Sunday, July 19, 2015

இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்குமா?

எனக்கு நடந்த ஒரு எதிர்பாராத அனுபவம் அது. அம்மாவின் ஆபரேஷன் க்கு பிறகு போஸ்ட்  செக்கப்க்கு என்று மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு நர்ஸிடம் ஒரு அம்மா, என் பையன் +2 முடிச்சிட்டான், சயின்ஸ் குரூப், என்ன படிக்கலாம் என்று கேட்டு கொண்டு இருந்தார். அந்த நர்ஸ் அம்மாவும், பயோடெக்னாலாஜி படிக்க வையுங்க என்று சொன்னார். அப்போது, அங்கு செக்கப்க்கு வந்து இருந்த இன்னொரு அம்மா, "வேணாம் மா, என் பைய்யன் அதை தான் படிச்சிட்டு 10 வருசமா வேலை இல்லாம இப்போ தான் மா வேலைக்கு போய் இருக்கான், வேற என்னானாலும் படிக்க வையுங்க இது வேண்டாம்" என்று சொன்னார். 

எனக்கு அந்த அம்மா சொன்னது தூக்கி வாரி போட்டது. என்னது நம்ம பீல்ட் பத்தி இப்படி பேசுறாங்களே என்று. பிறகு அந்த அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்னது இது தான். அவரின் பைய்யன் BTech பயோடெக்னாலாஜி படித்து இருக்கிறார், அதன் பிறகு வேலை இல்லை. பின்னர், PhD சேர்ந்து பிளான்ட் பயோடெக்னாலாஜி படித்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகும் வேலை என்று பெரியதாக எதுவும் இல்லை ஆனால் 8-9 வருடங்கள் கடந்து இருக்கின்றன. இப்பொழுது Postdoc ஆக வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார். அதுவும் postdoc சம்பளம் என்பது மிக குறைந்தது. "சம்பளம் கம்மி என்று யாரும் பொண்ணு கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க மா!" என்று புலம்பி தீர்த்து விட்டார். 

இது உண்மையா, இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்காதா? என்று எனக்கு தெரிந்த, இந்தியாவில் பயோடெக்னாலாஜி ஸ்டார்ட் அப் கம்பெனி வைத்து இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது தான்.  இந்தியாவில்  பயோடெக்னாலாஜி என்பது வெறும் ஆராய்ச்சி சார்ந்த பீல்ட் மட்டுமே. ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல நிலைகள் clearance செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, இப்படி படித்து விட்டு வரும் மாணவர்களும் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்டு இருக்கிறார்கள். ப்ராக்டிகல் அறிவு இருப்பதில்லை. பல கல்லூரிகள்  பயோடெக்னாலாஜி என்ற பெயரில்ஆராய்ச்சி கூடம் கூட இல்லாமல் பாடம் நடத்துகிறார்கள். அங்கு படித்து விட்டு வெளிவரும் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கூட Genetics, Recombinant DNA technology என்று எதுவும் சொல்லி தர தெரியவில்லை. ரொம்ப ஜெனெரல் ஆக படிக்கிறார்கள். specialize எதுவும் செய்து கொள்ளுவதில்லை.
இப்படி அனைத்தையும் மனபாடம் செய்து வெளி வரும் பலரும் இண்டர்வியு நேரத்தில் கேட்கும் அடிப்படை விசயங்களுக்கு கூட பதில் சொல்லுவதில்லை. இதனால் நல்ல subject தெரிந்த பலரை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல,  நிறைய பயோடெக் கம்பெனிகளும் இல்லை என்று சொன்னார். 

இது ஒரு புறம் இருக்க, வெறும் BTech  பயோடெக்னாலாஜி படிக்கும் பலரும் படித்து முடித்து வெளி வரும் போது கெமிகல் எஞ்சினீர், பயோ மெடிக்கல் எஞ்சினீர், பயோ கெமிஸ்ட்ரி, பயாலாஜி படித்தவர்கள் என்று அனைவருடனும் போட்டி போட வேண்டி இருக்கிறது. அடிப்படை அறிவு இல்லாமல் எல்லாத்தையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வரும் இவர்கள் நிறைய தடுமாறுகிறார்கள். 

வெறும் Btech மட்டும் படித்த இவர்களுக்கு மார்க்கெட்டிங் வேலை மட்டுமே கிடைகிறது. மேல்படிப்பு அல்லது Phd படித்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல வேலை கிடைகிறது. அதனால், IT சார்ந்த படிப்புகள் போல படித்து முடித்தவுடன் 5-6 வருடங்களில் வேலை, ஓரளவு நல்ல துவக்க சம்பளம் என்று எதுவும் கிடைப்பதில்லை.

 clearance பிரச்சனையை பற்றி இன்னொரு இடத்திலும் கேள்வி பட்டேன். என்னுடைய தற்போதைய பயணத்தில் ஆராய்ச்சி விசயமாக ஒரு பல்கலைகழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இருக்கும் உபகரணங்கள் எல்லாம் நன்றாக லேட்டஸ்ட் கட்டிங் எட்ஜ் ஆக இருந்தது.. DBT இல் இருந்து பண்டிங்க் கிடைத்ததாக சொன்னார்கள்.  ஆனால் கிடைத்த பண்டிங்க் வைத்து அவர்களால் உபகரணங்கள் வாங்க முடிந்ததே தவிர அதனை தொடர்ந்து நடத்த, கரண்ட் பில் கட்ட கூட அவர்களால் முடிவதில்லை, clearance என்ற பெயரில் நிறைய ரெட் டேபிசம் நடப்பதாக சொன்னார்கள்.

1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது  நோய்களும், வைரஸ்களும், பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில், பயோ டெக் போன்ற துறை கள் வளர்வது  எவ்வளவு முக்கியம். எவ்வளவோ சாதிக்கலாம் .  ஆனால் இது தான் தற்போதைய  நிலையா? எதிர்காலம் இல்லாமல் இருக்கும் பயோடெக்னாலாஜி பட்டதாரிகள் நிலை என்னாகும்..தெரியவில்லை. 


நன்றி.


7 comments:

Avargal Unmaigal said...

இந்திய கல்விகூடங்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியை ஸ்விமிங்க் பூல் இல்லாமலே சொல்லிக் கொடுப்பார்கள்..

Avargal Unmaigal said...

இந்திய கல்விகூடங்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியை ஸ்விமிங்க் பூல் இல்லாமலே சொல்லிக் கொடுப்பார்கள்..

வேகநரி said...

1¼ பில்லியன் மக்கள் தொகையை இப்பவே தாண்டியாச்சு.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது நோய்களும், வைரஸ்களும்,பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில்.... :(

நந்தவனத்தான் said...

பயோடெக்னாலஜி ஆராய்ச்சி கருவிகளுக்கு கரண்ட் பில் கட்ட காசு இல்லை என்கிறீர்கள். முதலில் கரண்ட் இருக்கவேண்டும் அல்லவா? 24 மணி நேர தடையற்ற மின்சாரம் இல்லாமல் இருந்தால் -80, -20 டிகிரி உறைநிலையில் இருக்கும் என்சைம், பாக்டீயா போன்றவை உருகி நாறிவிடும். இதற்காக அக்காலத்தில் நாங்கள் 24 நேரமும் லேப்பில் இருந்து ஜெனரேட்டர் போட்ட காலங்கள் உண்டு. ஆனால் தற்போது இருக்கும் பல நேர பவர் கட்டை சமாளிக்க தேவைப்படும் டீசலை யாராலும் வாங்க முடியாது.

@வேகநரி.

சகோ, வியாதி குறித்தான ஆய்வுகளுக்கு அமெரிக்காவைப்போல் மருத்துவர்களை ஆராய்ச்சிக்கு ஊக்குவிக்க வேண்டும். அமெரிக்காவில் எம்டி படித்தவர்கள் ஆராய்ச்சி வேலை பெறுவதும் ஈசி, அரசு பணவுதவி பெறுவதும் ஈசி. பிஎச்டி படித்தவர்களை விட எம்டி-க்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை. ஆனால் இந்தியாவில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மருத்துவர்கள் மிகக் குறைவு. பயோடெக்னாஜி படித்தவரால் இந்த விடயத்தில் பயன் அதிகமில்லை. ஏனெனில் டாக்டர்கள் மட்டுமே ஆராய்ச்சியினை விலங்கிலிருந்து மனிதனுக்கு அதாவது clinical லெவலுக்கு கொண்டு போக முடியும்.

முகுந்த் அம்மா said...

@Avargal Unmaigal said...
"இந்திய கல்விகூடங்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியை ஸ்விமிங்க் பூல் இல்லாமலே சொல்லிக் கொடுப்பார்கள்.."

True, many schools and colleges are in a poor condition, without proper scientific labs and some dont even have good toilet facilities. Although the mint money from the parents.

thanks for the comment

முகுந்த் அம்மா said...

@வேகநரி said...
"1¼ பில்லியன் மக்கள் தொகையை இப்பவே தாண்டியாச்சு.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது நோய்களும், வைரஸ்களும்,பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில்.... :("

True..It crossed the 11/4 billion population, so as the number of new diseases and pathogens.

Actually I do pathogen research..and you will be wondered when you see new unclassified pathogens found in a small amount of blood that we collect from patients.

thanks for the comment.

முகுந்த் அம்மா said...

@நந்தவனத்தான் said...
"பயோடெக்னாலஜி ஆராய்ச்சி கருவிகளுக்கு கரண்ட் பில் கட்ட காசு இல்லை என்கிறீர்கள். முதலில் கரண்ட் இருக்கவேண்டும் அல்லவா? 24 மணி நேர தடையற்ற மின்சாரம் இல்லாமல் இருந்தால் -80, -20 டிகிரி உறைநிலையில் இருக்கும் என்சைம், பாக்டீயா போன்றவை உருகி நாறிவிடும். இதற்காக அக்காலத்தில் நாங்கள் 24 நேரமும் லேப்பில் இருந்து ஜெனரேட்டர் போட்ட காலங்கள் உண்டு. ஆனால் தற்போது இருக்கும் பல நேர பவர் கட்டை சமாளிக்க தேவைப்படும் டீசலை யாராலும் வாங்க முடியாது."

Acutally, I saw good infrastructure related to power cut handling in the place I visited. But the problem with these facilities is to maintain it...But As you said, there were few instruments like -80 degree freezer or -20 degree freezer in those facilities. But they had a high end RT-PCR machines..and they said that genome sequencer is ordered..Which was so strange for me to see in such circumstances.


"சகோ, வியாதி குறித்தான ஆய்வுகளுக்கு அமெரிக்காவைப்போல் மருத்துவர்களை ஆராய்ச்சிக்கு ஊக்குவிக்க வேண்டும். அமெரிக்காவில் எம்டி படித்தவர்கள் ஆராய்ச்சி வேலை பெறுவதும் ஈசி, அரசு பணவுதவி பெறுவதும் ஈசி. பிஎச்டி படித்தவர்களை விட எம்டி-க்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை. ஆனால் இந்தியாவில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மருத்துவர்கள் மிகக் குறைவு. பயோடெக்னாஜி படித்தவரால் இந்த விடயத்தில் பயன் அதிகமில்லை.

Actually I have somewhat similar opinion about this. I met couple of doctors during my visit, and asked them whether they would like to collaborate with us in the pathogen research...Some of them not clear about what they want to do and how much it will give them benefit monetary wise. so doctors dont have wish to participate in any kind of research as far as I know..because monetary wise it is less beneficial for them

ஏனெனில் டாக்டர்கள் மட்டுமே ஆராய்ச்சியினை விலங்கிலிருந்து மனிதனுக்கு அதாவது clinical லெவலுக்கு கொண்டு போக முடியும்."

I agree...as you said..if we want to take any product to market then we need doctor's help.