Wednesday, July 8, 2015

தமிழ் திரைப்படங்களில் பெண்கள் சரியாக சித்தரிக்க படுகிறார்களா?



சமீபத்தில் இரண்டு திரைப்படங்கள் காண நேர்ந்தது. ஒன்று விமானத்தில்  நான் பார்த்த ஆங்கில நகைச்சுவை காமெடி படமான "Spy" மற்றொன்று மதுரையில் தியேட்டரில் பார்த்த தமிழ் காமெடி? படமான "ரோமியோ ஜூலியட்"


முதலில் "Spy" பற்றி..40 வயதை கடந்த, அழகில்லாத, குண்டான சூசன் கூப்பர் தான் கதாநாயகி. ஜேம்ஸ் பாண்டு 007 பணி புரியும் துப்பறியும் நிறுவனம் போன்ற ஒரு நிறுவனத்தில் சைடு கிக் ஆக, டெஸ்க் வேலை செய்பவராக, மெயின் ஸ்பை ஒருவருக்கு உதவி செய்பவராக வாழ்நாட்கள் முழுதும் கழித்த ஒருவர் அவர். மெயின் ஸ்பை ஒரு விபத்தில் இறந்து விட, ஒரு மிசன் க்கு முகம் தெரியாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று இவரை அனுப்புகிறார்கள். தன்னுடைய தோற்றத்தை, திறமையை அவர் எப்படி மாற்றி அமைத்து, தன்னாலும் ஸ்பை ஆக முடியும் என்று நிருபித்து இருப்பார். 

துவக்கம் முதல் முடிவு வரை, விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம் அது. சூசன் கூப்பர் ஆக "மெலிஸா மெக்கார்த்தி" நடித்து அசத்தி இருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை குறித்து தானே அடிக்கும் கமெண்டுகள் ஆகட்டும், 40 வயதை கடந்த பின்னும் தனக்கென்று ஒரு பாய் ப்ரெண்ட் இல்லையே என்று வருந்துவதாகட்டும்,  தன்னாலும் சாதிக்க முடியும் என்று துணிச்சலுடன் அவர் எடுக்கும் முடிவுகள் ஆகட்டும். உண்மையாகவே அசத்தலான நடிப்பு. 

முதலில் படம் ஆரம்பிக்கும் எதோ 007 படங்களின் Spoof படமோ என்று எண்ணினேன். ஆனால், அப்படி எல்லாம் இல்லை ஒரிஜினல் கதை, ஒவ்வொரு பிரேமும் அசத்தல். 

அடுத்து மதுரையில் என் அண்ணனின் குடும்பத்துடன் வெளியில் செல்லலாம் என்று முடிவு செய்து தியேட்டருக்கு சென்றாயிற்று.  இது நல்ல நகைச்சுவை படம் என்று என் அண்ணன் சொன்னதால் சரி நல்லா இருக்கும் இருக்கும் என்று நம்பி சென்று தலைவலியை வரவழித்து கொண்டேன்.

இந்த படம் பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய எண்ணங்கள் இங்கே, இப்பொழுது இருக்கும் காதல் காமெடி படங்களை எல்லாம் ஒரு பக்க கதைக்குள் அடக்கி விடலாம். 

காதல் பற்றி சில துவக்க காட்சிகள் அல்லது இயக்குனர் அறிமுக வரிகள். பின்னர், ஹீரோ- ஹீரோயின் சந்திப்பு. ஹீரோ ஹீரோயின் காதலிக்கும் வரை வரும் சில உப்பு சப்பிலாத பிரெண்ட்ஸ் காமெடி. பின்னர் காதல் ஆரம்பித்தவுடன் ஒரு டூயட். பின்னர், பிரிதல். முக்கியமாக ஹீரோயின் எதோ ஒரு காரணம் சொல்லி பிரிவார். உடனே "அவளே, இவளே, இந்த பொண்ணுங்களே இப்படி தான், போங்கடி நீங்களும் உங்க காதலும்"..என்று கன்னா பின்னா என்று பொண்ணுங்களை திட்டி ஒரு டாஸ்மாக் பாட்டு..அதில் ஹீரோ காதலித்து மனம் உடைந்து போய் விட்டாராம்.. பின்னர் சில உப்பு சப்பிலாத சீன்கள். அதன் பிறகு ஹீரோ ஹீரோயின் மீண்டும் இணைந்தார்கள்...

ஐயோ சாமி, முடியல. கிட்டத்தட்ட எல்லா படங்களும் இந்த சீக்வன்ஸ் கொண்டு இருக்கிறது. அதுவும் பொண்ணுங்களை திட்டி பாடும் டாஸ்மாக் பாட்டுக்கு தியேட்டரில் காது கிழியும் அளவிற்கு விசில் சத்தம். பொண்ணுங்களை திட்டி வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் சத்தம். என்ன நடக்கிறது. அப்படி என்ன வெறுப்பு பெண்கள் மேலே. காதல் மட்டுமே வாழ்க்கையா? காதல் முறிந்தால் ஆண்களுக்கு மட்டும் தான் வருத்தமா?, பெண்களுக்கு இருக்காதா? மனசு என்பது எல்லாருக்கும் பொது தானே. 
அதுவும் அந்த ஹீரோயின் சொல்லுகிறார், இப்போ "எனக்கு வயசு 24 நான் இப்போ  பிகர், இன்னும் அஞ்சு வருசத்தில நான் ஆண்டி யார் என்னை பார்ப்பா? "என்று. அட அட, என்ன அற்புதமான வசனங்கள். புல்லரித்து விட்டது. 

பொண்ணுங்களுக்கு என்று தன்னம்பிக்கை இருக்கிறது, எத்தனை வயதனாலும் சாதிக்க முடியும் என்று உரைக்கும் படி சொன்ன முதல் படம் எங்கே...காதல் மட்டுமே வாழ்க்கை பொண்ணுங்க இதற்க்கு தான் லாயக்கு என்று உரைக்கும் இந்த படம் எங்கே. இப்படி வரும் பாடல்களை படங்களை  ஏன் பெண்கள் ரசிக்கிறார்கள். தங்களை மிக கேவலமாக சித்தரிக்கிறார்களே என்று கோவம் வராதா.
என்னவோ போங்கப்பா, கஷ்டமா இருக்கு..

நன்றி.

3 comments:

வருண் said...

பெண்களில் உயர்ந்தவர்களும் இருக்காகங்க சரியான அரைவேக்காடுகளும், கூமுட்டைகளும் இருக்கத்தான் செய்றாங்க. நீங்க பொத்தாம் பொதுவாக. பெண்கள் இப்படி இத்யாதி இத்யாதினு எல்லாம் இன்று சொல்ல முடியாது. இன்றைய சூழலில் தரமான பெண்களைப் பார்ப்பது அரிது- தமிழ் நாட்டில்தான் சொல்றேன்.

சும்மா மேடையில் வந்து சூர்யாவோட ஆத்தாவும் மகளும் டாண்ஸ் ஆட வேண்டியது. சமையல் அறையில் ரொம்ப வேர்க்கிது அதனால் வெளிய சாப்பிடத்தான் பிடிக்கிதுனு சொல்றது, கமலஹாசனை பப்லிக்ல கிஸ் பண்னுகிற செலிப்ரிட்டினு மட்டமான பெண்கள் வாழும் காலம் இது.

உங்களை வைத்து நீங்க உலகை எடைபோடுவது தவறு. There are lots of worthless and trashy bimbos out there if you carefully look around there.

முகுந்த்; Amma said...

@Varun

The same thing applies to here as well. Lot of people/ladies who would like to have their 15 mins of fame. But my point is why it is becoming a trend in Tamil movies that they scold in all bad words women for everything especially love failure. And why such songs are getting popular. Why cant women oppose for such nonsenses...




வருண் said...

In Tamilnadu, women are going through a "phase". They themselves do not know what is "right" or "wrong". They do not know what needs to be opposed and what needs to be appreciated either. Let it be politics or women's rights or anything. It is really annoying to see if you really pay attention and you are a well-wisher of your Tamil community. They really let you down in every possible way. I tell myself, it is best being "hopeless" rather than "hopeful" about them. It is foolish to care about them as they seem to enjoy and happy with the way they live today!