Thursday, October 8, 2015

பதின்ம வயதும், SMSம், பேச்சும், மொழியும்

மிடில் ஸ்கூல் டீச்சர் ஒரு அம்மாவை ரொம்ப நாளாக தெரியும் எப்பொழுதாவது சந்தித்து பேசி கொள்ளுவது உண்டு. அப்படி ஒரு தடவை எதேச்சையாக சந்தித்து பேசி கொண்டு இருந்த பொது அவர் தெரிவித்த சில விஷயங்கள் ஆச்சரியத்தை வரவழித்தன. அவர் 7ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை ஆக இருக்கிறார். அவர் குறிப்பிட்ட சில பதின்ம வயது பிள்ளைகளின் பிரச்சனைகள் மற்றும் peer பிரஷர். அது எப்படி குழந்தைகளின் கல்வியினை பாதிக்கிறது என்பது குறித்த சில விஷயங்கள் இங்கே.

பிள்ளைகள் மிடில் ஸ்கூல் போய்  விட்டார்கள் என்றாலே நிறைய பெற்றோருக்கு பயம் வந்து விடும். ஏனெலில் பதின்ம வயது ஆரம்பிக்கும் நேரம் அதனால் நிறைய ஹார்மோன் ரஷ் எனப்படும் தொல்லைகள் அதிகம் ஆரம்பிக்கும். தன்னை அழகுபடுத்து பார்க்க வேண்டும் என்று பல பெண் குழந்தைகள் முயல ஆரம்பிக்கும் காலம். அதே போல  பையன்களும் , நான் ஆண் இன்னும் குழந்தை அல்ல என்று ஜிம் செல்லுவது, கடினமான காரியங்கள் செய்வது என்று ஆரம்பிப்பார்கள். முக்கியமாக தான் இன்னும் குழந்தை அல்ல, வளர்ந்து விட்டேன் என்று ஊருக்கு தெரிவிக்க நினைப்பார்கள். இது ஒரு குழப்பமான பருவம், எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத பருவம். இந்த காலத்தில் பெற்றோர் தன்னுடைய பிள்ளைகளிடம் நண்பர்களாக பழக ஆரம்பிக்க வில்லை அல்லது முயலவில்லை எனில், உங்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 இந்த குழப்ப நிலையில் சந்தடி சாக்கில் நுழைந்த ஒரு விஷயம் தான் "செல்போன்" தற்பொழுது, எலிமெண்டரி பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகள் கேட்பது, எனக்கு செல் போன் வேண்டும் என்பது தான். என் தோழியின் மகள் தற்போது 6 ஆம் வகுப்பு சேர்ந்து இருக்கிறார். எப்பொழுது நாங்கள் சந்தித்தாலும், தன் அம்மாவிடம் "செல் போன் வாங்கி தார் சொல்லுங்கள் ஆண்டி" என்று ஒரு பாட்டு ஆரம்பிப்பாள். இது ஒரு வகை "peer pressure". அதுவே, bullying க்கு ஒரு காரணியாக எல்லாரும் ராக் செய்வார்கள் என்று பயந்து வைத்து கொள்ள விரும்புவது.

சரி, போய் தொலைகிறது என்று பல பெற்றோர் செல்போன் வாங்கி தருகிறார்கள். அது வந்தவுடன் முதலில் இந்த பதின்ம வயதினர் ஆரம்பிப்பது "SMS". கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு குறைந்தது 100 SMS செய்திகள் அனுப்புவதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது.photo courtesy "Google images"

இப்படி SMS யினால் விளையும் ஒரு முக்கிய பிரச்னை "சுருக்கு மொழி".  ஜியார்ஜ் ஒர்வேல் அவர்களின் 1984 படித்தவர்களுக்கு ஒரு வார்த்தை மிக பிரபலம் அது "Newspeak" அதாவது பத்திகையில் பிரசுரிக்க என்று எப்படி ஆங்கில வார்த்தைகள் மாற்றி அமைக்க படுகின்றன என்பதனை அவர் குறிப்பிட்டு இருப்பார். அதாவது பத்திரிக்கைக்கு என்று ஒரு சில வார்த்தைகள் உருவாக்கப்படும். உதாரணமாக "thoughtcrime ", "duckspeak"..போன்ற ஒரு சில.

ஆனால் இப்பொழுது "textspeak" என்ற ஒன்று SMS அல்லது குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் மத்தியில் மிக பிரபலம். "LOL", "Gr8", "GM","B4", "S", "ROFL", "BFN".....இவை எல்லாம் தெரியாதவர்கள் இப்பொழுது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எல்லார் கையிலும் செல்போன் இருக்கும் இந்த காலத்தில் எப்படி மொழியை சுருக்குவது என்று யாரோ கண்டு பிடித்த இவை எல்லார் கைகளிலும் கிடைத்து சின்னா பின்னமாகி கொண்டு இருக்கிறது.

photo courtesy "Google images"

அதனால் என்ன பிரச்சனை என்று கேட்பவர்களுக்கு. எல்லாவற்றையுமே சுருக்கி பழகி கொண்ட இவர்கள்  உண்மையான மொழியில் அவற்றை எப்படி குறிப்பிடுவது என்று தெரியாமல் ஸ்பெல்லிங் தெரியாமல் முழிக்கிறார்கள். நிறைய யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் கஷ்டப்படுகிறார்கள். சரியான வாக்கிய உபயோகம் தெரிவதில்லை. சரியான noun, verb, preposition எல்லாம் உபயோகிக்க தெரியாமல் தடுமாறுகிறார்கள். இது ஆங்கிலத்தில் என்று மட்டும் இல்லை. தமிழில் கூட எல்லாரும் ஆங்கில எழுத்துக்களை வைத்து எழுதுவதால் எந்த ல், ழ், ள் போடா வேண்டும். அல்லது ன், ண் வித்தியாசம் என்ன, எப்பொழுது ந் போடவேண்டும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கும் எழுத்துக்களை வைத்து ஒரு கூட்டான் சோறு மொழி உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த பிரச்னை ஒரு உலகளாவிய பிரச்னை. எல்லா மொழிக்கும் இது பொருந்தும். அது இந்திய மொழிகளுக்கு மட்டும் அல்ல உலக மொழிகளும் இந்த பிரச்சனையை சந்தித்து கொண்டு இருகின்றனர். ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டு வராபடின் எந்த மொழியும் பிழைக்காது என்பது மட்டுமே என் எண்ணம். தகவல் தொழில்நுட்பம் தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறன்.

நன்றி.3 comments:

பழனி. கந்தசாமி said...

U R Rt.

வருண் said...

When I was proof-reading one of my friends (American) thesis, I noticed he spelled "overnite" for over night. That's what happens when you "shorten" words. Thesis is a document in which one needs to write formal English. What happens is people forget the correct spelling which they did know once! :(

நந்தவனத்தான் said...

However, some linguistics argue that messaging is a creative development as it brings new expressions to the languages, at least English. John McWhorter is one among them & here is his TED talk http://www.ted.com/talks/john_mcwhorter_txtng_is_killing_language_jk?quote=2129
If messaging kills linguistic skills or not, banning texting or preventing anyone from texting are not possible solutions. So, kids should be encouraged to understand the differences between writing and texting as they do with writing and speaking.