Wednesday, July 22, 2015

இந்திய பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய 5 குணங்கள்

சேத்தன் பகத் - இந்தியர்களுக்கு அந்நியமானவர் அல்ல. இவரின் சில நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவரின் five point someone, இந்தியில் "3 இடியட்ஸ்" ஆகி பின்னர் தமிழ் "நண்பன்" ஆனது. இவரின் இன்னொரு நாவலும் 2 states என்ற இந்தி படமாக எடுக்கப்பட்டது. இவர் தன்னுடைய தளத்தில் , இந்திய பெண்கள் மாற்றி கொள்ளவேண்டிய 5 குணங்கள் என்ற கட்டுரை வசிக்க நேர்ந்தது. அவரின் சில கருத்துகள் என்னுடைய தற்போதைய இந்திய பயணத்தில் நான் சந்தித்த சில பெண்களுடன் பொருந்தி போனதால் இங்கே பகிரலாம் என்ற எண்ணத்தில் உண்டான பதிவு இது.

அவர் சொல்லும் சில மாற்றப்பட  வேண்டிய குணங்களும் என்னுடைய அனுபவங்கள் சிலவும் இங்கே.

1. பெண்களான நீங்கள் முதலில் மற்ற பெண்களுடன் பழகாமல் அவர்களை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல், அவர்களை பற்றிய அரைகுறை அறிவுடன், பார்த்தவுடன் எடை போடாதீர்கள்.  உதாரணமாக ஒரு பொது இடத்தில் இருக்கிறீர்கள் அப்பொழுது ஒரு எடை கூடிய பெண் அங்கே வருகிறார் என்றால் உடனே அவளை பற்றி கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் "அங்க பாரு யானை குட்டி மாறி இருக்கா பாரு என்று தங்களுக்குள் கமெண்ட் அடிப்பது". ஒரு பெண் சகஜமாக ஆண்களுடன் பேசினால் அல்லது தன்னம்பிக்கையுடன் நடந்தால் உடனே அவளை "நடத்தை கெட்டவள், ஆம்பளைகளை பார்த்து சைட் அடிக்கிறவள், வழிகிறவள்" என்று முத்திரை குத்துவது.   கொஞ்சம் அழகாக இருந்தால் அல்லது நன்றாக டிரஸ் பண்ண தெரிந்தவள் என்றால் உடனே "எப்படி அலப்புற பாரு" என்று கமெண்ட் அடிப்பது.போன்று பேசுவதை  நினைப்பதை முதலில் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் ஆயிரகணக்கான குறைகளை பற்றி கவலை படாமல், உங்கள்  முதுகில் இருக்கும் அழுக்கை பற்றி கவலை படாமல் அடுத்தவர்களை இப்படி எடை போடுவது எந்த வகை நியாயம். நீங்கள் அடுத்தவர்களை குறை சொன்னால் உங்களை பற்றி குறை சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள் என்பதை எப்பொழுதும் நினைத்து கொள்ளுங்கள்.

2. தங்களுக்கு என்று எந்த சுயமும் அல்லாமல் எந்த குறிக்கோளும் வைத்து கொள்ளாமல் குடும்பத்திற்காக தியாகம் செய்கிறேன் பேர்வழி அல்லது குடும்பத்தை பார்த்து கொள்ளுகிறேன் பேர்வழி என்று சொல்லி கொண்டு வீட்டில் உக்கார்ந்து கொண்டு டிவி மேலே டிவி பார்த்து கொண்டு இருப்பது. இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆனால் இப்பொழுது இருக்கும் முக்கால் வாசி பெண்கள் வீட்டில் உக்கார்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டு நடத்தும் டிராமா சொல்லி மாளாது. நிறைய திறமைகள் கொண்ட பல பெண்களும் தற்போது இந்த நிலையில் தன்னை சுருக்கி கொண்டு இருப்பதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

 இந்த ஒரு நிலை அமெரிக்கா  வந்த இந்திய பெண்களிடமும் நிறைய பார்கிறேன். நிறைய பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் போன்ற அத்தியாவசிய ஒன்றை கூட எடுத்து கொள்ளுவதில்லை. எல்லாவற்றிக்கும் தன் கணவரை சார்ந்து இருப்பார்கள். ஆனால் பார்ட்டி அல்லது ஏதாவது நிகழ்ச்சி  என்றால் உடனே இவர்கள் வந்து அடுத்தவர்களை பற்றி குறை சொல்லுவதை பார்த்து இருக்கிறேன். அதனை பார்க்கும்போது  எனக்கு சிரிப்பாக வரும்.


3. அடுத்தவர்களுக்காக நடிப்பது. அதாவது, உங்களுக்கு அந்த விஷயம் பிடிக்கவே பிடிக்காது..ஆனால் அடுத்தவர்களுக்காக பிடிக்கும் என்று நடிப்பது அல்லது பொய் சொல்லுவது. உதாரணமாக குடும்பத்துக்காக அல்லது கணவருக்காக என்று அவர் சொல்லும் மொக்கை ஜோக்குகள், அல்லது திரைப்படங்கள் அவருக்கு பிடிகிறது அல்லது உங்களின் குடும்பத்திற்கு என்று தேமே என்று செய்வது. அதாவது..நீங்கள் நீங்களாகவே இருப்பது இல்லை. இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் நடித்து நடித்து சில நேரங்களில் உங்களின் சுயம் என்ற ஒன்றை இழந்து விடுவீர்கள். உதாரணமாக, உங்களுக்கு நன்றாக பாட தெரியும் என்று வைத்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்திற்கு பிடிக்காது என்று உங்கள் சுயத்தை இழந்து விடுவது. உங்கள் திறமைகளை ஏன் விட்டு கொடுக்குறீர்கள், அதுவும் தங்கள் குடும்ப நன்மைக்காக என்று சொல்லி கொண்டு இதனை செய்கிறீர்கள். உங்கள் குடும்பதினரை உணர செய்து உங்களின் சுயத்தை விட்டுகொடுக்காமல் வாழ பழகி கொள்ளுங்கள்.


4. ஆண்களோ பெண்களோ உங்களுக்கு வேண்டியது , "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எண்ணங்கள் ", இளைய இந்தியர்கள் முக்கியமாக பெண்கள் ஏதாவது வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று நோக்கம் வைத்து கொள்ளுங்கள். இந்தியா போன்ற ஆணாதிக்க நாடுகளில் பெண்கள் சாதிப்பது முன்னேற உதவுவது போன்ற விடயங்கள் உற்சாகபடுத்த போவதில்லை. அதற்காக முயற்சிக்காமல் இருக்காதீர்கள், கதவை தட்ட தட்ட மட்டுமே திறக்கும். முயற்சி செய்ய செய்ய மட்டுமே நமக்கு எதிர்காலம் கிடக்கும். எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் . முன்னேற விளையும் போது எதிர்ப்புகள் எல்லா திசைகளில் இருந்தும் வரலாம். துணிந்து நின்று எதிர் கொள்ள பழகி கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.இந்தியா போன்ற சமூகத்தில்  உங்களுக்கு மரியாதை வேண்டும் என்றால் நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும்.

5. முடிவாக முக்கியமான ஒன்று.  எல்லாவற்றையும் டிராமா செய்யாதீர்கள். குறிப்பாக உறவுகளுக்குள் நடக்கும் சிறிய சிறிய விசயங்களையும் டிராமா செய்து தனக்கு சாதகமாக வரும் வரை டிராமாவை தொடர்வது. இப்படி டிராமா செய்வதன் மூலம் நீங்கள் ஒரு தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. தன்னை அறிந்தவள் எந்த டிராமா விலும் சிக்கி கொள்ளாமல் அப்படி டிராமா செய்பவர்களை, பிரச்னை வந்தாலும் அதனை எப்படி சமாளிப்பது என்று தெளிவாக தெரிந்து இருப்பாள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே நிலைமையை சமாளிக்க தெரியாமல்  எல்லாவற்றியும் டிராமா செய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து தான் நினைத்த படி நடக்கும் வரை டிராமாவை தொடர்வார்கள். இப்படி நீங்கள் செய்ய செய்ய உங்களின் எதிர் பாலினம் அல்லது குடும்பத்தினர், "எதுக்கு  பிரச்னை? வேணாம் " என்று அந்த நிமிடம் ஒதுங்கி போனாலும், உங்கள் மேல் சுத்தமாக மரியாதை வைத்து இருக்க மாட்டார்கள். "இவ டிராமா குயீன், எல்லாத்தையும் அழுது அழுது சாதிப்பா?" என்று மரியாதை குறைவாக நினைப்பார்கள் நடத்துவார்கள். இது தேவையா.

நீங்கள் முதலில் மரியாதை கொடுப்பது உங்களுக்காக இருக்கட்டும். எது முக்கியம் எது முக்கியமல்ல என்று உணருங்கள். தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை.


டிஸ்கி.

இதில் குறிப்பிட்ட சில குறிப்புகளை வைத்து பெண்கள் யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளுகிறேன். அப்படியே சண்டைக்கு வர வேண்டும் என்றாலும் தயவு செய்து சேத்தன் பகத்தின் தளத்தில் சென்று சண்டை இடுங்கள் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.



நன்றி.



5 comments:

வருண் said...

ஆணோ பெண்ணோ, ஒருவர் குணம் அத்தனை எளிதில் மாறுமா/மாற்றிடலாமா என்ன? வாழ்க்கையில் அடிபட்டால் நிச்சயம் மாற வாய்ப்பு உண்டு.. ஆனால்..நிச்சயம் புத்தகம் படிச்சு, மேதைகள் சொல்வதைப் படித்தெல்லாம் மாறப் போவதில்லை! :)

ஆரூர் பாஸ்கர் said...

Good one, continue writing..

முகுந்த்; Amma said...

@வருண் said...
ஆணோ பெண்ணோ, ஒருவர் குணம் அத்தனை எளிதில் மாறுமா/மாற்றிடலாமா என்ன? வாழ்க்கையில் அடிபட்டால் நிச்சயம் மாற வாய்ப்பு உண்டு.. ஆனால்..நிச்சயம் புத்தகம் படிச்சு, மேதைகள் சொல்வதைப் படித்தெல்லாம் மாறப் போவதில்லை! :)

True Agreed, but the funny thing is, most of the time these dont change..but expect others to change..otherwise comment about them..

thanks for the comment

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
Good one, continue writing..

Thanks for the comment

வேகநரி said...

//இதில் குறிப்பிட்ட சில குறிப்புகளை வைத்து பெண்கள் யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளுகிறேன். அப்படியே சண்டைக்கு வர வேண்டும் என்றாலும் //
நல்ல கருத்துக்களை நீங்க சொல்லவரும்போது கூட இப்படி ஒரு அச்ச நிலை தமிழ்பதிவுலகில் நிலவுவது வருத்தமானது.