Tuesday, July 28, 2015

படித்தது, பார்த்தது, வருந்தியது!

படித்தது 

ராபர்ட் கிரீன் என்னுடைய பிடித்த எழுத்தாளர்கள் லிஸ்டில் இருப்பவர். இவரின் 48 Laws of Power மற்றும் Mastery இரண்டும் ஒவ்வொரு வரியும் அடிக்கோடிட்டு படித்து இருக்கிறேன். எப்பொழுதெல்லாம் ஆபிஸ் விசயங்களில் நிறைய டிப்ஸ், எப்படி பிரச்சனைகளை சமாளிப்பது என்பதெல்லாம் அறிய நான் ரெபர் செய்வது இவரின் புத்தகங்களாக தான் இருக்கும். பவர் அல்லது கண்ட்ரோல் நம்மிடம் இருந்து விலகுவது போன்று தோன்றும் போதோ அல்லது பவர் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நான் ரெபர் செய்வது இவரின் இந்த புத்தகங்களாக தான் இருக்கும்.


இவரின் இன்னொரு புத்தகம் "The art of Seduction" நான் படித்திருக்க வில்லை. ஏனெனில் Seduction என்பது பாலியல் சார்ந்தது என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் என் என்னுடைய என்னத்தை மாற்றி கொள்ள உதவி இருக்கின்றனர். ஏனெனில் கவர்ந்து இழுக்க கூடிய, மக்களை மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல கட்டிபோடகூடிய பேச்சாற்றல் அல்லது ப்ரெசென்ஸ், கவர்ந்து இழுக்க கூடிய தன்மை ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களிடம் இருந்து இருக்கிறது.  சொல்ல போனால் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆரம்ப கால பேச்சுக்கள் கேட்டால் அவர்  எப்பொழுதும் கவர்ந்து இழுக்கக்கூடிய பேச்சாளராக இருந்ததில்லை என்று புரியும் . பின்னர் எப்படி இவர்களால் கவர்ந்து இழுக்க கூடியவர்களாக மாற முடிந்தது என்று நினைத்து இருக்கிறேன்.  ஆனால் "The art of Seduction" புத்தகம் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஸ்டேஜ் ப்ரெசென்சை எப்படி உபயோகிப்பது என்று நிறைய டிப்ஸ் கொடுகிறது.  

புத்தகத்தின் துவக்கத்தில் வரலாற்றில் இருந்த சிறந்த seducers ஆன கிளியோபாட்ரா, ஜோசபின் போன்றோர் பற்றி குறிப்பிடும்  ஆசிரியர், தற்பொழுது எப்படி seducing அரசியலில் உபயோகிக்கபடுகிறது என்று வரை குறிப்பிடுகிறார்.  


பார்த்தது 

இந்த புக்கை படிக்க ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு  இளவரசி டயானா அவர்களின் பிரபலமான 1995  தொலைக்காட்சி பேட்டி ஒன்று தற்செயலாக காண நேர்ந்தது.அதில் அவர் அவரின் கணவருக்கும், கணவரின் தற்போதைய மனைவி கமிலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் குறிப்பிட்டதை காண நேர்ந்தது. இதை பார்த்தவுடன் எனக்கு "The art of Seduction" புக்கில் இருந்த முதல் சாப்ட்டர் "தி சைரென்" ஞாபகத்திற்கு வந்தது.

இளவரசி டயானா மிக அழகானவர், கல்யாணம் ஆன போது  உலகமே அவர்களை வியந்து பார்த்தது. இளவரசரோ எல்லாம் தன் வழியில் நடக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட "Spoiled Brat". உலகமே வியந்து பாராட்டிய ஒரு அழகு கொண்டவர் டயானா. இப்படி அழகு சிலை வாய்க்கப்பட்ட அவரோ உலகின் மிக சிறந்த லக்கி தான் என்று சந்தோசம் பற்றிருக்க வேண்டும். மாறாக திருமணதிற்கு முதலில் தொடர்பில் இருந்த தன் காதலியுடன், தற்பொழுது வேறொருவர் மனைவியாக இருப்பவரிடம்  மீண்டும் உறவை புதுப்பித்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இத்தனைக்கும் கமிலா, டயானாவின் அழகிற்கு சிறிதும் அருகில் வர முடியாது. ஆயினும் எப்படி சார்லஸ் போன்ற இளவரசரை கவர அவரால் முடிந்தது.

கமிலாவிடம் ஒரு நல்ல திறமை இருந்து இருக்கிறது, அது கவர்ந்து இழுக்க கூடிய ஒரு திறன். நல்ல பேச்சு திறமை. நிறைய விசயங்களில் அறிவு என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிராக இருந்து இருக்கிறார். எல்லாரும் இளவரசரை கண்டு பயப்பட, இவரோ அவருக்கு சரி சமமாக இருந்து பேச, சவால் விட கூடியவராக இருந்து இருக்கிறார். அதுவரை பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்று பார்த்து பழக்கப்பட்ட இளவரசர், தன்னை சவால் விடக்கூடிய தன்னை ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களில் யோசிக்க வைத்த கமிலா இளவரசரை கவர்ந்து இருக்கிறார். இது ஒரு seductive குணம். அது நன்கு கைவர பட்டவராக இருந்து இருக்கிறார் கமிலா.

இன்னொரு விஷயம் அவருக்கும் டயானாவுக்கும் இருந்த வித்தியாசம். கமிலா, சார்லஸ் ஐ எப்பொழுதும் ஓவர்ஷடோ செய்யவில்லை, அதாவது, சார்லசின் புகழை தன் அழகு அல்லது மீடியா பார்வை கொண்டு தன் பக்கம் திருப்பவில்லை. எப்பொழுதும் தான் சார்லஸ்சின் பின்னால் என்று இருந்து இருக்கிறார். டயானா, தான் விரும்பவில்லை என்றாலும் மீடியாக்களுக்கு அந்த நாட்களில் நல்ல தீனி போட்டு இருக்கிறார். பத்திரிக்கை, டிவி என்று சகலமும் அவரை நன்கு கவர் செய்து இருக்கின்றன. இது பிரபலமாக இருந்ததற்கு அவர் கொடுத்த பரிசு.

தற்போது 10 வருடமாக தன் பழைய காதலியை  திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார்கள்.


வருந்தியது

கடந்த இரண்டு நாட்களாக, எங்கு திரும்பினாலும் கலாம், கலாம் தான். Blog, FB, Whatsapp என்று அனைத்திலும் நிறைந்து இருந்தார் கலாம் அவர்கள். வழக்கமாக கலாய்க்கும், மொக்கை போடும்  என் தோழிகள் அனைவரும் நேற்று மிக வருத்தத்தில் இருந்தனர்.  என் அண்ணனிடம் இந்தியாவிற்கு பேசும்போது  கூட கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். பொது விடுமுறை அறிவித்து இருப்பாதாக சொன்னார்.  அந்த அளவிற்கு நிறைய சாதாரண மனிதர்களின் உணர்வுகளை அவர் எப்படி கவர்ந்து  இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. சாதாரண மனிதராக இருந்து, உழைப்பால் உயர்ந்த கலாம் அவர்களும் மக்களை எப்படி உழைப்பால், தன்னம்பிக்கையால் கவரலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.

நன்றி.


4 comments:

நந்தவனத்தான் said...

அவர் விஞ்ஞானியாக பெரிய ஆளாக கூறஇயலாதுதான். ஆனால் ஒரு நல்ல மனிதர். அவரை மாதிரி நல்லவர்கள் மேலே வருவது சிரமம். ஏனெனில் ஏதாவது அழிச்சாட்டியம் பண்ணாமல் மேலே போனவது மிகவும் கடினம். நல்லவர்கள் ரெபல் ஆக இருப்பார்கள் - ஸிஸ்டத்துடன் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுவார்கள், இல்லையெனில் தாங்களும் சுயத்தை இழந்து அசிங்கமாக மாறி முன்னேறுவார்கள். ஆனால் இவர் ஸிஸ்டத்தை புரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு மாறி ஆனால் சுயத்தை இழக்காமல் முன்னேறியவர். இதனால் அவரின் மீது குற்றச்சாட்டுகள் உண்டு - ஆனால் அந்த சமரசத்தை மேற்கொண்டிருக்காவிட்டால், கலாம் இருந்த இடம் தெரியாமல் போன பல நல்லவர்களைப் போல கரைந்திருப்பார். தாங்கள் மேலே குறிப்பிட்ட புத்தகங்கள் இத்தகைய அரசியல் குறித்தானவைதானே.

முகுந்த் அம்மா said...

Actually, yes.. These books talk about how to create an aura of fantasy and make people believe that there exist a world in which we will be happy powerful, rich etc etc.or all our fantasies will come true. These are some of the tactics
Seducers use. You can correlate these things to politicians around the world. From Robert Green's words.

"Lure the target deep into your seduction by creating the proper temptation: a glimpse of the pleasures to come. As the serpent tempted Eve with the promise of forbidden knowledge, you must awaken a desire in your targets that they cannot control. Find that weakness of theirs, that fantasy that has yet to be realized, and hint that you can lead them toward it. The key is to keep it vague. Stimulate a curiosity stronger than the doubts and anxieties that go with it, and they will follow you."

Anonymous said...

வித்தியாசமான பார்வை. எழுதியே ஒரு கூட்டத்த கவர்ந்து இழுக்குறதும் அந்த வகைதான. இல்லையா?
எழுதுற அனைவருடைய ஆசையும் அது தான....
நல்ல பதிவு.

வருண் said...

Here is something about beautiful, charming charismatic Diana's personal life..

**Personal life of Hewitt with whom she had an affair while Charles had a relatioship with married Camilla!!

Diana stated in her 1995 Panorama interview that she had committed adultery with Hewitt. His former military regiment declared him persona non grata at their barracks.[10]

Hewitt had considered committing suicide after his affair with Diana ended. He was preparing for a trip to France, and he wanted to shoot himself. He said, "I got in my car and loaded a few things up to get on the ferry to go to France – to shoot myself .... And then my mother insisted on coming with me. And, if she hadn't, I would have probably shot myself. So I owe her my life really".[15]

Persistent suggestions have been made in the media that Hewitt, and not Charles, is the biological father of Prince Harry. Hewitt stated to the press in 2002 that Harry had already been born by the time Hewitt and Diana began their affair, a statement also made by Diana's police bodyguard.[16]***

Well if it is ROYAL GARBAGE, it never smells bad, that's my understanding! She is just another normal woman. I wonder why the world is thinking that she was Goddess or something. I never understand this. She is beautiful, Charismatic..

SO WHAT?!