பொதுவாக இங்கிருக்கும் இந்தியர்களிடம் மொழி, மாநில வித்தியாசம் இன்றி ஒரு விஷயம் செய்வதை பார்த்து இருக்கிறேன். அது, தன் மொழியை பற்றி, மாநிலத்தை பற்றி, இந்திய கலாச்சாரம் பற்றி அல்லது தன்னை பற்றி எப்பொழுது நேரம் கிடக்கிறதோ அப்பொழுது எல்லாம் அமெரிக்கர்களிடம் பேசுவார்கள். எந்த ஒரு நிகழ்விற்கும் "Back in India/Back home " என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் குறைந்தது 10-20 நிமிஷம் அவர்களின் பிரசங்கம் கேட்க வேண்டும். முடிவாக அவர்கள் சொல்ல விளைவது என்னவென்றால் "எங்கள் நாடு, மொழி, இனம் எவ்வளவு சிறந்தது. என்பதை தாண்டி, நான் எவ்வளவு உயர்ந்தவன் தெரியுமா? என்று பறை சாற்றவோ" என்று தோன்றும்.
இந்தியாவில் இருக்கின்றோம் என்றால், வேறு மொழி மக்களை சந்திக்கும் போது "Back in our town" என்று ஆரம்பிப்பார்கள். தன் மொழி எவ்வளவு சிறந்தது தெரியுமா என்று பேசுவதை நிறைய கண்டு இருக்கிறேன்.
இன்னும் ஒரு சிலரை சந்தித்து இருக்கிறேன், கொஞ்ச நேரத்தில் தன் சாதி பற்றி பேச ஆரம்பித்து இருப்பார்கள். நாம் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளுவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். அது தெரிந்து விட்டது என்றால் உடனே எப்படியாவது தங்கள் சாதி எப்படி சிறந்தது என்று குறிப்பிட விளைவதை கண்டு இருக்கிறேன். அதுவும் ஒரு சில சாதி மக்கள், நாம் அவர்கள் சாதியை சார்ந்தவர்கள் அல்லர் என்று தெரிந்ததுமே, நம்மிடம் நன்றாக பழகி கொண்டு இருந்தவர்கள் பிறகு விலக ஆரம்பிப்பார்கள். எனக்கு இவர்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும்.
இன்னும் சிலரை சந்தித்து இருக்கிறேன், நமக்கு தெரிந்தவர்களாக சிறு வயது நண்பர்களாக இருப்பார்கள், நெடு நாள் கழித்து சந்தித்து இருப்போம், ஆனால் அவர்களும் எதோ ஒரு வகையில் தன்னை பற்றி "Boasting/Bragging" செய்ய ஆரம்பிப்பார்கள். அது தன் ஊர், கார், சொத்து அல்லது பற்றி ஏதாவது ஒன்று இருக்கும்.
முன்பு எல்லாம் இப்படி தற்பெருமை பேசுபவர்களை பார்க்க கோவமாக வரும்..எப்பொழுது எல்லாம் வருவதே இல்லை. அதற்க்கு பதில் எனக்கு "வடிவேலுவின் துபாய் காமெடி" ஞாபகத்திற்கு வரும்"
அடுத்து, ஒரு சில மக்கள் இருக்கிறார்கள், இது பெரும்பாலும் 1930-1960 வரை பிறந்த தலைமுறையினரிடம் பார்க்கலாம். இவர்கள் எப்படி என்றால், தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாயை திறந்து கேட்க்க மாட்டார்கள். மாறாக, வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை தானாக முன் வந்து செய்யவேண்டும் என்று நினப்பார்கள். அப்படி நாமாக முன் வந்து வேண்டுமா என்று கேட்டாலும் உடனே வேண்டும் என்று ஒத்து கொள்ள மாட்டார்கள். நாம் இரண்டு மூன்று முறை தாங்க வேண்டும் என்று படுத்துவார்கள். அப்படி அவர்களை தாங்க வில்லை என்றால் தனக்கு மரியாதை கொடுக்க வில்லை என்று நினைத்துகொள்ளுவார்கள்.அதாவது வெட்டி வீம்பு பிடிப்பது. அதுவும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பிடிப்பது.
இவர்களை பற்றி அறிந்து இருந்த இடை தலைமுறையான 1960-1990 வரை தலைமுறை, ஓரளவு புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வாயை திறந்து கேட்காமல் செய்வதை பார்த்து இருக்கிறேன். அதே போல திரும்ப திரும்ப தாங்குவதையும் பார்த்து இருக்கிறேன்.
ஆனால், 1990 க்கு பிறகு பிறந்த தலைமுறை குழந்தைகள் பலர் very straight forward. பெரியவர்களாக இருப்பவர்கள் வாய் திறந்து கேட்காவிட்டால் இவர்களும் செய்வதில்லை. அப்படியே இவர்கள் கேட்டுபெரியவர்கள் முதல் முறை வேண்டாம் என்று சொன்னலோ அடுத்த முறை கேட்பதில்லை, தாங்குவதில்லை.
அதுவும் இங்கே புது யுகத்தில் 2000க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த விசயத்தில் மிக மிக straight forward. நாம் திரும்ப கேளு என்று சொன்னாலும் "அவர்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள், எதற்கு அவர்களை கம்பெல் செய்ய சொல்லுகிறாய்?" என்று பதில் கேள்வி கேட்கிறார்கள். இந்த தலை முறை வித்தியாசத்தால் நிறைய மனத்தாங்கல்கள், இடை தலைமுறையான நாம் பல நேரங்களில் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டி வருகிறது.
மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குணங்களும் இந்தியர்களுக்கே உரித்தானதா? அல்லது வேறு இன மக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, எனக்கு தெரிந்த நண்பர்கள் வரை, வேறு யாரிடமும்இந்த இரு குணங்களை பார்த்ததில்லை.உங்களுக்கு வேறு கருத்துகள் இருப்பின், தெரிவியுங்கள்.
நன்றி.
இந்தியாவில் இருக்கின்றோம் என்றால், வேறு மொழி மக்களை சந்திக்கும் போது "Back in our town" என்று ஆரம்பிப்பார்கள். தன் மொழி எவ்வளவு சிறந்தது தெரியுமா என்று பேசுவதை நிறைய கண்டு இருக்கிறேன்.
இன்னும் ஒரு சிலரை சந்தித்து இருக்கிறேன், கொஞ்ச நேரத்தில் தன் சாதி பற்றி பேச ஆரம்பித்து இருப்பார்கள். நாம் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளுவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். அது தெரிந்து விட்டது என்றால் உடனே எப்படியாவது தங்கள் சாதி எப்படி சிறந்தது என்று குறிப்பிட விளைவதை கண்டு இருக்கிறேன். அதுவும் ஒரு சில சாதி மக்கள், நாம் அவர்கள் சாதியை சார்ந்தவர்கள் அல்லர் என்று தெரிந்ததுமே, நம்மிடம் நன்றாக பழகி கொண்டு இருந்தவர்கள் பிறகு விலக ஆரம்பிப்பார்கள். எனக்கு இவர்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும்.
முன்பு எல்லாம் இப்படி தற்பெருமை பேசுபவர்களை பார்க்க கோவமாக வரும்..எப்பொழுது எல்லாம் வருவதே இல்லை. அதற்க்கு பதில் எனக்கு "வடிவேலுவின் துபாய் காமெடி" ஞாபகத்திற்கு வரும்"
அடுத்து, ஒரு சில மக்கள் இருக்கிறார்கள், இது பெரும்பாலும் 1930-1960 வரை பிறந்த தலைமுறையினரிடம் பார்க்கலாம். இவர்கள் எப்படி என்றால், தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாயை திறந்து கேட்க்க மாட்டார்கள். மாறாக, வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை தானாக முன் வந்து செய்யவேண்டும் என்று நினப்பார்கள். அப்படி நாமாக முன் வந்து வேண்டுமா என்று கேட்டாலும் உடனே வேண்டும் என்று ஒத்து கொள்ள மாட்டார்கள். நாம் இரண்டு மூன்று முறை தாங்க வேண்டும் என்று படுத்துவார்கள். அப்படி அவர்களை தாங்க வில்லை என்றால் தனக்கு மரியாதை கொடுக்க வில்லை என்று நினைத்துகொள்ளுவார்கள்.அதாவது வெட்டி வீம்பு பிடிப்பது. அதுவும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பிடிப்பது.
இவர்களை பற்றி அறிந்து இருந்த இடை தலைமுறையான 1960-1990 வரை தலைமுறை, ஓரளவு புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வாயை திறந்து கேட்காமல் செய்வதை பார்த்து இருக்கிறேன். அதே போல திரும்ப திரும்ப தாங்குவதையும் பார்த்து இருக்கிறேன்.
ஆனால், 1990 க்கு பிறகு பிறந்த தலைமுறை குழந்தைகள் பலர் very straight forward. பெரியவர்களாக இருப்பவர்கள் வாய் திறந்து கேட்காவிட்டால் இவர்களும் செய்வதில்லை. அப்படியே இவர்கள் கேட்டுபெரியவர்கள் முதல் முறை வேண்டாம் என்று சொன்னலோ அடுத்த முறை கேட்பதில்லை, தாங்குவதில்லை.
அதுவும் இங்கே புது யுகத்தில் 2000க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த விசயத்தில் மிக மிக straight forward. நாம் திரும்ப கேளு என்று சொன்னாலும் "அவர்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள், எதற்கு அவர்களை கம்பெல் செய்ய சொல்லுகிறாய்?" என்று பதில் கேள்வி கேட்கிறார்கள். இந்த தலை முறை வித்தியாசத்தால் நிறைய மனத்தாங்கல்கள், இடை தலைமுறையான நாம் பல நேரங்களில் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டி வருகிறது.
மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குணங்களும் இந்தியர்களுக்கே உரித்தானதா? அல்லது வேறு இன மக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, எனக்கு தெரிந்த நண்பர்கள் வரை, வேறு யாரிடமும்இந்த இரு குணங்களை பார்த்ததில்லை.உங்களுக்கு வேறு கருத்துகள் இருப்பின், தெரிவியுங்கள்.
நன்றி.
4 comments:
நல்ல ஒரு அலசல்.....உங்களிடம் இருந்து பல மாறுபட்ட அதே நேரத்தில் மிக சுருக்கமாக நறுக்கென பல பதிவுகள் வருகின்றன. பாராட்டுக்கள்
மனதில் பட்டதை நன்றாகவும் விவரமாகவும் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
நீங்க் சொன்னதற்கு நேர் எதிரான ஆட்களும் இருக்கிறார்கள். என்னமோ அமெரிக்காவிலேயே பொறந்தவர்கள் மாதிரி எதற்கெடுத்தாலும் சொந்த ஊரை குறை சொல்லும் வந்தேறிகள் சிலரும் உண்டு. 'சோத்துக்கே வழியில்லை, இவனுக எதுக்கு மங்கள்யான் விடுறானுக' என்பதில் ஆரம்பித்து 'சென்னைல ஒரு நான்-வெஜ் பஃபே ஆயிரங்கரான், இங்கயே பஃபே அதை விட கம்மியாச்சே, சரியா ஏமாத்துறானுக' என விதவிதமாக மொக்கை போடுபவர் உண்டு.
வயசாகி வீட்டிலிருக்கும் இந்திய பெரிசுகளின் தொந்தரவு வேறுவிதம். தாங்களுக்கு தாங்களே அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்து இம்சிப்பார்கள். முன்பொரு தடவை நண்பரின் வீட்டோடு இருக்கும் அவரது மாமனார்-மாமியார் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வருவதாக ஈமெயில் அனுப்பிவிட்டு கூடவே நீண்ட நெடிய மெனுவையும் அனுப்பினர் - சில ஐட்டம்ஸ் ஒத்துக்காதாம்... இப்படியும் சிலர்!
இந்தியர்களிடம் ( தெற்காசியர்கள் என்று கூட சொல்லலாம், இலங்கையர்களும் அப்படியே ) இருசாரார்கள் இருக்கின்றார்கள். ஒரு கூட்டம் எதற்கு எடுத்தாலும் தம் நாடு, தம் மாநிலம், தம் மொழி, தம் இனம், தம் மதம், தம் ஜாதி மட்டுமே பெஸ்ட் என்று பேசுவார்கள். அப்படி என்றால் ஏன் அங்கே இல்லாமல் இங்கே வந்தீர்கள் எனக் கேட்டால், என்னவோ இங்கு வந்து இந்த நாட்டை முன்னேற்றத் தான் என்பது போல பேசுவார்கள். தம்பட்டம் அடித்துக் கொள்வதில் அப்படி ஒரு சுகம் காண்பார்கள்.
மற்றொரு கூட்டம், சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பது போல எதற்கெடுத்தாலும் தாம் வாழும் ( அமெரிக்காவோ, கனடவோ, ஐரோப்பாவோ ) நாடு தான் சூப்பர். இந்தியாவில் ஒரே நாற்றம், சுத்தமில்லை, மக்களிடையே ஒழுங்கில்லை என்பதாக எல்லாவற்றையும் மட்டம் தட்டி பேசுவதோடோ, தமது மேற்குலக வாழ்வும் வசதியுமே ஆகா ஓகோ என்பார்கள்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்த இருசாராரையும் ஒருவருக்கு பேச விட்டு மோத விட்டு நான் நகர்ந்து விடுவேன்.
மற்றது 1930-1960 வரையிலான தலைக்கணம் பிடித்த தலைமுறை, பழம் பெருமை பேசுவதிலும், தம்மை விட இளையோர் எல்லாம் தமது அடிமைகள் போல நினைப்பதிலும் வல்லவர்கள். 1960 - 1980 வரையில் பிறந்தோரோ குழப்பவாதிகள், அங்குமில்லை இங்குமில்லை என்பது போல செயல்படுவார்கள், பேசுவது ஒன்று நடந்து கொள்வது வேறொன்று மாதிரி இருக்கும். 1980 - 1990- வரையில் பிறந்தோரோ எதைப் பற்றியும் கவலையில்லை, எதோ வாழ்க்கை ஓடுது என்பது போல இருப்பார்கள், எல்லா விடயங்களிலும் அரைகுறை ஞானமே வைத்திருப்பார்கள். ( இந்த லிஸ்டில் நானும் அடங்குவேன் ). 1990-2000 வரை பிறந்தோருக்கு சுகமான வாழ்க்கை, ஜாலியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக செயல்படுவார்கள். வேறு விடயங்களில் அக்கறை கிடையாது, ஆனால் தமது காரியங்களில் கண்னும் கருத்துமாய் இருப்பார்கள்.
இவை எல்லாம் நான் கண்ட வரையில் கவனித்தவை, விதிவிலக்குகள் எங்குமுண்டு, பொதுப்படையாக சொல்கின்றேன் அவ்வளவே.
Post a Comment