Thursday, October 15, 2015

இரவு நேர மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதா?

கடந்த பதிவுகளில் ஒன்றில் விஜயகுமார் என்பவர் நியூ யார்க் நகர் மெட்ரோ  பயண அனுபவங்கள் குறித்து எழுதும் படி கேட்டு இருந்தார். நான் நியூயார்க் இல் வசித்ததில்லை என்றாலும் நியூ ஜெர்சி யில் இருந்து நியூயார்க் ஒரு முறை மெட்ரோ பிடித்து சென்றதும், சுதந்திர தேவி சிலையை பார்த்ததும் உண்டு. ஆனால் தினம் தினம் மெட்ரோ ட்ரைன் ஐ எடுத்து வேலைக்கு சென்ற அனுபவம் இல்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த சில மெட்ரோ ட்ரைன்கள் குறித்த சில அனுபவங்கள் இங்கே.லண்டன், நியூயார்க், அட்லாண்டா  போன்ற பெரிய நகரங்களில் டௌன் டவுன் எனப்படும் சிட்டி சென்ட் இல் முக்கால் வாசி நேரம் பார்கிங் கிடைக்காது மற்றும் அதிக பைசா என்பதாலும், டிராபிக் கொன்று விடும் என்பதாலும் நிறைய பேர் மெட்ரோ subway எனப்படும் துரித ரயில் எடுத்து வேலைக்கு செல்வது உண்டு. நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் தீவில் நிறைய அலுவலகங்கள் இருக்கும் என்பதாலும் அருகில் வசிக்க வீடு வாங்க முடியாது என்பதாலும் நிறைய பேர் ஊருக்கு வெளியே வீடு வாங்கி குடியேறுகின்றனர். அவர்கள் தன அலுவலகம் வர உபயோகிப்பது மெட்ரோ subway. அதே போல நாங்கள் இருக்கும் அட்லாண்டாவிலும் MARTA எனப்படும் துரித ரயில் உண்டு.

முதன் முதலில் நான் மெட்ரோ உபயோகித்தது என்றால் அது லண்டன் அண்டர் கிரௌண்ட் மெட்ரோ தான். ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் உபயோகிப்பது கண்டு வியந்து இருக்கிறேன். அதே போல frankfurt U-Bahn உபயோகித்து இருக்கிறேன். என்ன துல்லியமான நேர பின்பற்றல், காலையில் இருந்து 9-10 மணி வரை தொடர்ந்து இருக்கும் ரயில்கள். இரவு சேவை என்று தனி, எப்படி பயணிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று ஐரோப்பா வந்த புதிதில் வியந்து இருக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை ஐரோப்பாவில் உபயோகித்தவரை மெட்ரோ உபயோகித்து தனியாக ஊரின்  எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் சென்று விடலாம். well connected. நான் அப்பொழுது இருந்தது ஸ்டுடென்ட் ஆக என்பதால் ஸ்டுடென்ட் பாஸ் உண்டு. அந்த மாநிலத்துக்குள் எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் ஸ்டுடென்ட் id காட்டி இலவசமாக சென்று விடலாம்.  சனி கிழமை நான் பிரான்க்புர்ட் வந்தது ஞாபகம் வருகிறது. காலையில் குரூப் ஆக கிளம்பி நாள் முழுதும் பிரான்க்புர்ட் சுற்றி விட்டு பின்னர் இரவு ரயில் பிடித்து வீட்டுக்கு சென்றதும் ஞாபகம் வருகிறது.

அதே போல  கிட்டத்தட்ட ஒரு மாதம் லண்டன் அண்டர் கிரௌண்ட் யிலும் தினமும் காலையில் சென்று மாலையில் திரும்பி இருக்கிறேன்.  என்னை பொருத்தவரை லண்டன்,பிரான்க்புர்ட்   மெட்ரோ பயணங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவை.

ஆனாலும் பாரிஸ் மெட்ரோ இரவு நேரங்களில் நான் எடுக்க யோசிப்பதுண்டு. பாரிஸில் ஒரு வாரம் கருத்தரங்குக்கு என்று தங்க நேர்ந்த போது, இரவு நேர ரயில் பயணத்தில் நிறைய தண்ணி பார்டிகள் ஏறியதையும் ஒரு சில ஸ்டேஷன் களில் இருக்கும் மக்கள் சரியானவர்களாக இருப்பதையும் பார்க்க நேர்ந்தது. ஆனாலும் யாரும் என்னிடம்  தப்பான முறையில் நடந்ததில்லை. அவர்களாக பேசி கொள்வார்கள் அல்லது பைத்தியம் போலே நடந்து கொள்வார்கள். உங்களை தொல்லை படுத்த மாட்டார்கள்.


இப்பொழுது என்னுடைய MARTA அனுபவம் இங்கே. அட்லாண்டா வந்த பிறகு MARTA உபயோகிக்க இயலவில்லை. ஏனெலில் என்னுடைய லேப் இருந்த பகுதியில் ஒரே ட்ரைன் எடுத்து செல்ல முடியாது. ரயில் மற்றும் பஸ் மாறி செல்வதற்குள் நேரம் கடந்து விடும் என்பதால் நான் முக்கியமாக கார் உபயோகிக்க ஆரம்பித்து இருந்தேன். கடந்த மாதம் ஒரு கருத்தரங்குக்கு என்று MARTA எடுத்து விடலாம் என்று நானும் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரும்(ஒரு வெள்ளை ஆண்) முடிவு செய்து விட்டோம். அப்பொழுது என்னுடன் வேலை பார்க்கும் மற்றொருவர், MARTA எடுக்க போறியா பார்த்தும்மா என்றார். நானோ, "நிறைய மெட்ரோ பயணம் செய்து இருக்கிறேன். அதனால் ஒன்னும் பிரச்னை இல்லை" என்றேன். அவர், தனியாக வராதே, நீயும் இன்னொருவரும் உடன் வாருங்கள் என்றார்.

காலையில் ட்ரைன் எடுக்கும் போது எந்த பிரச்னையும் தெரியவில்லை. சொல்ல போனால் நிறைய ஆபீஸ் செல்லும் மக்கள் இருந்தது எனக்கு மற்ற மெட்ரோ ரயில்களை நினைவு படுத்தியது. நல்ல அறிவிப்பு மற்றும் நிறைய மக்கள் சொகுசான பயணம் என்று 20-30 நிமிடங்களில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்தாயிற்று. நானும் கூட வந்தவரும் மெட்ரோ வை கமெண்ட் செய்தவரை குறித்து கிண்டல் அடித்து கொண்டு வந்தோம்.

மீட்டிங் முடிந்து இரவு 7:30 க்கு மேலே ட்ரைன் எடுத்து வீட்டுக்கு வர நின்று கொண்டு இருந்தோம். மிக சொற்பமான மக்கள் நின்று கொண்டு இருந்தார்கள். பின்னர் ரயில் வந்ததும் எங்கள் பெட்டியில் எங்கள் இருவரை தவிர இரண்டு பேர் ஏறினர். இங்கே இருக்கும் மக்களுக்கு தெரிந்து இருக்கும் ஒரு சில கருப்பு மக்கள் எப்படி உடை உடுத்துவார்கள் எப்படி இருப்பார்கள் என்று. நிறைய செயின் போட்டு கொண்டு பெரிய பை வைத்து கொண்டு ஒருவ(ர்/ன்) ஏறி அதன் பின் இன்னொருவரும் ஏறி பின்னர அவர்களின் பேச்சு எல்லாமே inappropriate. தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை பொருள்கள் மற்றும் பெண்களின்  அங்கங்கள் குறித்த மிக அசிங்கமான பேச்சு. நான் இறங்க வேண்டிய ஸ்டாப் பில் அவர்களும் இறங்க எத்தனிக்க, அவர்களின் பேச்சை கேட்ட பின்னர் என்னுடன் வந்தவர் அவருடைய ஸ்டாப் இல்லை என்றாலும் எனக்காக இறங்கி நான் கார் எடுக்கும் வரை வெயிட் செய்து விட்டு சென்றார்.

இது பொதுவான நிகழ்வா? இல்லை அட்லாண்டாவில் இருக்கும் மெட்ரோவில் மட்டும் நடப்பதா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்க  பெரிய மெட்ரோக்களில் இது கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறன்.

டிஸ்கி

இது என்னுடைய சொந்த அனுபவம், பொதுப்படையானது அல்ல,  எல்லாருடைய அனுபவமும் வேறு மாதிரி இருக்கலாம். அதனால் இரவு நேர தனியே மெட்ரோ பயணம் பெண்களுக்கு safe இல்லை என்பது என் எண்ணம். ஆனால் போலீஸ் நீங்கள் கூப்பிடலாம் என்று சொன்னர்ர்கள், பயன் இருக்குமா என்று தெரியவில்லை.

நன்றி


2 comments:

Nagendra Bharathi said...

அருமை. நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆனாலும் பாரிஸ் மெட்ரோ இரவு நேரங்களில் நான் எடுக்க யோசிப்பதுண்டு. பாரிஸில் ஒரு வாரம் கருத்தரங்குக்கு என்று தங்க நேர்ந்த போது, இரவு நேர ரயில் பயணத்தில் நிறைய தண்ணி பார்டிகள் ஏறியதையும் ஒரு சில ஸ்டேஷன் களில் இருக்கும் மக்கள் சரியானவர்களாக இருப்பதையும் பார்க்க நேர்ந்தது. ஆனாலும் யாரும் என்னிடம் தப்பான முறையில் நடந்ததில்லை. அவர்களாக பேசி கொள்வார்கள் அல்லது பைத்தியம் போலே நடந்து கொள்வார்கள். உங்களை தொல்லை படுத்த மாட்டார்கள்.//
எனினும் பெண்கள் இரவு 9 க்குப் பின் இயன்றவரை தவிர்ப்பதே நன்று! எல்லா நாட்களும் ஒரே மாதிரி ஆண்களுக்கும் அமைவதில்லை.
நான் பாரிஸ்,லண்டன்,பிராங்ஃபொர்ட், சிங்கப்பூர் - மெட்ரோக்களில் பயணம் செய்துள்ளேன். சிங்கப்பூர் மிகப் பாதுகாப்பாகக் கருதுகிறேன்.
மிகக் குறைந்த தடங்களில் இயங்குவதும் காரணமாக இருக்கலாம்.