ரமணா என்ற படத்தில் ஒரு மருத்துவமனை காட்சி ஒன்று வரும். அதில் ஒரு பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது போல பாசாங்கு செய்து பணம் கேட்பார்கள். அப்போது நடிகர் விஜயகாந்த் ஒரு வசனம் சொல்லுவார்
"உங்கள போல மருத்துவமனை டாக்டர்கள் கிட்ட சொல்ல கூடாத ஒன்னு இருக்கு. அது எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எப்படியாவது நோயாளிய காப்பாத்திடுங்க, அப்படின்னு "
அந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என்று நான் வியந்ததுண்டு. ஆனால் கிட்டத்தட்ட அதே போன்றதொரு சூழ்நிலையை என்னுடைய இந்திய பயணத்தில் நான் கண்கூடாக காண நேர்ந்தது.
என்னுடைய கணவரின் பெரியம்மா அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்திருக்கிறது. என்னவென்று அறிய ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
தினமும் ஒரு மருத்துவர் வந்து அவரை பரிசோதித்து சென்று இருக்கிறார். ஒவ்வொருவர் வந்து தொட்டால் கூட ஆயிரக்கணக்கில் அவருக்கு பீஸ். கிட்டதட்ட ஒருமாதம் வரை இப்படி ஒவ்வொரு புது மருத்துவராக வந்து பார்த்தாலும் என்ன நோய் அவருக்கு என்று ஒருவரும் கூறவில்லை.
சிலபல லட்சங்கள் கரைந்த நிலையில் டாக்டர்கள் முடிவாக " அவருக்கு ரத்த புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கிறது மருத்துவம் பார்க்க இயலாது எடுத்து செல்லுங்கள்" என்று கூறி விட்டனர்.
எனக்கு ஒன்று விளங்கவில்லை, மருத்துவமனையில் சேர்த்தவுடன் எடுக்கும் அடிப்படை பரிசோதனைகளில் ஒன்று ரத்த அணுக்கள் பற்றியது. அதில் பார்த்தவுடனேயே அணுக்களின் எண்ணிக்கையை வைத்து புற்றுநோய் என்று அறிய முடியாதா? அப்படி புற்றுநோய் என்று முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் ஒருமாத காலம் அந்த அம்மையார் படுக்கையில் பட்ட கஷ்டம் இல்லாமல் போயிருக்குமே!. கையில் ஊசி குத்திய இடத்தில எல்லாம் சீழ் பிடித்து அவர்கள் பட்ட கஷ்டம் அப்பப்பா!
இதனை எல்லாம் பார்த்த பிறகு ஏன் இப்படி ஒரு சில மருத்துவமனைகள் ப/பிணம் தின்னும் கழுகுகள் ஆகிவிட்டன என வருத்தபடாமல் இருக்க முடியவில்லை.
15 comments:
சரியாக சொன்னீர்கள்,முகுந்த் அம்மா,
ஆமாம்..."டாக்டர் செலவை பத்தி கவலைப் படாதீங்க"
எப்படியாவது காப்பாத்தினா போதும்......இது தான் அவர்களுக்கு
மூலதனம்.
இதிலிருந்து மீள முடியாது.என் அப்பாவிற்கும் இது நடந்தது.....
மனசாட்சியை கொலை செய்துவிட்டு,வியாபாரம் செய்யும் மனிதர்கள்.
எந்தத் துறையானாலும் இதேதானுங்க... முதல் போட்டு முதல் எடுக்கும் களமாகத்தான் பார்க்கிறார்கள்... மனிதனை மனிதனாகப் பார்ப்பதெல்லாம் மலை ஏறிப் போச்சுங்கோ....
வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சாச்சா, சொல்ல நிறைய இருக்கும்.
பணம் தின்னும் கழுகு மருத்துவ மனைகளுக்கு பல வெளிநாட்டு பரிசோதனைக் கருவிகள் வாங்கிய அளவில் மாதத் தவணைகள் இருக்கிறதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? இப்படியெல்லாம் பிடுங்காமல் இருந்தால் பின்ன எப்படி தங்கள் மருத்துவமனை இது போன்ற சிகிச்சைப் பிரிவுகள் கூட வைத்திருக்கிறது என்று கூறிக் கொள்ள முடியும்?
என்னுடைய சொந்தக் கதை ஒன்னு. கோயம்புத்தூர்ல நடந்தது. தனிப் பதிவா போடுற அளவிற்கு திருட்டு வேல நடதிருக்கிறது. எனக்கு செப்டோப்ளாஸ்டி என்ற சிகிக்கை ஒன்று ஒரு காதின் கேக்கும் திறன் சற்றே குறைந்திருக்கிறது என்று அறிந்து இந்த சிகிச்சையினால் காது கேக்கும் திறன் அதிகரிக்குமென்று கூறி, சைனஸ் ஏரியாவை சுத்தம் செய்து விட்டு, காதுக்குள் கேக்கும் எய்ட் வைத்து இரண்டு நாட்களுக்கு நன்றாக சத்தம் ஏற்படுத்தி விட்டு, ஃபாலோ அப் செல்லும் பொழுது வெளி எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.
வித்தியாசம் உணர்ந்து தொலைபேசியும், ஊருக்கு வரக் கூடிய நிலையாகிப் போனாதாலும் ஒரு திருப்தி படக் கூடிய பதிலும் கிடைக்காமலும், பணம் அழுதது மட்டுமே நடந்தது.
அப்படித்தான் என்று புரிகிறது.
நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. நோயாளிகளை உள்ளே வைத்து முடிந்த மட்டும் பணத்தை கரைத்து விட்டு வெளியே விடுவார்கள்.
:(பேக்கேஜ் டூர் மாதிரி நான் கூட பேக்கேஜ் டெலிவரிதாங்க செய்துகிட்டேன்.. ஒரு பக்கம் நாம அவர்களை நம்பி இருக்கோம். .. இன்னோரு பக்கம்....
ம்ம்..இதில் நொந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது முகுந்த் அம்மா .ட்ரீட்மென்ட் செலவை இன்சுரன்ஸ் க்ளெய்ம் மூலமாக செலுத்தினால் மருத்துவமனைகள் நடத்தும் பாரபட்சம் இருக்கிறதே,மகா எரிச்சலை தரும் . சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கும் மருத்துவர்களை ,மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பணம் தான் இங்கே பிரதானம்.அதை வாங்கிக் கொண்டாவது முறையான விளக்கம் தருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை.என்னவோ மூடு மந்திரம் போலத் தான்.
உண்மைதான். மிக அரிதாக சில நல்ல மருத்துவர்கள் இருந்தாலும், பெரும்பான்மை மருத்துவமனைகள் இப்படி இருக்கின்றன. இயலாமையில் நாம்...
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இது இப்ப இல்லை. 31 வருஷங்கள் முன்னால் எங்க மாமியாருக்கும் நடந்து அவரை நல்ல மருத்துவ மனையில் இழந்தோம்.. நல்ல பேசிக்கொண்டு இருந்தவர் மருத்துவமனை போனதும் மருந்துகள் உபயத்தால் கண் திறக்காமலேயே இறைவனடி சேர்ந்தார். இத்தனைக்கும் எங்கள் எல்லோருக்கும் அறிவு விழித்துக் கொண்டதுதான் இருந்தது. செயல்படுத்தத்தான் முடியவில்லை.
Recently got a forward saying that there is a medicine named "imitinef mercilet" available free of cost at Adyar cancer institute specifically for blood cancer.
@எண்ணத்து பூச்சி
கருத்துக்கு நன்றி எண்ணத்து பூச்சி அவர்களே.
தங்களுக்கும் இப்படி ஒரு அனுபவமா! எப்போது தான் இதற்க்கு விடிவோ!
@பழமைபேசி
உண்மைதான் அய்யா!, நானும் அப்படிதான் அங்கிருக்கும் போது உணர்ந்தேன். கோவில்களில் கூட இதனை நான் பார்க்க முடிந்தது.
@தெகா
//வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சாச்சா.//
ஆமாம் அய்யா! முடிஞ்சாச்சு.
//பணம் தின்னும் கழுகு மருத்துவ மனைகளுக்கு பல வெளிநாட்டு பரிசோதனைக் கருவிகள் வாங்கிய அளவில் மாதத் தவணைகள் இருக்கிறதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? இப்படியெல்லாம் பிடுங்காமல் இருந்தால் பின்ன எப்படி தங்கள் மருத்துவமனை இது போன்ற சிகிச்சைப் பிரிவுகள் கூட வைத்திருக்கிறது என்று கூறிக் கொள்ள முடியும்//
உண்மையோ உண்மை!. எல்லா மருத்துவ மனைகளிலும் எல்லா நவீன கருவிகளும் உள்ளன. எந்த checkup என்று சென்றாலும் எல்லா டெஸ்டும் எடுக்க சொல்கிறார்கள்.
//என்னுடைய சொந்தக் கதை ஒன்னு. கோயம்புத்தூர்ல நடந்தது. தனிப் பதிவா போடுற அளவிற்கு திருட்டு வேல நடதிருக்கிறது. எனக்கு செப்டோப்ளாஸ்டி என்ற சிகிக்கை ஒன்று ஒரு காதின் கேக்கும் திறன் சற்றே குறைந்திருக்கிறது என்று அறிந்து இந்த சிகிச்சையினால் காது கேக்கும் திறன் அதிகரிக்குமென்று கூறி, சைனஸ் ஏரியாவை சுத்தம் செய்து விட்டு, காதுக்குள் கேக்கும் எய்ட் வைத்து இரண்டு நாட்களுக்கு நன்றாக சத்தம் ஏற்படுத்தி விட்டு, ஃபாலோ அப் செல்லும் பொழுது வெளி எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.
வித்தியாசம் உணர்ந்து தொலைபேசியும், ஊருக்கு வரக் கூடிய நிலையாகிப் போனாதாலும் ஒரு திருப்தி படக் கூடிய பதிலும் கிடைக்காமலும், பணம் அழுதது மட்டுமே நடந்தது.
அப்படித்தான் என்று புரிகிறது.//
அடப்பாவிகளா! இவர்களின் பண பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது.
தங்களின் அனுபவம் அனைவருக்கும்.ஒரு பாடம் என்னை பொறுத்த வரை சிறிய மருத்துவமனைகள் கொஞ்சமாவது மனிதபிமனதுடன் இருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.
கருத்துக்கு நன்றி தெகா.
@தமிழ் உதயம் said...
//நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. நோயாளிகளை உள்ளே வைத்து முடிந்த மட்டும் பணத்தை கரைத்து விட்டு வெளியே விடுவார்கள்.//
அதை கண்கூடாக பார்த்தேன். கருத்துக்கு நன்றி தமிழ் உதயம் அவர்களே.
@முத்துலெட்சுமி/முத்துலெட்சுமி
//:(பேக்கேஜ் டூர் மாதிரி நான் கூட பேக்கேஜ் டெலிவரிதாங்க செய்துகிட்டேன்..
ஒரு பக்கம் நாம அவர்களை நம்பி இருக்கோம். .. இன்னோரு பக்கம்....//
நெறய பேர் இதே போல சொல்லுறாங்க இப்போதெல்லாம். என்ன செய்ய முடியும் நம்மால் :((?
@ KarthigaVasudevan
//செலவை இன்சுரன்ஸ் க்ளெய்ம் மூலமாக செலுத்தினால் மருத்துவமனைகள் நடத்தும் பாரபட்சம் இருக்கிறதே,மகா எரிச்சலை தரும் .//
அப்படி எல்லாமா நடக்கிறது. நெறைய இன்சூரன்ஸ் agents, insurance எடுத்தா நல்லதுன்னு சொல்லி நெறய பாலிசி விக்கிறதா கேள்வி பட்டேனே! அப்போ எல்லாம் சும்மாவா.
//சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கும் மருத்துவர்களை ,மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பணம் தான் இங்கே பிரதானம்.அதை வாங்கிக் கொண்டாவது முறையான விளக்கம் தருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை.என்னவோ மூடு மந்திரம் போலத் தான்.//
சரியா சொல்லி இருக்கீங்க. மூடு மந்திரம் போல தான் இருக்கு.
கருத்துக்கு நன்றிங்க
@ ஹுஸைனம்மா said...
//உண்மைதான். மிக அரிதாக சில நல்ல மருத்துவர்கள் இருந்தாலும், பெரும்பான்மை மருத்துவமனைகள் இப்படி இருக்கின்றன. இயலாமையில் நாம்...//
சரியா சொன்னீங்க இயலாமையில் நாம் :((
கருத்துக்கு நன்றிங்க
@வல்லிசிம்ஹன் said...
//கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இது இப்ப இல்லை. 31 வருஷங்கள் முன்னால் எங்க மாமியாருக்கும் நடந்து அவரை நல்ல மருத்துவ மனையில் இழந்தோம்.. நல்ல பேசிக்கொண்டு இருந்தவர் மருத்துவமனை போனதும் மருந்துகள் உபயத்தால் கண் திறக்காமலேயே இறைவனடி சேர்ந்தார். இத்தனைக்கும் எங்கள் எல்லோருக்கும் அறிவு விழித்துக் கொண்டதுதான் இருந்தது. செயல்படுத்தத்தான் முடியவில்லை.//
நான் இதெல்லாம் இப்போது தான் நடக்கிறது அப்படின்னு நெனைச்சுகிட்டேன், நீங்க சொல்லுறத பார்த்தா ரொம்ப வருசமா நடக்கிறது போல. கருத்துக்கு ரொம்ப நன்றிங்கம்மா. தங்கள் மாமியார் போலவே, என்னுடைய பெரிய மாமியாரும் இறைவனடி சேர்ந்து விட்டார்.
கையேடு said...
//Recently got a forward saying that there is a medicine named "imitinef mercilet" available free of cost at Adyar cancer institute specifically for blood cancer.//
thanks for the information, in our case there is no use, the person already passed away a month back.
அது எந்த மருத்துவமனை என்றும் சொல்லிவிடுவது மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க உதவுமே!
Post a Comment