வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இன் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அது எவ்வாறு உலக மக்கள் தொகையில் 29% மக்கள் ஓபிசிட்டி எனப்படும் மிக அதிக எடை கொண்ட குண்டு பூசணிக்காய்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய Lancet மருத்துவ இதழில் வெளிவந்த கட்டுரையின் சாராம்சம்.
1980 இல் இருந்ததற்கும் 2013 யில் இருந்ததற்கும் கிட்டத்தட்ட 27% பெரியவர்கள் ஓபிஸ் ஆகி இருக்கிறார்கள் என்றும் 47.1% குழந்தைகள் ஓபீஸ் ஆகி இருக்கிறார்கள் என்றும் படித்த போது தலை சுற்றியது. குழந்தைகளை பொருத்தவரை எடை அபரிமிதமாக, கிட்டதட்ட 50% வளர்ச்சி இது. 30 வருட வித்தியாசத்தில் இது நடந்து இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கிய காரணம் போர்சன் சைஸ் இல்லாதது, அதிக கொழுப்பு மற்றும் carb உணவு எடுத்து கொள்ளுவது மற்றும் உடல் பயிற்சி இல்லாதது போன்றவை முக்கிய காரணம் எனலாம். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 30வருடங்களில் எல்லா குழந்தைகளும் குண்டாவதை தவிர்க்க முடியாமல் DNA அளவில் ஜெனடிகல் மாற்றம் நிகழ்ந்து விடலாம்.
இதற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. ஐந்தில் ஒரு இந்தியர் ஓபீஸ் ஆக இருப்பதாக அதே கட்டுரை தெரிவிக்கிறது. குண்டானவர்கள் எண்ணிக்கையில் US, சீனாவுக்கு அடுத்து இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதுவும் இந்த மாற்றம் 30 வருட இடைவெளியில் நிகழ்ந்து இருக்கிறது.
ஒரு காலத்தில் ப்ரோச்பெரிட்டி அல்லது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்பட்ட இந்த ஓபிசிட்டி தற்பொழுது எல்லா நாடுகளிலும் ஏன் வளரும் நாடுகளான பிரேசில், மெக்ஸிகோ பாகிஸ்தான் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும், ஆப்பிரிக்கா நாடுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
இது என்னடா தலைவலி என்று நான் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில், இந்தியாவில் வெயிட்டை குறைத்து ஒல்லி பெல்லி கொண்டுவர என்று வெயிட் குறைக்கும் அறுவை சிகிட்ச்சை செய்து கொள்வோர் பன்மடங்கு அதிகமானது பற்றியும் படிக்க நேர்ந்தது. 2009 இல் கிட்ட தட்ட 800 பேர் வெயிட் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர் என்றும் அதுவே 18000 பேர் ஆகா 2014 இல் வெறும் ஐந்து வருடங்களில் வளர்ந்து இருப்பதும் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அதனை அமைச்சர் அருண் ஜெட்லி போன்றோர் எடுத்துகொண்டு இது போன்ற அறுவை சிகிச்சையை ப்ரொமோட் செய்வதும் படித்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டேன்.
நல்ல சத்தான உணவுப்பழக்கம், உடல்பயிற்சி மூலம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய உடல் எடையை இபப்டி அறிவை சிகிச்சை போன்று குறுக்கு வழியில் செய்ய நினைத்து உயிரை இழந்த ஆர்த்தி அகர்வால் போன்ற நடிகை நினைவு ஏனோ எனக்கு வந்து தொலைத்தது.
நன்றி

1 comment:
Very useful post information... But, I was shocked!!!
Post a Comment