Friday, October 9, 2015

அமெரிக்காவை எப்படியெல்லாம் பிரிக்கலாம்?

1955 இல் மொழிவாரியாக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாநிலங்கள் மொழி வாரியாகவோ அல்லது பொருளாதார காரணங்களுக்காகவோ பிரிக்க பட்டு கொண்டு இருக்கின்றன.

அமெரிக்கா வே யுனிடெட் ஸ்டேட்ஸ் என்று, அனைத்து மாநிலங்களும் இணைந்த ஒன்று தான். ஆனாலும் எப்படியெல்லாம் அமெரிக்கா பிரிக்க படலாம், என்று வாஷிங்டன் போஸ்டில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிரப்படுகிறது.


photos fromwww.atlasofprejudice.com


உதாரணமாக 12 வகையாக அமெரிக்காவை பிரிக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. அதில் எனக்கு பிடித்த சில வகைகள் இங்கே.

1. முதல் வகையில், அவர்கள் கூறுவது மூன்று வகையாக அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதில் கிழக்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் எனவும், மேற்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் இன்பத்தை விரும்பும் மக்கள் எனவும், இடையில் இருக்கும் மக்கள் எல்லாம் பழைமை விரும்பும் traditional மக்கள் என்றும் பிரிக்கலாம்.

இதில் முக்கியமாக நோர்த் ஈஸ்ட் மாநிலங்களை அதில் உள்ள  ஐவி லீகு கல்லூரிகள், பல்கலை கழகங்களை வைத்து வைத்து இப்படி குறிப்பிடுகிறார்கள் என்றும் மேற்கில் ஹாலிவூட் இருப்பதாலும், மத்திய மாகாணங்கள் எல்லாம் பழமை விரும்பிகளாக இருப்பதால் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று  நினைக்கிறன்.


2. இரண்டாவது வகையில், மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை வடக்கு மாநிலங்கள் எல்லாமே மைக்ரோ வேவ் வைத்து சமையல் செய்பவர்கள், தென் கிழக்கு மாகணங்களில் ஒரு சில barbecue செய்பவர்கள்மற்றும் தென் மாகாணங்கள் பல டீப் ப்ரை செய்யும் மாகாணங்கள்.

உண்மையில் நானே ,நோர்த் கரோலினாவில் இருந்து அட்லாண்டா வந்த சமயத்தில் வேலை பார்க்கும் மக்களுடன் ஒரு ரெஸ்டாரென்ட் சாப்பிட சென்று அங்கு ஐஸ் கிரீம் ஐ மாவில் தோய்த்து ப்ரை செய்து கொடுத்தார்கள். அதில் வடிந்த எண்ணையை பார்த்தவுடன் அடப்பாவிங்களா ஐஸ் கிரீமை எப்படிடா ப்ரை செய்வீங்க என்று எண்ணியது நினைவுக்கு வந்தது.


3. மூன்றாவது வகையாக அமெரிக்கா இரண்டு வகையில் பிரிக்கப்படலாம். வட மேற்கு, வட கிழக்கு மத்திய பகுதி எல்லாமே "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்" என்று தங்களை நினத்து கொள்பவர்கள் என்று வைத்து கொண்டு, தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மக்களாகிய பெரும்பாலோர் "பைபிள் பெல்ட்" மக்கள் என்று குறிபிடுகிறார்கள்.அதாவது ஏசுவே சகலமும், என்று நெட்டுரு தட்டும் மக்கள்.

பைபிள் பெல்ட்மாநிலங்களில்  வசிக்கும் பல மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். உங்கள் வீடுகளை வந்து சிலர் கும்பலாக வந்து தட்டுவார்கள். "ஏசுவே பரம பிதா அவரை பற்றுங்கள், உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இதனை படியுங்கள் என்று ஒரு சீட்டை நீட்டுவார்கள்." அதுவும் நீங்கள் கிருஸ்துவர் இல்லை என்றால் நிறைய பேர் வந்து அவர்களுடைய சர்சில் உங்களை இழுக்க பார்பார்கள்.அமெரிக்கா வந்து என்னுடைய முதல் இப்படி அனுபவம்  முந்தைய வேலை பார்த்த இடத்தில் நடந்தது. ஒருவர் பிரசங்கி போல, வந்து ஏசுவே பரம பிதா என்று பிரசங்கம் ஆரம்பித்து விட்டார். பின்னர் அவரிடம் இருந்து கழண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

4. இந்த வகை மிக சுவாரசியம். இதில் 2 வகை மக்கள் இருப்பதாக கூறுகிறது. வடக்கு மற்றும் தெற்கு என்று இரு பிரிவுகள். அதில் வடக்கு மாநிலங்கள் பலவற்றில் இருக்கும் மக்கள் நாங்கள் நிற பாகுபாடு பார்ப்பதில்லை என்று வெளியில் காட்டி கொள்ளுவார்கள், ஆனால் உண்மையில் நிறைய பார்பார்கள்.  தெற்கு மாகான மக்கள் வெளிப்படையாக நிறப்பாகுபாடு காட்டுவார்கள். அது சட்ட விரோதம் என்று தெரிந்தாலும் பலர் மறைமுகமாக இதனை செய்வார்கள்.

5. இந்த கடைசி வகையில் இரண்டு வகையில் அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதாவது, வடகிழக்கு மேற்கு மாநிலங்கள்  மற்றும்  ஹோமோ செக்ஸ் மக்களை அங்கிகரித்தவை அதனால் அவை gay மாநிலங்கள் எனவும், மற்றவை ஏசுவே பரம பிதா அவரை பற்றினால் சொர்க்கம் அடைந்து விடலாம். gay மக்கள் எல்லாம் பாவிகள் என்று பிதற்றும் மக்களை கொண்டது அதனால். இந்த மாநில மக்கள் எல்லாரும் சொர்கத்தை அடைய போகிறவர்கள் என்பதால் அவர்களை ஒரு மாநிலமாக பிரித்து விடலாம் என்கிறார்கள்.

இன்னும் பல வகைகளில் பிரிக்கலாம் என்றாலும் மேலே குறிப்பிட்ட சில எனக்கு ரொம்ப சிரிப்பு வந்ததால் குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் பல, மொழி வாரியாக இல்லாமல், இன வாரியாக, வெள்ளைகள், மெக்சிகன்கள், கறுப்பின மக்கள் இருப்பதை வைத்து பிரிக்கலாம். எங்கெல்லாம் அதிகம் புயல் வீசும் எங்கெல்லாம் அதிகம் மழை பெய்யும் அல்லது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம் பிரிக்கலாம் என்று பார்க்கும் போது, எல்லா நாடுகளையும் போல அமெரிக்காவும் பல வகைகளில் வேற்றுமை கொண்டது. ஆனாலும் இங்கே சட்டமும், போலிசும் அதிக பவர் வைத்து இருப்பதால் இன்னும் உடைந்து  பிரிக்கபடாமல் இருக்கிறது என்று நினைக்கிறன்.

நன்றி.

No comments: