Tuesday, July 21, 2015

திருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .

என்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில்  முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று  நீளமான அடர்த்தியான முடி, அதுவும்  அவர்கள் செய்வது போல நிறைய சடைகள் போட்டு கொண்டு வந்து இருந்தாள் , எப்படி முடி முளைத்தது அதுவும் இவ்வளவு முடி என்று எனக்கு சந்தேகம். ஒரு வேலை விக் எதுவும் வைத்து இருப்பாளோ என்று கேட்டதில் அவள் சொன்னது இது தான் "ஹேர் எக்ஸ்டென்சன்  எனப்படும் . முடியை நீளபடுத்தும்  ட்ரீட்மென்ட் செய்து இருப்பதாகவும்.இப்படி  நீள படுத்தும் ட்ரீட்மென்ட் இல் இந்தியாவில் இருந்து வரும் முடிக்கு விலை அதிகம்" என்றும் கூறினாள்.இது என்னடா புது கதை, என்று எனக்கு இதனை பற்றி அதிகம் தெரியாததால் என்ன தான் சொல்கிறாள்  என்று வாசித்து பார்த்தேன். முடியை வைத்து நடக்கும் ஒரு மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி பார்த்து அசந்து போனேன்.

ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் திருப்பதிக்கு சென்று தங்கள் முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். இவர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியினை ஏலம் விட்டு கிட்டத்தட்ட வருடத்திற்கு 2000 கோடி சம்பாதிக்கிறார்கள் திருப்பதி தேவஸ்தானத்தார்.

ஒரு பெண்ணின் தலையில் இருந்து சராசரியாக 283.5 கிராம் முடி கிடைக்கிறது. இப்படி காணிக்கை கொடுக்கும் முடி வெர்ஜின் முடி அல்லது கன்னி முடி என்று ஹேர் இண்டஸ்ட்ரி இல் அழைக்க படுகிறது. அதாவது, எந்த ட்ரீட்மென்ட், கலரிங், டையிங் என்று எதுவும் இல்லாமல் சுத்தமான முடி என்று இது அழைக்க படுகிறது. பொதுவாக இந்தியர்களின் முடி அடர்த்தியானது, நீளமானது மற்றும் வலுவானது. எந்த டிசைனுக்கும், கலரிங் க்கும் பொருந்தும் முடி.

இப்படி நீளமான 283.5 கிராம் முடிக்கு வெளிநாட்டு மார்கெட்டில் இருக்கும் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30ஆயிரம் ரூபாய். அதாவது தன்னுடைய 30 ஆயிரம் மதிப்புள்ள முடியை காணிக்கையாக கொடுக்கிறார் அந்த பெண். ஆனால் இது ஏலம் விடுவதற்கு முன் மதிப்பு. பொதுவாக ஏலம் எடுத்த பின் கிடக்கும் முடிகளை இவர்கள் ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.

1. 31 இன்சை விட நீளமாக முடி
2. 16-30 இன்ச் நீளமான முடி
3. 10-15 இன்ச் நீளமான முடி
4. 5-10 இன்ச் நீளமான முடி
5. 5 இன்ச்க்கும் குறைவான நீளமான முடி

ஒவ்வொரு வகையான முடிக்கும் ஒரு இண்டஸ்ட்ரி இருக்கிறது. நீளமான, அடர்த்தியான முடிகள் பாலிவூட் நடிகைகளில் இருந்து ஹாலிவூட் நடிகை வரை தங்கள் விக் ஆக பயன்படுத்துகிறார்கள்.
நீளம் குறைவான சிறிய முடிகள் சீனாவில் விக்க்குகலா தயாரிக்கப்பட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றன.

ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு ஹேர் சலூனும் தற்பொழுது இந்திய முடிகளை விக்காக, ஹேர் எக்ஸ்டென்சன்க்கு என்று பயன் படுத்துகிறார்கள்.  விக்குகளாக மாற்றப்பட்டவுடன் அல்லது ஹேர் எச்ட்டேன்சொனுக்கு என்று பயன்படுத்தப்படும் முடியின் விலை அதன் தரத்தை பொறுத்து கிட்டத்தட்ட 3000 பவுண்டு வரை கூட செல்லுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ருபாய்.

உதாரணமாக ஹாலிவூட் நடிகை Eva Longoria செய்திருக்கும் ஹேர் எக்ஸ்ட்டேன்சியன் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.
படங்கள் உதவி http://www.dailymail.co.uk/femail/article-2153691/From-Hindu-temple-Hollywood-hairdo-How-thousands-Indian-women-having-heads-shaved-gods-hair-end-3-000-extensions.html


மக்களின் கடவுள் நம்பிக்கையும் அதனை சுற்றி நடக்கும் மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி யும் மலைக்க வைக்கின்றன. எப்படியோ, கோடிகணக்கில் பணம் காணிக்கையாகவும், காணிக்கை முடிகளை கொண்டும் கோடி கோடியாக திருப்பதி மற்றும் பழனி  தேவஸ்தான மக்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை.


டிஸ்கி

இது, படித்ததை, பார்த்ததை வைத்து எழுதியது மட்டுமே.. யாருடைய கடவுள் நம்பிக்கையும் பற்றி கூறவில்லை.


நன்றி.

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

முகுந்த்அம்மா, வழக்கம் போல் ஒரு நல்ல தகவல் கட்டுரை. நீங்கள் தகவல் கண்ணோட்டத்தில் கொடுத்ததை, நான் உணர்வுகளின் அடிப்படையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

On the other note, In my opinion they should really think about compensating those devotees.

-ஆரூர் பாஸ்கர்

முகுந்த் அம்மா said...

@ஆரூர் பாஸ்கர்

"On the other note, In my opinion they should really think about compensating those devotees."

Well, I would also would like to give them some compensation. But I believe It's highly unlikely.

Thanks for the comment.