Wednesday, July 15, 2015

தடுப்பு ஊசிகளும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிச குறைபாடுகளும்

நீண்ட நாட்களுக்கு முன்  எழுத  (ஜனவரியில்) ஆரம்பித்து கிடப்பில் இருந்த பதிவு இது. MMR (தட்டம்மை) தடுப்பு ஊசிகள் பற்றியும், அதனால் ஆட்டிசம் மேலும் தூண்டபடுகிறதா? என்பது பற்றியும் அபுதாபியில் பதிவர் ஹுசைன்அம்மா அவர்களை சந்தித்த போது எழுதும் படி கேட்டு இருந்தார். இவ்வளவு தாமதமான பதிவுக்கு காரணம் இது தான், உடல்நிலை சம்பந்தமான பதிவுகள் எழுதும் போது நிறைய குறிப்புகளை தேட வேண்டி உள்ளது, சரியான தகவல்கள் தரவில்லை என்றால் யாருக்கும் உபயோகம் இல்லை, அதே நேரம் தவறான தகவல்கள், தவறான புரிதலுக்கும் வழிவகுக்கின்றன என்பதால்  நிறைய தகவல்கள் சேரும் வரை அல்லது எனக்கு புரியும் வரை எழுதாமல் அல்லது சிறு சிறு பத்திகளாக எழுதி வைத்து இருந்தேன்.

ஆனால் கிடைத்த வரை போதும் என்று இப்பொழுது வெளியிட இரண்டு காரணங்கள் இங்கே. கடந்த வார இறுதியில் அமெரிக்க உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்று இருந்தோம். உள்ளே நுழையும் போதே..ஆ ஊ என்று ஒரு சிறு பெண்ணின் சத்தம். எந்த வித வார்த்தைகளும் இன்றி வெறும் சத்தம் மட்டுமே வந்தது. அந்த பெண்ணின் அம்மா அவள் ஒவ்வொரு முறை சத்தம் இடும் போதும் அமைதியாக "கூல் டௌன்" என்று சொல்லி கொண்டு இருந்தார். உணவகம் முழுதும் திரும்பி பார்த்த படி இருப்பினும் அந்த அம்மா பொறுமையாக அந்த பெண்ணையும் சமாதான படுத்தி சாப்பிட்டு விட்டு சென்றார். அந்த அம்மாவின் மன திடம் ஆச்சரிய பட வைத்தது.

அடுத்தது, என் தோழியின் பக்கத்து வீட்டு பெண் அவர். இந்தியர். அவருக்கு மூன்று வயது பெண் குழந்தை. அந்த குழந்தை இன்று வரை எதுவும் பேசுவதில்லை, வெறும் சத்தம் மட்டுமே எழுப்புகிறது. டாக்டரிடம் சென்று காட்டிய போது parasites எனப்படும் புழுக்களினால் ஆட்டிசம் உண்டாகி இருக்கிறது என்று உணவில் பல கட்டுபாடுகள் விதிக்கும் படி சொன்னதாகவும் அதனால் அவர்கள் வீட்டில் எதுவும் சமைக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டு சொன்னார். ஏற்கனவே, ஆட்டிசம் மற்றும் உணவுக்குழாயில் இருக்கும் பாக்டீரியா பற்றி சிறிது தகவல்கள் சேகரித்து வைத்து இருந்ததால் இந்த விடயம் பற்றி சிறிது தேடி நான் கண்ட சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.

டிஸ்கி
இது மருத்துவ அறிவுரை அல்ல. நான் படித்த சேகரித்த தகவல்கள் மட்டுமே.


ஆட்டிசம் என்றால் என்ன?

சிறு குழந்தைகளுக்கு வரும் சிறு மனநல குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரே செயலை/ சொல்லை திரும்ப திரும்ப செய்து கொண்டு/சொல்லிக்கொண்டு  இருப்பார்கள். சரியாக பேச முடியாமல் அல்லது அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பார்கள். social interaction இருக்காது. 3 வயது வரை சரியாக பேச முடியாமல் அல்லது சுத்தமாக பேச முடியாமல் இருந்தாலே, இங்கு developmental disorder என்று அதற்குரிய டாக்டர்களை சென்று பார்க்கும் படி குழந்தைகள் மருத்துவர்கள் கூறுவார். இப்படி அறிகுறிகள் தோன்றியவுடன் அதற்குரிய மருத்துவரிடம் சென்று காட்டினால் கவனித்தால் இதற்குரிய அறிகுறிகள் குறைய வாய்ப்பு உண்டு என்று அறியப்பட்டு இருக்கிறது.


ஆட்டிசம் எதனால் உண்டாகிறது?

இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி? எதனால் ஏற்படுகிறது என்று அறிந்தால் இந்நேரம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்க பல நடவடிக்கைகள் ஏற்பட்டு இருக்கும். ஆனால், இது காரணமாக இருக்கலாம் அல்லது அது காரணமாக இருக்கலாம் என்று பல யூகங்கள் தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இது தான் முழு காரணம் என்று வரையறுக்க படவில்லை.

MMR (தட்டம்மை) தடுப்பூசிகள் ஆட்டிசத்தை அதிகரிகின்றனவா அல்லது தூண்டுகின்றனவா?

CDC யின் கூற்றுபடி ஆட்டிசத்திர்க்கும் தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. MMR ஊசிகள் ஆட்டிசத்தை தூண்டுகின்றன என்ற Andrew Wakefield என்ற மருத்துவரின் சோதனைகள் எல்லாம் பொய்யானவை, அவராக புருடா விட்டவை  நிருபிக்க முடியாதவை என்று பல தொடர் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன(1)

உடலில் வசிக்கும் நல்ல பாக்டீரியாக்களும் ஆட்டிசமும் 

 நான் வாசித்த பார்த்த ஒரு சில கட்டுரைகள், குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கும் ஆட்டிசத்திக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிவிகின்றது (2).

என்னது குடலில் பாக்டீரியாக்களா? என்று கேட்பவர்களுக்கு. நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமக்கு பெரும் பயன் விளைவிகின்ற்ன. நாம் சாப்பிடும் பொருட்களை செரிக்க உதவுவதில் இருந்து உடல் சமநிலை என்று பலதும் செய்வது இவை. மனிதர்கள்  மரபுப்பொருள் அளவில் 99% ஒரே போன்று இருக்கிறோம்....ஆனால் ஒருவரின் உடலில்  இருக்கும் பாக்டீரியாக்களும் அடுத்தவர் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களும் ஒன்று போல இருப்பதில்லை. நார்மல் மனிதருக்கும் நோயாளிக்கும் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அளவு மற்றும் வகைகள் வித்தியாசமானவை என்று தெரிவிக்கிறது. இதனை பற்றிய ஒரு பயனுள்ள TED வீடியோ இங்கே.


எப்படி உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மாறுபடுகின்றன, அவற்றை கொண்டு என்ன என்ன செய்யலாம் என்று இந்த காணொளி தெரிவிக்கின்றது.

அடுத்து நான் வாசித்த /பார்த்த நடாஷா காம்ப்பெல் என்ற ஒரு ரஷ்யன் நரம்பியல் நிபுணரின் ஆராய்ச்சி மற்றும் கட்டுரை 20 நார்மல் குழந்தைகள் மற்றும் ஆட்டிச குழந்தைகளின் fecal samples (கழிவு சாம்பிள்) ஆராய்ந்ததில் Prevotella, Coprococcus, and Veillonellaceae போன்ற 3 பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மூன்று பாக்டீரியாக்களும் சக்கரை அல்லது கார்போஹைட்ரேட் உணவை அல்லது நொதிக்கப்பட்ட உணவை உடைக்க அல்லது செரிக்க உதவுவது. 

ஆராய்சிகள் குழந்தை பிறப்பிற்கு 20 நாட்களுக்கு முன்பிருந்து தாயின் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தையின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை நிர்ணயிக்கின்றன என்று தெரிவிகின்றன. பிறந்த குழந்தையின் குடலில் இயற்கைக்கு மாறான பாக்டீரியா அளவு இருப்பின் அந்த குழந்தைகளுக்கு  அப்படிப்பட்ட குழந்தைகள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்றும் , அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை தவிர்ப்பது அல்லது உடல் சமநிலை அடைந்த பின் கொடுப்பது நல்லது என்று தெரிவிக்கிகிறார்கள் (3). 
முடிவாக எது எப்படியோ, நல்ல உணவு பழக்கமும், சுத்தமும், கருவுற்று இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவுகளும் மாத்திரைகளும் உடற்பயிற்சியும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல குறைபாடுகளை தவிர்க்க உதவும் என்பது உண்மை.

நன்றி.References

1) http://www.bmj.com/content/340/bmj.c1127.long
2) http://parkcountychiropractic.com/wp-content/uploads/2012/09/Gut-and-Psychology.pdf
3)Kang D-W, Park JG, Ilhan ZE, et al. Reduced Incidence of Prevotella and Other Fermenters in Intestinal Microflora of Autistic Children. Gilbert JA, ed. PLoS ONE. 2013;8(7):e68322. doi:10.1371/journal.pone.0068322.
3 comments:

வருண் said...

Children having serious problems like autism or genetic disorder, changes the life of parents. They have to change their life-style.

Usually the parents will be in a stage of "denial" first. They get mad at everybody who find their children different and they will claim there is nothing wrong with their child. Later they accept because they have to. Some parents are not mature enough to deal with such children. Some will prefer living in US for ever after having such children. They are afraid of going back, as Indian society is not civilized enough to treat such children in a "kind manner". Well, parents can have psychological problems too.

We have to be optimistic in our life. But when situation like this happen, we should be able to accept it and deal with it too.

Also here in us, they isolate such children and let such children interact with children with similar problems . The parents have to change their friends circle, and people who understands and all.

It does not matter you are a Tamil or Indian or what caste you belong to. You need to find "good human beings" not based on religion, language, race when you have children like that. Here is where you realize the meaning of life and what people really are and that we are really living a "FAKE LIFE" "FAKE FRIENDS" and meaningless life and worrying about worthless things like Tamils, Indian, beautiful, handsome etc etc..

ஹுஸைனம்மா said...

Sorry, I noted this post just now. Will come back soon to post my comments. Thanks for writing.

ஹுஸைனம்மா said...

நன்றி முகுந்த் அம்மா, இப்பதிவுக்கு. எனினும், இப்பதிவு தடுப்பூசிகளின் மீதான பயத்தை முழுதுமாக நீக்கவில்லை என்றே கருதுகீறேன்.

சில சுட்டிகள் கொடுத்திருக்கீங்க. இவர்கள் சில ஆராய்ச்சிகளின் மூலம், அப்படியல்ல என்கிறார்கள். மறுதரப்பும் சில ஆராய்ச்சிகள் செய்தோம், அப்படியல்ல என்கிறார்கள். யாரை நம்புவது? பொதுமக்களின் நிலை திரிசங்காக ஆகிவிட்டது.

ஆனால், மைக்ரோப்ஸுக்கும், ஆட்டிசத்துக்கும் தொடர்பு என்பது புதிய தகவல். இரு வீட்டியோக்களும் பார்த்துவிட்டு, கேள்விகள் இருந்தால் வருகிறேன்.