைப்புல இருக்கும், அதனால என்ன பிரயோஜனம் அப்படின்னு எல்லாம் யாருக்கும் கவலை இல்லை. அட்லீஸ்ட் நீங்க சொல்ல வர்ற கருத்து பெரும்பாலான மக்களின் கருத்து அப்படின்னாலும் சரி, அவன் அவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இங்க உயிரை கொடுத்து உழச்சிகிட்டு இருக்கான். பொண்ணுங்க, ஒழுங்கா வேலை முடிஞ்சு வூடு போய் சேருவமான்னு பயந்துகிட்டு இருக்காங்க, இதுங்க எல்லாம், ஏசி ரூம்ல உக்கார்ந்துட்டு, கால் மேல காலை போட்டுக்கிட்டு இப்படி கருத்து சொல்லுறாங்க. 

இதுல என்ன ஜோக்குன்னா, எப்படி இந்த மாதிரி கருத்து சொல்லுறவங்க சும்மா டைம் பாஸுக்கு செய்யிரன்களோ, அதை விட அதை மறுத்து சொல்லுறவங்க தான் வரிஞ்சு கட்டிட்டு பதில் சொல்லுவாங்க. அதுவும் கந்த மாமிகள் கருத்துன்னா, உடனே, அதை ஆதரித்து வர்ற கருத்துகளை விட, எதிர்த்து கருத்து சொல்லுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பாங்க. எப்படி பெண்ணுரிமை  பத்தி அப்படி கருத்து சொல்லலாம். பெண்ணுரிமைன்னா என்னன்னு தெரியுமா, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், அப்படி இருந்தா தான் பெண்ணுரிமை...அப்படின்னு ஆரம்பிப்பாங்க பாருங்க, அயோ சாமி, இதுக்கு கருத்து கந்த மாமிகளே தேவலை அப்படின்னு தோணும்.

தீபிகா படுகோன் அப்படிங்கிற ஒரு அம்மா, எதோ பெண்ணுரிமை பத்தி ஒரு வீடியோ விளம்பரம்செய்திருந்தாங்களாம் .அதை  பல வட இந்திய சகோதரிகள் தங்கள் வலைத்தளம் மற்றும் முகநூலில் பகிர்ந்திருந்தாங்க. அதுல பாதி பேர் அவங்க செய்தது சரி, அப்படின்னு சொல்ல அதற்கு சண்டை போடா ரெடி ஆ பலர் கமெண்ட் அடிக்க...சரி குழம்பம். 

அதில அந்த அம்மா சொல்லுறது எல்லாம் கிரீமி லேயர் அப்படின்னு சொல்லபடுற பல பெண்களுக்கே பொருந்துமான்னு தெரியல, இதில எங்க பெரும்பாலான பொண்ணுங்களை பத்தி பேசுவது. இன்னும் பெரும்பாலான பொண்ணுங்களுக்கு எவ்வளவு படித்திருந்தாலும் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை கூட தானே தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கொடுக்க படுவதில்லை, கொஞ்ச நாளைக்கு முன்னால, முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது, அதில் பொது இடம் என்றும் பார்க்காமல் ஒரு அப்பா தன் படித்த, வேலை பார்க்கும் மகளை அடித்து கொண்டிருந்தார், சுற்றி நின்று பலரும் வேடிக்கை பர்ர்த்து கொண்டிருந்தார்கள். அந்த பெண் யாரையோ விரும்பி இருக்கிறாள், அதனை பிடிக்காத அப்பா எப்படி நாடு ரோடில் வைத்து அடித்து இருக்கிறார்.  இது தான் நாட்டுல இருக்கிற பெரும்பாலான பொண்ணுங்களோட நிலைமை. 

ஆனா,அந்தம்மா சொல்லுறது போல இல்லவே இல்லை அப்படின்னும் நான் சொல்ல மாட்டேன். அப்படி சொன்னேன்னா நான் ஒரு utopia வாழ்க்கை வாழுறன் அப்படின்னு அர்த்தம். நிறைய மெட்ரோ சிட்டில இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லைன்னு யாரும் மறுக்க முடியாது. ஆனா, அவங்க 0.0005% பொண்ணுங்க தான், அவங்களை வச்சி எல்லாரும் இப்படி தான் அப்படின்னு பொதுபடுத்த முடியாது. 

முதல்ல பொண்ணுங்களுக்கு மனசில இருக்கிறதை பேசுறதுக்கு, தன்னோட கருத்தை தைரியமா தெரிவிக்கிரதுக்கு, முடிவெடுக்கிறதுக்கு, சுதந்திரம் கொடுங்க..அதுவே பெண்ணுரிமைக்கு முதல் படி.  அதை விட்டுட்டு அந்த அம்மா சொன்னது தப்பு, பொண்ணுங்க இப்படி தான் இருக்கணும் அப்படி இருக்க கூடாது அப்படின்னு அட்வைஸ் பண்ணாதீங்க. எப்படி உங்களுக்கு இது தப்புன்னு சொல்ல சுதந்திரம் இருக்கோ அதே போல அந்த அம்மாவுக்கு கரெக்ட்ன்னு தோணுறதை அவங்க சொல்லுறாங்க. பேச்சு சுதந்திரம் முதல்ல கொடுங்க. 

நன்றி

4 comments:

வேகநரி said...

இந்தியாவை கருத்தரங்கங்களை நேசிக்கும் நாடுன்னு சொல்றாங்க.

:) கரத்தரங்கிற்கு போக முடியாம போனவங்க அங்கே பேசபட்டதை ரெக்காட் பண்ணி கேட்பதை பார்த்திருக்கேன்.
//பொண்ணுங்க எப்படி இருக்கணும் சமுதாயம் எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு பொது லிஸ்ட் இருக்கும் ......கந்த மாமிங்கன்ன, இருக்கவே இருக்கு கற்பு பெண்ணுரிமை//
தாலியை தவறவிட்டுவிட்டீர்கள்.

Baskar said...

//, அதில் பொது இடம் என்றும் பார்க்காமல் ஒரு அப்பா தன் படித்த, வேலை பார்க்கும் மகளை அடித்து கொண்டிருந்தார்,//


In the same country, 20 labors are shot and killed for illegal tree cutting.

தனிமரம் said...

சிந்திக்க வேண்டிய நிலையிது. அருமையான அலசல்

? said...

//நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும்
//

இதையெல்லாம் சொன்னவர் பெரியார். தீபிகா படுகோனின் வீடியோவில் வரும் சில கருத்துக்களின் அடிநாதமும் இதுதான். என்ன கருத்து என்பது முக்கியமல்லவாம். யார் சொல்லுகிறார் என்பதும் முக்கியமாம். பெரியாரை பிடிக்கும் என்று கூறிக்கொள்ளும் ஒரு மூத்த (வயதான)கம் பிரபல பதிவர் தீபிகாவை சமுதாய கேடு என்பது போல எழுதியிருக்கிறார். அதே கருத்துப்படி பெரியார் மட்டும் எப்படி சமுதாய கேடு ஆகாமல் அவருக்கு பிடித்தவராக ஆனார்? பெரியார் சொன்னதை படிப்பது கிடையாது, பெரியார் பெயரை சொன்னால் "புத்திசாலி - புரட்சிவாதி" எனும் பட்டம் கிடைக்கும் அது மட்டும் வேண்டுமாம். இப்படித்தான் பல ஹிப்போகிராட்டுகள் இந்தியாவில் அலையுதுகள். இவர்களிடையே பணம் & பிரபலமான ஒரு நடிகைகளே நினைத்தை சொல்ல முடியல, இதுல சாதாரண பெண்கள் எங்கே வாயை திறப்பது?

கடைசியாக //தீபிகா படுகோன் அப்படிங்கிற ஒரு அம்மா// என்று அழகாக திபிகாவை அதற்குள்ளாக அம்மா ஆக்கியதற்கு கண்டனங்கள்!!! :))