Tuesday, October 6, 2015

இந்தியர்கள் அமெரிக்கா வந்த பிறகு இந்தியா திரும்ப யோசிப்பது ஏன்?


photo courtesy thanks to Google images

இது பழைய டாபிக் ஆக இருக்கலாம். எனக்கு தெரிந்து இங்கு செட்டில் ஆகி 10-15 வருடங்களுக்கு பிறகு இந்தியாசென்ற   3 குடும்பங்களில் இரண்டு   திரும்பி வந்து விட்டனர். ஒன்று  அங்கேயே தங்கி விட்டனர். அவர்களில் இங்கு வந்து திரும்பி செட்டில் ஆன குடும்பத்துடனும் அங்கே இருக்கும் குடும்பத்துடனும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் சொல்லிய சில விஷயங்கள் இங்கே.

எதற்காக அமெரிக்கா வந்த பிறகு இந்தியா திரும்ப நினைகிறார்கள்?

பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர் பெரும்பாலும் எடுக்கும் ஒரு முடிவு இது. எங்கே பெண்கள் வளர்ந்து யாரையாவது கூட்டி கொண்டு வந்து விடுவார்களோ என்று நினைத்து பயந்து இந்தியா சென்று விடலாம். அங்கு சென்றாலாவது நம் கலாச்சாரத்துடன் நம் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் வளரும் என்று இந்தியா திரும்ப நினைகிறார்கள்.

அடுத்த முக்கிய காரணமாக வயதான பெற்றோரை பார்த்து கொள்ள இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைகிறார்கள். முக்கியமாக நானே, என் அப்பாவின் மறைவுக்கு அம்மாவை கவனித்து கொள்ள அருகில் இருக்க என்று  இந்தியா திரும்பி விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இன்னும் ஒரு சிலர் நாம் இந்தியாவில் சென்று நாம் படித்ததை வைத்து தொழில் தொடங்கலாம் என்றும் சென்று இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இங்கே பிறந்த ஊர் மண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம் என்று திரும்ப நினைகிறார்கள்.


 என்ன பிரச்சனைகள் எதிர்கொள்ள,சமாளிக்க வேண்டும் ?


முதல் பிரச்னை, வேலை கிடைக்குமா? கிடைத்தாலும் இங்கே இருப்பது போல வொர்க் லைப் பாலன்ஸ் இருக்குமா? உதாரணமாக இந்தியாவில் இருந்து இங்கே சாப்ட்வேர் துறையில் வந்து செட்டில் ஆன பலரும் கணவன் மனைவி இருவரும் சாப்ட்வேர் துறையில் இருப்பின் மறுபடியும் அங்கே சென்று செட்டில் ஆவது என்றால் குறைந்தது 10-12 மணி நேர வேலை, காலையில் சென்றால் மாலையில் கூட சீக்கிரம் வர முடியாத நிலை என்று வொர்க் லைப் பாலன்ஸ் இல்லாமல் இருப்பது. குழந்தைகள் கூட ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் ஒரு மணி நேரம் கூட முழுதாக செலவழிக்க முடியாமல் இருப்பது.

குழந்தைகள் சிறு குழந்தைகளாக இருக்கும் போதே இந்தியா திரும்பி விட வேண்டும் என்று நினைபவர்கள் சரியான நேரத்தில் முடிவெடுத்தவர்கள் என்று நினைக்கிறன். ஏனெனில் சிறிது வளர்ந்த பிறகு இங்கே பழகிய பிறகு இந்தியா திரும்பும் போது அவர்கள் அட்ஜெஸ்ட் ஆக கஷ்டபடுவார்கள். ஏனெனில், குழந்தைகள் இங்கே படிக்கும் சிலபஸ்க்கும் அங்கே இருக்கும் சிலபஸ்க்கும் நிறைய மாற்றங்கள் சந்திகிறார்கள். நிறைய கேள்வி கேட்டு, புரிந்து படித்த பிள்ளைகள் அங்கே சென்று கேள்வி மேல் கேள்வி கேட்டாலோ பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். அமெரிக்கன் ஸ்கூல் இன்டெர் நேஷனல் சிலபஸ் என்று இருந்தாலும் பெரும்பாலும் அங்கே நிறைய பேர் பிள்ளைகளை சேர்க்க முடியாமல் இருப்பது அல்லது தூரம் அதிகமாக இருப்பது அதுவும்  டிராபிக், ஸ்கூல் பஸ். இதனாலேயே நிறைய பேர் முக்கியமாக பெண்கள் வேலையை விட வேண்டிய சூழல் வருகிறது.

சாப்ட்வேர் தவிர மற்ற துறைகள் எனில் சொல்லவே வேண்டாம். வேலை கிடைப்பது கடினம். உதாரணமாக ஆராய்ச்சி துறையை சொல்லலாம் நிறைய பேர் PhD முடித்து postdoc படிப்புக்காக இங்கே வருகிறார்கள். அவர்கள் இந்தியா திரும்ப நினைக்க கூட மாட்டார்கள். ஏனெலில் முதலில் இந்தியாவில் பல்கலைகழகங்களில் நடக்கும் பொலிடிக்ஸ். காசு கொடுத்தால் Professor ஆகி விடலாம். அதற்க்கு PhD யோ இல்லை வெளிநாட்டு Postdoc ஒ தேவையே இல்லை. இது என்னுடன் படித்து பெற்றோர்களின் உடல் நலத்திற்க்காக இந்தியா சென்று செட்டில் ஆன ஒருவர் கூறியது.

தனியாக கம்பனி ஆரம்பிக்கலாம் என்றால் மறந்து விடுங்கள். முதலில் ரேகுலேசன் என்று உங்கள் உயிரை வாங்குவார்கள். பின்னர் எல்லாரும் ஏதாவது எதிர் பார்பார்கள். கிட்டத்தட்ட சிவாஜி பட நிலைமையில் உங்கள் நிலைமை ஆகி விடும்.

சரி, பல்கலை கழக பேராசிரியர் ஆக முடியாது, கம்பனியும் ஆரம்பிக்க முடியாது, ஏதாவது இருக்கும் கம்பெனியில் சேர்ந்து விடலாம் என்றால், இந்தியாவில் அப்படி கம்பனிகள் நிறைய இல்லாமல் இருப்பது முதல் காரணம். அப்படியே இருப்பினும் அதில் உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் peanut அளவு மட்டுமே.


குடும்ப , சமூக சூழல் 

அடுத்த முக்கிய அட்ஜஸ்ட்மென்ட் என்னவென்றால், நண்பர்கள் இல்லாமல் இருப்பது. இதனை நான் சொன்னவுடன் சிலர் "என்னது இந்தியாவில நண்பர்கள் இல்லையா? என்ன சொல்லுறீங்க" என்பார்கள். உண்மை அதுதான். உங்களுடன் கூட படித்த கல்லூரி நண்பர்கள் உங்களை போலவே வெளிநாட்டுக்கு அல்லது வெளி மாநிலத்திற்கு மாறி இருப்பார்கள். அவர்களை எப்போதாவது ஒரு முறை சந்திக்க முடியுமே தவிர, எப்பொழுதும் உங்கள் கல்லூரி காலம் போல சந்திக்க முடியாது. அல்லது அவர்கள் இந்தியாவிலேயே இருப்பவர்கள் எனில் கட்டாயம் நீங்கள் 15-20 வருடங்களுக்கு முன்பு சந்தித்தவர்கள் இல்லை அவர்கள் என்பதை நீங்கள் உணருவீர்கள். சூழ்நிலை கட்டாயம் அவர்களை மாற்றி இருக்கும். இங்கேயாவது ஒரு சில குடும்பங்கள் உங்கள் நண்பர்கள் என்று கூறி கொள்ள உதவி கேட்டு கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் அது எனக்கு தெரிந்து இல்லவே இல்லை.

அடுத்தது சொந்தங்கள் இப்பொழுதும் அதே போல இருப்பார்கள், நீங்கள் சிறு வயதில் இருந்ததை போல இருக்கலாம் என்றால் மறந்து விடுங்கள். நீங்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா சென்று செட்டில் ஆக நினைகிறேன் என்று உங்கள் சொந்தங்களிடம் சொல்லி பாருங்கள் அவர்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று. உங்களை இப்பொழுது மதிப்பது போல நீங்கள் இந்தியா சென்றவுடன் மதிக்க மாட்டார்கள். தற்போது இந்தியாவில் பணம் பணம் பணம் மட்டுமே பிரதானம். பணம் இருந்தால் சொந்தங்கள் உங்களுடன் ஒட்டி கொண்டு இருப்பார்கள் இல்லையேல்
நீ யாரோ அவர்கள் யாரோ.

உதாரணமாக என் அண்ணன் தன்னுடைய குடும்பத்துடன் மதுரையில் இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தை தவிர அவருக்கு வேறு யாரும் சொந்தம் இல்லை நட்பு இல்லை. ஏன் என்று கேட்டால், எல்லாரும் ஏதாவது நம்மிடம் எதிர்பாத்து கொண்டே இருக்கிறார்கள் கொடுத்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள் இல்லையேல் நம்மை பற்றி குறை கூறுகிறார்கள் என்றார். எல்லாரும் ஹாய், பாய் என்றளவில் மட்டுமே சொந்தங்களும் நட்புகளும் இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தை தவிர.

அடுத்து முக்கியமாக பெண்கள் சந்திப்பது. இங்கே பல ஆண்டுகள் மாமியார், நாத்தனார் என்று சொந்தகள் கூட இல்லாமல் இருந்து விட்டு அங்கே சென்றதும் அவர்களின் அடிக்கடி சந்திப்பு பல நேரங்களில் பிரச்சனைகளில் கொண்டு வந்து விடுகிறது. அதனால் பல நேரங்களில் சொந்த நாட்டில் இருப்பினும் நெருங்கிய சொந்தங்கள் அருகில் இருப்பதை யாரும் முக்கியமாக பெண்கள் விரும்புவதில்லை. 

கலாச்சாரம்.

முக்கியமாக பெண் குழந்தை வைத்து இருக்கும் பெற்றோர் இங்கிருந்து அங்கு சென்ற பிறகு சொன்ன விஷயங்கள். தாய் மொழி பேச்சளவில் மட்டுமே இருப்பது. பல பள்ளிகள் தமிழை முக்கிய பாடமாக அறிவிக்காமல் இருப்பது. டிவி, சினிமா, செல் போன் போன்றபலவும் "எல்லாவற்றையும்" சொல்லி தருவது.  இங்கே பள்ளிகளிலேயே பாலியல் கல்வி புகட்டி விடுவார்கள். அங்கே அதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் நண்பர்கள் தோழிகள் மூலம் அறிந்து கொள்ளுவது. என்று தற்போது கலாசார விசயத்தில் இங்கே இருப்பதற்கும் அங்கே செல்வதற்கும் மிக அதிக வேறுபாடுகள் இல்லாமல் இருப்பது.  என்ன ஒரு அட்வண்டஜ் என்றால், ஏதாவது தப்பி தவறி நடந்தால் அடித்து, உதைத்து வீட்டில் பூட்டி வைத்து கல்யாணம் செய்து கொடுத்து விடலாம். யாரும் ஏன்  என்று  கேட்க மாட்டார்கள். இங்கே இருப்பது போல பெண்களுக்கு ப்ரோடேக்சன், பாதுகாப்பு  என்பதெல்லாம் இல்லாமல் இருப்பது. என்று பயம் தற்போது நிறைய பெண் குழந்தை பெற்றவர்களுக்கு வர ஆரம்பித்து இருக்கிறது.

அதனால் முடிவாக அவர்களிடம் கேட்ட பிறகு நான் கற்று கொண்டது, எல்லாமே "இக்கரைக்கு அக்கறை பச்சை தான்" அதனால் வயதான பெற்றோர் உங்களுக்கு இந்தியா திரும்ப ஒரு காரணமாக இருப்பின், அவர்களை இங்கே அழைத்து வந்து விடுங்கள். நிறைய இந்தியர்கள் இருக்கும் ஒரு ஊருக்கு குடி பெயர்ந்து விடுங்கள். நீங்கள் இந்தியாவை மிஸ் செய்ய மாட்டீர்கள், உங்களின் பெற்றோரும் மிஸ் செய்ய மாட்டார்கள்.  கலாச்சார விசயத்தில் கூட நிறைய இந்தியர்கள் இங்கே வந்த பிறகு இந்தியாவில் இருந்ததை விட  அதிக மொழி, கலாச்சார பற்று கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. நாம் இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்வதை காண முடிகிறது. அவ்வப்போது இந்தியா சென்று வாருங்கள். அதனால் சொந்தங்களும் நண்பர்களும்  சந்தோசப்படுவார்கள், எப்பொழுதும் தொலைவில் இருப்பதே சந்தோசம். அருகில் நெருங்க நெருங்க அவஸ்தை தான்.


டிஸ்கி
இது  என் ஒரு சில நண்பர்களின் வாழ்கையில் இருந்து எடுக்கப்பட்டது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

5 comments:

வருண் said...

கொஞ்ச வருடம் முன்னால் வீடு திரும்புகிறேன் தளத்திலமொரு கட்டுரை--பல கட்டுரைகள்னு சொல்லணும் ..இங்கே வாழப்பிடிக்காமல் திரும்பிப் போன "ஆதி மனிதன்"னமொரு "பக்காத் தமிழர்" ஒருவர் பதிவெழுதி வெளியிட்டார். அவருக்கு இந்த அமெரிக்க வாழக்கை பிடிக்கலை. பிள்ளைங்க அவரிடம் அறிவுப்பூர்வமாக எதிர்த்துக் கேள்வி கேக்கிறது, தன் இஷ்டத்துக்கு முடிவு செய்றது, அப்பன்காரன் டாக்டராகுனு சொன்னால், எனக்கு தினந்தோரும் நோயாளிகளை பார்க்கப் பிடிக்கலை, நான் வேற ஏதாவது படிக்கிறேன்"னு சொல்வதெல்லாம் தப்புனு நம்புகிற தமிழ் உயர் கலாச்சாரத்தில் ஊறியவர் அவருனு நெனைக்கிறேன்..இதெல்லாம் எனக்குப் பிடிக்லைனு போயிட்டேன் என்பதுபோல் கட்டுரை போனது. பின்னூட்டங்களின் அவர் முடிவைப் பாராட்டி ஒரே ஆரவாரம்தான்.. அனேகமாக வருங்கலாத்தில் அவர் பொண்ணு பையன் களுக்கு சாதியிலேயே நல்ல குடும்பமாப் பார்த்து அரேஞிட் மெரேஜ் செய்வார்னு நினைக்கிறேன்..அது அவரு இஷ்டம் அவர் வாழ்க்கை நாம எதுவும் சொல்லக்கூடாது..

அவரவர் அவரவர் தன் மனநிலைக்கேற்ப, குடும்ப சூழல்க்கேற்ப வாழ எங்கே பிடிக்கிதோ அங்கே வேண்டியதுதான்..ஆனால் ஒரு சிலர் இந்தியாவில் வாழ்வதே சிறப்பு என்பது போலவும், அமெரிக்காவில் வாழ்பவதெல்லாம் வாழ்க்கையே இல்லை என்பதுபோலவும் பிதற்றவும் செய்யத்தான் செய்றாங்க..

இப்போ இந்தியாவில் நடப்பதென்ன?

* டைவோர்ஸ், தகாத உறவு இதெல்லாம் சாதாரணமாக நடக்குது. முன்னாலே இருந்த கில்ட்டி உணர்வுகள்கூட இப்பல்லாம் இல்லை..

* மேடையில் வந்து அம்மாவோட மகளும் சேர்ந்து ஒரு நடிகனோட டாண்ஸ் எல்லாம் ஆடுறாங்க..பெண் சுதந்திரம் கெடச்சுடுச்சாம்ப்பா

* சமைத்தால் ரொம்ப வேர்க்கிது எனக்குப் பிடிக்கலைனு டி வி ல வந்து சொல்ற மாமிகள் வர்ர டி வி ஷோ ல பார்க்க முடியுது

* யாருவேணா இஞினியர் ஆகலாம், டாக்ரராகலாம், டெண்டிஸ்ட் ஆகலாம். அதுக்கான தொகையை செலுத்தினால் போதும் என்கிற நிலை பெரிய முன்னேற்றம். இன்னுமும் பார்ப்பனர்கள்(பணக்காரப் பார்ப்பனர்கள்னு வ்வரனூம்?) ரிசெர்வேஷன் பத்தி ஒப்பாரி வேடிக்கை

* எலெக்‌ஷன் வந்தா ஓட்டுப் போடச் ச்சொல்லி 500 அல்லது 1000 கொடுக்கிறாங்க

* "அம்மா" ஹோட்டல் அது இதுனு அம்மா பிராண்ட் அதிகமாயிடுச்சு. குன்ஹா பிராண்டுனு ஆரம்பிச்சால் பாங்க்ரப்சி உறுதி..

இப்படிப்பட்ட இந்தியாவில்தான் நான் வாழுவேன்னு "ஆதி மனிதன்" அடும் பிடிச்சா.. வாழு! இல்லை இல்ல என் வாழ்க்கைதான் சிறப்பானது என்பதுபோல் ஆதி மனிதன் பிதற்றினால்.. அது அறியாமையின் உச்சம்னு சொல்லணும்

விசு said...

வருண்,
தங்கள் பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே வெளியிட்டு இருக்கலாம். சபாஷ்.

முகுந்த்; Amma said...

I concur, visuawesome.

Great comment Varun. You could have made it as a blog post as well

Avargal Unmaigal said...

நீங்கள் எழுதியதும் வருண் சொன்னதும் மிக சரியே இந்த பதிவிற்கு நான் பதில் கருத்து எழுத வேண்டுமானால் மிக நீளமாக போய்விடும் என்பதால் ஒன்றை மட்டும் பதிவிட விரும்புகிறேன்

இங்கே வந்த நம் வயதை ஒற்றியவர் படித்து வளர்ந்து வாழ்ந்து வந்த இந்தியா இப்பொழுதும் இருக்குமென்றால் நான் அங்கு வாழ்வதையே விரும்புவேன். அப்போது எந்த வித மத வேறுபாடு இல்லாமல் கல்வியில் அதிக அளவு ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் கலாச்சார சீர்கேடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அவை முற்றிலும் அடியோட மாறிவிட்டது என்பதுதான் உண்மை.அதிலும் சமீபகாலத்தில் அங்கிருந்து வரும் செய்திகளை கேட்டாலே இந்தியா மிக மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை ஆனால் இது அங்கேயே வசிப்பவர்களுக்கு தினம் தினம் பார்ப்பாதால் மாற்றத்தை உணராமல் இருக்கிறார்கள். இங்கு வந்த நாம் அதை பார்க்கும் போது அதை பற்றி பேசும் போது நம்மை அமெரிக்காவின் அடிமைகள் போலவும் இந்தியாவை காட்டி கொடுக்கும் எட்டப்பன் போலவும் பேசி நமக்கு என்னவோ நாட்டுபற்று இல்லாமல் இருப்பது போல கரித்து கொட்டுகிறார்கள்..


எனக்கு தெரிந்த பலரும் இந்தியாவிர்கு செட்டில் ஆவதாக சொல்லி சென்றவர்கள் சில ஆண்டுகளுக்குள்ளாகவே திரும்பி வந்திருக்கிறார்கள்

Vijaya Kumar said...

Madam,
I read your blog regularly. Please write about Newyork Metro and 911

Regards
Vijay