Saturday, September 12, 2015

அதிக கண்டிப்பும், அதிக செல்லமும், பாசிடிவ் பேரேண்டிங்ம்

தேங்க்ஸ் டு google images

இந்தியாவில், ஏன் உலகில் அதிகம் இருக்கும் மக்கள் என்றால், பொருளாதாரத்தில் மிடில் கிளாஸ் நிலையில் இருக்கும் மக்கள் தான்.   இவர்கள், பெரும்பாலும் நல்ல வேளையில் இருக்கும் மக்கள், தாங்கள் வாழ முடியாத கனவு கண்ட வாழ்கையை தங்கள் குழந்தைகள் மூலமாக வாழ நினைக்கிறவர்கள். 

என்னை பொருத்தவரை ரெண்டுகெட்டான் ஆக இருந்து டார்செர் கொடுக்கும் மக்கள் என்றால் அது லோயர் மிடில் கிளாஸ் லிருந்து அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் வரை இருக்கும் இந்த மக்கள் தான். பெரும்பாலும் சுயம் கொண்டு இவர்கள் முடிவுகளை எடுப்பதில்லை, மாறாக இவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை பார்த்து தாங்களும் அது போன்று இருக்க வேண்டும் என்று வாழ்பவர்கள். அடுத்தவர்கள் தன்னை பற்றி என்ன சொல்வார்கள் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்வதாலேயே,  தங்களை தங்கள் குழந்தைகளை முடிந்த அளவு ஹை கிளாஸ் மக்கள் போல காட்டி கொள்ள பிரயத்தன படுவார்கள். குழந்தைகளை கான்வென்ட் போன்ற பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் அவை எவ்வளவு பீஸ் என்றாலும் எப்படியாவது சம்பாதித்து செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். 

இவர்களின் குழந்தைகள் மற்ற தெருவில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் முக்கியமாக வெளியே புழுதியில் விளையாட விட மாட்டார்கள். ஏன் அவர்களுடன் பேச கூட அனுமதிக்க மாட்டார்கள். ஹை கிளாஸ் மக்களுடன் மட்டும் தான் ப்ரெண்ட்ஷிப் வைத்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகளை வளர்ப்பார்கள்.  பெர்பெக்ட் ஆக வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளை எப்பொழுதும் ஏதாவது சொல்லி கரெக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். இப்படி உட்காரு, அப்படி நிக்காதே,...என்று ஏதாவது  சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்கள் சொல்லுவதை குழந்தைகள் கேட்கவில்லை என்றால், தண்டனைகள் தருவார்கள். அதாவது இவர்களின் அகராதியில், கண்டிப்பாக வளர்கிறேன் என்றால்  ஒரு மெசின் போல ரோபோ போல வளர்க்க வேண்டும் என்று அர்த்தம் அதற்க்கு அதிகம் முயற்சிப்பார்கள்.  எப்படி அதிக கண்டிப்பு கொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் சந்தோசம் இல்லாமல் வளர்கிறார்கள் என்பதை குறித்த ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. இப்படி சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவராக வாழ்கையில் சந்தோசமில்லாமல், வளர வளர மிக கோபக்காரர்களாக, அதிக விரக்தி அடையும் குழந்தையாக வளரும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது, இதனை ஏனோஇப்படி பட்ட  மக்கள் அறிவதில்லை. 

இன்னொரு வகை மக்களும் அவர்கள் கண்டிபானவர்களுக்கு எதிர்மறையாக   இருக்கிறார்கள். அவர்கள், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து அல்லது அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து குழந்தைகளிடம் வேலை வாங்குவார்கள். அதாவது, நீ இதனை செய்தால் உனக்கு சாக்கலட் தருவேன், இல்லை ஐஸ் கிரீம் தருவேன் என்று சொல்பவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பெரும்பாலும் ஒரே குழந்தை இருக்கும் மக்கள் அல்லது திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவை நடக்கலாம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பயங்கர நீடி எனப்படும் "ஐ", "மீ", "மைசெல்ப்" எனப்படும் தன்னை சுற்றியே வாழ்க்கை நடக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள். 

சரி இப்படியும் இருக்க கூடாது அப்படியும் இருக்க கூடாது என்றால் எப்படி தான் இருப்பது . எப்படி தான் குழந்தைகளை வளர்ப்பது. "பாசிடிவ் பேரேண்டிங்" எனப்படும் குழந்தைகளை உற்சாகபடுத்தும் அதே சமயம் கண்டிப்புடன் இருக்கும் வழியே சிறந்தது என்கின்றனர். 

அதிக கண்டிப்புடன் தொட்டதுக்கேல்லாம் தண்டனை நீங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு குளிர் விட்டு விடும்.அடிக்க  தானே தருவீங்க தாங்க என்று பெற்றோரிடம் முதுகை காட்டும் குழந்தைகளை பார்த்து இருக்கிறேன். மிகவும் செல்லம் கொடுத்தால் எல்லாவற்றியும் அழுதே சாதித்து விடுவார்கள். 

ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் மூன்றே காரணங்களால் அதனை செய்கிறது 

1.எப்படி சரியாக  செய்ய வேண்டும் தெரியாததால்
2. எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தெரியும் ஆனால் தன்னை கட்டுபடுத்த முடியாததால் 
3. எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தெரியும் ஆனால் கவலை படாததால்.

முதல் காரணத்தை சமாளிப்பது எளிது. இப்படி தான் செய்ய வேண்டும் என்று  நாம் சொல்லி கொடுக்கலாம், 

இரண்டாவது வகை,  எப்படி செய்யும்  ஆசையை கட்டுபடுத்துவது என்று சொல்லி கொடுக்கலாம்.வேறு வகையில் கவனத்தை திருப்ப உதவலாம்.

மூன்றாவது வகை, இது செய்தால் உனக்கு என்ன பிரச்னை வரும் என்று சொல்லி புரிய வைக்கலாம்.

 முக்கியமாக,  குழந்தைகளுடன் குழந்தைகளாக விளையாட வேண்டும், அதே நேரம் அவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது அதனை நாம் ஊக்குவிக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் அவர்களுக்கு நாமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. அதே நேரம், கண்டிக்க வேண்டிய நேரத்தில் அன்பாக கண்டிக்கவும் வேண்டும். 


டிஸ்கி 

இது என் அனுபவத்தில் கண்டதை வைத்து எழுதியது. வேறு கருத்துகள் இருப்பின் தெரிவிக்கவும்


1 comment:

Nagendra Bharathi said...

உண்மை. நன்றி