Friday, July 24, 2015

ஸ்டீவ் ஜாப்ஸ்ம் கவர்ச்சியான பேச்சாளர்களும்

என்னது ஸ்டீவ் ஜாப்ஸ் கவர்ச்சியா என்று கேட்பவர்களுக்கு?

எத்தனையோ பேர் மேடையில் பேசுகிறார்கள்,  கட்சி கூட்டங்களில் முழங்குகிறார்கள் அல்லது பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்குகள் என்று அனைத்திலும் பேசுவார்கள். ஆனால் அப்படி பேசுபவர்களில் ஒரு சிலர் பேச்சு மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கும். திரும்ப திரும்ப அவர் பேச மாட்டாரா என்று நினைக்க வைக்கும். இப்படி பேச்சால் கவர்ந்து இழுக்க வைக்க தெரிந்தவர்கள் மிக சிறந்த அரசியல் தலைவர்கள் ஆகி இருக்கிறார்கள்.

காந்தி, மார்டின் லூதர் கிங், ஹிட்லர், மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ...என்று சொல்லி கொண்டே போகலாம். வேறு எங்கும் செல்ல வேண்டாம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வும் மிக சிறந்த பேச்சாளர். கரிஸ்மாடிக்/ கவர்ச்சியான பேச்சாளர்.

அதே போல தற்போது விசுவல் மீடியாவில் இருக்கும் பலரும் சிறந்த VJ/RJ ஆவதில்லை. மாறாக, நன்றாக பேச தெரிந்த, ப்ரெசென்ட் செய்ய தெரிந்த ஒரு சிலரே நன்றாக சோபிக்க முடிகிறது.

ஆபிஸ்களில் பப்ளிக் ஸ்பீகிங் என்று "டோஸ்ட் மாஸ்டர்" போன்ற கோர்ஸ்கள் நடத்துகிறார்கள். அதில் அவர்கள் சொல்லி கொடுக்கும் சில விசயங்கள் எப்படி பார்வையாளர்களை பேச்சால் கவர்ந்து இழுப்பது. எப்படி நீங்கள் பேசவேண்டும், உங்கள் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், எப்படி பார்வையாளர்களையும் பேச்சுடன் இன்வோல்வ் செய்யவேண்டும் என்று நிறைய சொல்லி தருகிறார்கள்.

எல்லாரும் நல்ல பேச்சாளராக, பார்வையாளர்களை கட்டி போடுபவராக முடியாது, அதற்க்கு ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ், ஸ்மார்ட் நெஸ் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்த பலர் சப்ஜெக்ட்டில் புலியாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் கருத்தரங்குகளில் பேச முடியாது அல்லது பேசினாலும் சப்ஜெக்டில் உள் நுழைந்து மூலை முடுக்கு எல்லாம் பேசுவார்கள் ஆனால், ஒரு சாதாரண மனிதருக்கு புரியும் படி பேச மாட்டார்கள்.

பலர் அரசியல் தலைவர் ஆக மாறுவதற்கு முன் எப்படி பேசுவது என்று கோச்சிங் எடுத்து கொள்ளுவார்கள். அதே போல விசுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கும்  அதற்கென்று கோர்ஸ்கள் உண்டு.

ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு அரசியல் தலைவரோ அல்லது மீடியா ஆளோ அல்ல, இருப்பினும் அவரின் ஒரு உரை இன்றளவும் பல கல்லூரி, பள்ளிகளில் மற்றும் தன்னம்பிக்கை கோர்ஸ்களில் காட்டபடுகிறது  ஒரு புகழ் பெற்ற கம்பெனி நிறுவனர், உலகை திரும்பி பார்க்க வைத்தவர், அவர் கவர்ந்து இழுக்க கூடிய பேச்சாளராகவும்  நான் பார்த்தது ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தான்.


ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியாதவர்களுக்கு.

இன்று உலகமெங்கும் மூலை முடுக்குகள் அனைத்திலும் ஆக்கிரமித்து இருக்கும் ஆப்பிள் Mac  கம்ப்யூட்டர்கள் , Ipad, Iphone, Ipod  என்று சகலமும் இவரின் உழைப்பில் வந்தவை. ஆப்பிள் கம்பெனியை உருவாக்கியவர்.


சாவதற்கு முன் வாழ்வது எப்படி--ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் 2005 உரை 

என்னை மிகவும் கவர்ந்த மனிதர் இவர். அவரின் சுயசரிதை படித்து இருக்கிறேன். சாவதற்கு முன் வாழ்வது எப்படி என்ற 2005 ஸ்டான்போர்ட் பல்கலைகழக உரை என்னை மிகவும் உலுக்கிய ஒன்று. அதில் அவர் குறிப்பிட்ட சில துவக்க கால போராட்டங்கள் மிகவும் தன்னம்பிக்கை தந்தது. கணைய கான்செர் வந்து, ஆபரேஷன் செய்து ஒரு வருடம் கழித்து அவர் நிகழ்த்திய உரை இது. 2011 அக்டோபரில் கான்செர் அவர் உயிரை பறித்து விட்டது என்றாலும். இன்று வரை அவரின் கரிஸ்மா/கவர்ச்சி/ப்ரெசென்ஸ் எல்லாம் மறக்க முடியாதவை.
அவரின் இந்த உரையில் என்னை கவர்ந்த சில பகுதிகள் .

'நம் வாழ்கையில் பல நேரங்களில் ஒரு சில விஷயங்கள் நடக்கும். அப்பொழுது நமக்கு என் இப்படி நடக்கிறது என்று புரியாது. உதாரணமாக,  கல்லூரிக்கு படிக்க என் பெற்றோர் அனுப்பினார். ஆனால் நானோ, கல்லூரியை கட் அடித்து விட்டு, காளிக்ரபி  எனப்படும் எழுத்துருக்கள் மாற்றியமைக்கும், புதிய வடிவில் வடிவமைக்கும் கோர்ஸ் சென்று படித்தேன். அப்பொழுது எனக்கு எப்படியாவது கல்லூரியை கட் அடிக்க, என்று நான் நினைத்து பன்க்கு செய்ய நினைத்த காரியம், பின்னாளில் ஆப்பிள் கம்ப்யூட்டர் வடிவமைக்கும் போது எனக்கு, ஆப்பிள்க்கு  என்று புதிய எழுத்துருக்கள் வடிவமைக்க நான் படித்த அந்த கோர்ஸ் உதவியது."

"அதே போல, நான் உருவாக்கிய கம்பெனியில் இருந்து நான் நீக்கப்பட்டேன், சில மாதங்கள் பைத்தியம் பிடித்தவன் போல அலைந்த நான்..சாதிக்க வேண்டும், நிருபிக்க வேண்டும் என்ற உந்துதலில் புதிய கம்பெனி ஆரம்பித்தேன். கிராபிக் டிசைன் கம்பெனி pixar உருவானது..அதுவே என்னை மறுபடியும் ஆப்பிளுக்கு உள்ளே என்னை இழுத்தது. இன்று வரை Pixar மிக பெரிய குழந்தைகள் விரும்பும் அனிமேஷன் படம் உருவாக்கும் கம்பெனி ஆக இருக்கிறது. அப்பொழுது தான் என் வருங்கால மனைவியை சந்தித்தேன். இன்று வரை சந்தோசமாக வாழ்கை சென்று கொண்டு இருக்கிறது. ஒரு வேளை நான் ஆப்பிளில் இருந்து நீக்க படாமல் இருந்து இருந்தால்
Pixar  உருவாகி இருக்காது, அதே போல என் மனைவியையும் சந்தித்து இருக்க மாட்டேன். அது நடந்த போது எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று காரணம் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது புரிகிறது."

 "நான் கூற விரும்பும் மூன்றாவது கதை மரணத்தை பற்றியது. என் பதினேழு வயதில் நான் கற்றது இது தான். "இன்று தான் உன் வாழ்கையில் கடைசி நாள் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து வாழ்ந்தால், எதோ ஒரு நாள் அது உண்மையாக நடக்கும்" என்பது. அது என்னுள் ஒரு மாற்றத்தை உருவாகியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் நான் கண்ணாடி முன் நின்று "இன்று உன் வாழ்கையின் முடிவு நாள் என்றால், நீ இன்று செய்ய விளைவதை  செய்ய நினைப்பாயா?" என்று என்னை நானே கேட்டு கொள்ளுவேன். தொடர்ந்து பல நாட்களுக்கு என் பதில் "இல்லை" என்று வந்தால் நான் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம். உடனே என் செயலை மாற்ற முயற்சிப்பேன்"

இப்படி நிறைய நியர் டெத் அனுபவங்கள் பற்றி குறிப்பிடும் அவர், முடிவாக முடிப்பது இது தான்.
"Stay Hungry, Stay foolish" . அதாவது, வள்ளலார் அவர்கள் குறிபிட்டது போல "தனித்திரு, விழித்திரு, பசித்திரு". மனதை திறந்த மனதுடன் வைத்து கொண்டு தினமும் தேடி கொண்டு இரு. எப்பொழுதும் தான் ஒரு முட்டாள் என்று நினைத்து புது புது விஷயங்களாய் கற்று கொண்டிரு.  எல்லரோரையும் போல ஒரே மாதிரி யோசிக்காமல் வித்தியாசமாக யோசி..

என்ன ஒரு வரிகள் இவை எல்லாம். என்னை மிகவும்  கட்டி போட்ட ஒரு உரை அது. என்னை பொருத்தவரை, ஒரு பெரிய நிறுவனர் இப்படி கவர்சிகரமான பேச்சாளராகவும் இருந்தது, ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே.

நன்றி.

3 comments:

நந்தவனத்தான் said...

பேச்சாளர்களின் திறமையோடு இன்னொரு விடயமும் - கேக்குறவனும் முக்கியம் - கண்டிப்பாக கேக்குறவன் கேனப்பையனாக இருக்க வேண்டும். இதற்கு நம் தமிழர்கள்தான் சிறந்த உதாரணம். அடுக்கு மொழியும் ஆபாச வசனங்களையும் சிறந்த மேடைப் பேச்சுகளாக நம்பி, பேசத்தெரியாத ஆனால் செயல்வீரரான காமராசரை தோற்கடித்து, இதனால் தங்களையே தோற்கடித்த வெவரமான இனம் நம் இனம்!

இதே போல ஸ்டீவ் ஜாப்ஸின் பொருட்களை அறிமுகப்படுத்தும் திறம் என்பது ஒரு மார்கெடிங் கல்விக்கான விடயமாக மாறிவிட்டது. அவரது பேச்சில் மயங்கிய பல அமெரிக்கர்கள் ஓவர் விலை வைக்கப்பட்ட ஆப்பிள் பொருட்கள் விற்பனைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பே கடைகளுக்கு முன்னால் கேம்ப் அடிக்குமளவுக்கு ஆப்பிள் கிறுக்கர்களாவும் ஸ்டீவ் ஜாப் வழிப்பாட்டளர்களாவும் மாறிப்போயிருக்கிறார்கள். (ஜாப்ஸின் பேச்சு மட்டும் இதற்கு காரணமில்லை என்றாலும் அது ஆப்பிள் பிரான்ட் பில்டப்பில் முக்கிய காரணி அவரது பேச்சுத்திறன்.)

முகுந்த் அம்மா said...@நந்தவனத்தான் said...
"பேச்சாளர்களின் திறமையோடு இன்னொரு விடயமும் - கேக்குறவனும் முக்கியம் - கண்டிப்பாக கேக்குறவன் கேனப்பையனாக இருக்க வேண்டும். இதற்கு நம் தமிழர்கள்தான் சிறந்த உதாரணம். அடுக்கு மொழியும் ஆபாச வசனங்களையும் சிறந்த மேடைப் பேச்சுகளாக நம்பி, பேசத்தெரியாத ஆனால் செயல்வீரரான காமராசரை தோற்கடித்து, இதனால் தங்களையே தோற்கடித்த வெவரமான இனம் நம் இனம்! "

I concur 100% with you in this. Most of the famous charismatic talkers were successful because they had people who listened to whatever they said, and believed them. One such example is Hitler.

Here is what I read about Hitler

"Hitler swept in promising redemption and salvation in an almost religious manner. He railed against democracy, told the Germans they were Aryans and better than everyone else and spoke out against carefully defined enemies, namely communists and Jews. He had a clear vision, and was determined to convince the universe of his mission -- hallmarks of a charismatic leader. Millions of Germans, predisposed to hear such a message, fell for it, viewing Hitler almost like a god."

வேகநரி said...

தகவலுக்கு நன்றிங்க. சகோ நந்தவனத்தான் சொன்னவற்றோடு முற்றாக உடன்படுகிறேன்.