Sunday, December 27, 2015

மர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புகள்!

நிறைய நாட்களாகவே இதனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சென்சிடிவ்  விஷயம், சரியாக எடுத்து கொள்ள படுமா இல்லையா என்ற குழப்பத்தில் எதுக்கு வம்பு என்று விட்டு விட்டேன். ஆனால் தற்செயலாக மேடம் துச்சாத் ம்யூசியதத்தில் மர்லின் மன்றோ மெழுகு சிலை பார்க்க நேர்ந்தது. அவரின் கடைசி கால வாழ்க்கை பற்றி கொஞ்சம் வாசித்து இருந்ததால் மறுபடியும் எழுத நினைத்த்ததை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உண்டானது இது. மற்றபடி யாரையும் குறிப்பிடவில்லை இங்கு.

மர்லின் மன்றோ, அழகு பதுமை, செக்ஸ் சிம்பல் என்று பல பல பெயர்கள்.. தனது 36 வயதில் இறந்து விட்டார், அது கொலை இல்லை தற்கொலை இல்லை மாத்திரை மாற்றி போட்டதால் நடந்த விபத்து... என்று எண்ணற்ற கதைகள் கிளைகதைகள்..இவர் தான் குற்றவாளி அவர் தான் குற்றவாளி என்று நிறைய தியரிகள்.இப்படி நிறைய. நான் வாசித்தவரை தொடர்ந்து ஏற்பட்ட மணமுறிவு மற்றும் காதல் தோல்வி மற்றும் வயதானதால் பட வாய்ப்பு குறைந்தது என்று பலவும் அவரின் சாவுக்கு காரணம். இதையெல்லாம் விட எங்கே மறுபடியும் தனிமை ஆகி விடுவோமோ நமகென்று யாரும் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு எண்ணமுமே தான் ஓவர்டோஸ் மருந்து எடுத்து கொண்டதற்கும் பைத்தியம் போலே நடந்து கொண்டதற்கும் காரணம்..

காதல் அதுவும் 30 வயதிற்கு மேலே வரும் காதல், அதுவும் ப்ரெசிடெண்ட் உடன் வந்த காதல் அதன் பின் விளைவுகள்.என்று அடுக்கடுக்கான பிரச்சனைகள் மர்லின் மன்றோவுக்கு.

சொல்ல போனால் நிறைய 30-40 வயதில் இருக்கும் நிறைய பெண்கள் பலருக்கும் இது போன்ற ஒன்று வர ஆரம்பிக்கும். அது பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் சரி இல்லை சாதாரண பெண் ஆக இருந்தாலும் சரி.  30 வயதை கடந்த பின்பு ஒரு தனிமை, ஹார்மோன் பிரச்சனைகள் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமாக நாம் முக்கியமானவர்களாக கருதும் சிலர் நம்மை துச்சமாக மதிப்பதாக ஏற்படும் ஒரு எண்ணமும் இதற்க்கு காரணம். மர்லின் மன்றா விசயத்தில் மட்டும் அல்ல, சாதாரண குடும்ப வாழ்க்கையிலும் எப்பொழுது தன்னுடைய கணவர் அல்லது குடும்பத்தார் நம்மை கொடுமை படுத்துகிறார் அல்லது மதிக்காமல் நடக்கிறார் எனில் ஒரு தனிமை வர ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் வெளி உலக தொடர்பு என்று மெதுவாக ஆரம்பிப்பார்கள். இல்லை தன்னுடைய இளமை கால நண்பர்கள் பக்கத்து வீட்டு எதிர் ஆட்கள் என மெதுவாக ஆரம்பிக்கும் நட்பு. இதில் நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது நல்லவர்கள் போல நடிக்கும் வல்லூறுகளை பற்றியது. இது ஒரு மிடில் லைப் கிரிசிஸ்.

மெதுவாக இப்படி தனிமையில் அல்லது கஷ்டத்தில் இருக்கும் பெண்கள்டம் நட்பாக பேச ஆரம்பிப்பார்கள். அந்த பெண்ணை தனது வசம் இழுக்க என்ன என்ன வித்தைகள் உண்டோ எல்லாமும் செய்வார்கள். இவர்களின் பேச்சில் மயங்கி தனது வாழ்க்கைக்கு இவர் தான் சரியான துணை என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் பலரை பற்றி கேள்வி பட்டதுண்டு. அதுவும் பெரிய வளர்ந்த பிள்ளைகளை எல்லாம் விட்டு வந்தவர்களும் உண்டு.

ஆரம்பிக்கும் போது அருமையாக இருக்கும் இந்த வாழ்க்கை ஒரு சில மாதங்களில் கசக்கும் எல்லாம் மோகம் தீர்ந்த பின்பு நடக்கும் ஒரு வேலை. பின்னர் எந்த நரகத்தில் இருந்து தப்பித்தோம் என்று பெண் நினைத்தாளோ அதனை விட கொடிய நரகத்தில் விழுந்து இருப்பாள்.
சொல்ல போனால் இப்பொழுது நேற்று நடப்பது அல்ல இது போன்ற ஒன்று. சுமார் 60
வருடங்களுக்கு முன்பு என் பாட்டி வீட்டில் குடியிருந்த ஒரு அழகான அம்மா இப்படி தன் கணவனை விட்டு ஒரு கூலி  வேலை செய்யும் ஒருவனுடன் ஓடி வந்து அவனோ சபலம் தீர்ந்த பிறகு "என்னோட ஓடி வந்தவ வேற எவன் கூடவாவது போவடி, என்று சொல்லி தினமும் அடிப்பான்" என்று என் அம்மா சில கதைகள் சொன்னதுண்டு.

அதே போல நிறைய கதைகள் கேள்வி பட்டதுண்டு.. எல்லாவற்றின் அடி நாதம் இது தான் தனிமை பெண்களுக்கு வேண்டிய ஒரு செக்யூரிட்டி பீலிங் இதனை பயன்படுத்தி அவளை வஞ்சித்த ஒரு ஆணின் கதை. இந்தயாவில் 99% சதவீதம் இப்படி திருமணதிற்கு வெளியே தொடர்புகள் பிரச்னையில் கொலையில் தற்கொலையில் முடிந்து இருக்கின்றன. அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளிலாவது  தொடர்புகள் மறுமணத்தில் முடியலாம் ஆனால் இந்தியாவில் இது மிக மிக குறைந்த சதவீதம் மட்டுமே. அதுவும் பெண்ணின் பொருளாதார நிலையை பொறுத்தது. பெண்ணிடம் பணம் இருப்பின் அல்லது நல்ல வேலை இருப்பின் ஒரு வேலை இது மாறலாமே தவிர எல்லா நேரங்களிலும் இது போன்ற தொடர்புகள் ஒரு மாயை மட்டுமே.

நான் இதனை பற்றி எழுதியவுடன் சிலர் ஏமாத்துற பொம்பளைங்களே இல்லையா? என்று கேட்பதுண்டு. இருக்கலாம்.. இருக்கிறார்கள் ஆனால் இந்தியன் செட்டிங் இல் இதனை போன்று இருப்பவர்கள் அதிகம் இருபத்தில்லை

கடந்த சில மாதங்களில் மட்டும் எனக்கு தெரிந்த பெரிய வளர்ந்த குழந்தைகள் கொண்ட மூன்று பெண்கள் வீட்டை விட்டு வந்து இருகிறார்கள். அதுவும் இந்தியாவில் இருந்து வெளி நாட்டுக்கு யாரோ ஒருவரின் பேச்சை. நம்பி வந்தவர்களும் அடங்குவர். எது அவர்களை இப்படி ஆகியது, தற்போது அவர்களின் நிலை என்ன? என்றெல்லாம் யோசித்தால் பாவமாக இருக்கிறது. தேவையா இந்த நிலை, சொந்தமாக சூனியம் வைத்து கொண்ட நிலை இது.  ஒரு குழியில் இருந்து தப்பிப்பதாக நினைத்து புதை குழியுள் விழுந்த நிலை.

பெண்களே, உங்களுக்கு ஒரு சிறு அறிவுரை, திருமணதிற்கு வெளியே தொடர்புகள் எப்பொழுதும் பிரச்சனையில் மட்டுமே முடியும். அவை ஒரு மாயை மட்டுமே.. பருவ இனகவர்சிக்கு ஒப்பானவை அவை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. கொஞ்சம் முற்றி விட்டாலும் உங்கள் வாழ்க்கை குடும்பம் அனைத்தையும் இது சிதைத்து விடும். யாரையும் நம்பாத்தீர்கள் அதுவும் இணைய நட்புகள் வேண்டவே வேண்டாம். உங்களுக்கு குடும்பத்த்தில் பிரச்னை எனில் வெளி ஆள் யாரிடம் பகிர வேண்டாம் . யாரும் மகாத்மா அல்ல. உங்கள் அம்மா, அப்பா அல்லது குடும்பத்தினர் நெருங்கிய தோழிகள் இவர்களை தவிர யாரிடமும் பகிராதீர்கள். வட்டமிடும் வல்லூறுகள் அதிகம் சுற்றும் உலகம் இது.

டிஸ்கி
இது என்னுடைய் அனுபவத்தில் சந்தித்த மனிதர்களை வைத்து எழுதியது மட்டுமே.  யாரையும் குறிப்பிட்டு எழுதியதல்ல.

நன்றி









5 comments:

ராஜ நடராஜன் said...

நல்லாயிருக்குதே கதை! பெண்கள் ஏன் சந்தேக பிராணிகளாகவே இருக்கிறீர்கள். ஒரு பெண் என்னடான்னா குழந்தைகளை ஆண்களிடம் அண்ட விடாதீர்கள் என்கிறார். இப்ப நீங்க!

எல்லா பெண்களிடமுமா காமம் வந்து விடுகிறது? சில4 பரிதாபம்,சிலர் சகோதரத்துவம்.சிலர் காமம்.முந்தைய தலைமுறை இடைவெளியை இன்றைய தலைமுறை நட்பு என்ற வட்டத்திலேயே தமது பதின்ம வயதை துவங்குகிறது. எனவே வயதானாலும் மெச்சூரிட்டி இருக்குமென நம்புகிறேன்.

தானும் தன்னை சுற்றியிருப்பவர்களை சார்ந்தே சமூகம் இருக்கிறது.விதி விலக்குகள் சமூகம் ஆகி விடுவதில்லை. தமிழ் மக்கள் இன்னும் கன்சர்வேடிவ் வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.

ஆரூர் பாஸ்கர் said...

கொஞ்சம் ஆழமாக அலசி இருக்கிருக்கீங்க..

//கிள்ளி எரிய வேண்டிய ஒன்று// இத கொஞ்சம் சரி பண்ணுங்க..
கிள்ளி எறிய வேண்டிய ஒன்று

நன்றி

Deiva said...

I am regular reader of your blog and admire your neutrality always. But I believe this one is written from Women's angle only. Some of the comments/observations you made are right. But Men's don't always attract older women. I know cases where women abandoned kids for their materialistic objectives. Men/Single Dads take care of the children without any help in US. This is happening in Indian society in US. In one of the cases , this women was supported by other indian women who stood by her even after she abandoned the child. They were blaming the men even though mother abandoned child. Men don't go and cry outside or tell their stories openly compared to women. In our society, men shouldn't cry. That is why Men's sufferings don't come in open. I would appreciate if you take Men's pain and sufferings also into account when you discuss these type of subjects.

ப.கந்தசாமி said...

இந்தக் கருத்துகளை பெண் என்ற முறையில் நீங்கள் எழுதி இருப்பதால் "ஆணாதிக்க புத்தி" என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்தீர்கள். நான் இரண்டு வருடங்களுக்கு முன் போட்ட ஒரு பதிவை முடிந்தால் பார்க்கவும்.
http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_15.html

உங்கள் பதிவில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் உண்மை. இந்தியாவில் இந்த மாதிரி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இது எதனால் நடக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நான் ஆழமாக ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்த மாதிரி நிகழ்வுகளில் ஆண், பெண் இருவரில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் பெண்தான் அதிகம் பாதிக்கப்படுகிறாள். என்னதான் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று பேசினாலும் ஒரு பெண் தனியாக, அதுவும் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என்பது இந்தியாவில், ஏன் அமெரிக்காவில் கூட கஷ்டம்தான்.இதை ஒப்புக்கொள்ள ஏன் பெண்கள் மறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

காதல் செய்து தோல்வியுற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்தானே ஒழிய ஆணுக்கு ஒன்றுமேயில்லை. சிறு பெண் குழந்தைகளைக் கூட உறவினர்கள் இடம் பழக விடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை விட்டு விட்டு வேதாந்தம் மட்டும் பேசுவது முட்டாள்தனமாகும்.

Bibiliobibuli said...

Poignant, the tabloid version of a social issue.

Looking at the author's profile, I expected a scientific version of the issue. I am disappointed.

In the future, I expect a research based article on this issue.

It's sad that Tamil Community lacks the philosophical perspective of human ties.