Sunday, March 28, 2010

பெயரில் என்ன இருக்கிறது

"ஏம்மா இப்படி ஒரு பெரிய பேரை எனக்கு வச்சிங்க" என்று அம்மாவிடம் நான் சிறு குழந்தையாய் இருக்கும் போது அடிக்கடி கேட்டதுண்டு.

"நீ நல்ல படியா பொறக்கனுன்னு நான் சாமிகிட்ட வேண்டிட்டனா, அதனால தான் சாமி பேரை உனக்கு வச்சேன்" என்று என் அம்மா சமாதானம் சொல்வார்கள்.

எனக்குன்னு வீட்டில செல்ல பேரு இருந்ததால இது ஒரு பெரிய விஷயமா சின்ன வயதில் எனக்கு தெரியல.

அப்புறம் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் என்பதால் இளநிலை முடிக்கும் வரை என் பெயர் ஒரு பெரிய பிரச்சனை ஆனதில்லை.

பிறகு முதுநிலை படிப்புக்கு இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தபோது என் கூட படித்த பையன்கள் எல்லாம்

"வாங்க அம்மா மாதாஜி" என்பார்கள்.

இந்தியாவிற்குள் இருந்த வரை என் பெயர் அவ்வளவு கஷ்டப்படுத்தவில்லை.

ஆனால் என் மேல் படிப்புக்காக நான் வெளிநாடு செல்ல நேர்ந்த போது என் பெயரையும் என் அப்பாவின் பெயரையும் இவர்கள் செய்த கொலை இருக்கிறதே! அது சொல்லி மாளாது.

என் பாஸ் ஒரு ஜெர்மன், அவர்கள் பாஷையில் j வை யா என்று உச்சரிப்பார்கள். நான் அங்கு சென்றவுடன் நான் சொன்னது இது தான்.

"Please dont try to pronounce my name, please call me using my pet name" என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதனையும் அவர் ரயி என்று தான் கூறுவார். பிறகு அதுவே என் பேராகி போனது.

என் அப்பாவின் பெயர் இன்னும் படாதபாடு பட்டது, Balasubramaniyan என்ற என் அப்பாவின் பெயர் Balpsapbramanijan என்று ஆனது. அதனையே என் student card லயும் print செய்து கொடுத்து விட்டார்கள். ஒரு semester முழுவதும் நான் அந்த பெயருடனே student கார்டு வைத்துகொண்டு இருந்தேன்.

இன்று வரை என் கணவர் என் அப்பாவின் இந்த பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்வதுண்டு.

நான் படித்து முடித்து விட்டு வரும் வரை என் boss ஆல் என் பெயரை ஒரு முறை கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனக்கு பட்டம் அளிக்கும் போது அவர்கள் வழக்கப்படி என் பாஸ் என்னை பற்றி சில வார்த்தைகள் கூறி எனக்கு toast செய்ய வேண்டும். அப்பொழுதும் என் boss என் முழுப்பெயரை சொல்ல திணறியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது.

பிறகு அமெரிக்கா வந்த பிறகு இன்னும் விடாது கருப்பு போல துரத்தியது என் பெயர் பிரச்சனை. Driving license ஆபீஸ் சென்ற போது என் பெயரில் உள்ள எழுத்துக்களை கூட்டி பார்த்து விட்டு அங்கு இருந்த அம்மா எப்படி சொன்னார்கள்.

"35 letters in a name, Wow, You have almost all alphabets in your name" என்று.

கார்த்திகேயன் என்ற என் கணவரின் பெயர், Karth ஆகி பின் Kaath ஆகி பின் முடிவாக Scott ஆகி விட்டது.

சஞ்சீவ் sam ஆகிவிட்டது.

எழிலன் Ezi ஆகி போனது.

தமிழரசி என்ற அருமையான பெயர் Tami ஆகி விட்டது.

கண்ணன் Cannon ஆகி விட்டது.

கவின் Kevin ஆகி விட்டது.

ரங்கநாதன் Randy ஆகி விட்டது.

பெயரில் என்ன இருக்கிறது என்று முதலில் நினைத்தாலும், இங்கு வந்த பிறகு தங்கள் பெயரை எல்லாம் சுருக்கி வைத்து கொண்ட சிலரை போல நானும் பேசாமல் பெயரை மாற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

28 comments:

இராகவன் நைஜிரியா said...

எப்ப என் பையன் பெயர் அரவிந்த் சக்ரபாணி... என் பெயர் கூட சேர்த்தால் அரவிந்த் சக்ரபாணி சீனிவாச ராகவன்.. (Aravind Chakkrabani Srinivasa Raghavan)

என்னாகும்...

இராகவன் நைஜிரியா said...

இந்தியாவில் ஆங்கிலச் தொலைக்காட்சி செய்திகளில், திருநாவுக்கரசு, நெடுஞ்செழியன் இவர்கள் பெயரை சரியாக உச்சசரித்ததாகச் சரித்திரம், பூகோளம், அறிவியல் எதுவுமே கிடையாதுங்க.

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... இதெல்லாம் சகஜமப்பா, இதுக்காக நமக்கு இருக்கிற பெயரை மாத்திக்க முடியுமா? Nick name என்ன வைச்சிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சிக்/கொஞ்சி கேட்டாய்ங்க முடியவே முடியாதுன்னுட்டேன். ஆனா, ஒரு கண்டிஷன் போட்டேன் அப்போ என்னய விட உனக்கு அறிவு குறைச்சல்னு ஒத்துக்கிறேன்னு சொன்னா நான் ஜான், பீட்டர், ஜோ ஆகிக்கிறேன், ஆனா உன் பெயரை எப்படி நான் முயற்சிப் பண்ணிச் சொல்லுறேன் ஏன் உன்னால முடியாது அப்படின்னு உசிப்பேத்தினா, ரோசம் வந்து ... :)

என்னோட பேர் எப்படி சிக்கி சின்னாபின்னமாகிறது பாருங்க... anomaly ; provokar, probhokaar என்ன செய்ய - பஞ்சம் பொழைக்க வந்த இடத்தில இதெல்லாம் பார்த்தா கதை நடக்குமா :)

ப.கந்தசாமி said...

ரொம்பக்கஷ்டம்தானுங்க.

பத்மா said...

கடைசி வரைஉங்க பேர் என்ன அதே சொல்லவே இல்லையே .ஈமெயில் பண்ணுங்க ப்ளீஸ் .ஆர்வம் தாங்கல :)

ராமலக்ஷ்மி said...

பெயர் நீளமாகும் பிரச்சனை பலருக்கும் உள்ளது. இதில் உங்கள் போல உச்சரிப்பு சிரமங்களில் மாட்டிக் கொள்ள நேருபவர்களுக்கு வேறு வழியில்லைதான் போலும். சுருக்கிக் கொள்ள வேண்டியதுதான். என் ஒரு தங்கை பெயரைச் சுருக்கியும், ஒரு தங்கை பெட் நேமுக்கு தாவியும் விட்டாயிற்று. நான் அப்படியே தொடருகிறேன்:)!

settaikkaran said...

இப்போ பெங்காளிங்களிலே பனோபாத்தியாயா, முகோபாத்தியாயா,சாட்டோபாத்தியாயான்னு இருந்ததை வெள்ளைக்காரன் தான் சுருக்கி பேனர்ஜீ,முகர்ஜீ,சட்டர்ஜீன்னு மாத்துனாங்களாம். அதே மாதிரி எல்லார் பெயரையும் அவங்கவங்க சௌகரியத்துக்கு மாத்திருவாங்க போலிருக்கு! பேஷ்!!

Chitra said...

இதை பத்தி எழுதறதா இருந்தேன்...... சரியா சொல்லி இருக்கீங்க. ஹா,ஹா,ஹா,ஹா.....

ஹுஸைனம்மா said...

அதானே, பேரைச் சொல்லாமலே சுவாரஸ்யமா எழுதிட்டீங்க.

நம்ம ஊர் வழக்கப்படி இனிஷியல் போட்டதால, இங்க (யூ.ஏ.இ.) முன்னாடி என் அப்பா பேரும், இப்ப, என் கணவர் பேரும்தான் என் பேர்!! எப்பத்தான் என் (சொந்தப்) பேர் விளங்க வாழ்வேனோன்னு ஒரு ஏக்கமே வருது போங்க!!

அம்பிகா said...

முகுந்த் அம்மா,
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிருங்களேன்

அமைதி அப்பா said...

பெயர் ஒருவரை பிரபலமாக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் நம் பெயரை புரிந்துகொள்ளாத ஊரில் அது சிக்கல்தான் உண்டு பண்ணும்.
'அமைதி விரும்பி' அமெரிக்கா வந்தால் என்ன பாடுபடுவார்..?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என் பெயரையும் இந்த கொடுமை தான் இங்க டில்லியிலேயே செய்யராங்க.. ழி எல்லாம் எங்கங்க வருது ஷீ தான் .. என் பையன் வாயிலேயே வர மாட்டேங்குது.. அதான் லக்‌ஷ்மி ந்னு சுருக்கி சொல்ற்து..
எங்க வீட்டுக்காங்க அவங்க பேரை நெட்மீட்டிங்க் போது உக்காந்து அடுத்த நாட்டுக்காரனுக்கு. ஒவ்வொரு லெட்டரா, என் பார் நார்வேன்னு விளக்கறதுக்குள்ள விடிஞ்சுரும்..

Radhakrishnan said...

:) எல்லா இடங்களிலும் நடக்கிறது. ராட்ஸ் என்பதுதான் என் பெயர்.

துபாய் ராஜா said...

நல்லவேளை நமக்கு சின்னப் பேரா வச்சுட்டாங்க... :))

Ananya Mahadevan said...

:)) முகுந்தம்மா,
அமெரிக்காவில் மட்டுமல்ல, இங்கேயும் என் பெய்ர் அல்லோலகல்லோலப்படுகிறது. இவர் பெயர் அதற்கும் மேல். மடீவன்? டியர் மிஸ்டர் டிவான் இப்படி மெயில்களும் ஃபோன்களும் வருகின்றன!
உங்க நைனாவின் பெயரை இந்த பாடு படுத்தியமைக்கு நீங்க ஸ்யூ பண்ணி இருக்கலாம் பா.. அநியாயமான்னா இருக்கு?

முகுந்த்; Amma said...

ராகவன் அவர்களே,
உங்க பையன் பேரான Aravind ஐ இவங்க Arvy ஆக்கிடுவாங்க, அப்புறம் சக்கரபாணி middle name ஆகிடும். அப்புறம் உங்க பேரு family name ஆகிடும்.

இப்படி தான் எங்க நண்பர் ஒருத்தர் பையன் பேரு முரளி கிருஷ்ணன், இப்போ முரளி மட்டும் தான் அவன் பேரு, கிருஷ்ணன் middle name ஆகிடுச்சு.

//இந்தியாவில் ஆங்கிலச் தொலைக்காட்சி செய்திகளில், திருநாவுக்கரசு, நெடுஞ்செழியன் இவர்கள் பெயரை சரியாக உச்சசரித்ததாகச் சரித்திரம்//

சரியாய் சொன்னிங்க, அதுவும் தமிழ் தெரிஞ்சவுன்களே, ழ் ஐ பண்ணுற கொலை இருக்கே,
ஐயோ! தாங்க முடியாதுங்க.

எம்.எம்.அப்துல்லா said...

என் முழுப்பெயரான முகம்மது அப்துல்லா இதோட பாஸ்போர்ட்டில் முதல் பெயராக என் அப்பா பெயர் முகமது இஸ்மாயில்.

ஒருமுறை மஸ்கட் ஏர்போர்டில் டிரான்ஸிட்டில் இருந்தேன். முகமது இஸ்மாயில் ஓடிவா!ஓடிவா!ன்னு ரொம்ப நேரமா கூவிட்டு இருந்தாங்க. நானும் யாரையோ கூபிட்டு இருக்காங்கன்னு நினைச்சு ஜாலியா டூட்டி ஃபிரீயில் பராக்கு பாத்துக்கிட்டு திரிஞ்சேன். அப்புறமா வந்து என்னைய மண்டையில ரெண்டு தட்டு தட்டி உம்பேரச் சொல்லிக்கூப்பிட்டா உனக்கு தெரியாதான்னு கேள்விவேற கேட்டு இழுத்துக்கிட்டு போனாங்க.

:)

முகுந்த்; Amma said...

//இதெல்லாம் சகஜமப்பா, இதுக்காக நமக்கு இருக்கிற பெயரை மாத்திக்க முடியுமா?பஞ்சம் பொழைக்க வந்த இடத்தில இதெல்லாம் பார்த்தா கதை நடக்குமா //

ஹி ஹி ஹி

//Nick name என்ன வைச்சிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சிக்/கொஞ்சி கேட்டாய்ங்க முடியவே முடியாதுன்னுட்டேன்//

நல்ல வேலை செய்து இருக்கீங்க தெகா .

//ஆனா, ஒரு கண்டிஷன் போட்டேன் அப்போ என்னய விட உனக்கு அறிவு குறைச்சல்னு ஒத்துக்கிறேன்னு சொன்னா நான் ஜான், பீட்டர், ஜோ ஆகிக்கிறேன்,//

சரியாய் கேட்டும் இருக்கீங்க, அதை ஒத்துக்க மாட்டாங்களே இவங்க.

//anomaly ; provokar, probhokaar//

என்னது anomaly ஆ அடப்பாவிகளா, Provokar சரியான சிரிப்புங்க இவங்களோட,
ஹய்யோ! ஹய்யோ!

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@கந்தசாமி அய்யா
//ரொம்பக்கஷ்டம்தானுங்க//

ஆமாங்கய்யா, வெளிநாட்டு காரங்க நம்ம பேரை படுத்துற பாடு சொல்லி மாளாது

@பத்மா

விருதுக்கு நன்றி பத்மா.

//கடைசி வரைஉங்க பேர் என்ன அதே சொல்லவே இல்லையே//

ஏங்க என்னோட பெட் நேம் தான் சொல்லி இருக்கேனுங்களே, ரயி, இதில ர க்கு Ra அப்புறம் யி ஜெர்மன் pronunciation ரெண்டையும் சேர்த்த Raji அதாங்க என் பெட் நேம்

முகுந்த்; Amma said...

@ராமலெட்சுமி
//பெயர் நீளமாகும் பிரச்சனை பலருக்கும் உள்ளது//
ஆமாங்க! அதுவும் சவுத் இந்தியாவில எல்லாருக்கும் பெரிய பேராதாங்க இருக்கு.

//உங்கள் போல உச்சரிப்பு சிரமங்களில் மாட்டிக் கொள்ள நேருபவர்களுக்கு வேறு வழியில்லைதான் போலும். சுருக்கிக் கொள்ள வேண்டியதுதான். //

நம்ம தமிழ்ல ba, bha, இந்த மாதிரி வேறுபாடு எல்லாம் ஹிந்தில இருக்கிற மாதிரி இல்லேங்க , அதனால வேற வெளிநாட்டு காரங்க ரொம்ப கஷ்டப்படுறங்கன்னு நினைக்கிறன்.

//என் ஒரு தங்கை பெயரைச் சுருக்கியும், ஒரு தங்கை பெட் நேமுக்கு தாவியும் விட்டாயிற்று//

அவங்க செய்தது ஒரு விதத்தில நல்லது தான். பேரை சுருக்கி கூப்பிட சொல்லுறதால இந்த பிரச்சனை கொஞ்சம் தீரும்னு நினைக்கிறன்.

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன்
//இப்போ பெங்காளிங்களிலே பனோபாத்தியாயா, முகோபாத்தியாயா,சாட்டோபாத்தியாயான்னு இருந்ததை வெள்ளைக்காரன் தான் சுருக்கி பேனர்ஜீ,முகர்ஜீ,சட்டர்ஜீன்னு மாத்துனாங்களாம்//

அப்படியாங்க! இது எனக்கு புது செய்திங்க. யாரவது பெங்காலி Friend/Friendy இருக்காங்களா உங்களுக்கு :))
நன்றிங்க

@சித்ரா
//இதை பத்தி எழுதறதா இருந்தேன்...... சரியா சொல்லி இருக்கீங்க//

நன்றிங்க, இங்க நம்ம ஊருக்காரங்க பேரு படுற பாடு சரி ஜோக் தான் போங்க.

முகுந்த்; Amma said...

@ஹுஸைனம்மா
அதானே, பேரைச் சொல்லாமலே சுவாரஸ்யமா எழுதிட்டீங்க.

என்னோட பெட்நேம் சொல்லி இருக்கேங்க.

//நம்ம ஊர் வழக்கப்படி இனிஷியல் போட்டதால, இங்க (யூ.ஏ.இ.) முன்னாடி என் அப்பா பேரும், இப்ப, என் கணவர் பேரும்தான் என் பேர்!! எப்பத்தான் என் (சொந்தப்) பேர் விளங்க வாழ்வேனோன்னு ஒரு ஏக்கமே வருது போங்க//

கரெக்டுங்க, இன்னும் என்னை Mrs/Dr.Balasubramaniyan அப்படின்னு தாங்க கூப்பிடுறாங்க. அதான் நான் எங்க அப்பா கிட்ட சொல்லுறது, நான் டாக்டர் பட்டம் வாங்கலப்பா, நீங்க தான் வாங்கிருகீங்க அப்படின்னு

முகுந்த்; Amma said...

@அம்பிகா

கட்டாயம் தொடர்பதிவில கலந்துகிறேங்க. அழைத்ததற்கு நன்றிங்க.

@அமைதி அப்பா
//பெயர் ஒருவரை பிரபலமாக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் நம் பெயரை புரிந்துகொள்ளாத ஊரில் அது சிக்கல்தான் உண்டு பண்ணும். //

சரியாய் சொன்னிங்க

//அமைதி விரும்பி' அமெரிக்கா வந்தால் என்ன பாடுபடுவார்//

தெரியலையே!.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி
//என் பெயரையும் இந்த கொடுமை தான் இங்க டில்லியிலேயே செய்யராங்க.. ழி எல்லாம் எங்கங்க வருது ஷீ தான் .. என் பையன் வாயிலேயே வர மாட்டேங்குது.. அதான் லக்‌ஷ்மி ந்னு சுருக்கி சொல்ற்து//

அடக்கடவுளே! என்னங்க சொல்றீங்க. டெல்லிலையே இந்த பிரச்சனைனா , வெளி நாட்டுல சொல்லவே வேண்டாம் :((

//எங்க வீட்டுக்காங்க அவங்க பேரை நெட்மீட்டிங்க் போது உக்காந்து அடுத்த நாட்டுக்காரனுக்கு. ஒவ்வொரு லெட்டரா, என் பார் நார்வேன்னு விளக்கறதுக்குள்ள விடிஞ்சுரும்//

இங்கயும் அதே கதைதானுங்க , கே பார் கிங் அப்படின்னு தான் ஆரம்பிப்பார்.

நன்றிங்க


@ராதாகிருஷ்ணன்

//எல்லா இடங்களிலும் நடக்கிறது. ராட்ஸ் என்பதுதான் என் பெயர்.//

என்னது ராட்ஸ் ஆ!, எப்படித்தான் இவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் தோணுதோ

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@துபாய் ராஜா
//நல்லவேளை நமக்கு சின்னப் பேரா வச்சுட்டாங்க//

ரொம்ப சிம்பிள் ஆன பேருங்க. நல்ல வேலை பண்ணி இருக்காங்க.

நன்றிங்க

@அனன்யா
//அமெரிக்காவில் மட்டுமல்ல, இங்கேயும் என் பெய்ர் அல்லோலகல்லோலப்படுகிறது//

அப்படியா! UAE இந்தியா பக்கத்துல அதனால இவ்வளவு பிரச்சனை இருக்காதுன்னு இல்ல இது நாள் வரை நினைச்சுட்டு இருந்தேன்.

//மடீவன்? டியர் மிஸ்டர் டிவான் இப்படி மெயில்களும் ஃபோன்களும் வருகின்றன!//

என்னது மடீவன் ஆ ! கடவுளே கடவுளே.

//உங்க நைனாவின் பெயரை இந்த பாடு படுத்தியமைக்கு நீங்க ஸ்யூ பண்ணி இருக்கலாம் பா.. அநியாயமான்னா இருக்கு?//

பண்ணி இருக்கலாம் தான், ஆனா அப்போ நான் ஸ்டுடென்ட் பா ஒண்ணுமே தெரியாது.

முகுந்த்; Amma said...

@ எம்.எம்.அப்துல்லா

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

உங்க அனுபவம் பயங்கர சிரிப்பா இருக்குங்க.

இங்க எல்லாரையும் நம்ம அப்பா பேரு அல்லது கணவர் பேரு சொல்லிதான் கூப்பிடறாங்க, அதனாலேயே ஹுசேன்அம்மா சொன்னது போல நம்ம பேரு விளங்க என்னைக்கு தான் வாழப்போகிறோமோ.

எம்.எம்.அப்துல்லா said...

//முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் //

முதல் பின்னூட்டம்ங்குறதுதான் சரி. முதல் வருகைங்குறது தப்பு.ஏன்னா நான் இங்க தொடர்ந்து வந்துகிட்டுதான் இருக்கேன். நோ டைம்.சோ கோயிங் வித் அவுட் பின்னூட்டம் :)

பாலராஜன்கீதா said...

பீட்டருக்கு மன்னிக்கவும். ஏற்கனவே படித்திராதவர்களுக்காக மறுபடியும் இங்கு
======================================================================

The following is an excerpt from a blog (written by an Indian in
America)
Wednesday, September 28, 2005

En per padum paadu!!!

My full name is Kalaivani, but I call myself Kalai. This is not for
scene, ....like how Madhavan does in Anbe Sivam (Anbarasu --> Ars).it
has a looooong and pathetic history...
I started hearing different versions of my name after coming to this
country, and the painful fact is all the possible permutations and
combinations of vowels in my name give meaningful words in tamil!!!
When I first joined the university, my professor wrote to me..
Dear KALAvani (meaning: thief; context: kalavani paya..) .... ... ...
Sari adhuvachum typo nu free ya vittudalam..
Then after a year, I joined a company for internship.those people called
me before I joined, to inform me about some test which I had to take..
Hello is this Ms. Kizhavaani? (meaning: old; context : kizha bolt..etc.)
No..this is KALAIvaani Ohh..am sorry KALAvaani (Marupadiyum...) Then I
decided.periya pera irukkinala thane ivlo confusion?!! So, I started
calling myself Kalai... but the story continued..
I joined my full-time position in another company recently. On my first
day, we had a meeting..
Let's all welcome our new associate.Ms. Kulai (meaning: bunch; context:
kulai kulaiyai vazhaipazham kaaithadhu)
CLAP! CLAP! CLAP! CLAP! Followed by smiles.
(Dei.ennangada... ellarum serndhu comedy panreengala???) Anniku
arambichadhu...
Once my boss and I were talking about a project... after finishing the
meeting...
Ok, Kali. Nice to have you here! (meaning: last yuga; context: kali
muthi
pochu.)
That's KALAI (Enakku idhu thevaya?!)
Ohh kAALi? (meaning: goddess; context: badrakaali..) Hee hee ..very
close (Podaannnggg...!!) So, I stopped correcting my name after that..!
One fine morning, I was working.
Hey kiLai (meaning: branch; context: marakiLai) .howz it going?
Yea good (Sollitu thirumbitten. Nammaluku edhuku indha per thiruthura
business nu...) Is that how you say your name?
(Aaahaa arambichutanya...!!!)
Uhhh. It's KALAI
Kolaai? (meaningump; context: kozhai adi sandai.)
(Venaaammm...)
Kolai? (meaning: murder; context: kolai panniduven..)
(Venaam!)
kaLai? (meaning: weed; context: kaLai pudunguradhu.) (Valikkudhu...
azhudhuduven...) May be I'll get your name with practice. Haha.
Idhellam remba over da dei... Tamil la paatha rende rendu ezhuthu thaan
da!!!)
Ennada, Chandramukhi la thalaivar durga perai nakkaladikkira maathiri...
namma per ayiduche nu nenaikkum podhu... my friend came up with a
brilliant idea!
Adhavadhu... to compare my name with a word.so I started using this word
kaleidoscope; which has the same pronunciation as kalai!
So, I started telling everyone. Kalai as in kaleidoscope!. Ippo kooda
romba ellam ozhunga solradhulla. They are saying kalaai
(kalaaikiradhu)..
Hey Kalaai!!
Yea?
Just trying to say your name. Ha ha ha
Ohhh ..how sweet! (thooo thEri..)
Yedho vaandhi edukkira effect la per irundhalum... my life was in
peace...
until few days back...
My net connection was down, so I called up the customer service (En
kiragam. Madras call center ku pochu!) Enakku andha vishayame theriyala.
So I started in complete American accent...
Your name ma'am?
Kalaai
What? Can you repeat ma'am?
Kalaai as in kaleidoscope
I didn't get that ma'am. Can I have your number? I can check the records
(Sigh!... and gave the
number)
Ohh, Kalaivani, right? (in a sarcastic tone.) (Ada paavi makka... nee
nammooora??!!! All American accents stopped.
Back
to Indian accent.)
I could clearly see what he was thinking... per paatha urs pammingly nu
podra category maathiri irukku... scene podradhu mattum princess Diana
range kaa...
Anna... naan sathyama andha maathiri illeeenganna!!!
======================================================================