Sunday, October 18, 2015

தற்பெருமை என்னும் ஒரு தொற்று வியாதி

இது எனக்கு மட்டும் தான் நடக்குதுதா இல்லை எல்லாரும் இதே போல கேட்டு இருக்கீங்களான்னு தெரியல. 

முகுந்த் கூட படித்த பையன் அவன், அவங்க அம்மா என்னை எங்க பார்த்தாலும், முகுந்த் எப்படி படிக்கிறான், என்ன என்ன எக்ஸ்ட்ரா கிளாஸ் போறான், ஹோம் வொர்க் சீக்கிரம் பண்ணுறான..அப்படி எல்லாம் கேட்டுட்டு, உடனே அவங்க பையன் ரொம்ப ப்ரில்லியண்ட், கிண்டர் கார்டன் லையே 2 grade புத்தகம் படிப்பான். அதுக்குள்ளார கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் பண்ணுறான். அவன் தான் கிளாஸ்ல நம்பர் ஒன்...ஹிந்தி வேற படிக்கிறான், soccer போறான். கிப்டெட் ப்ரோக்ராம்ல இருக்கான் அப்படின்னு ஒரே தற்பெருமை. நான் கேட்டனா, உங்க பைய்யன் என்ன படிக்கிறான், எங்க படிக்கிறான்னு. ஏன் மா..ஏன்.வலேண்டீரா வந்து கடி போடுறீர்ங்க...எனக்கு மட்டுமே தான் இப்படி வந்து மாட்டுதோ? இல்ல நிறைய மக்களுக்கு இது நடந்து இருக்கா தெரியல.

அதே போல இன்னும் சிலர் இவங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற தேசி மக்கள். மெதுவா ஹலோ எப்படின்னு ஆரம்பிப்பாங்க, அப்புறம் மெதுவா சொல்லவே இஷ்டம் இல்லாதவங்க போல, தான் ரொம்ப ambitious, வேலை பார்த்துட்டே MBA டாப் யுனிவெர்சிடில படிக்கிறேன், இல்ல நான் பெரிய ஆர்கிடெக்ட், நான் இல்லாட்டி என் கம்பனியே நடக்காது, நான் தான் எல்லா முடிவும் எடுப்பேன் என்று பேசுவாங்க, பேசுவாங்க பேசிட்டே இருப்பாங்க...நான் கேட்டனா..நீங்க மேல படிகிறீர்கள என்று..அவங்கள பொறுத்த வரை, "நீங்க கிரேட், எப்படி சமாளிகுறீங்க" அப்படின்னு நாம சொல்லுற இரண்டு வார்த்தைகள். பந்தாவா, காஸ்ட்லி செல் போன் வச்சுகிறது, வொர்க் சப்போர்ட் பண்ணுறேன் பா, அப்படின்னு பொது இடத்துல இல்ல பார்ட்டில பார்க்கும் போது எல்லாம் சீன் போடுறதுன்னு...ஒரே குஷ்டம்பா..

அடுத்தவகை  முக்கால் வாசி நேரம் நான் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா அப்படின்னு ஷோ கட்டுற மக்கள். ஒரு சில மக்கள் வீட்டுக்கு பார்டிக்கு அல்லது பூஜைக்கு கூப்பிடுவாங்க, அவங்கள் நம்ம ப்ரெண்ட் கூட இருக்க மாட்டங்க ஆனா ஹலோ ஹாய் சொல்லி இருப்போம். வீட்டுக்கு கூப்பிட்டு ப்ளேடு போடுவாங்க பாருங்க காதில ரத்தம் வரும். எல்லாமே, இந்த பொருள் அங்க வாங்கினது, இது ஸ்பெஷல் ஆ செய்ய சொல்லி வாங்குனது. இது யுனிக் எங்கயுமே கிடைக்காது. இப்போ தான் வீட்டை ரீமாடல் பண்ணினோம், வெறும் 70 ஆயிரம் டாலர் தான் செலவாச்சு..என்று ரொம்ப சலிப்பா சொல்லுற மாதிரி நாம எவ்வளவு பணக்காரன் தெரியுமா அப்படின்னு பறை சட்டுறது. "ஏன் பா ஏன் என்று காதில் நமக்கு ரத்தம் வரும்".

இன்னும் சில மக்கள் இருக்காங்க,முக்கியமா பொண்ணுகள சொல்லலாம். " ஏ, இங்க பாரேன் நேத்து தான் இந்த டிரஸ் வாங்கினேன், செயின், வளையல்...., எப்படி இருக்குன்னு சொல்லலையே" என்று வாலேன்டீர் ஆக வந்து கேட்பார்கள்.  அப்புறம் நம்ம கிட்ட ஹனஸ்ட் அட்வைஸ் சொல்லுற மாதிரி, இதெயெல்லாம் ஏன் இன்னும் போடுற, இதெல்லாம் ஓல்ட் டிசைன்..வேற இதை போல வாங்கலாமே, அப்படின்னு சொல்லுவங்க..இங்க தான் நான் வாங்கினேன்..பாரு எவ்வளவு நல்லா இருக்கு சீப் கூட...அப்படின்னு நாம "நீ போட்டு இருக்கிறது கிரேட், நானும் வாங்குறேன்", அப்படின்னு சொல்லுற வரை விடமாட்டாங்க....அதாவது நமக்கு ஸ்டைல் டிப்ஸ் கொடுக்குறாங்கலாமா...யாரு கேட்டது உங்க ஸ்டைல் டிப்ஸ் ஐ.

இன்னும் ஒரு சில மக்கள் பார்த்து இருக்குறேன், அவங்க தான் தன பெர்பெக்ட், அப்படின்னு காட்டுறதுக்கு மெனக்கெடுவாங்க.உதாரணமா, எடுத்தது எடுத்த எடத்துல வைக்கணும், இல்லாட்டி எனக்கு பிடிக்காது, அப்படி செய்யதவங்க எல்லாம் என்னா மக்களோ, கொஞ்சம் கூட சுத்தம் இல்லாதவங்க..ஐ டோன்ட் லைக் தெம். என்று சீன் போடுவார்கள்.  

இந்த மாதிரி தற்பெருமை பேசுறவன்களோட மோடிவ் என்னன்னா, நான்/நாங்க  உன்ன/உங்களை  விட பெட்டெர் தெரியுமா...நீ/நீங்க  எப்பவுமே என்ன/எங்கள  விட கீழ தான் அப்படின்னு காட்டிகிறதுக்கு.
என்னை பொருத்தவரை இவங்க பாவம், கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இல்லாதவங்க, அடுத்தவங்களின் புகழுக்காக எல்லாத்தையும் செய்யிறவங்க..இவங்கள பார்க்கும் போது grow up பீபிள் என்று சொல்ல தோன்றும். 

பறவைகள் பலவிதம்ன்னு, மனிதர்கள் பலவிதம், அதில் தற்பெருமை பேசுறவர்கள் ஒருவிதம் போல.


நன்றி.

8 comments:

திருப்பதி மஹேஷ் said...

இந்தியர்கள் இடம் அதிகம் பார்க்கலாம். அங்க எப்படி மேடம்?
அமெரிக்கர்கள் இது மாதிரி தற்பெருமை பேசுவாங்கலா?

Avargal Unmaigal said...

நீயூஜெர்ஸியில் எனக்கு தெரிந்து மிக அதிகமாக இப்படி பேசுறவங்க தெலுங்குகாரங்க.... பஞ்சாபிகாரங்க நம்ம தமிழர்கள் இப்படி அதிகம் பேசுவதில்லை எனக்கு தெரிஞ்சு.

Avargal Unmaigal said...

@மகேஷ் அமெரிக்கர்களும் மக்கள்தான் அவங்களிலும் இப்படி பேசுபவர்கள் உண்டு

Peppin said...

அமெரிக்கர்களும் மக்கள்தான் அவங்களிலும் இப்படி பேசுபவர்கள் உண்டு!

Agree with Madurai Thamizhan....

To Madurai Thamizhan : btw, where are you in NJ. I live in northern Jersey!

ஜோதிஜி திருப்பூர் said...

இதில் வேறொரு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். கலை ஆர்வம் உள்ளவர்கள், புத்தகங்கள் அதிகமாக படிப்பவர்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் போன்றோர்களிடம் பேசிப்பாருங்க. நிறைய விசயங்கள் பேசக்கூடும். பகிர்ந்து கொள்ள தங்களிடம் விசயம் இல்லாதவர்கள் தான் தங்களைப் பற்றி அதிகம் வெளிப்படுத்திக் கொள்கின்றார்களோ என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு.

வேகநரி said...

//வேலை பார்த்துட்டே MBA டாப் யுனிவெர்சிடில படிக்கிறேன், இல்ல நான் பெரிய ஆர்கிடெக்ட், நான் இல்லாட்டி என் கம்பனியே நடக்காது, நான் தான் எல்லா முடிவும் எடுப்பேன் என்று பேசுவாங்க..
பந்தாவா, காஸ்ட்லி செல் போன் வச்சுகிறது, வொர்க் சப்போர்ட் பண்ணுறேன் பா, அப்படின்னு பொது இடத்துல இல்ல பார்ட்டில பார்க்கும் போது எல்லாம் சீன் போடுறதுன்னு...ஒரே குஷ்டம்பா..//

இதிலெல்லாம் தமிழர்கள், இந்தியர்களை மிஞ்ச உலகத்தில் எவருமே இல்லை. அரபுக்காரர்களும் இதே மாதிரி தன் என்கிறார்கள். எனக்கு அவர்களுடன் பழகி, கேட்ட அனுபவமில்லை.

வேகநரி said...

உங்க தற்பெருமை பேசுவோரின் யதார்த்த பதிவை பற்றி ஒரு இந்திய நண்பரிடம் பகிர்ந்த போது சொன்னார், இல்லைங்க அழுது வடிந்தார்.தங்களை ஒரு தமிழர் தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டுதுக்கு அழைத்துள்ளாராம், ஆனா அதற்காகவே முன்னேற்பாடாக தனது மகளை விமானத்தில் இருந்து பரசூட்டில் இருந்து குதிக்கும் நிகழ்வில் பங்கு பெற்ற பெருந் தொகை பணம் செலுத்தி ஏற்பாடு செய்திருக்கிறாராம், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது மகள் விமானத்தில் இருந்து பரசூட்டில் இருந்து குதித்த பெருமையை சொல்லி சொல்லியே தங்களை எல்லோரையும் வதைக்க போகிறாரே என்று கவலை தெரிவித்தார்.

நம்பள்கி said...

ஜோதிஜி சொல்வதில் ஓரளவு உண்மை! என் குழந்தைகளை நான் என்றும் படி என்று சொன்னதே இல்லை---அப்படியே உண்மை! இதற்கு முக்கிய காரணம் என் அப்பா---எப்ப பார் படி படி என்று சொல்லி என் உயிரை எடுத்தார். தமாஷாக நாலு நண்பர்களிடம் பேசினால் கூட--என்ன பேச்சு! போய் படி என்பார். என் நண்பர்கள் எங்கள் அப்பாவைப் பார்த்தல் ஓடி விடுவார்கள். எல்லா extra curricular activities- லும் நான் கில்லாடி. அவ்வளவையும் அவர் தடுத்ததால் நான் ஒரு rebel ஆனேன்---பல விஷயங்களில். அதன் விளைவு? நான் அவர்களை படி என்று சொல்லவே இல்லை. என் குழந்தைகள் நான் ஊக்குவித்தது...extra curricular activities மட்டுமே (சுய நலமும் உண்டு; நானும் அந்த நேரத்தை என் குழந்தைகளுடன் இன்பமாக செலவழித்தேன். பள்ளிக்கூட band, tennis, swimming -எல்லாம் குழந்தைகள் champs.

படிப்பு----அவர்களாகவே படித்தார்கள்---நூற்றுக்கு நூறு உண்மை.
நல்ல பெரிய வேலையில் இருக்கிறார்கள். எல்லாம் அவர்கள் முயற்சி!
என் advice, guidance, and counseling...if asked from me.