Sunday, October 4, 2015

70-80, தற்போது: பெண்களும், சுதந்திரமும்

கனடா  பயணத்தில் ஒரு நாள்,  நயாகராவில் நன்கு சுற்றி விட்டு சரியான பசியுடன், களைப்புடன்  ரெஸ்டாரென்ட் அதுவும் இந்தியன் ரெஸ்டாரென்ட் தேடி கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு   உணவகம் கண்ணில் பட, அப்பாடா என்று ஒரு வழியாக அமர்ந்து உணவு ஆர்டர் செய்து விட்டு வெயிட் செய்து கொண்டு இருந்த நேரம், பக்கத்தில் இரண்டு சிறு வயது பையன்கள் இரண்டு பேரும் அவர்களின் அம்மாக்கள் இரண்டு பேரும் மற்றும் இரண்டு சிறு வயது பெண்களும் அமர்ந்து இந்திய சினிமா 70,80 களில் மற்றும் தற்பொழுது என்று சுவாரஸ்யமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.

பையன்கள், எப்படி ஓவர் டிராமாடிக் ஓவர் ஆக்டிங் ஆக இருந்தது பழைய படங்கள், என்று கலாய்த்து கொண்டு இருந்தனர். பெண்களும், அப்பொழுது எப்படி பெண் அடிமை தனம் இருந்தது அது எப்படி பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பாடம் எல்லாம் சினிமாவில்  எடுக்கப்பட்டது என்று சொல்லி கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த அம்மா கேட்டார், நீங்கள், "அவள் அப்படித்தான்", "மனதில் உறுதி வேண்டும்", "அவள் ஒரு தொடர்கதை", கல்யாண அகதிகள்",  போன்றவற்றை பார்த்ததுண்டா? அவற்றை பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்". என்றார்.

அவர் சொன்னதை நான் அசை போட்டு பார்த்தபோது தோன்றியது இது. உண்மையை சொன்னால் 70 களின் இறுதியில் தொடங்கி 80 களில் கூட நிறைய பெண்களை மையபடுத்திய கதைகளை கொண்ட படங்கள் நிறைய வந்ததுண்டு. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா, பாரதிராஜா ஏன் பழைய பாக்யராஜ் படங்கள் கூட பெண்களை மையபடுத்தி நிறைய கதைகள் இருக்கும். உண்மையில் ரொம்ப அட்வான்ஸ் கதைகளன் கொண்டவை இவை எல்லாம்.

இதனை பற்றி என் கணவரிடம் பேசி கொண்டு இருந்தபோது, அவர் கூறியது இது. "70-80 களில் எல்லாம் பெண்கள் சுதந்திரம் என்பது பேச ஆரம்பிக்க பட்டது, அதனை வலியிறுத்த பெண்கள் முன்னேற வேண்டும் என்று பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது இந்திய பெண்கள், சுதந்திரம் என்ற பெயரில் ஆடை உடுத்துவதும், எல்லாவற்றுக்கும் சண்டைக்கு நிற்பதும், நீயா நானா என்று போட்டி போடுவது என்பது போன்ற ஒரு சில வட்டத்திற்குள் அடங்கி விடும்.  சொல்ல போனால் நிறைய இந்திய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாது?"என்றார் .

இதனை கேட்ட போது எனக்கு கோவம் வந்தது. 2010 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் "பெண்கள் சுதந்திரம்" என்ற பெயரில் எழுதிய கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வந்த எதிர் வினைகள் போன்றவையும் ஞாபகம் வந்தன. ஆனால் உண்மையில் இந்திய பெண்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே இருக்கிறார்களா,அல்லது சுருக்கி கொள்ள விளைகிறார்களா? எத்தனை பேர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர விரும்புவார்கள் என்று பல எண்ணங்கள். women empowerment என்ற பெயரில் தீபிகா படுகோனே செய்த விளம்பர ஸ்டன்ட் போன்றவையும் நினைவிற்கு வந்தது. உண்மையில் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன? பல கேள்விகள் என்னுள்ளே.

அப்பொழுது தற்செயலாக என்னுடைய ஆபிசில் ஒன் ஆன் ஒன் எனப்படும் மீட்டிங் இல் என்னுடைய மேனேஜர் இடம் பேச நேர்ந்தது. 50 களின் இறுதியில் இருக்கும் வெள்ளை இன பெண் அவர். ஒரு பெண் IT டிவிசன் இல் டைரக்டர் ஆக இருக்கிறார். சாதாரணமாக பேசி கொண்டு இருந்த போது அவர் குறிப்பிட்டது இது, "I'm the only women director, heading an IT division, its very unusual for a women to head development divison, many women prefer to go into the HR managerial route" என்று குறிபிட்டார். அதாவது, ஒரு பெண் அதுவும் சாப்ட்வேர் வேலையில் டெவெலெபெர் ஆக வாழ்கையை ஆரம்பித்து பின்னர் டைரக்டர் ஆவது என்பது சாதாரணமல்ல. பொதுவாக பெண்கள்,HR  மேனேஜர் போன்றவற்றை மட்டுமே விரும்புவார்கள். உண்மையை நோக்கினால், ரொம்ப முன்னேறிய நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் ஒரு சில வேலைகள் மட்டுமே  பெண்கள் prefer செய்கிறார்கள். "டீச்சர், நர்ஸ், HR, ப்ரொண்ட் ஆபிஸ்,மார்க்கெட்டிங்,  IT துறை என்றால்  சாப்ட்வேர் டெஸ்ட்டர், HR மேனேஜர், பிசினெஸ் அனலிஸ்ட்"  போன்ற சில. மற்ற துறைகளில் பெண்கள் கால் பதித்து இருந்தாலும் பெரும்பாலான பெண்களாக prefer செய்வது என்பது இது போன்ற ஒரு சில துறைகள் ஆக மட்டுமே இருக்கும்.

இந்திய பெண்கள் எப்பொழுதும் தங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று நினைத்து இருந்த நான், பொதுவாக உலகமெங்கும் உள்ள பெரும்பான்மை  பெண்கள் தங்களை ஒரு வட்டத்திற்குள் மட்டுமே வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படி வைத்து கொள்ள விரும்பும் மக்களின் சதவீதம் 1970-80 களில் ஏற்பட்ட பெண்கள் சமஉரிமை போராட்டத்திற்கு பிறகு  குறைந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. தாங்களும் எல்லா துறைகளும் தேர்ந்தெடுக்கலாம், கால்பதிக்கலாம் சாதிக்கலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சினிமா துறையை பொருத்தவரை, நிறைய மாற்றங்கள். ஹாலிவூட் படங்கள் நிறைய பெண்களை சுற்றி நகரும் கதைகள் என்று நிறைய வருகிறது. சொல்ல போனால், பாலிவூட் கூட தற்பொழுது  கஹாணி, queen என்று பெண்கள் சுற்றி நகரும் கதைகள் வர தொடங்கி நல்ல மாற்றத்தை தருகின்றன. ஆனால் தமிழ் சினிமா மட்டுமே தான் ரிவேர்ஸ் டைறேக்ச்ன் இல் பயணித்து, பெண்கள் என்றால் லூசு, தனியாக முடிவெடுக்க தெரியாதவர்கள், ரெண்டு பாட்டு க்கு வந்தால் போதும். ஆண்களை எப்பொழுதும் ஏமாத்துவார்கள். என்று ஒரு  வட்டத்தை உண்டாக்கி அதனை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள்.

70, 80 களில்  10 படங்கள் வந்தால் அவற்றில் குறைந்தது 2-3 படங்கள் பெண்களை முன்னிறுத்தி அல்லது பெண்களை சுற்றி நடக்கும் கதை களன் கொண்டவை. இப்பொழுது 100 படங்கள் வந்தால் அதில் 1, 2 கூட அப்படி இருப்பதில்லை. 30 வருட தலைமுறை இடைவெளி இது. ஆனால் ஏன் இந்த நிலை. தற்போதைய தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா?.

தற்போது யாருக்காக திரைபடங்கள் எடுக்க படுகின்றன என்று யோசித்ததில், "காலேஜ் மக்கள்", "இளைய தலைமுறை" மக்கள் இவர்களுக்காகவே எடுக்க படுகின்றன. பெண்கள் எல்லாரும் டிவி சீரியல்களில் மூழ்கி விட்டனர். அவர்களை பொருத்தவரை. மாமியார், நாத்தனார், குடும்ப பிரச்னை எப்படி சமாளிப்பது எப்படி குழப்புவது என்பதிலேயே தன்னிறைவு அடைந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறன். அவர்களின் குறுகிய வட்டம் மட்டுமே போதும் என்று நினைத்து விட்டதாலே பெண்களும் சுதந்திரமும் முன்னிறுத்தி 70-80 களில் வந்த படங்கள் போல படங்கள் வருவதில்லை போலும். மக்கள் விரும்புகிறார்கள் என்று படத்தயாரிபவர்களும், டைரக்டர்களும் சொல்கிறார்கள். அப்பொழுது உண்மையில் பெண்களை முன்னிறுத்திய படங்களான, "மொழி, 36 வயதினிலே" போன்றவை வெற்றி பெறவில்லையா?, ஏன் இந்த பாகுபாடுகளோ, எப்பொழுது மாறுமோ தெரியவில்லை.

டிஸ்கி

இது திரைப்படங்கள் குறித்தும், பெண்கள் சுதந்திரம் குறித்தும் என்னுடைய கருத்துகள் மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

1 comment:

ஹுஸைனம்மா said...

//70, 80 களில் 10 படங்கள் வந்தால் அவற்றில் குறைந்தது 2-3 படங்கள் பெண்களை முன்னிறுத்தி அல்லது பெண்களை சுற்றி நடக்கும் கதை களன் கொண்டவை. இப்பொழுது 100 படங்கள் வந்தால் அதில் 1, 2 கூட அப்படி இருப்பதில்லை.//

அப்போலாம் அது பற்றீ படம் எடுத்தா, நல்லா ஓடும். இப்போ பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதால் அல்லது நகரங்களிலேனும் அடைந்துவிட்டது போன்ற சூழல் நிலவுவதால் அது இப்போது “ஹாட் டாபிக்” அல்ல என்பதால் இருக்கலாம்.

//சொல்ல போனால் நிறைய இந்திய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாது//

Very true!! ஒன்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்; அல்லது என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள்!!