Sunday, March 21, 2010

General Knowledge ஆ கிலோ என்ன விலை ?

சரி தொடர்ந்து பதிவா எழுதிட்டு இருக்கேனே! ஒரு break விடலாமே என்று நினைச்சேன். ஆனா பாருங்க இன்னிக்குனு என் friend வீட்டில ஜெயா TV இன் (இரண்டு வாரத்திற்கு முந்தய) ஜாக்பாட் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் இரண்டு சென்னை பெண்கள் Teams பங்கு பெற்றார்கள். அதில் பங்குபெற்ற அனைவரும் MBA, BE என்று படிக்கும் கல்லூரி மாணவிகள்.

அதில கேட்ட கேள்விகளுக்கு கல்லூரி மாணவிகள் கொடுத்த பதில்கள் சிரிப்பை வரவழிப்பதாக இருந்தது. சில சாம்பிள் questions இங்கே

1. கோடை காலத்தில் குளத்தில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?
மண்ணின் குளிர்ச்சியால்

2. சென்னையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் பெயர் என்ன?
காமராஜர் நினைவு இல்லம்

3. பணியில் இருக்கும் போதே மரணமடைந்த ஜனாதிபதி யார்?
இந்திராகாந்தி
அடுத்த டீம் க்கு இதே கேள்வி கேட்டார்கள் அதற்கு நேரு என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள்

4. ஒரு Batsman எப்படியெல்லாம் out ஆவார்?

Tension னால் அவுட் ஆவார்.

5. கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னர் அல்லது சர்வாதிகாரி பெயர்?

shajahan

இவர்களுக்கு உண்மையிலேயே இதற்கு பதில்கள் தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை.

25 comments:

இராகவன் நைஜிரியா said...

நம் எதிர் பார்ப்பு அவர்களிடம் அதிகம் என நினைக்கின்றேன்...

இராகவன் நைஜிரியா said...

// 1. கோடை காலத்தில் குளத்தில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?
மண்ணின் குளிர்ச்சியால் //

அதில் யாராவது ஐஸ் கட்டி போட்டு இருப்பாங்கன்னு சொல்லாம விட்டாங்களே?

// 2. சென்னையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் பெயர் என்ன?
காமராஜர் நினைவு இல்லம் //

இப்ப மாத்திட்டாங்க போலிருக்கு - அவங்களுக்கு மட்டும்.

// 3. பணியில் இருக்கும் போதே மரணமடைந்த ஜனாதிபதி யார்?
இந்திராகாந்தி
அடுத்த டீம் க்கு இதே கேள்வி கேட்டார்கள் அதற்கு நேரு என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள் //

ஒன் ஸ்மால் கன்பூயஷன் - ப்ரைம் மினிஸ்டர் & ப்ரெசெடெண்ட். நிறைய படிக்க வேண்டியிருப்பதால் இந்த கன்பூயஷன் என நினைக்கின்றேன்.

// 4. ஒரு Batsman எப்படியெல்லாம் out ஆவார்?

Tension னால் அவுட் ஆவார். //

ரொம்ப நல்ல ஜோக்...


// 5. கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னர் அல்லது சர்வாதிகாரி பெயர்?

shajahan //

இது சூப்பர் ஆன்ஸர்... கவாஸ்கர் தெரியுமான்னு கேட்டா நல்லா புட்பால் ஆடுவாரேன்னு சொல்வது மாதிரித்தான் இதுவும்

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் சேர்த்த பிறகு நீங்களும் ஒரு ஓட்டு போடுங்க...

ஒரு ஓட்டால் நீங்க மகுடத்தில் வர சான்ஸ் அதிகம்.

ப.கந்தசாமி said...

நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். இளைய சமுதாயத்தின் பொது அறிவுத்திறன் இப்படி இருப்பது பார்க்க கஷ்டமாக இருந்தது.

பத்மா said...

இந்த காலத்தில இதெல்லாமா முக்கியம்? குஷ்பு என்ன டிசைன் சாரி என்ன நியூ ப்ளௌஸ் அத சொல்லுங்க மொதல்ல .:))))))))
இதுக்கு தான் நா டிவி பாக்கிறதே இல்லை

மங்கை said...

வருத்தமான விஷ்யம்...யாரை குறை சொல்ல என்று தெரியவில்லை,,...:(

Ananya Mahadevan said...

:-))
இதுக்கு தான் நான் டீவீயே பார்ப்பதில்லை! நிம்மதி!

அன்புடன் மலிக்கா said...

இளைய சமுதாயம் இன்னும் வளரவில்லை என நினைத்துவிட்டாங்கபோல..

நல்ல பதிவு..

Chitra said...

சந்தோஷமா டிவியில் பதில் சொல்லி இருக்காங்களே! General Knowledge ல வீக்கா இருக்கிறவங்களுக்கும் போட்டி வச்சு நடத்துற டிவிக்கு நன்றி. :-)

ராமலக்ஷ்மி said...

இது போன்ற நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே ரொம்ப சுலபமாகவே கேட்பார்கள். அப்படியும் :( !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) athu comedy nikazchiya irundhirukkumo ?

Ananya Mahadevan said...

ஹய்யோ ஹய்யோ.. ரெம்ம்ப குஷ்டமப்பா..

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி ராகவன் அவர்களே

//நம் எதிர் பார்ப்பு அவர்களிடம் அதிகம் என நினைக்கின்றேன்//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

//அதில் யாராவது ஐஸ் கட்டி போட்டு இருப்பாங்கன்னு சொல்லாம விட்டாங்களே?//

இன்னும் கொஞ்சம் விட்டா சொல்லிருப்பாங்க :))

//இப்ப மாத்திட்டாங்க போலிருக்கு - அவங்களுக்கு மட்டும்.//

இந்த கேள்வி கிளிபிங்கா வேற இருந்தது. அதில கட்டிடத்தை காட்டி இது எங்க இருக்குன்னு தெரியுமான்னு கேக்குராங்க, அதுக்கு அந்த பொண்ணுங்க, எங்கயோ மெரினா பக்கத்தில பாத்திருக்கேன்னு சொல்லுது :(((, என்னத்த சொல்ல?

//ஒன் ஸ்மால் கன்பூயஷன் - ப்ரைம் மினிஸ்டர் & ப்ரெசெடெண்ட். நிறைய படிக்க வேண்டியிருப்பதால் இந்த கன்பூயஷன் என நினைக்கின்றேன்.//

இந்த கேள்வி செம ஜோக்ங்க, இந்த டீம் இந்திராகாந்தி ன்னு சொன்னவுடனே குஷ்பூ டென்ஷன் ஆகிட்டாங்க, இந்திராகாந்தி பிரதமர் மா நான் கேட்டது ப்ரெசிடென்ட் பத்தி அப்படின்னு சொல்லிட்டு அடுத்த டீம் கிட்ட கேட்டபோது அவங்க கொடுத்த answer நேரு.

//ஒரு Batsman எப்படியெல்லாம் out ஆவார்?//

கிரிக்கெட் தவிர வேற எந்த விளையாட்டை பத்தி கேட்டு அவங்க இந்த மாதிரி பதில் கொடுத்து இருந்தா நான் ஆச்சரிய பட்டு இருக்க மாட்டேன். இந்தியாவே கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சு இருக்கப்ப இப்படி ஒரு பதில் எனக்கு டென்ஷன் ஏற்படுத்திடுச்சு.

//இது சூப்பர் ஆன்ஸர்... கவாஸ்கர் தெரியுமான்னு கேட்டா நல்லா புட்பால் ஆடுவாரேன்னு சொல்வது மாதிரித்தான் இதுவும்//

உண்மைங்க, இப்படி எல்லாம் பதில் சொல்லி தன்னோட அறியாமைய அவங்களே இப்படி
காட்டுறாங்களே :((((

முகுந்த்; Amma said...

//தமிழ் மணத்தில் சேர்த்த பிறகு நீங்களும் ஒரு ஓட்டு போடுங்க.//

ஓ அப்படியாங்க! நான் இது வரை எனக்கு நானே ஓட்டு போட்டுகிட்டது இல்ல. இந்த மாதிரி ஒன்னு இருக்கிறதே எனக்கு தெகா அவர்கள் சொல்லி தாங்க தெரியும். இனிமே வேணா ஒட்டு போட்டுறேன்.

முகுந்த்; Amma said...

வருகைக்கு நன்றி அய்யா.

//நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். இளைய சமுதாயத்தின் பொது அறிவுத்திறன் இப்படி இருப்பது பார்க்க கஷ்டமாக இருந்தது//

உண்மை அய்யா! எங்கே போகிறது இளைய சமுதாயம்?? :((

முகுந்த்; Amma said...

//இந்த காலத்தில இதெல்லாமா முக்கியம்? குஷ்பு என்ன டிசைன் சாரி என்ன நியூ ப்ளௌஸ் அத சொல்லுங்க மொதல்ல //

அப்படிதாங்க ஆச்சு!! சாரி, ப்ளௌஸ் பாக்குறாங்க ஆனா கேள்வி, பதில் பாக்காம விட்டுறாங்க.

//இதுக்கு தான் நா டிவி பாக்கிறதே இல்லை//

நல்ல வேலை பண்ணிறீங்க நீங்க. எனக்கு வேற வழி இல்ல எப்ப friend வீட்டுக்கு போனாலும் இதை தான் பாக்குறேன்.

Thanks Padma

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மங்கை அவர்களே

//வருத்தமான விஷ்யம்...யாரை குறை சொல்ல என்று தெரியவில்லை//

Entertainment தான் முக்கியம் உலக விஷயம் தேவை இல்லைன்னு நினைக்கிற மனோபாவம் மாறணுங்க!

முகுந்த்; Amma said...

//இதுக்கு தான் நான் டீவீயே பார்ப்பதில்லை! நிம்மதி//

நல்ல வேலை பண்ணிறீங்க நீங்க :)))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அநன்யா மஹாதேவன் அவர்களே

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மலிக்கா அவர்களே

//இளைய சமுதாயம் இன்னும் வளரவில்லை என நினைத்துவிட்டாங்கபோல.. //

அப்படிதாங்க தோணுது

//நல்ல பதிவு//

நன்றிங்க

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சித்ரா அவர்களே

//சந்தோஷமா டிவியில் பதில் சொல்லி இருக்காங்களே! //

உண்மைங்க, எல்லா பதிலும் அவங்க சிரிசிட்டே தான் சொன்னாங்க.

//General Knowledge ல வீக்கா இருக்கிறவங்களுக்கும் போட்டி வச்சு நடத்துற டிவிக்கு நன்றி. //
இதுக்குன்னே உக்கார்ந்து யோசிப்பாங்களோ. :))

முகுந்த்; Amma said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராமலெட்சுமி அவர்களே

//இது போன்ற நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே ரொம்ப சுலபமாகவே கேட்பார்கள். அப்படியும் :(( //

உண்மைங்க, அதை நடத்தின குஷ்பூ வே இது நாலாப்பு கேள்வி அதுக்கு இப்படி சொதப்புறீங்களே, அப்படின்னு சொன்னாங்க :((

முகுந்த்; Amma said...

//athu comedy nikazchiya irundhirukkumo ?//

அப்படி தான் இருக்கும், நான் தான் இது Quiz நிகழ்ச்சி அப்படின்னு நெனச்சிட்டேன் :))

நன்றி முத்துலெட்சுமி அவர்களே

முகுந்த்; Amma said...

//ஹய்யோ ஹய்யோ.. ரெம்ம்ப குஷ்டமப்பா..//

ரொம்ப ரொம்ப குஷ்டம் :))

Ananya Mahadevan said...

முகுந்தம்மா,
கிரேஸியின் ஒரு டிராமாவில் வரும் ஜோக்கு -”இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்? ”
”ஒரு க்ளூ குடுங்க சார்”
”சரி, அவர் பெயர் நே வில் ஆரம்பித்து ரு வில் முடியும். நடுவில் ஒன்றுமே இருக்காது”
“நேருமாறு”
“தாறுமாறு!!!!”

துபாய் ராஜா said...

நல்லவேளை போட்டியில் G.K என்றால் என்ன என்று கேட்காமல் இருந்தார்களே... கேட்டிருந்தால் அந்த சேனல் எங்கள் ஏரியாவில் கிடைப்பதில்லை என்று சொல்லியிருப்பார்கள். :))