MH 370 என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்த விமான விபத்து.நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்று என்ன வைத்த விபத்து. தற்போது எல்லார் கையிலும் GPS வாட்ச், GPS போன்,எங்கே இருக்கிறோம், என்றெல்லாம் சுலபமாக அறிந்து கொள்ள முடிந்த/முடிகிற இந்த காலத்தில் MH 370 விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போயிற்று.
கிட்ட தட்ட ஒன்றரை வருடங்களாக விமானம் என்ன ஆனது, எப்படி ஆனது என்று எதுவும் தெரியாமல் குழம்பி குழம்பி புது புது தியரிகளாக ஒவ்வொரு நாளாக வந்து கொண்டு இருந்தது. விமானியிடம் இருந்து எந்த செய்திகளோ , மே டே கால் எனப்படும் இறுதி எமெர்ஜென்சி செய்திகளோ இல்லாமல் மாயமாய் மறைந்து போய் , 15 மாதங்கள் மற்றும் பல மில்லியன்கள் தேடும் செலவு கடந்த நிலையில், இன்னும் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. இது ஒரு ஏவியேஷன் மிஸ்டரி ஆகி விட்டது.
இந்த விமான பாகங்கள் ரியூனியன் தீவில் கடந்த வாரம் கரை ஒதுங்க, தற்போது இந்திய பெருங்கடலில் இந்த விமானம் விழுந்து உடைந்திருக்கலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். எப்படி மலேசியாவில் இருந்து கிளம்பி பெய்ஜிங் செல்ல வடக்கு நோக்கி கிளம்பிய இந்த விமானம் திரும்பி நேர்மாறான திசையில் தெற்கு நோக்கி பயணித்து, யார் கண்ணிலும் படாமல் பல நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பி அல்லது கண்ணில் மண்ணை தூவி விட்டு, இந்திய பெருங்கடலில் விழுந்து உடையும்? என்றெல்லாம் பல கேள்விகள் நம்மிடையே. என்ன நடந்தது, நடந்திருக்கலாம். இது விமானியின் தற்கொலை முயற்சியா? என்றெல்லாம் பல பல தியரிகள்.
எப்படி இது சாத்தியமானது, எந்த விசயத்தில் விமானத்தை நாம் தொலைத்தோம். இது எப்படியெல்லாம் ஒரு விமானம் தொலைக்கபடலாம், என்ற ஒரு விஷயத்தை நமக்கு சொல்லி கொடுகிறது. என்ன தான் அட்வான்ஸ் GPS, ராடார் போன்றவை இருந்தாலும் எந்த ராடாரும் பரந்து விரிந்த சமுத்திரத்தின் மீது வேலை செய்யாது. அதனால் விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் விமானத்தில் இருந்து வரும் செய்திகளான தற்போதைய பொசிசன் மற்றும் வேகம் அவற்றை கொண்டே எங்கே விமானம் இருக்கிறது என்று கணிக்கிறார்கள். விமானத்தில் இத்தகைய செய்திகளை அனுப்பவே ஆட்டோமாடிக் பிங்கர் எனப்படும் செய்தி அனுப்பும் சிஸ்டம் ஒன்று இருக்கிறது. அதுவும் MH 370 கேசில் செய்தி அனுப்ப வில்லை. அது அனைத்து வைக்க பட்டதா? அல்லது எதோ எமேர்ஜென்சியினால் அணைந்து விட்டதா என்று இன்னும் அறியப்படவில்லை. என்ன காரணமோ அந்த காரணம் தெரியவில்லை ஆனால் மிக வேகமாக தெற்கு சீனா கடல் மீது விமானம் இருக்கும் பொது நடந்து இருக்கிறது.
ஆனால், MH 370 விமானம் ACARS எனப்படும் சாட்டிலைட் உடன் தொடர்ப்பு கொள்ளும் கம்ப்யூட்டர் உடன் இணைக்க பட்டு இருந்தது மட்டுமே ஒரே க்ளு. அது கடைசியாக தெரிந்தது தெற்கு இந்திய பெருங்கடலில் இருந்து செய்தி அனுப்பி இருக்கிறது. தெற்கு சீனா கடலில் இருந்து யூ டர்ன் அடித்து திரும்பி யார் கண்ணிலும் படமால் அல்லது கண்காணிக்கும் எல்லைக்குள் வெளியே அல்லது மேலே பறந்து இந்த விமானம் தெற்கு நோக்கி ஆட்டோ பைலடில் பெட்ரோல் தீரும் வரை பயணித்து இருக்கிறது. பின்னர் பெட்ரோல் தீர்ந்தவுடன் கீழே விழுந்து உடைந்து இருக்கிறது என்று நம்ப படுகிறது.
ஆட்டோமாடிக் பிங்கர் செயலிழக்கப்பட்டது, செய்தி அனுப்பாதது, கண்காணிப்பில் இருந்து தப்பிக்க தொடர்பு எல்லைக்கு வெளியே பயணித்தது இவை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் , விமானி தற்கொலை முயற்சி செய்து இருக்கலாம் என்று எண்ண பட்டாலும், திடீர் தீயும் அதனை தவிர்க்க விமானிகள் மேற்கொண்ட முயற்சிகளும் இத்தகைய நிலையை உருவாக்கி இருக்கலாம் என்ற சாத்தியமும் இருப்பதால், உண்மையில் என்ன நடந்தது என்று விமானம் கண்டு பிடிக்க படும் வரை, அல்லது கருப்பு பெட்டி எனப்படும் flight recorder கிடைக்கும் வரை இந்த விமானம் மாயமானது ஒரு aviation mystery மட்டுமே. இந்த விமானம் தொலைந்தது மூலம், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் விமானத்தை தொலைக்கலாம் என்று நிரூபிக்க பட்டு இருக்கிறது.
டிஸ்கி
இது, MH 370 விமானம் தொலைந்ததில் இருந்து நான் வாசித்த செய்திகள் வைத்து எழுதியது. தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும்.
நன்றி.

3 comments:
MH370 பற்றிய என் கவிதை உங்கள் பார்வைக்கு
-------
ஆகாய பறவைகள் நாங்கள்
சத்தமின்றி கூட்டமாய் பறக்க
அலுமினிய பறவையொன்று
சத்தமின்றி தொலைந்த கதை இது
பொம்மை தொலைத்த குழந்தை போல
நடுநிசியில் விமானம் தொலைத்து..
இருட்டில்
கண்மூடி உண்மை தேடும் உலகம்
பகலில்
கண்விழித்து தேடுகிறது
அன்று
பறவையின் உடலுக்குள் ஒரு உயிர்
பல்லாயிரம் மைல் தாண்டி..
- பாட்டி கதை
இன்று
உலோக பறவையின் உடலுக்குள்
பல நூறு உயிர்கள்
- உண்மை கதை
நேற்று
விண்ணையும், மண்ணையும்
அளந்தீர்
சந்திரனும்,செவ்வாயும்
சொந்தமென இறுமாந்திருந்தீர்
இன்று
பறவை தேடும் வேடனாய்
எத்திக்கும் தேடி...
உங்கள்
கற்பனை மட்டும்
பறவை போல சிறகுவிரித்து..
"பயங்கரவாதிகளின் பாதகச் செயல்"
"விண் விழுங்கியது"
"பிணைக் கைதிகளாய் பிடிபட்டார்"
என்று பலர்
"அயல் கிரகங்களின்
அரசியல்" என்றானொருவன்
"இரண்டாம் உலகம் சென்றது"
என்றான் இன்னொருவன்
"கடலுக்குள் குடித்தனம்"
கடைசியாய் ஒருவன்
மரத்தடியில் சிறுபறவையின்
ஒருநிமிட பிரார்த்தனை
உங்களுக்காக..
--ஆரூர் பாஸ்கர்
Wow.. Amazing and touching poem.. Great
நன்றி முகுந்த் அம்மா.
Post a Comment