Sunday, December 13, 2015

எவடே சுப்ரமணியமும் தமிழ் அறிவு ஜீவி பாடக கவிஞர்களும் !

நிறைய நேரங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முயலும் போது நமக்கு எதுவும் புரிவதில்லை. அதே சமயம் சும்மா விளையாட்டாக ஏதாவது ஒரு காரியம் செய்யலாம் என்று செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தில் ஒரு சில விஷயங்கள் அறையும், அது வாழ்கையின் சில விசயங்களை நமக்கு உணர்த்தி செல்லும்.



வாரம் முழுக்க என்னுடைய IT அறிவையும், புள்ளியியல் அறிவையும் உயிரியியல் அறிவையும் புரட்டி பார்த்து கொண்டு ரெப்ரெஷ் செய்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு மாற்றத்திற்காக எதோ ஒன்றை பார்க்கலாம் என்று கணினியில் ஒரு பாட்டு ஆன் செய்தேன், அது ஒரு தெலுகு பாட்டு. கேட்கும் போதே, அட இது கேட்ட பாட்டு மாதிரி இருக்கே என்று ஒரே ஆர்வம் அட நம்ம அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" பாட்டு.

அருமையான அந்த பாட்டின் மெட்டை அப்படியே  தெலுங்கில் கேட்க அமேசிங்..என்ன படம் இது , என்று ஒரு ஆர்வத்தில் கிளிக் செய்தேன். "எவடே சுப்ரமண்யம்"( யாரு சுப்ரமண்யம்?) என்ற தெலுங்கு படம்.  எல்லா தெலுங்கு படங்களும் பாலையா வகையறாக்கள்..கலர் கலர் உடைகள்..பொருந்தாத காட்சிகள் இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரே ஆச்சிர்யம்...என்ன ஒரு படம் இது!!

எது வாழ்க்கை, இதுவே படத்தின் கதை..அதனை கண்டுபிடிக்கும் ஒரு இளைஞனின் கதை இது...IIM இல் MBA முடித்து பணம், புகழ் சம்பாதிப்பதே வாழ்கை என்று அதன் பின்னே போகும் ஒருவன், எதிர்பாராமல் ஏற்கும் ஒரு இமாலயா நோக்கிய ஒரு பயணம் தான் கதை. ஒரு சீன் கூட போர் அடிக்காமல், கண்ணை திருப்பாமல்..என்னை கட்டி போட்ட படம். நான் ஈ படத்தில் நடித்த நானி கதாநாயகன். என்ன ஒரு நடிப்பு. இரண்டாம் பாதி முழுதும் இமாலயா அழகு.  ஒவ்வொரு நிலையிலும் நானியின் மனமாற்றம் எதோ எனக்கே மனமாற்றம் அடைந்தது போல இருந்தது.அப்படி படத்தை வாழ்க்கையோடு ஒன்ற வைத்து விட்டது.

மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை எனப்படும் இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைந்து திருந்து, பணத்திற்காக புகழுக்காக எதையும்  செய்யும் செய்ய நினைக்கும் ஒருவனின் வளர்சிதை மாற்றம் அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாக் அஷ்வின் எனப்படும் ஒரு இளைஞர் அழகாக எடுத்த வாழ்கையை பற்றிய அர்த்தமுள்ள படம் இது. அதில் நடித்த அனைவரும் இளைஞர்கள் அற்புதமான நடிப்பு. ஒரு துளி ஆபாசம் இல்லதா காட்சிகள்..பாடல்கள்..அழகான இசை..என்று எதோ புத்துணர்ச்சி ஏற்பட்டது போல இரு உணர்ச்சி எனக்கு..

ஆர்பாட்டத்திற்கு பேர் போன தெலுகு சினிமாவில் இளைஞர்கள் இப்படி அருமையான வாழ்கை படங்கள் கொடுத்து கொண்டு இருக்க..தமிழ் சினிமாவில் உள்ள  தன்னை தானே அறிவாளி என்று பறைசாற்றி கொண்டு இருக்கும் சில இளைஞர்கள் கீழ்த்தரமான பாடல்களை கொடுத்து அதனை ட்ரேன்டு என்பது எங்கே செல்லுகிறோம் என்று நம்மை கேட்க வைத்து விடுகிறது.

என்னவோ போங்கப்பா!!

4 comments:

ஆர்வா said...

செம படம்..
நானும் இந்தப் படத்தைப்பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..

நட்புடன் ஆர்க்கர்

வேகநரி said...

பிரயாணங்களின் போது இரண்டு தமிழ்படங்களோடு தெலுங்கு படங்களும் இருக்கிறதல்லவா, நான் அந்த பக்கமே போவதில்லை. இனிமேல் தெலுங்கு படங்களையும் தட்டி பார்க்கலாம்.

//தமிழ் சினிமாவில் உள்ள தன்னை தானே அறிவாளி என்று பறைசாற்றி கொண்டு இருக்கும் சில இளைஞர்கள் கீழ்த்தரமான பாடல்களை...//
இதில் ஒருவர் தானுங்க ஆங்கிலபாடல் இசையை அப்படியே காப்பியடித்து ஆத்தியென்னை நீ என்று தமிழ் பாடல் போட நானும் நல்லா இசைஅமைச்சிருக்கரே என்று கேட்டு திரிந்தது :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் சொல்வதால் இப்படத்தைப் பார்க்கிறேன். சங்கராபரணம் தவிர தெலுகு படங்கள் பார்த்ததில்லை. பொறுமையில்லை.
இந்த லூசுப் பயல்கள் அவங்களே அவங்களை அறிவாளி என்றால், நாம் நம்புவதா?
அந்த தனுசுப் பயலும் கவிசராமே!தனக்கு கவிசை பொங்குதாம், அவுங்களே! நம்ம கெக்கே பிக்கே என பேசும் தொல்லைக்காட்சிப் பொம்மைகளிடம் சொல்லி மகிழ்கிறாங்க! காலக் கொடுமை! - கல்லிஜர் - இருந்தால் கலைமாமணி ஒன்ணு பார்சல் பண்ணிவிடுவார். இவ பொண்டாட்டிக்கு தாரை வார்த்தது போல். "தெருத் தேங்காய் வழிப் பிள்ளையார்" - கொடுமை!

Mahesh said...

madam,
September ninaikkuren oru telugu channel la padathai naduvil irunthu paarka aarampithen
paathi padathil paarka aarampithirunthaalum padam mikavum pidithirunthathu.
December maathathil ungalin vimarsanam padithathum santhosham 'nama kondadida oru padathai tamil blogger kondaduvathal'

samipathil padathai download seythu muzuvathum paarthu mudichen. 2015 la sirantha telugu pattyalim intham padam enathu pattiyalil undu.

athe pol neram irukkumpothu
Bhale Bhale Magadivoy paarungal madam.
sirippirkku panjam kidaiyaathu.