Friday, March 19, 2010

Lord of the Rings ம் நானும் -1


போன பதிவில் LoTR (Lord of the Rings) பற்றியும் ஆராய்ச்சி மாணவர்கள் படும் இம்சை பற்றியும் எழுதிட்டு, அப்படியே போனா எப்படின்னு தோணிச்சு அதான் இந்த பதிவு :)))
( படிக்கிறவங்கள கொடுமை படுத்தாம விடுறதில்லைன்னு ஆத்தா மகமாயி முன்னால சத்தியம் செஞ்சு இருக்கோம்ல நாங்க)

LoTR என்றொரு புத்தகம் இருக்கிறது, அது சினிமாவாக எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பது எனக்கு 2002 வரை தெரியாது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் வெளிநாடு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலை, 2001 ஆம் ஆண்டு டிசம்பர்இல் தான் LoTR இன் முதல் பாகமான "Fellowship of the Ring" சினிமாவாக வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டு இருந்தது. என்னுடைய labmates இருவர் நீ கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். படம் தொடங்கிய போது எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நேரம் செல்ல செல்ல எதோ கொஞ்சம் புரிந்தது (அதில் வரும் graphics ம் DTS சத்தமும் படத்தில் வரும் பேய் போன்ற முகங்களும் அன்று இரவு கனவில் வந்து என்னை பயமுறுத்தியது வேற விஷயம்)

பிறகு அடுத்த நாள் அப்பாடா தொல்லை விட்டது என்று நான் நினைக்க அதே labmates இல் ஒருவர் வந்து, இந்தா புத்தகம், இது LoTR ஐ உனக்கு அறிமுகப்படுத்தும் என்று "The Silmarillion" என்ற புத்தகத்தை கொடுத்து விட்டு போனார். எனக்கு LoTR யே புரியல, இதில எங்க அறிமுகப்படுத்துறது என்று மனதுக்குள் சொல்லி கொண்டு அதனை வாங்கி வைத்து கொண்டேன். (கடைசி வரை அதனை நான் படிக்க வில்லை)

பிறகு அடுத்த மாதமே என்னுடைய whole group ம் சேர்ந்து அதே படத்திற்கு (விதி செய்த சதி) நான் வரவில்லை என்று பல தடவை சொல்லியும் கேட்க்காமல் அழைத்து சென்றது.
இப்பொழுது படம் எனக்கு இன்னும் கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. (எங்கு, எங்கு பேய்முகம் வரும் என்று தெரிந்ததால் நாள் கண்ணை மூடி கொண்டு விட்டேன்)

அப்புறமும் என்னை விடாமல் துரத்தியது LoTR, இப்போது வேறு வடிவில். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்போதும் சாப்பிட செல்வோம், சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவரும் முட்டை வடிவில் சாக்லேட் ஒன்று இருக்கும் அதனுள் LoTR action figures இருக்கும், அதனை collect செய்வது எதோ தங்கத்தை சேகரிப்பது போல எல்லாரும் செய்வார்கள், அந்த சுழலில் நானும் மாட்டி கொண்டேன். (நான் படித்து முடித்து விட்டு வரும் போது ஒரு பை நிறைய LoTR action figures என்னிடம் இருந்தது) அவ்வாறு சேர்த்த பொம்மைகளை என் desk முழுக்க எதோ கொலு போல வைத்து இருப்பேன்.

இப்படி தொடர்ந்து நம்மை துரத்துதே LoTR அப்படி என்ன தான் அதில இருக்கு? அப்படின்னு ஒரு கை பாத்திடுவோம்னு, LoTR இன் முதல் புத்தகமான Fellowship of the Ring படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே படம் வேறு பல முறை பார்த்ததால் கதை கொஞ்சம் புரிந்தது.

இந்த புத்தகத்தை எழுதியவர் J.R.R. Tolkien அவர்கள். LoTR கதை நடப்பது middle earth என்ற பூமி போன்ற ஒரு உலகத்தில். அதில் பலவகையான மனிதர்கள், மனிதர்கள் போன்றவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் இனத்தை பாதுகாக்க மோதிரங்களை (Rings) உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு race ம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Rings ஐ பெருகின்றனர். அவற்றில் ஒரு கெட்ட அரசன் Sauron (Dark lord) இவர்களுக்கு எல்லாம் தெரியாமல் எல்லா மோதிரங்களையும் அடிமை படுத்தும் ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான். அதுவே Lord of all the rings. இந்த மோதிரத்தை கொண்டு எல்லா மனிதர்களையும், மனிதர்கள் போன்றவர்களையும் அடிமைபடுத்த முயல்கிறான். இதனை தெரிந்து கொண்ட அனைவரும் அவனுக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் செய்கின்றனர், முடிவில் Sauron கொல்லபடுகிறான். அவன் மோதிரம் தொலைந்து போகிறது, அவன் இறந்தாலும் அவன் ஆவி அந்த மோதிரத்தை தேடுகிறது.

இதுவரை நான் சொன்னது LoTR இன் முன்கதை மட்டுமே , இப்பவே கண்ண கட்டுதே! என்று தான் முதலில் இருந்தது எனக்கு.
---தொடரும்

10 comments:

Thekkikattan|தெகா said...

அப்பாடா, நானும் சில சீரிஸ் பார்த்திருக்கேன் தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கும்... ஏதோ, படிச்சு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க ரொம்ப சிரமப்பட்டுத்தான் தெரிஞ்சிட்ருப்பீங்கன்னு தெரியும் - இங்க இறக்கி வைங்க நாங்க இத ஓர் அறிமுகமாக எடுத்திட்டு புரிஞ்சிப் பார்ப்போம்... :) இன்னும் கண்ணைக் கட்டல.... ஆனா, அவ்வ்வ்வ்வ்வ்வ்

ப.கந்தசாமி said...

நல்லாப்படுத்தறீங்கம்மா. தலை சுத்துது.

அந்தக்காலத்துல நாங்க ஆராய்ச்சிக்கட்டுரைகளெல்லாம் இப்படித்தான் எழுதுவோம். ஒருத்தனும் புரிஞ்சுகிட்டு கேள்வி கேக்கப்படாதில்ல.

துளசி கோபால் said...

இது எங்கூர்லே எடுத்த சினிமா. 'வேடா' தான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் செஞ்சாங்க. அங்கே இந்தப் படம் எடுத்த இடங்கள் எல்லாம் இப்போ பயங்கர டூரிஸ்ட் அட்ராக்ஷனா இருக்கு.

பீட்டர் ஜாக்ஸன் எங்கூர்க்காரர். அவர் டைரக்ட் செஞ்ச படமுன்னா அது ஷூட்டிங் எங்கூருதான் எப்பவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொடரும் வேறயா.. நடத்துங்க ..:)

நல்லாத்தான் இருக்கு..

நீங்க முடிவெடுத்துட்டா நீங்க சொன்ன பேச்சை நீங்களே கேக்கமாட்டிங்கன்னு நினக்கிறேன்..

முகுந்த்; Amma said...

// நானும் சில சீரிஸ் பார்த்திருக்கேன் தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கும்//

உண்மைங்க எனக்கும் ரொம்ப நாளா புரியல.

//இங்க இறக்கி வைங்க நாங்க இத ஓர் அறிமுகமாக எடுத்திட்டு புரிஞ்சிப் பார்ப்போம்//

எதோ என்னால முடிஞ்சதை செய்யிறேன், சரியா வராட்டி மன்னிச்சிருங்க.

//கண்ணைக் கட்டல.... ஆனா, அவ்வ்வ்வ்வ்வ்வ்//

போக போக ரொம்ப கண்ண கட்டும்.

முகுந்த்; Amma said...

//நல்லாப்படுத்தறீங்கம்மா. தலை சுத்துது.//

அந்த மாதிரி ஒரு கதை எழுதி வச்சு இருக்கார் J.R.R.Tolkien

//அந்தக்காலத்துல நாங்க ஆராய்ச்சிக்கட்டுரைகளெல்லாம் இப்படித்தான் எழுதுவோம். ஒருத்தனும் புரிஞ்சுகிட்டு கேள்வி கேக்கப்படாதில்ல.//

இந்த காலத்திலயும் ஆராய்ச்சி கட்டுரைகள் அப்படிதான் வருதுங்க அய்யா.

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா

முகுந்த்; Amma said...

//இது எங்கூர்லே எடுத்த சினிமா, 'வேடா' தான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் செஞ்சாங்க.//

ஓ! அப்படியா! நான் நெறைய நாள் யோசிச்சு இருக்கேன், எங்க எடுத்திருப்பாங்க இந்த படத்தைன்னு. அப்போ Middle earth, New zealand ஆ. Special effects எல்லாம் அருமையா இருக்கும்.

//இந்தப் படம் எடுத்த இடங்கள் எல்லாம் இப்போ பயங்கர டூரிஸ்ட் அட்ராக்ஷனா இருக்கு.//

படத்தில பார்க்கும் போதே சூப்பர் ஆ இருக்கும் நேர்ல ஒரு நாள் பார்க்கணும்.

//பீட்டர் ஜாக்ஸன் எங்கூர்க்காரர். அவர் டைரக்ட் செஞ்ச படமுன்னா அது ஷூட்டிங் எங்கூருதான் எப்பவும்//

அப்படியா :))))

முகுந்த்; Amma said...

//தொடரும் வேறயா.. நடத்துங்க .//

ஆமா! விடறதா இல்ல :))

//நீங்க முடிவெடுத்துட்டா நீங்க சொன்ன பேச்சை நீங்களே கேக்கமாட்டிங்கன்னு நினக்கிறேன்.//


அதே, அதே:)

துளசி கோபால் said...

இன்னொண்ணும் சந்தடிசாக்கிலே சொல்லிக்கணும்தான்.

சக்கைப்போடு போட்டு எக்கச்சக்க அவார்டு வாங்கிய(?) அவதார் படத்துக்கும் வேட்டாதாங்க ஸ்பெஷல் எஃபெக்ட்டு செஞ்சாங்க.

'வேட்டா நியூஸி' ன்னு டைட்டில் வந்தப்பக் கைதட்டுன ஒரே ஆள் நானாகத்தான் இருந்தேன் சத்யம் தியேட்டரில்:-)

Ananya Mahadevan said...

:-))
ஜோர்!!!!!!!!!!!