மேலை நாட்டவர்களிடம் இருந்து பல நல்ல? விசயங்களை இந்தியாவில் பின்பற்றுகிறார்கள், குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள் .உதாரணமாக, கிட்டத்தட்ட எல்லா குழந்தைகள் டிவி சீரியல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பபடுகின்றன. சாப்பாடு விசயத்தில், பிட்சா, பர்கர், பிரைஸ், சிக்கன் விங்க்ஸ், சாண்ட்விச், ப்ரௌனி, புட்டிங், நியூடெல்லா, பீனட் பட்டர்... என்று கொடுக்கிறோம். அதே போல விளையாட்டு பொம்மைகள் என்றால்..ஹாட் வீல்ஸ், தாமஸ் அண்ட் பிரெண்ட்ஸ், டோரா, பார்பி பொம்மைகள், பவர் ரேன்ஜெர்ஸ் ...என்று நிறைய பொருட்களை தமிழ் நாட்டில் குழந்தைகள் விளையாட என்று கொடுக்கிறார்கள்.
இப்படி நிறைய விசயங்களை மேலை நாட்டிடம் இருந்து பின்பற்றும் மக்கள். இவர்களிடம் இருக்கும் முக்கியமான நல்ல குணமான "பொய் பேசாமல் இருப்பது" அல்லது "தவறு செய்து விட்டால் ஒத்து கொண்டு, பின்விளைவுகளை தைரியமாக சந்திப்பது" என்ற ஒரு நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்கலாமோ என்று தோன்றியது.
நான் பார்த்தவரை இங்கு சிறு குழந்தைகளுக்கு பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி "Being Honest" என்ற ஒரு பழக்கத்தை சொல்லி கொடுக்கிறார்கள். அதற்காகவே Pinocchio கதைகளை போன்ற கதைகளை சொல்லுகிறார்கள். தவறு செய்வது இயல்பு. அப்படி செய்ததாலும், தவறை எப்படி ஒத்து கொள்ளுவது. ஒத்து கொண்ட பின் எப்படி தவறை சரி செய்வது. என்று திரும்ப திரும்ப குழந்தைகளுக்கு சொல்லி தருகிறார்கள்.
இதனை பற்றி ஏன் இப்பொழுது குறிப்பிடுகின்றேன் என்றால்..இந்தியாவில் குழந்தைகள் சிறு சிறு விசயங்களுக்கு கூட பொய்சொல்லுவதை , உடான்ஸ்விடுவதை பார்க்க முடிந்தது. ஒரு சில நேரம் பெற்றோரே குழந்தைகள் பொய் பேசுவதை அனுமதிக்கிரார்களோ அல்லது உற்சாகபடுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. உதாரணமாக, சில காரியங்கள் நெருங்கிய சொந்தகளுக்கு கூட தெரிய கூடாது என்று, அவர்கள் முன் நம் வீட்டில் நடந்ததை சொல்லாமல் இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் பொய் சொல்ல சொல்லுகிறார்கள். அல்லது குழந்தைகளாகவே முன் வந்து அப்படி பொய் சொன்னால் "சமத்து" என்று மெச்சுகிறார்கள். அப்படி செய்யும் நிகழ்வை "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்" அல்லது "இவன் பிழைச்சுகுவான்!" என்று சொல்லுகிறார்கள்.
இப்படி அனைத்திற்கும் பொய் உரைப்பது நல்லதா? எதற்கு திருவள்ளுவர் "வாய்மை" அதிகாரத்தில் பொய் பேசாமல் இருப்பதை பற்றி மாங்கு மாங்குன்னு எழுதி வச்சு இருக்கிறார்.
சிறு வயதில் இருந்து பொய் உரைக்கும் குழந்தைகள் பெரியவர்களானதும் என்னாகும். எப்பொழுதும், எல்லா விசயத்திற்கும் பொய் உரைப்பார்கள். அதனால், என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு?, குடும்பமோ, வேலையோ, உறவுகளோ ஒரு நம்பிக்கையில் உருவானவை. இவர் நமக்கு நம்பிக்கையாக இருப்பார், நம்மை கைவிட மாட்டார், இவர் ஒழுங்காக வேலை பார்பார், வேலையில் கையாடல் செய்ய மாட்டார், நேர்மையாக இருப்பார் என்று ஒரு நம்பிக்கையில் தான் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் பொய் உரைக்கும் ஒருவரை எவரும் வேலையில் வைத்து கொள்ள மாட்டார்கள். குடும்பத்திலும் நம்பிக்கை இருக்காது. யாரும் நம்பாமல், யாரையும் நம்பாமல் குழப்பமான நிலை வரும். யாரை பார்த்தாலும் சந்தேகம் வரும். நீங்கள் பொய் சொல்லுவதை போல அவரும் சொல்லுவார்கள் என்று தோன்றும். வாழ்க்கை நரகமாகி விடும். இந்த நிலை தேவையா. யோசியுங்கள்.
நீங்கள் அதற்காக குழந்த்கைகள் தவறே செய்யாமல் ஒழுக்க சீலர் ஆக இருக்க வேண்டும், குழந்தைகளை அப்படி வளர்க்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. பொய் சொல்ல எப்பொழுது குழந்தைகள் ஆரம்பிக்கிறார்கள்? ஒரு தவறு செய்து விட்டு, பெற்றோரிடம் சொன்னால் நம்மை தண்டிப்பார்கள் என்னும் போது தான். தவறு செய்வது எல்லாருடைய இயல்பு. அப்படி குழந்தைகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை தராமல், அவர்களிடம் பேசுங்கள். தவற்றை எப்படி திருத்தி கொள்ளுவது என்று சொல்லி கொடுங்கள்.
என்னை பொருத்தவரை "Being Honest" மற்றும் "எப்படி தவறை சரி செய்வது" என்று சொல்லி கொடுத்துவிட்டால் போதும். குழந்தைகள் எல்லாவற்றுக்கும் பொய் சொல்ல மாட்டார்கள், பின்நாளில் வருந்தவும் மாட்டார்கள்.
நன்றி.
7 comments:
இந்தியாவில் 'Being Honest" என்பது இப்போது செல்லா காசாகிவிட்டது . பொய் பேசினால்தான் பிழைக்க முடியும் என்பது இந்தியர்களின் மனதில் ஆழ பதிந்துவிட்டது. தலைவர்கள் முதல் கடைகோடியில் வசிக்கும் மனிதர்கள் வரை பொய் பேசிதான் வாழ்க்கிறார்கள் . கைவிட்டு எண்ணக் கூடிய அளவில் சிலர்தான் Honest ஆக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை
'Being Honest" என்பதி இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மறைந்து வருகிறது ஆனால் இந்தியாவில் இது இல்லாமலே போய்விட்டது என்பதுதான் உண்மை
ஆனா பாருங்க, இதோ பாஸிடிவ் சைடா, சின்ன வயசுல இருந்து இப்படி கதை விட்டுகிட்டே வளரதாலேயோ என்னவோ... எல்லா தமிழனும் - அவன் பீச்சுல சுண்டல் விக்கறவனா இருந்தாலும் சரி, பிஎச்டி படிச்சவன்னாலும் சரி - கலைத்தாகம் ஊற்றெடுக்க சினிமாக்காரனாகிவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறான். இதுல ஒரே சோகம் என்னன்னா, கடைசில படமெடுக்கும் போது ஒரு கொரியகதையோ ஹாலிவுட் படத்தையோ சுட்டுதான் படமெடுப்பானுக.
I am not sure I agree with this post. I dont think I need to learn about honesty from american culture/system? That is really INSULTING for people like me. I am honest here!
Was s n ow d e n NOT honest?
Was he rewarded for his honesty?
Teaching children is one thing. What those children become later is another thing.
I think you need to re-define what is honesty!
@varun
The topic of this post is Teaching good morals to kids and making them follow it.
I am talking about teaching good morals to kids and your point of view is about politicians/goventment not being honest.
Have you seen anywhere in western countries encouraging kids not being honest. Have you seen any western parent encouraging dishonesty.
For survival people try to deviate being dishonest and it is becoming common in office politics. But if found/ proven it is considered as offense and concerned people are expelled from their respective jobs.
In western countries they try to preach honesty in schools and even adults lying for small small things doesn't happen. Until there is a life and death or survival problem, I find most of the westerners being honest.
***In western countries they try to preach honesty in schools ***
How about in India? The children are NOT??
I was preached honesty in my schools and by my parents as well at home. I did not grow up in America. Are you telling me the India I am talking about, is DEAD already?
***even adults lying for small small things doesn't happen.***
You must be kidding! I have seen the "other Americans" whom you did not have a chance to work with or interact with. They lie heartlessly and shamelessly. You would not even know they are lying as they don't have any "guilty conscience" to lie. BTW, I am not saying Indians wont lie or any sweeping statements like that. I disagree with what you are theorizing based on your experience with whoever you interacted with in the US. Americans are better liars than Indians and so you would not be able to figure out that they are lying.
Well, we need to disagree to agree on this and move on! :)
@varun
How many schools have good morals class in India. From what I learnt from my sister in law who is a teacher in a matriculation school, Those classes are replaced by other extra classes, which primarily focus on memorizing chapters. I doubt nowadays they teach even extra curricular activities at school like sewing, music and games. I hear that in lower grades like 1-5 they might have PT periods but, in higher grades like 9-12 there are no extra curricular activities and no moral classes. I am talking about govt schools and matriculation schools and not CBSC a schools. I don't know what they do there. If someone know please let me know
You and me are still talking about our school times in which atleast the kids were taught moral lessons in schools. And kids were taught honesty when we were kids by our parents. As I mentioned in th post, nowadays I observed the kids are not taught honesty by parents.
Regarding Americans lying and acting like not lying. I probably have not come across many like that. In the research field where I am in, if you lie and publish a paper your degree and career will be in jeopardy. I am not saying that they are mahatma's and they do lie, but not for small small things.
As you said we should agree that we have disagreement regarding this and move on :)
Your concern is right. In our schools nowadays, students don’t learn or aren’t taught morals. Their story book may contain morals but they are read for pleasure, not for edification. I said in my argument in mintamil recently that Tamils in TN have a helluva lot of moral books like Thrukkural, Naladiyar, Athichoodi and the like. But they are leant merely to quote in lectures in order to win awards or applause only.
As a child, I had such non-detailed story books of morals. I learnt little morals from them; so also, my class mates. My father got angry when I told lies to escape his wrath. But, later on, I understood he was against lying only in so far as my act offended his dignity; not against lying per se. A child shouldn’t cheat on his parents – was his opinion. It implied he can at other places with other people. My mother insisted on me getting rich by all means - fair or foul, crooked or straight makes no difference to her as long as we got our bagful. Teachers lie to schools; schools lie to DEOs; DEOs lie to District Collectors, DCs lie to the Education Secretary and the ES lies to the CM and the CM lies to people. Our current CM keeps the fact about her health tight secret and wants to show to people all is hunky dory with her.
All this is made aware to children as they grow up. You are worried that this sort of individual culture will cascade up or down, thereby bedevilling society as a whole. Not to worry:: the society has already gone to dogs.
I agree with you that the westerners are better than us. Their children get to know all that is necessary in morals. Transparency International reports and Corruption Indices, rank India among the lowest countries. Western countries fare far better than us in such charts. No one is 100% perfect; and, the Westerners don’t have snow-white purity. But they don’t make a virtue of being corrupt. We do. Here, in India, fair is foul; and foul is fair - and all this is quickly passed to children by both parents and schools either directly or indirectly. These elders indicate to the children, as my father did it to me, cheat all but not us.
Bala Sundara Vinayagam
Post a Comment